Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு


.
"மனித மனம் பொதுவாக ஐம்புலன் உணர்வுகளிலும் "இன்ப வேட்பு", "துன்ப வெறுப்பு" இவைகளில் மாத்திரம் பழகியிருப்பதால் "நுண்-மாண்-நுழைபுலன்" அறிவு (Perspicacity) தெளிவாக வெளிப்படாமல் மனிதனிடம் உள்ளடக்கமாகவே இருக்கிறது.
.
நாள்தோறும் காலை மாலை செய்து வரும் "அகத்தவச் சாதனை" எனும் உளப்பயிர்ச்சியின் (Simplified Kundalini Yoga) மூலம் மன அலைச்சுழல் (mind frequency) விரைவு குறையக் குறைய, ஒரு வினாடிக்கு ஒன்று முதல் எட்டு வரையில் இயங்கும் தீட்டா, டெல்டா அலை நிலை (Wave length)கட்கு கொண்டு வந்தால் தான், நுண்-மாண்-நுழைபுலன் Perspicacity எனும் Super-active Transcendental state of Consciousness அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு உண்டாகும்.
.
விளைவைக் கணித்த விழிப்பில் முயற்சியோடும் சிந்தனையோடும் செயல்புரியும் பண்பாய் வருவதே நுண்மாண் நுழைபுலனறிவாகும். நுணுகிய சிறப்புள்ள ஊடுருவிக் கூர்ந்துணரும் அறிவாற்றலே அது. இந்த மன நிலையில் சிந்திக்கும் போது தான் புலனுணர்வு அலைகளால் உண்டான பதிவுகளின் அலை மோதுதலிலிருந்து மனம் விடுபட்டு சுதந்திரமாக இயங்க முடியும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 26 செப்டம்பர், 2013

வாழ்க்கை நெறி


திங்கள், 23 செப்டம்பர், 2013

மெய்யுணர்ந்த வாழ்க்கை நெறி

செயலுக்கு விளைவு என்பதை மனிதனால் மாற்றமுடியாது. விளைவு நலமாக அமையும் செயல்களைத் தான் மனிதன் செய்ய வேண்டும். செயலுக்கும் விளைவுக்கும் தொடர்புணர்ந்து வாழ்வதே "மெய்யுணர்ந்த வாழ்க்கை நெறி".
...
செயல் ஒன்றை செய்து விட்டு விளைவு தனக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று கேட்டால் இயற்கை கொடுப்பதில்லை.
செயல் செய்வது மனிதன் விளைவாக வருவது இறைநிலை.
செயலை தனது விருப்பம் போல செய்து விட்டு விளைவு தனக்கு சாதகமாக வருமா என்றால் வராது.

" எந்த செயல் செய்தாலும் அதற்குரிய ஒரு விளைவு உண்டு" என்பது இயற்கைச் சட்டம்.

செயலுக்கு விளைவு உடனேயோ , இன்றோ, நாளையோ,ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ , ஒரு வருடத்திலோ, பல வருடங்கள் கழித்தோ அல்லது அடுத்த தலைமுறையினருக்கோ வரலாம்.

மனிதனுக்கு வரக்கூடிய இன்பமோ துன்பமோ , இலாபமோ நட்டமோ, புகழோ இகழோ செய்யும் செயலுக்கேற்ப இன்பம் என்னும் வெகுமதியாகவும் ,துன்பம் என்னும் தண்டனையாகவும் வந்து கொண்டிருக்கிறது.

இறைநிலை எப்போதும் மனிதனுக்கு துன்பத்தை கொடுப்பதில்லை. மனிதனுடைய தவறான செயல்களே அவனுக்கு துன்பமாக வருகின்றன.

செயல் விளைவு நீதியை உணர்ந்து செயல் புரிந்தால் மனிதன் வாழ்வில் வெற்றியும் ,அமைதியும் ,இன்பமும் பெற முடியும் .

--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

உயிரின் படர்க்கை நிலையே மனமாகும்

உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். மனமானது இயங்கும் போது ஜீவகாந்த சக்தி செலவாகிக் கொண்டே உள்ளது. அகத்தவம் (Meditation) செய்யும்போது மனமானது புலன்கள் வழியே வெளியே செல்வது நின்று உள்முகமாகச் செல்கின்றது. இதனால் செலவு தவிர்க்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் feedback என்று சொல்வார்கள். அதாவது திருப்பி நமக்குள்ளாகவே ஜீவகாந்த சக்தியைப் பாய்ச்சிக் கொள்வது. இப்பொழுது அமைதி வந்துவிடும், வேகம் குறைந்து போய்விடும். அந்த அமைதி நிலைக்கு வர வர உயிரழுத்தம் அதாவது ஜீவகாந்த சக்தியின் அழுத்தம் - சேமிக்கப்படுகிறது. வேகமாக இயங்கிக் கொண்டிருந்த உயிர் ஓட்டம் அமைதி பெறுகிறது; நுண்மையாக இயங்கத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வரக்கூடிய வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம், செல்களினுடைய இயக்கம் எல்லாமே அமைதி பெறுகின்றன. ஒரு பேதமில்லாத மனத் திருப்தியாக, அமைதியாக, உண்மையை உணருகின்ற அளவுக்கு, சிந்திக்கின்ற அளவுக்கு மனம் அமைகிறது. இது பழகப் பழக இங்கே தான் அறிவு பேரறிவு நிலையைத் தொடுவதற்கு உரிய ஒரு நுண்மைநிலை உண்டாகும். அதாவது நுண்ணியதாக உள்ள உயிர்சக்தியை உணருகிறோம். அந்த நுண்ணிய நிலைக்கு வந்தவுடனே அந்த நுண்மையிலேயிருந்து அதற்கு அடுத்தது என்ன? அதுவே உண்மை. அந்த உண்மையை உணரத்தக்க அளவுக்கு அறிவுக்கு ஒரு திருப்பம், திறமை உண்டாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 21 செப்டம்பர், 2013

குரு காணிக்கை



நமது மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உலக அமைதி பற்றி தொடர்ந்து தொண்டாற்ற கடமை உண்டு. காலையில் எழுந்தவுடன் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று ஒன்று முதல் மூன்று தடவை வரை அவரவர்கள் விருப்பம் போன்று கூறி உலகை வாழ்த்தி வாருங்கள்.

எனக்கு ஞானாசிரியன் என்ற முறையிலும் சங்க நிறுவனர் என்ற தகுதியிலும், அன்பர்கள் ஏதோதோ அன்பளிப்புகளை ஆர்வத்தோடு, உள்ள மகிழ்ச்சியோடு அளித்து இன்புறுகின்றார்கள். பாராட்டுகிறேன், மனநிறைவோடு நன்றி செலுத்துகிறேன்.
...
நீங்கள் கொடுக்கும் எல்லா அன்பளிப்பிலும் மேலாக, குருகாணிக்கையாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தினால் அதுவே பெருமதிப்புள்ள காணிக்கையாகும். அனைத்து உள்ளங்களிலும், எழும் இவ்வொலி அலை, உலக மக்கள் மனதிலே ஊடுருவி அமைதிக்கு ஏற்ற பணிகளைச் செய்யத் தூண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி



வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தற்சோதனை

நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது. நமது "மனவளக்கலை" பயிற்சியில் மனம் தன் திறமையையும், உறுதியையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் "அகத்தவ பயிற்சி" முறையாகும். தன்னைப்பற்றி, தன் தேவையைப் பற்றி, தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் "தற்சோதனை" என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும். இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 19 செப்டம்பர், 2013

நம்மை நாமே வாழ்த்தலாம்



* உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் அருளால் மனதில் அமைதி நிலவுகிறது. உடல் முழுவதும் புத்துணர்ச்சியும், புதுபலமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வேண்டும்'' என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வாழ்த்தாகும்.
* நீங்கள் உங்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு உடல்பலம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மிகவும் அவசியமானவை. நாள்தோறும் உங்களுக்கு நீங்களே இந்த எண்ணங்களை வற்புறுத்தி சிந்திக்கும் போது அவை மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளைப் பதிக்கிறது. மொத்தத்தில் இது நமக்கு நாமே ஆசி வழங்குவது போலத் தான். அப்பதிவுகள் நம் செயல்களில் வெளிப்படத் தொடங்கும். அதனால், நம் வாழ்க்கை மேம்பாடு அடையும்.
* விழித்திருக்கும் போது மட்டுமின்றி, தூக்கத்திலும் நல்ல எண்ணஅலைகள் சிறந்த பலன்களை நமக்குத் தரும். நாளடைவில் நாம் தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் மனைவி,மக்கள், நண்பர்கள் என்று எல்லாத் தரப்பினரும் நலம் பெற சிந்திக்க வேண்டும். நல்ல மனதோடு எல்லோருக்கும் வாழ்த்து வழங்கும் போது நல்ல சமுதாயம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்புறவும் அன்பும் பலப்படுகிறது.
-அருட் தந்தை வேதாத்ரி மகரிஷி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மனிதனுடைய தன்மை

நமது இச்சைக்குக் கட்டுப்படாது எண்ணம் இயங்குவானேன்?, அது ஓடிக்கொண்டே இருக்கும்போது நமக்குத் துன்பமாகவே சில சமயத்தில் இருக்கிறதே என்பதையெல்லாம் பார்த்தோமேயானால், அந்த மனம் என்ற ஒன்று இருக்கின்றதே, அது உருவானதற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருப்பது தெரியவரும். பிறந்தது முதற்கொண்டு இன்று வரையில் என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ, தீர்மானித்தோமோ, இவை அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. சூழ்நிலைக்கேற்ப தேவைக்கேற்ப, சந்தர்ப்பங்களுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். புதிய புதிய எண்ணங்களும் உருவாகும். இது தான் "மேல் அடுக்குப் பதிவு" என்பது. அடுத்தது "கருவமைப்புப் பதிவு". பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய குணாதிசயங்கள் (Character), அவர்களுடைய வினைப்பயன்கள், அவர்களுடைய முன்னோர்கள், அவர்களுக்கும் முன்னோர்கள் எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள் கொண்ட அனுபோக அனுபவங்கள் எல்லாம் மனம் என்ற தன்மையிலே, அறிவு என்ற தன்மையிலே பதிவாகி இருக்கின்றன. எனவே நாம் 'மனம்' எனக் குறிப்பிட்டு பேசுவது இரண்டடுக்கு வினைப்பதிவுகலாளே ஆக்கப்பட்ட ஒரு தத்துவமாகும். இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகி இருக்கின்றது.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 16 செப்டம்பர், 2013

கருமைய ஞானம் :



தெய்வ நிலையை அறிவதை இறையுணர்வு என்றும் ,பிரம்ம ஞானம் என்றும் கூறுகிறோம்.இந்த உயர் நிலையைப் போன்று பெருமதிப்புடைய ஞானம் தான் கருமைய ஞானமாகும்.

காந்த நிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள்,கருமையத் துட்பொருள்,
கடவுளெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளதுவெளியோடு...

எனவே கருமையத்தை அறியவேண்டுமென்றால் காந்தமென்ற பேராற்றலைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

எல்லாம் வல்ல இறையாற்றல் தன்னிறுக்க ஆற்றலால் துகள்களாகி ,அதே இறை நிலையின் சூழ்ந்தழுத்ததினால் விரைவான தற்சுழல் பெற்று(Spinning Action) ,அலை நிலையாகி,காந்தமென்ற பேராற்றலாகத் தன்மாறமடைந்தது.இதனால் காந்தமென்பது,இறை நிலையே இயக்கச் சிறப்பு பெற்ற மதிப்புமிக்க ஆற்றலாகும்.இக்காந்த ஆற்றல் அலை நிலை பெற்றுள்ளதால் அது எங்கும்,எதிலும் நிறைந்த தெய்வீகப் பாய்மப் பொருளாகும்.

இந்த மதிப்புடைய பேராற்றல் இறைத்துகள் முதலாக அதன் அணுக்களின் கூட்டு இயக்கமான பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.எந்த சடப்பொருளோ,சீவ இனமோ உருவத்தில் தனித்தனியாகத் தோற்றமளித்தாலும் அவற்றிற்குள் ஊடுருவி இயங்குகின்ற காந்த ஆற்றலானது ஒரே தத்துவமாக அலைகுள்ளாக கடல் நீர் போன்று நிறைந்து அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இக்காந்த நிலையை,அதன் பெருமையை உணர்ந்து கொள்கின்ற போது ,அதன் தன்மாற்ற மூலமான கடவுள் நிலையையும் உணர்ந்து கொள்கிறோம்.
இதே காந்த ஆற்றல் பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்திருக்கின்றது.எல்லா உயிரினங்களுக்குள்ளாகவும் ஊன் காந்தம் அல்லது சீவகாந்தம் என்று மதிக்கக்கூடிய பேராற்றலாக விளங்குகிறது.

காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அது தற்சுழற்சி நிலையிலேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி விரைவான் காந்த அலை ஒரு சீவனின் உடலில் இயங்குகின்ற போது அந்த உடலுக்குள் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி பெற்று இயங்கினாலும் அதற்கு துல்லிய சமதளச் சீர்மை என்னும் Specific Gracity தன்மை இயல்பாக அமைந்துவிடுகிறது.இதனால் உடல் முழுவதும் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கும் காந்த அலையானது,அதன் மையப் பகுதியில் திணிவு பெற்றுச் அந்தச் சீவனின் உடல் மையத்தில் இயடம் கொண்டு இயங்குகிறது.

இந்த காந்த அலையின் திணிவு மையம் தான் மூலாதாரம் என்னும் கருமைய நிலையமாகும் . இத்தகைய மதிப்புமிக்க கருமையமானது முதன்முதலில் சிற்றுயிர்களில் அமைந்து அதே உயிரினம் பரிணமாச் சிறப்பால் உடலளவில் பல சீவ இனங்களாக மாறி வந்து ,முடிவில் மனிதன் வரையில் இடம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விதிப்பயன்



 இயற்கை நிகழ்ச்சிகள் உணர்ச்சிகளோடு தொடர்பு பெறும்போது உணர்ச்சிக்கு இன்பமோ , துன்பமோ எழுகின்றது. சீவன் இயங்கும் இடம் .காலம் ,தொடர்பு ,பொருள் இவற்றிற்கேற்ப இவ்வின்ப துன்ப உணர்ச்சிகளும் வேறுபடும் .தன் உணர்ச்சிக்கு எட்டும் இயற்க்கை நிகழ்ச்சிகளை நாம் இயற்கை விதி எனவும் விதிப்பயன் எனவும் கூறுகிறோம்.


சனி, 14 செப்டம்பர், 2013

மதங்களின் பெருமை மங்கிய காரணம்



மதங்களைத் துவக்கி வைத்த பெரியோர்கள் முழுமைபெற்றவர்கள் எனினும் பிற்காலத்தில் மதத்தில் வகுத்த நோன்பு முறையை நண்குணர்ந்து மக்களுக்குத் தலைமை தாங்கி விளக்கிக்கூற வழி நடத்த ஏற்ற ஆசிரியத் தலைவர்கள் அரிதாகி விட்டனர். மதபோதனை ஆசிரியர்களை உருவாக்கும் பொறுப்புணர்ச்சியுள்ள நிறுவனங்களும் போதிய அளவு விரிவடையவில்லை. இதன் காரணமாக ஆண்டுகள் செல்லச் செல்ல, அறிவிலும் வாழ்க்கை நெறியிலும் உயர்வடையாத பலர், மத ஆசிரியர் பொறுப்புகளை ஏற்றனர். அத்தகையவர்கள் மக்களை அவர்கள் ஆசைக்கு உட்படுத்தி அடிமைகளாக்கி மதத்தின் பெருமையினை மங்கச் செய்து விட்டனர். உண்மை உணர்ந்து அருட்பணியாற்றும் சில தலைவர்கள் இந்நிலை கண்டு வருந்துகின்றனர்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

கடந்து உள்ளே செல்


 
ஒரு அன்பர் வந்தார். நான் ஒரு நாத்திகன்(Athiest) கடவுளை நம்புவது இல்லைங்க நானே நேரடியாக விளக்கம் கேட்க வந்தேன் என்றார்.
சரி சொல்கிறேன். நீங்கள் தினம் சாப்பிடுகிறீர்கள் இல்லையா? என கேட்டேன். சாப்பிடாது எப்படி வாழ முடியும் என்றார். சாப்பிட்ட சாப்பாடு என்ன ஆகிறது என்றேன். சீரணம் ஆகிறது என்றார். பொதுப்படையாகச் சொல்லாதீர்கள். நான் சொல்கிறேன். சாப்பாடு உள்ளே போனதும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் என்ற திரவம் சுரக்கிறது. அது உணவை ஜூஸ் ஆக மாற்றுகிறது. அதிலிருந்து ரசம் பிரிந்து ஒரு பகுதி இரத்தமாக மாறுகிறது; இரத்தம் கெட்டிப்பட்டு ஒரு பகுதி தசையாக மாறுகிறது. தசையிலிருந்து எண்ணெய் வடிகட்டி, ஒரு பகுதி கொழுப்பாக மாறுகிறது. கொழுப்பில் இருந்து கால்சியம் பிரிந்து எலும்பாக மாறுகிறது. எலும்பாக மாறும்பொழுது அதிலிருந்து வரக்கூடிய பொருள் மூளை அதாவது மஜ்ஜை (Marrow) ஆகிறது. அதிலிருந்து வரும் எச...ன்ஸ் (Essence) தான் விந்து நாதமாக (Sexual Vital Fluid) மாறுகிறது. இந்த மாதிரி ஏழு தாதுக்களாக மாறி தினந்தோறும் இந்த உடலில் இருந்து அணுக்கள் கழிந்து கொண்டே இருக்கும். அணுக்களை எல்லாம் சரிப்படுத்தி நம் உடலை இயக்கி வருகிறது. நீங்கள் தினந்தோறும் சாப்பிடுகிற சாப்பாடு என்ன ஆகிறது என்று இப்ப உங்களுக்குத் தெரியுமில்லை; இப்ப இந்த வேலைகளையெல்லாம் யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? இல்லை வேறு யாராவது செய்கிறார்களா? என்றேன்.
அதற்கு அவர், அது "இயற்கை" என்றார். அந்த இயற்கை என்ற வார்த்தைதான் மாற்றமே தவிர அந்த இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். வேறு ஒன்றும் இல்லை என்றேன். நீங்கள் "கடவுள்" என்பதை பெயர்ச் சொல்லாக கூறுகிறீர்கள். அந்த வார்த்தையை முதலில் கொண்டு வந்தவன் அறிவாளி. "கட+ உள்" என்பதை இணைத்துக் "கடவுள்" என்று கொடுத்தார்கள். உள்மனமாக, அதாவது மனதை ஒடுக்கி உள்ளே போனால் நிலையில் எதுவோ அதுதான் முழுமுதற்பொருள்; அது தான் அறிவு, அதுதான் இறைவன் என்று சொல்வதற்காக, "கடவுள் (கட + உள்)" என்று சொன்னார்கள், என்றேன். 'அது தான் கடவுள் என்றால் நான் ஒத்துக்கொள்கிறேன்' என்றார். எனவே குண்டலினியோகத்தின் மூலம் மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். மனித மனம் என்னவென்று உள் ஒடுங்கி அகத்தவத்தின் (Meditation) மூலம் தெரிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களும் தெரிந்து போகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 12 செப்டம்பர், 2013

சிக்கல்கள்

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது. கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும். தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 11 செப்டம்பர், 2013

கவலையும் கடமையுணர்வும்


கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறந்து விடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும். கடமையுணர்வு வந்தால்தான் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அளவுக்குத் துணிவும் தெளிவும் வரும். கடமையைத் தெரிந்து செயலாற்றும்போது கவலை ஏற்படாது.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆட்சி முறை சிறக்க வேண்டும் :



தன் மீது விசுவாசம் கொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காக தனது நாட்டின் மீது படை எடுத்து வரும் பிற நாட்டு அரசனோடு போராடி தன் உயிரையே தியாகம் செய்தார்கள் முற்காலத்து ஆட்சித் தலைவர்களில் பலர். எதிரி என்ற பெயர் வைத்து மனிதரை அழித்து வந்த முறை அது.
...
தான் ஒரு ஆட்சித் தலைவனாக வருவதற்காக தன் மீது விசுவாசம் கொண்ட மக்களையே சமயம் வாய்ப்பின் பலியிடத் துணிந்து வஞ்சகமாகத் திட்டமிட்டு செயலாற்றுகின்றார்கள் இன்னாளில் அரசியல் தலைவர்களில் பலர். பல மக்களைச் சுரண்டியும் கொன்று குவித்தும் ஒருவன் பொருள், புகழ், அந்தஸ்து, அதிகாரம், என்பனவற்றைத் தேடிக் கொள்ளும் பாதுகாத்துக் கொள்ளும் முறையில் நடைபெறும் அரசியலுக்கு ஜனநாயக ஆட்சி முறை என்ற பெயர் நீடித்திருப்பது அந்நாட்டு மக்களில் சிந்திக்கும் ஆற்றலுடைய அறிஞர்கள் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைமையே.

நீண்ட கால சமூகத் தொண்டின் மூலம் தகுதியும் திறமையும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற ஒரு சமுதாய நன்னோக்க வாதியைத் தங்கள் அரசியல் தலைவனாக நியமித்துக் கொள்ளும் அளவுக்கு மக்களிடம் சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும் வரைக்கும் எந்த நாட்டிலும் கயவர்கள் நயவஞ்சகர்கள், ஒழுங்கீனர்கள் இவர்கள் ஆட்சித் தலைவராகவோ அரசியல் கட்சி தலைவராகவோ வரும் வாய்ப்பு நீடிக்கும்.


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அரசியல்வாதிகள் :

"அரசியலும் வாணிபமும் மக்கள் தம்மை
அடக்கிடவும் உறிஞ்சிடவும் எற்றதாச்சு,
அரசியலே இவ்விரண்டில் முதன்மை என்று
அறிந்திட்டார் சிலர், அதனால் திட்டமிட்டு
அரசியலைத் தந்திரத்தால் ஒழுங்கீனத்தால்
அடைய முயல்கின்றார்கள் போட்டியிட்டு;
அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும்
அவலநிலையை முதலில் மாற்ற வேண்டும்."

.
"வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்
கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்
ஏழை, நோயுற்றோர் எங்குமே சாட்சியம்."

.
"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதியெனும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 4 செப்டம்பர், 2013

நமது துறை :



நமது உலக சமுதாய சேவாசங்கத்தின் நோக்கம் மனித வாழ்வில் அமைதி காண்பதேயாகும். தன்னில் அமைதி, சமுதாய வாழ்வில் அமைதி, உலக அமைதி என மூன்று எல்லைகளைக் குறிப்பாகக் கொண்டு, ஒன்றோடு மற்றது ஒத்தும் உதவியும் நலம் காணும் முறையில் நமது செயல் திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. நமது நோக்கத்தில் வெற்றிபெற வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்து நாம் செயலில் இறங்கும் போது சில பல முன்னேற்றமான செயல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
...
அவ்வாறான மாற்றங்களைச் செயல்படுத்த முயலும் போது அவற்றின் உட்கருத்துக்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரவர்கள் அறிவு வளர்ச்சி பெற்றுள்ள அளவில், அவர்கள் வாழ்வில் கண்ட அனுபவங்கள் வரையில் எல்லை கட்டிக்கொண்டு, அந்த எல்லைக்குட்பட்டே எல்லாரும் எல்லா நிகழ்ச்சிகளும், செயல்முறைகளும் உருவாக வேண்டும் நடைபெற வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அத்தகையவர்களிடம் கருத்துப் பிணக்குக் கொள்ளாமல் நமது நோக்கங்களை அமைதியாக விளக்கி அவர்களையும் ஒன்றுகூட்டி செல்ல வேண்டும்.

நமது நோக்கம் உலக அமைதி, நமது செயல் முறை தொண்டு, நமது துறை ஆன்மீகம்.... அருள் விளக்கம்.... யோகம். இவற்றில் பிறரைக் கட்டுப்படுத்த இடமே இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தான் தகுதியாகவும், இனிமையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அருள் தொண்டும், அற வாழ்வும் சிறப்புற அமைய சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றும் விழிப்போடு பழகி இவற்றை இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைவும் இருக்கும்; குறைவும் இருக்கும். அவை யாவும் காண்போர் கருத்தின் எற்றத்தாழ்வேயாகும். எனவே நிறைவை நாடியே செல்வோம். இயற்கையில் அமைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களை உணர்வோம், அனுபவிப்போம். 


  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மகரிஷியின் அழைப்புக் கவி:

சேர வாரீர் :

"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்."

.
சிலை வணக்கத்தின் எல்லை:

"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள்,புகழ்,செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று,
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டும்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..

திங்கள், 2 செப்டம்பர், 2013

எண்ணம்

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட முடியும்.... எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். எண்ணத்திற்குக் காவலாகவும் எண்ணத்தையே தான் வைக்கவேண்டும். எண்ணத்திற்கு நீதிபதியாகக்கூட எண்ணத்தையேதான் நியமித்ததாக வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக்கொண்டு இருக்கவேண்டும். இதுதான் "தற்சோதனை"(Introspection). தற்சோதனையோடு கூடவே நாள்தோறும் பழகி வரும் அகத்தவமாகிய (Meditation) "குண்டலினியோகம்" மன வலிமையை கூட்டி, மனதை சீர்திருத்திக்கொள்ள பேருதவியாக இருக்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

எண்ணம் சீர்பட தற்சோதனை:
------------------------------------------
.
 
"அறிவு தன் தேவை பழக்கம், சந்தர்ப்பம்
 
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
 
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
 
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
 
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
 
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
 
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
 
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:

விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர் தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு,
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி