நமது இச்சைக்குக் கட்டுப்படாது எண்ணம் இயங்குவானேன்?, அது ஓடிக்கொண்டே இருக்கும்போது நமக்குத் துன்பமாகவே சில சமயத்தில் இருக்கிறதே என்பதையெல்லாம் பார்த்தோமேயானால், அந்த மனம் என்ற ஒன்று இருக்கின்றதே, அது உருவானதற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருப்பது தெரியவரும். பிறந்தது முதற்கொண்டு இன்று வரையில் என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ, தீர்மானித்தோமோ, இவை அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. சூழ்நிலைக்கேற்ப தேவைக்கேற்ப, சந்தர்ப்பங்களுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். புதிய புதிய எண்ணங்களும் உருவாகும். இது தான் "மேல் அடுக்குப் பதிவு" என்பது. அடுத்தது "கருவமைப்புப் பதிவு". பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய குணாதிசயங்கள் (Character), அவர்களுடைய வினைப்பயன்கள், அவர்களுடைய முன்னோர்கள், அவர்களுக்கும் முன்னோர்கள் எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள் கொண்ட அனுபோக அனுபவங்கள் எல்லாம் மனம் என்ற தன்மையிலே, அறிவு என்ற தன்மையிலே பதிவாகி இருக்கின்றன. எனவே நாம் 'மனம்' எனக் குறிப்பிட்டு பேசுவது இரண்டடுக்கு வினைப்பதிவுகலாளே ஆக்கப்பட்ட ஒரு தத்துவமாகும். இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகி இருக்கின்றது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக