சீவகாந்தக் கருமையம் தான் ஆன்மாவாகும். மரபு வழியாக வந்த பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு சீவனின் கருமையத்திலும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சீவனிலும் - இனத்திலும்... - மரபு வழிப்பதிவுகள் வேறுபடும். இந்த வேறுபாடே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆன்மாவில் உள்ள வேறுபாடு.
ஆன்மா என்பதும், கருமையம் என்பதும் ஒன்றுதான். ஈரறிவிலிருந்து ஆறறிவு வரை உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அதன் கருமையமே ஆன்மாவாகும்.
ஓரறிவுள்ள தாவரங்களுக்கு மட்டும் பூ உண்டாகின்ற பகுதியில் காந்த சுழற்சி ஏற்பட்டு அதன் வித்திலேயே அதன் கருமையம் அமையும்.
பரிணாம வளர்ச்சியில் விலங்குகளிடமிருந்து வந்துள்ள மனிதன், தன்னுடைய ஆறாவது அறிவைக்கொண்டு தன்னுடைய ஆன்மாவை, அதாவது மறைபொருளான மனம், உயிர், சீவகாந்தம், மெய்ப்பொருள் என்கிற அளவில் அறிந்து வாழ்கின்ற அறிவை பெற்றுள்ளான். விலங்கினங்களோ புலன் அளவிலேயே நிற்கின்றன.
ஆனால் மனித ஆன்மாவோ ஒழுக்கத்தை ஏற்படுத்தி அதைக் கடைபிடித்தும், பிறகு அதை தாண்டியும் போகின்றது.
விலங்குகளோ ஒழுக்கத்தை கற்கவும் இல்லை, அதைத்தாண்டி செல்வதும் இல்லை
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக