Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அவனே நான் , நானே அவன்

உன்னிலே நானடங்க என்னுளேநீ விளங்க
உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மந்தப் பிறப்பெய்தியதே முழுமை "
...
நான் யார் ? என்ற கேள்வியை எழுப்ப , தன்னை அறியும் முயற்சி தான் மனிதனை மகிழ்வாக வாழச் செய்ய இன்றியமையாததாகும் .இதுவே " தன்னை அறிதல்" , "தன்னுணர் நிலை" , "நான் யார்" என்பது.

நான் என்பது ரூபமா? அரூபமா? பொருளா? சக்தியா? உடலா? மனமா?அறிவா? நான் எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்? ஏன் வந்தேன் ?எங்கே வந்தேன்? ஏன் இருக்கிறேன்? எனக்குச் செல்வேன் ? எப்படி முடிவேன்? என்று மூலமும் , முடிவும் எதுவென அறிய ஆறாவது அறிவின் பண்பட்ட நிலையே தன்னுணர் நிலை .

இதனை உணர்ந்து கொள்ளும் போது இறைநிலையே நானாக என்னுளே அறிவாக விளங்குவது தெளிவாகும். மனஅலைகளின் சுழல் விரைவு குறைய குறைய மனத்தின் நிலைபொருளான அறிவாகி மனமே தரத்தில் உயருகிறது. பிறகு மனம் அசைவற்று அறிவே அகக்காட்சியாகும்.

இங்குதான் " அவனே நான் , நானே அவன் " என்ற அறிவின் முழுமைப்பேறு கிட்டுகிறது .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக