மனவளக்கலையின் நான்கு அங்கங்களான தவம் (Meditation), அகத்தாய்வு (Introspection), குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) ஆகிய நான்கிற்கும் "மனமே விளைநிலம்". "மனம்" தன் திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே "தவமாகும்". மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சியே "அகத்தாய்வாகும்". அந்தத் தூய்மையில் மேலும் மேலும் மனம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதே "குணநலப்பேறு" ஆகும். தூய்மையில் பூரணத்தை அடைந்து அமைதியாக இருப்பதுவே "முழுமைப்பேறு" ஆகும். இந்தப் பயிற்சியைச் செய்யத் தொடங்கினோமானால் மனத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டு, சமுதாயத்தைத் தெரிந்து கொண்டு இயற்கையை அறிந்துகொண்டு பூரணத்தைப் (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவைப் பெற்றபின்பு, ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் வந்தமாதிரியான ஒரு உணர்வும், உறுதிப்பாடும், நம்பிக்கையும் உண்டாகும். இந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக