Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 31 மார்ச், 2014

இயற்கை

"இறை" என்பது தெய்வ நிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல், "தெய்வம்" என்பது அரூபமான "பேராதாரச் சக்தி". மாபெரும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலன்களைக் கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும் கணிக்க முடியாததும், அறிவு புலன்களின் மூலமாகத் தேடும்போது இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும் போது உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மை நிலை எதுவோ... அதுவே தெய்வம் என்று வழங்கப்படுகிறது. Nature is identified as Unified Force. The source of all forces - இயற்கை என்பது எல்லா அற்றல்களுக்கும் அடிப்படையான மூல ஆற்றல். "Unified Force" - ஒருங்கிணைப்புப் பேராற்றல்: இது விஞ்ஞானிகளின் வார்த்தை. இதையேதான் தத்துவ ஞானிகள் எல்லோரும் தெய்வம், பிரம்மம், கடவுள் என்கிறார்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 30 மார்ச், 2014

மனவளக்கலையின் சிறப்பு

மனவளக்கலையின் நான்கு அங்கங்களான தவம் (Meditation), அகத்தாய்வு (Introspection), குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) ஆகிய நான்கிற்கும் "மனமே விளைநிலம்". "மனம்" தன் திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே "தவமாகும்". மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சியே "அகத்தாய்வாகும்". அந்தத் தூய்மையில் மேலும் மேலும் மனம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதே "குணநலப்பேறு" ஆகும். தூய்மையில் பூரணத்தை அடைந்து அமைதியாக இருப்பதுவே "முழுமைப்பேறு" ஆகும். இந்தப் பயிற்சியைச் செய்யத் தொடங்கினோமானால் மனத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டு, சமுதாயத்தைத் தெரிந்து கொண்டு இயற்கையை அறிந்துகொண்டு பூரணத்தைப் (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவைப் பெற்றபின்பு, ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் வந்தமாதிரியான ஒரு உணர்வும், உறுதிப்பாடும், நம்பிக்கையும் உண்டாகும். இந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 28 மார்ச், 2014

சுவாமிஜி அவர்களே... பெற்றோர்களின் வினைத் தொடரே குழந்தைகள் என்றால் நற்குணம் படைத்த பெற்றோர்களுக்குத் தீயகுணம் படைத்த குழந்தைகளும்,தீயகுணம் படைத்த பெற்றோர்களுக்கு நற்குணம் படைத்த குழந்தைகளும் உருவாவது எவ்வாறு.../...

 சுவாமிஜி அவர்களின் பதில்கள்...

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடத்தில் இருக்கும்.அவற்றை ஆழ்நிலைப் பதிவு ,மேல்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும்.அப்போது நல்லதையே செய்வான்;நல்ல மனிதனாகவே வாழ்வான்.
உள்ளே அடங்கி இருக்கும் தீய குணங்களையும்,தீய செயல்களையும் விரிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலை பதிவாக இருக்கும்.அவனுடைய வித்துவின் மூலம் பிறவிதொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுர்ச்சி பெரும்.அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டு விட்ட தீய செயல்களும் செய்கிறார்கள்.
அதேபோல்,நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம்.வேறு வழிஇல்லாது ஒருவர் கசாப்புக்கடை வைத்திருப்பவராக இருக்கலாம்.அவர் மனதில் தூய்மையான பணி செய்தால் நல்லது என்ற எண்ணமே மேல்லோங்கி இருக்கலாம்.அப்போது அவருக்குப் பிறக்க கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும்.எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருதொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும் பொது அவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடையதாக இருக்கிறது.

அதே போல,ஒருவர் பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர்.அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் தவத்தினால் விளைவறிந்த விழிப்பு நிலையில் நின்று,செயலுக்கு உரிய விளைவைக் கணித்து,தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.இதனை ''மனவளக்கலையில்'' கற்றுக் கொள்ளலாம்

வியாழன், 27 மார்ச், 2014

அருட்தந்தை அவர்களே..! "நானே ஒளியானவன்" என்று பகவத்கீதையில் பகவான் கூறியதாகக் கூறுகிறார்கள்..., ஆனால் நீங்கள் இறைவன் இருளானவன் என்று கூறுகிறீர்களே..?

வாழ்க வையகம்                                           வாழ்கவளமுடன் 

அருட்தந்தை அவர்களே..!
"நானே ஒளியானவன்" என்று பகவத்கீதையில் பகவான் கூறியதாகக் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் இறைவன் இருளானவன் என்று கூறுகிறீர்களே..?

அருட்தந்தையின் விளக்கம்..
இருளாக இருந்தவன் அணுவான பிறகு அசைவாக மாறினான்.அசைவிலிருந்து இன்னுமொரு அசைவு ஏற்பட்டபோது அலையாக மாறிக் காந்தமாக மாறினான்.காந்தத்திலிருந்து அழுத்தம்,ஒலி,ஒளி,சுவை,மனமாக மாரி எல்லா சீவன்களாகவும் மாறினான்.

எனவே இருந்த நிலைதான் இருட்டு,நான் தற்போது வெளிச்சமாக, ஒளியைக் கொண்டும் கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்தும் இத்தகைய பரிணாம வளர்ச்சியில் வந்தவை தான்.

நேற்று பால் வைத்திருப்போம்,உறை ஊற்றினோம்.இன்று அது தயிராகி விட்டது.இன்று அதைத் தயிர் என்று தனே சொல்கிறோம்.பால் என்று சொல்வதில்லை.

அதேபோல் ஒருபொருள் பரிணாமத்தில் மாறி வருவதற்குத் தக்கவாறு வெவ்வேறு பெயர் வைத்துக் கொள்கிறோம்.எனவே, அன்று இருட்டாக இருந்தது.இருட்டிலிருந்து அணு வந்து,அணுவிலிருந்து அலை வந்து ஒலியான பிறகு ஒளியாக இருப்பதும் அதுவே தான்.

ஆதலால் இருளாக இருபவனும் அவன்தான்; ஒளியாக இருப்பவனும் அவன்தான்; இறைவனைச் சில பாடல்களில் "இருளாயும்,ஒளியாயும் உள்ளவனே" என்றும் அழைப்பார்கள்.


 அருட்தந்தையின் விளக்கம்..
இருளாக இருந்தவன் அணுவான பிறகு அசைவாக மாறினான்.அசைவிலிருந்து இன்னுமொரு அசைவு ஏற்பட்டபோது அலையாக மாறிக் காந்தமாக மாறினான்.காந்தத்திலிருந்து அழுத்தம்,ஒலி,ஒளி,சுவை,மனமாக மாரி எல்லா சீவன்களாகவும் மாறினான்.

எனவே இருந்த நிலைதான் இருட்டு,நான் தற்போது வெளிச்சமாக, ஒளியைக் கொண்டும் கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்தும் இத்தகைய பரிணாம வளர்ச்சியில் வந்தவை தான்.

நேற்று பால் வைத்திருப்போம்,உறை ஊற்றினோம்.இன்று அது தயிராகி விட்டது.இன்று அதைத் தயிர் என்று தனே சொல்கிறோம்.பால் என்று சொல்வதில்லை.

அதேபோல் ஒருபொருள் பரிணாமத்தில் மாறி வருவதற்குத் தக்கவாறு வெவ்வேறு பெயர் வைத்துக் கொள்கிறோம்.எனவே, அன்று இருட்டாக இருந்தது.இருட்டிலிருந்து அணு வந்து,அணுவிலிருந்து அலை வந்து ஒலியான பிறகு ஒளியாக இருப்பதும் அதுவே தான்.

ஆதலால் இருளாக இருபவனும் அவன்தான்; ஒளியாக இருப்பவனும் அவன்தான்; இறைவனைச் சில பாடல்களில் "இருளாயும்,ஒளியாயும் உள்ளவனே" என்றும் அழைப்பார்கள்.

புதன், 26 மார்ச், 2014

கேள்வி : சுவாமிஜி, கருமையம், மனம், உள்ளம், நெஞ்சம், அகம், ஆன்மா இவற்றின் வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்.


 மகரிஷியின் பதில் : (1) தூல உடலுக்கு (Physical body) மையமான விந்து நாதம், (2) சூக்கும உடலுக்கு (Astral Body) மூலமான உயிர்த்துகள்கள் (3) (Causal Body) மூலமான சீவகாந்தம் இவை மூன்றும் இணைந்தது தான் கருமையம் (Genetic Centre) உயிரினத்தின் பெருமையும், சிறப்பும் இந்தக் கருமையத்தில் தான் அமைந்துள்ளது.

உயிர்மையத்துள் அமைந்துள்ள அறிவானது உயிரின் சுழற்சியால் எழும் விரிவலையான காந்த அலை மூலம் புலன்கள் வழியாகப் பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அந்த அறிவையே மனம் என்கிறோம்.

அகம் என்பதும், நெஞ்சம் என்பதும், உள்ளம் என்பதும், ஆன்மா (Soul) என்பதும் கருமையத்தையே குறிக்கும். மனிதன் உடலாலும், மனத்தாலும் செய்யும் செயல்கள் அனைத்தும் பதிவாகி, வித்தில் மரம் போல் இருப்பு வைக்கப்படும் இடம் கருமையம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 24 மார்ச், 2014

குண்டலினியோக தவம் (Kundalini Yoga Meditation):



ஆரம்பத்தில், பத்து நிமிடம் குண்டலினி யோக தவம் (Meditation) செய்தோமானால், தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை; நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் (Meditation) செய்யும்போது, Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலை...க்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது "சாக்கரம்" என்று சொல்லுவார்கள். அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம். அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம். ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் (Meditation) செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல், அப்படி மனம் ஓடாமல், இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஆகையினாலே, நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Meditation) செய்கிறபோதே, நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு, ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும், எல்லா அம்சங்களிலும், உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 23 மார்ச், 2014

'அகத்தவம்' எனும் "குண்டலினி யோகம்".

தெய்வம், இறைநிலை, கடவுள், பரம்பொருள், பிரம்மம் எனும் சொற்கள் யாவும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான (The Source of all the Forces) ஒரே தத்துவத்தைக் குறிப்பான ஆகும். நுண்ணணு முதலாக அவற்றின் கூட்டுத் தோற்றங்கள் அனைத்தையும், ஒரு சேரக் குறிக்கும் வார்த்தை தான் பேரியக்க மண்டலம். இந்தப் பெருமண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும். 'மரம்' என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்று பல பெயர்களால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம். இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் பரிணாமத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும். எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றில...ும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே, "முக்தி" எனப்படும்.

பூரணம், பேராற்றல், பேரறிவு எனும் மூன்றையும் இருப்பு நிலையாகக் கொண்ட இறைநிலையின் பேராற்றல் பரிணாமச் சிறப்பால் இறுதியாக முழுமைத்தகுதி பெற்றவன் தான் 'மனிதன்'. மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனம் உள் ஒடுங்கவும், பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்று படுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. எல்லைக்கு உட்படாத 'மனம்' ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை, பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதே 'அகத்தவம்' (Meditation) எனும் "குண்டலினி யோகமாகும்".

அகத்தவப் பயிற்சினால் (Meditation) தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால், ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல உலகின் உண்மை நிலைமைகளை அலையும் மனதால் உணர முடியாது. எனவே அகத்தவத்தை (Meditation) கற்று, மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னத உளப்பயிற்சியே "குண்டலினியோகமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 22 மார்ச், 2014

"ஞானம்"

"ஞானம்" என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும். "ஞானம்" என்பது வாழ்க்கை விளக்கு ஆகும். தகுதியுடையோர் "ஞானம்" பெற்று வாழ்தல் வேண்டும். இயலாதோர் "ஞானிகள்" வழியைப் பின்பற்றி வாழ வேண்டும். இயற்கையின் படைப்பில் எந்தக் குறையுமில்லை. எல்லாமே முழுமையாகத்தான் இருக்கிறது. இயற்கைத் தத்துவங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உணர்ந்து கொள்ளத் தக்க ஆற்றல் ஒவ்வொருவரிடத்திலும் அமைந்துள்ளது. ஆனால், சந்தர்ப்பவசமாக ஒருவன் எந்த வகையிலே தன் அறிவைத் திருப்பி திறம் பெற்றானோ, வளம் பெற்றானோ அதுவரையிலே தான் அவன் அறிவு செயல்படும். மனிதர்களின் "முயற்சியின்" அளவிலே அவர்களுடைய உயர்வு அமையும். பரிணாமத்தில் ஒரு ஒட்டகத்திற்குக் கூட கழுத்து நீளமாக வந்ததற்கு அதனுடைய உணவை எட்டிப் பிடிக்கின்ற "முயற்சியே" காரணமாகும். உயிரனங்களில் பரிணாமத்தில் ஐம்புலன்கள் தோன்றியதற்கும் "முயற்சியே" தான் காரணம். அதேபோன்று மனிதனின் "முயற்சியால்" இன்று ஆகாய விமானங்களும், விஞ்ஞானக் கருவிகளும், இன்னும் வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ சாதனங்களும் வந்துவிட்டன. மனிதர்கள் தங்களுடைய "முயற்சிக்கு" ஏற்ப வாழ்வில் வேறுபட்டு நிற்கின்றனர்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 21 மார்ச், 2014

சாந்தி தவத்தின் செய்முறை மற்றும் பலன் ..

  •  
    .

    சொந்த வீட்டில் அல்லது சொந்த ஊரில் பெயர் வாங்குவது கடினம். அது போன்று எவ்வளவு பெயரால் சாந்தி தவத்தை உணர்த்து முழுமையாக... செய்ய முடிகின்றது.

    வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.

    ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.
    குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்.

    1. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

    2. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

    3. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.
    சாந்தி தவம் சில சிந்தனைகள்
    1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்
    2. மூலதாரத்தில் சிறு பந்து வைத்து தவம் செய்யலாம்
    3. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்.

    இன்னும் சில உத்திகள்
    1 . அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
    தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள் ) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.
    சாந்தித் தவம். அதிகம் மனதுக்கு (பிடிபடாததற்கு)
    தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

    நமக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போதே மூலாதாரத்திற்கு ஆற்றல் வந்து விடுவதால்
    நாம் முழுமையாய் தவம் கற்கும் காலம் வரை அங்கேயே (தாய்வீடு) இருந்ததால் புது இடத்திற்கு போனால் ஆக்கினை, துரியம்.இன்னும் பிற தவங்கள் மனதில் (உயிரில்)
    பதிகிறது வழக்கமாய் அங்கேயே இருப்பதால் தெரிவதில்லையோ?
    சாந்தி தவத்தின் போது நாம் அங்கேதான் இருக்கிறோம். புது இடம்போல் பழகிய இடம் தோன்றாது.
    யோகா சாதனையின் ஆற்றல் மிகுதியின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆரத்சியின் காரணமாகவோ, அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தனித்துக் கொள்ளவும், அந்த தவக்கனளின் மிகுதியை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கி கொள்ளவும் சாந்தி தவம் உதவுகிறது.
    சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.

    முதல் அறிகுறி ::
    நாம் சாந்தி தவத்தை முழுமையாக செய்தால் முதலில் கண்கள் குளுர்ச்சி பெரும்.
    1 .சாந்தி தவத்தால் நிலத்தை சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
    2 .உடல் வலி, காய்ச்சல், அசீரணம் போன்ற நோய்கள் நீங்குகின்றன.
    3 .உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
    4 .உடல் சக்தி மனோ சக்தியாகவும், மனோ சக்தி உடல் சக்தியாகவும்
    மாற்றி பயன் பெறலாம்.
    ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும்.
    இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை.
    சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.
    மூலதாரத்திளிருந்து உணர்வு மேல்லேழுப்பப் பெற்ற உணர்வுவலார்களுடைய உயிர் ஆற்றலனது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது சிதைவையும் , இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை :
    1 . மாத விலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை
    2 . நாயின் அருகாமை
    3 . பன்றியின் அருகாமை மற்றும்
    4 . பிணத்தின் அருகாமை.
    முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜூரம் வரலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்து விட்டால், உடனடியாக சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும்.
    சாந்தியை பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சினையும் வராது.
    மனதையும், உடலையும் அமைதி படுத்துவதால் தான் அதற்க்கு சாந்தி தவம் என்றே பெயர்.
    சாந்தி தவம் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம் .
    உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும்.
    நிலைக்கும்.
    இதானால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும்.
    கர்ம நோயை எதிர்க்க சாந்தி யோகம் செய்வதென்றால் தொடர்ந்து செய்து வர வேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோயை அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் மூன்று மாதம் நீடித்து கொள்ள வேண்டும். இக்கலகட்டதில் மேல் தவம் எதுவும் செய்யக் கூடாது.
    மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையினால்,
    சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும்.
    அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும்.
    பால் உறவில் வல்லமை கூடும்.
    இவற்றை சமாளித்து கொள்ள கூடிய அறிவு பலமும்,
    குணா சிறப்பும் ஏற்கனவே பெற்றுக்க வேண்டும்.
    பால் உணர்வில் வல்லமை இன்மையை போன்ற
    பலகீனக்களையும் இந்த தொடர்ந்த சாந்தி யோகம் சரிப்படுத்தும்.

    மலட்டு தன்மை கூட சாந்தி யோகம் சரிப்படுத்தும்.
    பால் உணர்வு கருவிகளுக்கு பக்கத்தில் மூலதாரம் இருப்பதால்,
    பால் உணர்வு வெறியும் எந்த தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு
    பண்ணக் கூடும்.
    சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு பண்ணிக் கொள்ளலாம் அல்லது கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.
    சீவ காந்த சிதைவு என்பது நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டன் , வவ்வால் போன்ற உயிரினக்களில் உண்டு. அதை வளர்ப்பதிலும் , தொடுவதிலும் , கொண்ழுவதையும் யோகிகள் தவிர்த்தே ஆகா வேண்டும்.

    சீவ காந்த உறுதி நிலை அருகம் புல், வேம்ப்பு, துளசி, பசு, யானை, மயில், மான், குழந்தை, , நவரத்தின கற்கள், வெள்ளி, பொன், பெண்கள்ளிடத்திலும் அதிகம் இருக்கும்.

    பிணத்தில் பக்கத்தில் போக கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த மாதிரி சீவ காந்த சிதைவு நிலைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் சீவ காந்த சிதைவு ஏற்ப்படாது.

    மூலாதார படத்தில் உள்ள நான்கு எழுத்துகளும் முறையே மனம் ,புத்தி ,சித்தம் அகங்காரம் குறிக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள் ..

    நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம்
    தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர்
    தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்த பின்
    கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே ......திருமூலர்

    அனைவரும் அருட்பேராற்றலின் கருணையினால் உடல்நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெய் ஞானம் பெற்று ஓங்கி உயர்ந்து வாழ்க வளமுடன் 

புதன், 19 மார்ச், 2014

"மனவளக்கலை".

 
கருமையத்தின் களங்கத்தைக் போக்க மன இயக்கத்தைத் தான் சீர் செய்ய வேண்டும். பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளில் மிகவும் மதிப்புடைய அறிவின் இயக்ககளம் 'மனம்' என்பதாகும். "மனவளக்கலை" என்னும் வாழ்க்கை வளக் கல்வியானது ஐந்து படித்தளங்களைக் கொண்டதாகும். அவை :

1) உடல்நலம் காத்தல்.
2) மன இயக்கத்தை, எண்ணங்களைச் சீர் அமைத்து மனவளம் காத்தல்,
3) கூடி வாழும் மக்களிடையே ஒத்தும் உதவியும் இனிமைகாத்து வாழும் நட்புநலம் காத்தல், ...
4) பழைய வினைப் பதிவுகளால் தரம் குறைந்துள்ள கருமையத்தை நலம் பயக்கும் செயல் முறைகளைத் திட்டமிட்டுச் செய்து தூய்மை செய்தல்,
5) பேரியக்க மண்டலத்தின் உற்பத்தி, இயக்கம், விளைவுகள் அனைத்துக்கும் மூல ஆற்றலான இறைநிலையையும் அறிவையும் உணர்தல்,

என்பனவாகும். இதனை பருவமடைந்த 14 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கற்கலாம். இந்தக் கல்வியானது உரை விளக்கங்களோடு செயல்முறை திட்டங்களும் அடங்கியதாகும். இந்த ஐந்திணைப்பு வாழ்க்கை வளக் கல்வியானது குடும்ப வாழ்வை ஏற்றுள்ள கணவன் மனைவி இருவருக்கும் மிக்க நலமளிக்கும். குடும்ப வாழ்வைத் தவிர்த்து சமுதாயத் தொண்டிற்கே தங்களை அர்பணித்துக் கொண்டு வாழும் இருபால் பிரம்மச்சாரிகளுக்கும் கூட நலமளிக்கும். கல்வி கற்கும் இளைஞர்களுக்கும், நிர்வாகத்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் மன அமைதியையும், திறனையும் அளிக்கும். இந்த ஆன்மிகக் கல்வி மனித குலத்திற்கு வாழ்க்கை விளக்காகும். மனிதன் மனத்தாலும், குணத்தாலும் சீர்மை பெற்று இயற்கை வழிநின்று அறவாழ்வு பின்பற்றி அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ, "மனவளம்" பெற நிச்சயமான செயல்வழி வாழ்க்கைவள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை".


 

ஞாயிறு, 16 மார்ச், 2014

ஆத்ம ஞானம்

காரண காரிய விளக்கத்தையும், ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு அச்செயலிலே தொக்கி நிற்கிறது என்ற இயற்கை நியதியையும், ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு நீக்கமறப் பிணைந்திருப்பதையும் உணராது இருப்பதே இன்றைய சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாகின்றன. இதை உள்ளபடி உணர்வதுதான் ஆத்ம ஞானமாகும். உலக முழுமைக்கும் பொருளாதார சமத்துவம், சாதி, மத இன வேறுபாடுகள் நீங்கிய சீர்திருத்த வாழ்க்கை - இவைகளுக்கான திட்டங்கள், ஆகியன குண்டலினி, காயகல்ப யோகத்தின் மூலம் தன்னிலை விளக்கம் கிடைக்க முழுமைப்பேறு அடைய விரும்புவோர்க்குத் துணைபுரியும். பொதுவாகச் சொன்னால் குண்டலினி யோகம் தனி மனிதன் முழுமை அடைவதற்கும் உலக சமுதாய நலனுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நன்மாற்றங்கள் பல உருவாவதை அனுபவ ரீதியாகத் காணலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வெள்ளி, 14 மார்ச், 2014

வேதாத்திரியின் பிரபஞ்சம் :வேதாத்திரியம் !




இறைவனின் இன்னொரு பக்கம்தான் மனிதன் அல்லது மனிதனின் மருபக்கமாக இருக்கும் இறைவனை தெளிவு படுத்துவதுதான் 'வேதாத்திரியம்'...

தவம் செய்வதற்கு பிரம்மச்சரியம் அவசியம் என்பதை மாற்றி ஒருவனுக்கு உடலும் உயிரும் இருந்தால் மட்டும் போதும் என்பதை போதிப்பது வேதாத்திரியம்

பக்தி எதையும் எடைபோடாது ஆனால் ஞானம் எதையும் எடைபோடாமல் விடாது.
எந்த ஒன்று எல்லாவற்றிலுமே இருக்கிறதோ அந்த ஒன்றில் எல்லாமே உள்ளது. அதுதான் இறைநிலை (இறைவன்) என்ற தெளிவு.

எளிய முறை தியானம் என்பது தனக்குள்ளேயே தான் இறங்குவது. தவம் எனபது தன்னை தனக்கு அறிமுகப்படுத்துவது. புறத்தே அலையும் மனத்தை அகத்தே உள்ள காந்த அலைமீது குவித்து நிறுத்தி நிலைபெறச்செய்வது . இதுவே எளிய முறை குண்டலினியோகம்.

அறிவின் மூலத்தோடு இணைவது தவம். அறிவின் வழிநடந்து கொளவது அறம். இறை உணர்வும் அறநெறியுமே மனிதனை மேம்படுத்தும்.



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 13 மார்ச், 2014

கேள்வி : ஐயா, "அறிவே தெய்வம்" என்று சொல்லுகின்ற தாங்கள். சுத்தவெளியில் நிலைத்து தவம் செய்ய கற்றுக் கொடுப்பதின் பொருளென்ன?


மகரிஷியின் பதில் : சுத்தவெளியே அனைத்தடக்கப் பூரணமாகவும், பேராற்றலாகவும், பேரறிவாகவும் இருப்பதால் சுத்தவெளியே எங்கும் ஊடுருவி நிறைந்து சீவன்களுக்குள் அறிவாகவும் இயங்குகிறது.

அதனையே நோக்கித் தவம் செய்து வரும்போது அதுவாகி முடிவில் அதுவே தானுமாக, தனது அறிவுமாக உள்ள உண்மை வி...ளங்கும்.

மேலும் மன அலைச்சுழல் குறைய வேண்டும் என்றால், மனம் பீட்டா அலை வேகத்தில் இருந்து குறைந்து ஆல்பா, தீட்டா, டெல்டா அலை வரை வர வேண்டும். சுத்தவேளியோடு மனம் ஒன்றியிருக்கும் பொழுது தானும் அதுவாக, சுத்தவெளியாக, மாறுகிறது.

மனம் ஆழ்ந்து எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறும். அது இயல்பூக்க நியதி.

இறைவெளி வெளியில் நிலைக்கும்போது தானும் - மனமும் இறைவெளியாக மாறுகிறது.

இதுவரை வாழ்வில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பத்தில் எல்லைக்கட்டிப் பழகிய மனத்தை விரித்து, பேரியக்க மண்டலம் முழுவதையுமே, தனக்குள் அடக்கிக் கொள்ளும் வகையில் மனம் விரிந்து, பின்னர் அதையும் கடந்து சுத்தவெளியாகிய தனது மூலத்தோடேயே நிலைபெறப் பழகப் பழக மனத் தூய்மையும், வினைத் தூய்மையும் மனிதனுக்குக் கிடைக்கின்றன.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 12 மார்ச், 2014

கேள்வி : சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா?



மகரிஷியின் பதில் : மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன். பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும். கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும். இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்....

இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.

அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.

எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,

"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.

என்று குறிப்புட்டுள்ளார்.

வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று அறம். இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.

மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.

மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது. ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.

செவ்வாய், 11 மார்ச், 2014

சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள காரணம் என்ன?

கேள்வி : அருள்தந்தை அவர்களே, ஆன்மீக வழியிலே நமது வாழ்க்கையை வகுத்துக் கொண்டாலும், சில சமயங்களில் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறதே - இதற்குக் காரணம் என்ன? இதை மாற்ற வழி இல்லையா?

மகரிஷியின் பதில் : மனித வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நேர்வதற்கு 3 சூழ்நிலைகள் உள்ளன. அவை :

1) ஆகாம்ய கர்மம்,...
2) பிராரப்த கர்மம்,
3) சஞ்சித கர்மம்.

சஞ்சித மர்மம் என்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணிய பாவத்தின் தொகுப்பாகும். அவை வழி வழியாகச் சந்ததிகளுக்கு வந்து சேரும் வினைப்பதிவாகும். எனவேதான் ஒரு மனிதனானவன் தான் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட துன்பமும் தூரமும் அவனது வாழ்க்கையில் உண்டாகித் கொண்டிருக்கின்றன. சஞ்சித கர்ம வினைப்பதிவுகளைத் தீர்த்துக் கொள்ள கீழ்க்காணும் மூன்று வழிகள் உள்ளன. அவை :
1) பிராயச்சித்தம்
2) மேல்பதிவு
3) தவம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கேள்வி : ஐயா, ஆஸ்திகம் - நாஸ்திகம் என்பதை விளக்கவும்?

மகரிஷியின் பதில் : தான் வேறு, உலகில் உள்ள எல்லாப் பொருட்கள் ஊடேயும் இயங்கும் இறைச்சக்தி வேறு என்று எண்ணிக்கொண்டு, அந்த இறைவனை அடைய அவரை அறியாத பலரால் சொல்லப்பட்ட பலவிதக் கற்பனை கதைகளில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாக நம்பி, சுய ஆராய்ச்சித் தெளிவுற்று இருக்கும் அறிவின் மயக்க நிலையே - "ஆஸ்திகம்" அல்லது பக்தி.

"ஆஸ்தி" என்பது பொருள். தன்னை அறிந்து இன்பமுற்று அதன் மூலம் இறைவனை அறியாமல் வேறுபட்டு நின்று, பொருட்கள் மூலம் இறைவனை பாவிப்பது ஆஸ்திகம். இது மூட நம்பிக்கையில் உள்ள மயக்க நிலையைக் குறிக்கும்.

அறிவை நின்றறிவால் ஆராய்ந்து தன்னையறிந்து தானே ஆதியாய், அணுவாய், காந்த சக்தியாய், பரிணாம வேகமாய், அண்டங்களாய், பிண்டங்களாய், அறிவாய் இருக்கும் - இயங்கும் - இயக்கும் நிலையைத் தெளிவாக, சுயமாக உணர்ந்த அறிவின் நிலையே உண்மை ஞானம் அல்லது உண்மை "நாஸ்திகம்". இது மூட நம்பிக்கை மயக்கத்திலிருந்து விடுபட்ட அறிவின் தெளிவு நிலை.

"நாஸ்தி" என்றால் இல்லை என்று பொருள். அரூபமான ஒரு சக்தியே உலகங்களாகவும், உயிர்களாகவும், நானாகவும் மலர்ந்து, என்னுள் அறிவாகவும் வந்து ஆண்டு கொண்டுள்ளது என்பதை மனம் விரிந்த நிலையில் உணர்ந்து கொள்வது "நாஸ்திகம்"

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 9 மார்ச், 2014

எல்லாமே பிரம்மம்...

அருட்தந்தை அவர்கள் அன்பர்களுக்கு எழும் சந்தேகங்களை ஆழமாகவும்,எளிமையாகவும்.நகைச்சுவையாகவும் சொல்வதுண்டு அப்படி ஒரு நிகழ்வு இதோ..
...
பிரம்மஞான வகுப்பு.
அருட்தந்தை விளக்கம் அளிக்கிறார்.

அருட்தந்தை : எல்லாமே பிரம்மம்... எனவே உயிர்க்கொலை கூடாது...

இதை கேட்ட அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம்...

அன்பர் : இந்த உலகத்தில் எல்லாமே பிரம்மம்...ஆகவே எதையும் கொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள்...
இப்படி நினைப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கிறது...!

அருட்தந்தை : எப்படி..?

அன்பர் : எடுத்துகாட்டாக,என் மனைவி உறங்கிக் கொண்டு இருக்கிறாள்..அவளருகில் ஒரு தேள் ஊர்ந்து போகிறது...நான் அதைப் பார்த்துவிடுகிறேன்..என்ன செய்வது..? மனைவியை எழுப்பினால் அசைவாள்.. அது தேள் மீதுபடும்..தேள் கொட்டிவிடும். தேளை அடிக்கலாம் என்றால் தேளும் பிரம்மம்...உயிர்க் கொலை கூடாது என்கிற தத்துவம் இடிக்கிறது..

இப்ப நான் என்ன செய்றது..?
( அவையில் சிரிப்பலை )

அருட்தந்தை வழக்கமான தம் குறும்புச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்:

அருட்தந்தை : நல்ல கேள்வி..தேளும் பிரம்மம்...மனைவியும் பிரம்மம்...என்ன செய்வது.? ஒரு நீண்ட குச்சியை எடுத்துத் தேளை அப்புறபடுத்துங்கள். எச்சரிக்கையாக ஒரு கோணிப்பையை எடுத்து அத்தேளின்மீது வைத்து அழுத்திப் பிடியுங்கள்.பத்திரமாக,வெளியே கொண்டு போய் அதைப் போடுங்கள்...(சிறிது நேர மெளனம்..பிறகு சொல்கிறார்)

ஆனால் ஜாக்கிரதை...தேள் என்ற பிரம்மத்தைக் கோணியில் பிடித்து வெளியே வீசுவதற்குப் பதிலாக...
மறந்து போய் மனைவி என்ற பிரம்மத்தைக் கோணியில் பிடித்து வெளியே வீசிவிடாதீர்கள்..!"

(அரங்கத்தில் மீண்டும் சிரிப்பலை.சிரிப்பலை அதிக நேரம் தொடர்கிறது)

சனி, 8 மார்ச், 2014

கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் உண்ணா நோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறீர்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?


 மகரிஷியின் விடை:

சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும்.

அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் "கரு அணு" என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு.

அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை "Black-spot in the Sun" என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி.

சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.

ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும்.

ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே "கிரகணம்" என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் "சூரிய கிரகணம்"; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது "சூரிய கிரகணம்".

சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் "சந்திர கிரகணம்". அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம்.

Black-hole இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும்.

வெள்ளி, 7 மார்ச், 2014

குருவின் சேர்க்கை



அறிவு இயக்கமற்ற நிலையிலே உள்ள இருப்பு நிலைக்குப் போகும் அளவுக்கு நுண்மை பெற்றபோது அதுவும், பிரம்மம் (ஆதி) என்ற ஒரு நிலையம் ஒன்றுபட, அந்த இடத்தில் அறிவு அசைவற்று நின்று, ஆதியும் அறிவும் ஒன்றாகி விடுகிறது. அந்த குறிப்பைத...்தான் சமம் + ஆதி = சமாதி என்று சொல்வார்கள். ஆதிக்குச் சமமாக அறிவு நிற்கும் நிலைதான் 'சமாதி'. இந்த நான்கையும் மனோபயிற்சியாக, பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்வார்கள். நாம் "மனவளக்கலை" என்கிறோம்.

உயிர் மேலே எழுப்பப்பட வேண்டும். அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு முதல் படியாகும். அதற்கென நீண்ட காலம் செலவிட முடியாது. நாம் "உலக சமுதாய சேவா சங்கத்தின்" மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம். மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை. முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலைக் கொண்டு மூலாதாரத்தில் தொட்டு, மேலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள். தொட்டு உணர்த்திய உடனே, பயிற்சியாளர் குருவின் ஆற்றல் மூலம் தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அதுதான் உண்மை.

குருவே வந்து, உயிர்ச்சக்தியைக் கொடுத்து விடுகிறாரா என்றால் இல்லை. தூண்டி விடுகிறார். தன்னுடைய ஆற்றலைச் சிறிது பாய்ச்சி, அதை வேகம் கொள்ளச் செய்து தூண்டிவிடுவது (Stimulate) தான் குருவின் ஆற்றல். ஆனால் தூண்டும் போது 'பாலுக்கு உரை ஊற்றுவது' போல, குருவினுடைய தன்மையையும் அடைகிறது. அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு உயிர் அறிந்தவர்களுடைய உயிர் (தீட்சை) சேர வேண்டும். குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போது தான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது, அறிவுக்கு ஒரு பிறவியும் உணடாகி விடுகிறது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 6 மார்ச், 2014

ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா

கேள்வி : சுவாமிஜி அவர்களே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மகரிஷியின் பதில் : நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது. ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள். இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான் இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது. ஆனால் மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும். அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால் மற்றவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

திங்கள், 3 மார்ச், 2014

மவுனத்தின் பெருமை



இந்த மனதைக் கொண்டுதானே நாம் எல்லாக் காரியங்களையும் நடத்துகிறோம். இன்பம், துன்பம், பெரியது, சிறியது எல்லாம் மனம் படுத்துகிற பாடு. அல்லது நாம் மனத்தால் படும்பாடு. கவனித்துப் பாருங்கள் எல்லாரும் சொல்கிறார்கள், "மனதை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று. நான் கேட்கிறேன் "ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?" என்று. "இல்லை. நான் மெடிட்டேஷனில் உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் கூட மனம் நிற்க மாட்டேன் என்கிறது" என்று சொல்கிறார்கள். இதுவரையில் என்னென்ன சேர்த்து வைத்தோமோ அதெல்லாம் இருப்பு கட்டி இருக்கிறது. நீ கண்ணால் பார்க்காதபோது எதுவும் வேண்டுமென்று நினைக்காத போது அந்த இருப்பெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அதுதான் இறைவனுடைய செயல். "நீ என்ன வைத்திருக்கிறாய் பாரப்பா! இன்னது வைத்திருக்கிறாய் இன்னதை போட்டாய்" என்று ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்துக் கொண்டே இருக்கிறான். இங்குதான் மௌனத்தினுடைய பெருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மௌனமாக இருக்கும் போது ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கிறது இல்லையா? நம் இருப்பை கணக்கெடுத்துக் கொள்ள வேண்டியதுதா...ன். இவ்வளவு சமாச்சாரத்தை வைத்துக் கொண்டுள்ளோம் நாம். எது எது நமக்குத் தேவை எது எது நமக்குத் தேவையில்லை என்று பார்த்து தேவையில்லாததெல்லாம் எடுத்துப் போட வேண்டியது தானே. புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள். இரண்டு வரி படிக்கும் வரைக்கும் உருக்கமாக போகிற மாதிரி இருக்கும். அதற்குமேல் கண் அங்கே இருக்கும். மனம் எங்கெங்கோ போய்விடும். ஏன் போகிறது? இதுவரைக்கும் நிலைத்துப் பழகவில்லை. மனதை நிலைத்து நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்வதற்கு பழக்கவில்லை. மனம் நாம் எந்த வழியில் விட்டோமோ அந்த வழியில் போய்க்கொண்டேயிருக்கும்.

அதற்காக மனதை பழக்குவதற்கு மௌனம். மௌனத்தில் உள்ளே இருக்கும் இருப்பை கணக்கு எடுத்துவிட்டீர்கள். கணக்கு எடுத்துவிட்டு அத்தோடு விட்டு விட்டால் பிரயோஜனம் இல்லை. எது தேவை எது தேவையில்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். தேவை இல்லாத தெல்லாம் ஏன் சேர்த்து வைத்தோம்? அறியாமையினால் சேர்த்தது இருக்கும், இன்னொருவரைப் பார்த்துச் சேர்த்தது இருக்கும். பேராசையினால் சேர்த்தது இருக்கும். அதையெல்லாம் எடுத்துப் பார்த்து இது தேவையில்ல என்று எடுத்துவிட வேண்டும். ஒரு கருத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து இது அறியாமையினால் வந்தது, அந்த ஆளைப் பார்த்தேன், அவரைப்போல நானும் ஆக வேண்டும் என்று நினைத்தேன், அதில் வந்தது. அது ஏன் எனக்கு? அது வேண்டாம் என்று தள்ளவேண்டும். இப்படியாக ஒவ்வொரு தேவையில்லாத எண்ணத்திற்கும் முடிவைக் கொடுத்தால் தெளிவைக் கொடுத்தால் அனாவசியமாக சேர்த்து வைத்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டியதில்லை.

முன்பெல்லாம் ஈயப்பாத்திரங்கள் ஜாஸ்தியாக இருக்கும். பாத்திரம் உடைந்து போயிற்று என்றால், வளைந்து போயிற்று என்றால் அப்பாத்திரத்தை உருக்கி ஊற்றுவார்கள். மீண்டும் புதிய பாத்திரமாகிவிடும். அதேபோல நம்முடைய கருமையத்தில் என்ன என்ன அழுத்தி வைத்திருக்கிறோமோ அதையெல்லாம் எடுத்துப் பார்த்து தீய எண்ணங்களை எடுத்து விட்டு புதிய எண்ணங்களை உருக்கி ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். மௌனம் என்பது வாய் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது மாத்திரம் அல்ல. ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டுமானால் அதற்கென மனதிற்கு சில பயிற்சி முறைகள் வேண்டும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 2 மார்ச், 2014

இறைநிலை இயல்புகள் காட்சியாகும்



அகத்தவத்தில் உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்குக் கொண்டு வருவது முதற்செயல். உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் (Kundalini yoga Meditation) குருவின் மூலமே கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு இது வரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்தத் தொடர்ச் செயல். யோக சாதனைகளிலேயே சிறந்ததோர் பயனளிக்கும் பயிற்சி முறை "மௌன நோன்பு" என்று பொதுவாகக் கருதப்படுகிறது. 'மௌன நோன்பு' என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு. அது "மனமடக்கப் பயிற்சி' அல்லது மனதை சீரமைத்துக் கொள்ளும் பயிற்சி என்பதாகும். இவற்றை மனமடக்க ஓர்மைப் பயிற்சி (லயம்) (Meditation) என்றும் அகத்தாய்வு (Introspection) என்றும் கூறுகிறோம். இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம் மனமடக்கம்; சடங்கு வாய்திறந்து பேசாமை, வாய்மூடி பேசாதிருந்து கொண்டு மன ஓர்மைப் பயிற்சியோ, அகத்தாய

்வோ இயற்றாமலிருந்தால் "மௌன நோன்பு" என்பது முழுமையாகாது !

மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களும் பயன்பெறச் செய்யவும், தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுவதற்குமேயாம். மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் அல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார்..

"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடங்கக் கலார்க்கு வாய்ஏன் பராபரமே"

மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார். திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.

"அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"

தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும். இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும். "மௌன நோன்"பில் மனமடங்கித் தற்சோதனையில் ஈடுபடும்போது இறைநிலையின் இயல்புகள் அனைத்தும் அறிவிற்குக் காட்சியாகும். இப்பெரும் பேற்றினை இறைவன் என்னுள் பேசுகிறான் என்றும், "உள்ளுணர்வு" என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். வாய்ப்பினை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு ஒருநாள், 10 நாட்கள், 15 நாட்கள் என்ற அளவில் மௌன நோன்பு ஏற்பதில் மும்மலங்களும் கரைந்து ஆன்மீக அறிவு ஓங்கி வாழ்வில் தெளிவும், அமைதியும், இனிமையும் விளையும். வாரம் ஒருநாளோ, மாதம் ஒரு நாளோ குறித்துக் கொண்டும் மௌன நோன்பு ஆற்றிப் பிறவிப் பயனை அடையலாம். அருள்ஒளி மிக்கப் வாழ்வினைப் பெறலாம். 



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ.
கடவுளாய் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே".
.
தன்னையறிந்து முழுமைபெற வாரீர் :
"தெய்வத்தின் திருவிளையாட் டரங்கமே உடலுயிர் இவ்
வுய்யும் ஒரு பெருமை உலக மக்கள் உணர்வதற்கு
மெய்விளக்கத் தவ விளக்கம் மேலாம் தத்துவத் தெளிவு
செய்வதுதான் சிறந்த தொண்டு சிந்தனை மிக்கோர் சேர்வீர்."
.
சிலை வணக்கத்தின் எல்லை :
"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்".


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.