அருட்தந்தையின் விளக்கம்..
இருளாக இருந்தவன் அணுவான பிறகு அசைவாக மாறினான்.அசைவிலிருந்து இன்னுமொரு அசைவு ஏற்பட்டபோது அலையாக மாறிக் காந்தமாக மாறினான்.காந்தத்திலிருந்து அழுத்தம்,ஒலி,ஒளி,சுவை,மனமாக மாரி எல்லா சீவன்களாகவும் மாறினான்.
எனவே இருந்த நிலைதான் இருட்டு,நான் தற்போது வெளிச்சமாக, ஒளியைக் கொண்டும் கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்தும் இத்தகைய பரிணாம வளர்ச்சியில் வந்தவை தான்.
நேற்று பால் வைத்திருப்போம்,உறை ஊற்றினோம்.இன்று அது தயிராகி விட்டது.இன்று அதைத் தயிர் என்று தனே சொல்கிறோம்.பால் என்று சொல்வதில்லை.
அதேபோல் ஒருபொருள் பரிணாமத்தில் மாறி வருவதற்குத் தக்கவாறு வெவ்வேறு பெயர் வைத்துக் கொள்கிறோம்.எனவே, அன்று இருட்டாக இருந்தது.இருட்டிலிருந்து அணு வந்து,அணுவிலிருந்து அலை வந்து ஒலியான பிறகு ஒளியாக இருப்பதும் அதுவே தான்.
ஆதலால் இருளாக இருபவனும் அவன்தான்; ஒளியாக இருப்பவனும் அவன்தான்; இறைவனைச் சில பாடல்களில் "இருளாயும்,ஒளியாயும் உள்ளவனே" என்றும் அழைப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக