Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 4 செப்டம்பர், 2014

மன்னிப்பை அருளிய மகான் :

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை பேருந்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருக்கையில், அவர் மீது திடீரென்று ஒரு பெண்மணி வெற்றிலைச் சாறை உமிழ்ந்து விட்டார். அது மகரிஷி அவர்களின் வெள்ளைச் சட்டையில் ஆங்காங்கே பட்டு, சிகப்புக் கோலமாகியது . இதை மகரிஷி அறிந்து கொண்ட அதே வேளையில், அப்பெண்மணியும் அதைப் பார்த்துவிடுகிறார். உடனே பேருந்தை விட்டு இறங்கி வந்து தான் செய்த தவறால் கலங்கிய படியே மகரிஷி அவர்களை நெருங்குகிறார். மகரிஷி அவர்களின் கனிவான தோற்றத்தைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

தனது தவறுக்காக வருந்திய அப்பெண்மணி, மகரிஷி அவர்களைப் பார்த்து "தங்களைப் பார்த்தால் ஒரு மகான் போல் ததோன்றுகிறீர்கள் . உங்களுக்கு அபச்சாரம் செய்து விட்டேன் . எனது எச்சிலை உங்கள் மீது உமிழ்ந்து விட்டேன். அறியாமல் செய்த பிழையை மன்னித்து அருள வேண்டும் ". என்று உள்ளம் பதற வேண்டுகிறார்.

"அதற்கென்ன அம்மா!துடைத்து விட்டால் போகிறது. நீங்கள் வருந்த வேண்டாம்" என்று ஆறுதல் அளித்தார் மகரிஷி . ஆனால் அப்பெண்மணி ஆறுதல் கொள்ளவில்லை. தான் செய்த தவறால் வேதனைப்பட்டார் ." தயவு செய்து உங்கள் சட்டையைக் கழட்டிக் கொடுங்கள், நான் தூய்மை செய்து கொடுத்து விடுகிறேன்" என்றார் அப்பெண்மணி.

"சட்டையில் எச்சில் பட்டதற்காக ஏனம்மா வருந்துகிறாய்? இந்த உடலே எச்சத்தால் வளர்ந்து வந்தது தானே? அதை எதில் கழுவ முடியும்? " என்ற மகரிஷியின் தெளிவான சிந்தனையால் தான் அப்பெண்மணியை உடனடியாக மன்னிக்க முடிந்தது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டு என்றார் இயேசுபிரான். தான் அயர்ந்து உறங்கும் பொது காதில் இருந்த ஒரு கடுக்கனைக் கழட்டிய கள்வனுக்கு, மற்றதையும் கழட்டிக் கொள்ள வசதியாக புரண்டு படுத்து இராமலிங்க வள்ளலார். தன்னைக் காலால் உதைத்துத் தள்ளிய ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு, தன் கையால் முதன்முதலாகச் செய்த காலணியை அளித்தார் மகாத்மா காந்தியடிகள் இந்த மரபில் வந்தவர் வேதாத்திரி மகரிஷி .

ஒருவர் செய்த தீமைகளையும், கொடுமைகளையும் துளியும் மனதில் கொள்ளாமல் அவரை மன்னித்து அவருக்கு உதவுவதே உயர்ந்த பண்பு அத்தகைய உயர்ந்த மாமகானை நாம் குருவாக பெற்றிருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக