பதில்:* இறைவெளியில் தோன்றும் விண்ணின் சுழற்சியில் பஞ்ச பூதக் கூட்டில் அண்டங்கள் உருவாகிறது. மேலும் காலம் செல்லச் செல்ல தற்சுழற்சியால் அண்டத்தின் மையப் பகுதியில் திணிவு அதிகமாகி, அணுச் சிதைவு ஏற்பட்டு வெப்பக் குழம்பாகி, நீர் சுண்டி, பலகோடி ஆண்டுகளுக்குப் பின் நெருப்புக் கோளமாகி விடும். இத்தகைய அண்டங்கள் தான் சூரியன்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தொலைவிலுள்ள சூரியன்களை நட்சத்திரங்கள் என்கிறோம்.
நட்சத்திரங்களும் சுழன்று கொண்டுதானிருக்கின்றன. வெகு தொலைவுக்கப்பால் இருப்பதால் நமக்கு சுழற்சி தெரிவதில்லை. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அணுக்களின் கூட்டுத்தான். ஒவ்வொரு அணுவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் அதனால் ஆன ஒட்டு மொத்தத்திலும் அந்த சுழற்சி இருக்கும். நாமும் பூமியோடு சேர்ந்து சுழன்று கொண்டு தான் இருக்கிறோம்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக