எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது. இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும், உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக