Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ஐயா! ஆங்காங்கே ஊர்களில் ‘அறிவுத்திருக்கோயில்’ கட்டப்படுவதன் நோக்கம் என்ன?


உருவ வழிபாட்டிற்கான கோயில்கள் ஆயிரமாயிரம் கட்டியிருக்கிறோம். நாம் அதிலெல்லாம் பயன்கண்டு வருகிறோம். ஆனால், அறிவுத்திருக்கோயில் உலகத்தொடர்பாக வந்த ஆன்மீகப்பயணத்திலேயே ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது....
.
.
பல கோயில்கள் விக்கிரக ஆராதனைக்காக கட்டப்பட்டிருந்தாலும்’கோயில்’ என்பதன் அர்த்தத்தை அளிக்கக்கூடியவகையில் அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

..
.
இதனால் பக்தி மார்க்கத்திலுள்ள விக்கிரக ஆராதனைகளெல்லாம் பயனற்றது என்று கொள்ளவேண்டாம். ஏனென்றால் மனிதன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி, தன் அறிவைக்கொண்டுதான் வடிவெடுத்து வணங்குகிறான்.
.
.
இல்லங்களிலே ஒரு புரோகிதர் மூலமாக ஏதேனும் ஒரு சடங்கு செய்தாலும் ஒரு விநாயகர் உருவையோ அல்லது வேறு உருவையோ வைத்து முதலில் ‘ஆவகயாமி’ என்று சொல்வார்கள். எனது அறிவை அதில் வைக்கிறேன் என்று பொருள்
.
முடிவில் ‘யதாஷ்டனம் பிரதிஷ்டாப்யாமி’ என்று கூறுவார்கள். எங்கே இருந்து கொண்டுவந்தேனோ அறிவை அந்த இடத்திலேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டேன் என்று பொருள்.
.

இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த முறையில் இறைவணக்கத்தை நடத்தினாலும் நம் அறிவைத்தான் விரித்து அவ்வுருவாக்கி அக்குணமாக்கி வணங்குகின்றோம் என்பது விளங்குகிறதல்லவா?
.
.
“கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ
கடவுளாய் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

என்று ஒரு கவியில் கொடுத்துள்ளேன்
.
.
நீங்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்து எளியமுறை உடற்பயிற்சி கற்று உடல் நலம் பெற்றும்;
.
எளியமுறை குண்டலினித்தவம் பயின்று மனநலம் பெற்றும்;

சித்தர்களின் கலையான காயகல்பம் பயின்று கருமையத்தூய்மையும் பெறலாம், மேலும்,
.
மௌனம்,அகத்தாய்வில் கலந்துகொண்டு குணநலப்பேறு பெற்றும் சிறப்பாக வாழ்வதொடு வீடுபேறும் அடையலாம்.
.
வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக