காரண காரிய விளக்கத்தையும், ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு அச்செயலிலே தொக்கி நிற்கிறது என்ற இயற்கை நியதியையும், ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு நீக்கமறப் பிணைந்திருப்பதையும் உணராது இருப்பதே இன்றைய சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாகின்றன. இதை உள்ளபடி உணர்வதுதான் ஆத்ம ஞானமாகும். உலக முழுமைக்கும் பொருளாதார சமத்துவம், சாதி, மத இன வேறுபாடுகள் நீங்கிய சீர்திருத்த வாழ்க்கை - இவைகளுக்கான திட்டங்கள், ஆகியன குண்டலினி, காயகல்ப யோகத்தின் மூலம் தன்னிலை விளக்கம் கிடைக்க முழுமைப்பேறு அடைய விரும்புவோர்க்குத் துணைபுரியும். பொதுவாகச் சொன்னால் குண்டலினி யோகம் தனி மனிதன் முழுமை அடைவதற்கும் உலக சமுதாய நலனுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நன்மாற்றங்கள் பல உருவாவதை அனுபவ ரீதியாகத் காணலாம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக