உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். மனமானது இயங்கும் போது ஜீவகாந்த சக்தி செலவாகிக் கொண்டே உள்ளது. அகத்தவம் (Meditation) செய்யும்போது மனமானது புலன்கள் வழியே வெளியே செல்வது நின்று உள்முகமாகச் செல்கின்றது. இதனால் செலவு தவிர்க்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் feedback என்று சொல்வார்கள். அதாவது திருப்பி நமக்குள்ளாகவே ஜீவகாந்த சக்தியைப் பாய்ச்சிக் கொள்வது. இப்பொழுது அமைதி வந்துவிடும், வேகம் குறைந்து போய்விடும். அந்த அமைதி நிலைக்கு வர வர உயிரழுத்தம் அதாவது ஜீவகாந்த சக்தியின் அழுத்தம் - சேமிக்கப்படுகிறது. வேகமாக இயங்கிக் கொண்டிருந்த உயிர் ஓட்டம் அமைதி பெறுகிறது; நுண்மையாக இயங்கத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வரக்கூடிய வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம், செல்களினுடைய இயக்கம் எல்லாமே அமைதி பெறுகின்றன. ஒரு பேதமில்லாத மனத் திருப்தியாக, அமைதியாக, உண்மையை உணருகின்ற அளவுக்கு, சிந்திக்கின்ற அளவுக்கு மனம் அமைகிறது. இது பழகப் பழக இங்கே தான் அறிவு பேரறிவு நிலையைத் தொடுவதற்கு உரிய ஒரு நுண்மைநிலை உண்டாகும். அதாவது நுண்ணியதாக உள்ள உயிர்சக்தியை உணருகிறோம். அந்த நுண்ணிய நிலைக்கு வந்தவுடனே அந்த நுண்மையிலேயிருந்து அதற்கு அடுத்தது என்ன? அதுவே உண்மை. அந்த உண்மையை உணரத்தக்க அளவுக்கு அறிவுக்கு ஒரு திருப்பம், திறமை உண்டாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக