Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 11 மார்ச், 2014

கேள்வி : ஐயா, ஆஸ்திகம் - நாஸ்திகம் என்பதை விளக்கவும்?

மகரிஷியின் பதில் : தான் வேறு, உலகில் உள்ள எல்லாப் பொருட்கள் ஊடேயும் இயங்கும் இறைச்சக்தி வேறு என்று எண்ணிக்கொண்டு, அந்த இறைவனை அடைய அவரை அறியாத பலரால் சொல்லப்பட்ட பலவிதக் கற்பனை கதைகளில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாக நம்பி, சுய ஆராய்ச்சித் தெளிவுற்று இருக்கும் அறிவின் மயக்க நிலையே - "ஆஸ்திகம்" அல்லது பக்தி.

"ஆஸ்தி" என்பது பொருள். தன்னை அறிந்து இன்பமுற்று அதன் மூலம் இறைவனை அறியாமல் வேறுபட்டு நின்று, பொருட்கள் மூலம் இறைவனை பாவிப்பது ஆஸ்திகம். இது மூட நம்பிக்கையில் உள்ள மயக்க நிலையைக் குறிக்கும்.

அறிவை நின்றறிவால் ஆராய்ந்து தன்னையறிந்து தானே ஆதியாய், அணுவாய், காந்த சக்தியாய், பரிணாம வேகமாய், அண்டங்களாய், பிண்டங்களாய், அறிவாய் இருக்கும் - இயங்கும் - இயக்கும் நிலையைத் தெளிவாக, சுயமாக உணர்ந்த அறிவின் நிலையே உண்மை ஞானம் அல்லது உண்மை "நாஸ்திகம்". இது மூட நம்பிக்கை மயக்கத்திலிருந்து விடுபட்ட அறிவின் தெளிவு நிலை.

"நாஸ்தி" என்றால் இல்லை என்று பொருள். அரூபமான ஒரு சக்தியே உலகங்களாகவும், உயிர்களாகவும், நானாகவும் மலர்ந்து, என்னுள் அறிவாகவும் வந்து ஆண்டு கொண்டுள்ளது என்பதை மனம் விரிந்த நிலையில் உணர்ந்து கொள்வது "நாஸ்திகம்"

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக