Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
June - 7 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
June - 7 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

நான் - என்ற தத்துவமே நாம்

தண்ணீரே சமுத்திரம், ஆறு, ஏரி, குளம், குட்டை, மழை, மேகம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது போல,

'நான் என்று சொல்லும் அறிவின் தத்துவமே - காந்த சக்தி அலை இயக்கமே - பல்வேறு உருவில், அதனதன் தன்மைக்கேற்ப இயக்கும், இயங்கும் சக்தியாகவும், உணரும் ஆற்றல் நிலையாகவும் இருக்கிறது.

ஆகையால், இந்த "நான்" என்ற தத்துவம் தான் - சக்திதான் - நாம் என்ற பலராக, அனேக கோடி சீவன்களாக, மனிதர்களாக, அறிவியக்கங்களாக இருக்கிறது.

உருவ அளவில் மனதுக்கு எல்லைகட்டிக் கொண்டு பல நாடுகளிலும் சிதறி வாழ்ந்து, தேசம், இனம், ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டு, அதனால் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம். ஆழ்ந்து ஆராய்ந்த போது, அறிவின் தத்துவமாகிய ஆன்ம நிலையை அறிந்து விட்டோம். அந்நிலையில் அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்தோம். இந்த விரிந்த மனநிலையில் அனைவரும் வாழ வேண்டும்.





* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
'நான்' என்ற தத்துவமே நாம் :
--------------------------------------------
"நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
ஒருவருக் கொருவர் இன, தேச, ஜாதி,
தான்-தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.
ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட
ஆட்சிமுறை உலக சமாதானத் திட்டம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி