"ஞானம்" என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும். "ஞானம்" என்பது வாழ்க்கை விளக்கு ஆகும். தகுதியுடையோர் "ஞானம்" பெற்று வாழ்தல் வேண்டும். இயலாதோர் "ஞானிகள்" வழியைப் பின்பற்றி வாழ வேண்டும். இயற்கையின் படைப்பில் எந்தக் குறையுமில்லை. எல்லாமே முழுமையாகத்தான் இருக்கிறது. இயற்கைத் தத்துவங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உணர்ந்து கொள்ளத் தக்க ஆற்றல் ஒவ்வொருவரிடத்திலும் அமைந்துள்ளது. ஆனால், சந்தர்ப்பவசமாக ஒருவன் எந்த வகையிலே தன் அறிவைத் திருப்பி திறம் பெற்றானோ, வளம் பெற்றானோ அதுவரையிலே தான் அவன் அறிவு செயல்படும். மனிதர்களின் "முயற்சியின்" அளவிலே அவர்களுடைய உயர்வு அமையும். பரிணாமத்தில் ஒரு ஒட்டகத்திற்குக் கூட கழுத்து நீளமாக வந்ததற்கு அதனுடைய உணவை எட்டிப் பிடிக்கின்ற "முயற்சியே" காரணமாகும். உயிரனங்களில் பரிணாமத்தில் ஐம்புலன்கள் தோன்றியதற்கும் "முயற்சியே" தான் காரணம். அதேபோன்று மனிதனின் "முயற்சியால்" இன்று ஆகாய விமானங்களும், விஞ்ஞானக் கருவிகளும், இன்னும் வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ சாதனங்களும் வந்துவிட்டன. மனிதர்கள் தங்களுடைய "முயற்சிக்கு" ஏற்ப வாழ்வில் வேறுபட்டு நிற்கின்றனர்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக