Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

உயிர்களின் பரிணாம வளர்ச்சியாக மனிதன் வந்துள்ளான். இதுவே உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகுமா?? அல்லது இன்னும் பல தோற்ற மாற்றங்கள் உருவாகுமா??

இந்த பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காகத்தான் இத்தனை பரிணாமங்களும் வருகின்ற...ன. அழுத்தம் (உருவம்), ஒலி. ஒளி, சுவை, மனம் இவற்றை ஐந்தறிவு விலங்குகளும் அறிகின்றன. .
.
மனிதனுக்குள்ள ஆறாவது அறிவோ,மறைபொருளான மனதை அறிவதற்குத்தான். மனிதன் ஆகாசத்தில் பறக்கவேண்டுமென்று நினைத்தால், அதற்காக இறக்கை வேண்டுமென்ற அவசியமில்லை.
.
இந்த எண்ணத்தின் விளைவாக கருத்தொடரில் இன்னுமொரு சீவன் இறக்கையுடனுருவாக வேண்டுமென்ற அவசியமுமில்லை.
.
மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிய கருவியின் மூலமாக ஆகாசத்தில் பறக்கிறான்.
.
இதற்கு மேலாக என்னென்ன அடையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு ஆறாவது அறிவை கருவியாக வைத்துக்கொண்டு பல உப கருவிகளை உற்பத்தி செய்யும் சக்தி மனிதனுக்கு வந்துவிட்டது.
.
இதற்குமேலும் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட இயல்பூக்கத்தில் இடமில்லை. ஆனால், அறிவின் வளர்ச்சி மட்டும் அதன் முழுமையை நோக்கி இறையுணர்வு பெறும் வரையில் வளர்ந்துகொண்டே இருக்கும்.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 29 செப்டம்பர், 2014

விலங்கினங்களுக்கு ஆன்மா உண்டா? உண்டு எனில், மனித ஆன்மாவிலிருந்து அது எங்ஙனம் வேறுபட்டது ?


சீவகாந்தக் கருமையம் தான் ஆன்மாவாகும். மரபு வழியாக வந்த பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு சீவனின் கருமையத்திலும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சீவனிலும் - இனத்திலும்... - மரபு வழிப்பதிவுகள் வேறுபடும். இந்த வேறுபாடே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆன்மாவில் உள்ள வேறுபாடு.

ஆன்மா என்பதும், கருமையம் என்பதும் ஒன்றுதான். ஈரறிவிலிருந்து ஆறறிவு வரை உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அதன் கருமையமே ஆன்மாவாகும்.

ஓரறிவுள்ள தாவரங்களுக்கு மட்டும் பூ உண்டாகின்ற பகுதியில் காந்த சுழற்சி ஏற்பட்டு அதன் வித்திலேயே அதன் கருமையம் அமையும்.

பரிணாம வளர்ச்சியில் விலங்குகளிடமிருந்து வந்துள்ள மனிதன், தன்னுடைய ஆறாவது அறிவைக்கொண்டு தன்னுடைய ஆன்மாவை, அதாவது மறைபொருளான மனம், உயிர், சீவகாந்தம், மெய்ப்பொருள் என்கிற அளவில் அறிந்து வாழ்கின்ற அறிவை பெற்றுள்ளான். விலங்கினங்களோ புலன் அளவிலேயே நிற்கின்றன.

ஆனால் மனித ஆன்மாவோ ஒழுக்கத்தை ஏற்படுத்தி அதைக் கடைபிடித்தும், பிறகு அதை தாண்டியும் போகின்றது.

விலங்குகளோ ஒழுக்கத்தை கற்கவும் இல்லை, அதைத்தாண்டி செல்வதும் இல்லை

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம்

அறிவின் தெளிவில்லாத ஒரு முரடன் கொலை என்னும் ஒரு கொடிய குற்றத்தை செய்துவிடுகிறான். ஆனால் திருத்தவேண்டிய கடமையில் உள்ள சமுதாயம் அவனுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து, சீர்திருத்துவதற்கு ஒரு அறிஞரை நீதிபதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இத்தகைய நீதிபதிகளில் சிலர் இயற்கையின் நீதிநெறியை அவர்கள் கல்வியாக கற்காத காரணத்தினால், தொடர்ந்து வரும் மனித இனப்பண்பாட்டின் தொடர் நிகழ்ச்சிகளின் காரணமாக, தனி மனிதனை திருத்தவேண்டிய அவர்கள், அவனுக்கு மரணதண்டனைக் கொடுத்து அழித்துவிடுகிறார்கள்.

மேலோடு பார்த்தால், கொலைக்குற்றத்திற்குத் தக்க தண்டனை மரணம் தான் என்பது நீதியாகத்தோன்றும்.

கொலை தண்டனை பெற்றவனுக்கோ பெற்றோர், மக்கள், மனைவி மற்றும் உறவினர்கள் இருக்கின்றார்கள். அவன் சட்டத்தின் மூலம் தண்டனை என்ற பெயரால் கொலையுண்ட நிகழ்ச்சி அத்தகையவர் வாழ்வில் குறுக்கீடு செய்து வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு துன்பம் அளிக்கவில்லையா?

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம். அந்த யுகம் இப்போது மலர்ந்துவிட்டது.
இனி சிந்தனையும், சீர்திருத்தமும் தனிமனிதனின் வாழ்விலும், சமுதாய வாழ்விலும் எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும்

-வேதாத்திரி மகரிஷி

சனி, 27 செப்டம்பர், 2014

இன்பத்தை உணர்வது உடலா, உயிரா, மனமா??

உயிர்தான் மனம் என்ற மலர்ச்சியில் இன்பத்தை உணர்கிறது. அதற்கு புலன்கள் உதவியாக இருக்கின்றன.

புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் காந்த தன்மாற்றமே இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன....

எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம், இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்சக்தி இயங்குகிறது

உடலிலே இருக்கக்கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக செலவாகும். அந்தச்செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமான உணரப்படுகிறது.

உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது.

உடலை கருவியாகக் கொண்டு புலன்வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது



-வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

விருப்பு, வெறுப்புகளே சினம் உருவாக காரணங்களாம். சினமற்ற இடத்தில் மனம் அடங்கியே இருக்கும்.ஆனால், “சினமடங்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்க கல்லார்க்கு வாயேன் பராபரமே”, என்று தாயுமானவர் சொல்லுகிறார்.அப்படியானால் சினம் அடங்கினால் மனம் அடங்காதா??

மகரிஷி :
மனம் அடங்கும் என்பதற்கு சரியான பொருள் உணர வேண்டும். மனதை எப்போதுமே அடக்க முடியாது.
ஆழ்ந்த உறக்கத்திலே மனம் அடங்கி நிற்கும். மயக்க மருந்தான குளோரோபாம்(chloroform) கொடுக்கும் இடத்திலே மனம் அடங்கி நிற்கும்.

பிற வேளைகளில் மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
ஆகவே மனதை அடக்க முடியாது. யோகத்தின் மூலம், அகத்தவத்தின் மூலம், மனத்தை உயிர்மேல் செலுத்தி உயிர் உணர்வு பெற்று உயிருக்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து, அந்த விரிவு நிலையிலே ‘அவனே நானாக இருக்கிறான்’ என்ற உண்மையை அறிந்து தன்னடக்கம் பெற்றுவிட்டால்,

தன்முனைப்பு நீங்கி அந்த இடத்திலே மனம் விரிந்து விரிந்து, அதன் ஆதி நிலையோடு எப்போதும் ஒன்றி நின்றுகொண்டிருக்கும்.

இதனை ‘சகஜ நிட்டை ‘ என்று சொல்லுவார்கள். அந்நிலையிலே மனம் விரிந்து நிற்கும். அதுகூட அடங்குவது அல்ல.

விரிந்த நிலையிலே மனம் உடையவர்களுக்குச் சினம் எழாது. சினம் எழவேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.

ஆனாலும் உலக வாழ்க்கையிலே விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வாழும் மக்களிடையே அந்த நிலையிலே இருந்து சினம் எழாமல் காத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற பயிற்சியைதான் நான் கொடுத்து வருகிறேன்

 

வியாழன், 25 செப்டம்பர், 2014

அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன்” என்கிறோம். அவ்வாறெனில், மனிதனின் தவறுகளுக்கு இறைவந்தானே காரணம் ? மனிதனை என் தண்டிக்க வேண்டும்?


மின் சக்தியால் இயங்கும் விசிறியோ, விளக்கோ பழுதடைந்துவிட்டால் மின்சாரத்தைக் குறை கூறமுடியாது பழுதடைந்த பொருளைத்தான் சீர் செய்ய வேண்டும்

அதேபோன்று, மனிதனானவன் இறையாற்றலால் இயங்கும் ஒரு கருவியே. இறைவனைக்கண்டுபிடித்து அவனையே தண்டிப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால், அந்த இறைவன் பரிணாமத்தில் எந்த உருவத்தில் வந்து செயல்களைச்செய்து அதே பதிவுகளை அதன் கருமையத்துள்ளே பதிவாகப்பெற்று திரும்ப அதே செயலைச்செய்கின்ற அளவுக்கு கூர்தலறமாக (செயலுக்கு-விளைவு) வந்திருக்கின்றதோ, அந்த கருவியைத்தான் திருத்த வேண்டும்.

திருத்தம் செய்து சீரமைக்கும் பேரறிவின் செயலையே ’தண்டனை’என்ற சொல் குறிக்கும்

எந்த இடத்தில் இயற்கையினுடைய ஆற்றலுக்கு முரணாக செயல்கள் உண்டாயிற்றோ , எந்த செயலில் அல்லது இடத்திலிருந்து தனக்கும் பிறருக்கும் துன்பம் வருகின்றதோ, அங்ககேயே அதை மாற்றி அமைப்பதற்கான திருத்தம் பெறுவதற்காக சிந்தனை மிக்க அறிஞர்களால் வகுக்கப்பட்ட சீர்திருத்தமுறையைத்தான் ‘தண்டனை’ என்ற பெயரால் திருந்த வேண்டிய மனிதனுக்கு கொடுக்கிறார்கள்

-வேதாத்திரி மகரிஷி

புதன், 24 செப்டம்பர், 2014

ஆண்டவன் கணக்கு

ஆண்டவனைக் கேட்டு இனிமேல் எதுவும் வாங்கிட முடியும் என்று நீங்கள் கணக்குப் போட்டால் அவன் ஏமாந்தவன் அல்ல. நீங்கள் செய்து விட்டு கணக்குப் பார்த்து, எனக்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கூட கணக்கு சரியாக வராது. முன்பு, பின்பு செய்திருந்தால் கூட செயல் பாக்கி இருந்தால் பிடித்துக் கொள்வான். அவனிடம் ஒரு நியதி இருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்களோ அந்தச் செயலின் விளைவாக, நல்லதையோ, கெட்டதையோ உங்கள் நோக்கத்திற்கு த...க்கவாறு, செய்யும் திறனுக்குத் தக்கவாறு, அவன் செயல் விளைவாக தருவான்.
நீங்கள் நல்ல நோக்கத்தோடு நல்ல முறையில் செய்தால், செய்த செயலின் விளைவு எல்லாம் நல்ல விளைவாகவே இருக்கும். அது தான் அவன் கொடுக்கக் கூடிய வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில், நல்ல செயலையே செய்தோமானால் எல்லாமே நலம் விளையும் என்கின்ற பொழுது சமுதாயத்திற்கு நலம் தர வேண்டும் என்பது ஒன்று ஆயிற்று; கடமை செய்கின்றோம் என்பது ஒன்று ஆயிற்று. இரண்டாவதாக நல்லதையே ஒவ்வொரு செயலிலும் செய்து கொண்டே வந்தால் இறைவனுடைய ஆற்றலை நாம் காணக்கூடிய அளவுக்கு ஒரு விழிப்பு நிலை வந்துவிடுகிறது.
பிறகு நாம் இறைவனைத் தேடிக் கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய இருப்பைக் கண்டுகொள்ளலாம். ஆக இறைவனை உணர்ந்து கொள்வது என்பது சமுதாயத்திற்கு நலம் தருவதாகும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களுடைய அடிப்படையான நோக்கம். இந்த அடிப்படையான நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்ல செயலை செய்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்; அதன்பிறகு செய்து பலன் காண வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப வேண்டும்.
                                                                                     - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சனிப்பெயர்ச்சியால் மாறுதல் உண்டா..??

சனி உங்களை பிடிக்கிறதா..? நீங்கள் சனியை பிடித்துக்கொண்டிருக்கிறீர்களா?? மனிதன் தான் சனியை பிடித்துக்கொள்கிறான். அதுவும் நம் நாட்டில்தான்.
-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 22 செப்டம்பர், 2014

ஐந்தொழுக்கப் பண்பாடு


 நீண்ட காலமாக மனித இனம் உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 1] உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத தேவைகளையும், வசதிகளையும் உற்பத்தி செய்து அவற்றை அளவு முறை அறிந்து அனுபவித்தல், 2] இய...ற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுதல், 3] வேற்றுயிர்ப் பகையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் ஆகிய மூன்று வகையிலும் தங்கள் அறிவையும் உடல் உழைப்பையும் பயன்படுத்த வேண்டியது வாழ்க்கையின் அவசியமாகும். வாழ்க்கையின் அவசியங்களை உணர்ந்து முயற்சித்து மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். ஆதிகாலம் முதற்கொண்டு இக்காலம் வரையில் மனித இனம் எடுத்த வாழ்க்கை வள முயற்சிகள், கல்வி, ஒழுக்கம், பண்பாடு, தொழில் திறன் இவையாக எல்லா நாடுகளிலும் தொடர்ந்து செயல் முறையில் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நிலவிய வெப்ப தட்பம், நிலவளம், அறிஞர்கள் போதனை இவற்றால் சில பல பழக்க வழக்கங்கள் ஆங்காங்கு உருவாயின. அவை மற்றவர்களுக்கும் மற்ற நாட்டுக்கும் பரவி வாழ்க்கை முறையில் பழக்கமாகி விட்டன. பல காலங்களைக் கடந்து இன்று மனிதகுலம் விஞ்ஞான யுகத்திற்கு வந்திருக்கிறது. எந்தெந்த காலத்தோ, எந்தெந்த இடத்திலோ அவ்வப்போதைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போது எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் வாழ்வுக்கு ஒத்ததாக இருக்க முடியாது. இக்கால அறிஞர்கள் கூடிச் சிந்தனை செய்து மனித இனப் பண்பாட்டினைப் புதுப்பிக்கவேண்டியது அவசியம்.

புதிய பண்பாடு

புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய் ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்
அதிகசுமை ஏதுமில்லை 1] அவரவர் தம் அறிவின்
ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2] மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா
மாநெறியும், 3] உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4] பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தை
போற்றிக் காத்தும், 5] பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மக்களுடைய பண்பாடு சிறக்க வழி என்ன?

மகரிஷியின் விடை:
அறம், தத்துவஞானம் இவை எந்த அளவு ஓங்குகின்றனவோ, அந்த அளவே சமுதாயம் பண்பாட்டில் உயரும். மக்கள் சீரும் சிறப்பும் பெற்று இனிது வாழ்வார்கள்

சனி, 20 செப்டம்பர், 2014

இன்பமான வாழ்க்கை வாழ :

ஆன்மீக வாழ்வே தன்னையும் தூய்மை செய்து கொண்டு , மற்றவர்களுக்கும் தூய்மை அளிக்கவல்லது . இறையுணர்வும், அறநெறியும் இணைந்ததே ஆன்மீக வாழ்வு .

இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை , எல்லாமறியும் பேருணர்வு, அழிவில்லா தன்மை , நியதி வழுவாத் தன்மை, பெருங்கருணை ஆகியவற்றை மதித்து , இயற்கையினுடன் இணைந்து , அதனை போற்றி வாழும் இறையுணர்வும், ஒழுக்கம் , கடமை, ஈகை ஆகிய அறநெறிகளும் மன...ிதனுக்கு மனத்தூய்மையையும் , வினைத்தூய்மையையும் அளிக்க வல்லது.

மனத்தூய்மை , வினைத்தூய்மை மறையும் பொது மனிதன் துன்பம் இல்லாத இன்பமான வாழ்க்கை வாழ முடியும் .


--அருள் தந்தை

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இறைநிலையின் பேரறிவு

"மனம் இல்லா மனிதனும் இல்லை ,
மனதை அறிந்த மனிதனும் இல்லை ".

மனம் என்பது எளிதில் அறிந்து கொள்ள முடியாத தத்துவம் என்பது உண்மையே. மனதிற்கும் அதற்குள்ளாக இருக்கும் அறிவிற்கும் இருக்கின்ற உறவை அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்து கொண்டால் பிரபஞ்சத் தத்துவங்கள் அனைத்துமே எளிதாக விளங்கி விடும் .
...
ஒவ்வொரு பொருளிலும் அறிவு தான் இயக்க நிலையில் இருக்கிறது . இதற்கும் மேலாக மனிதனுடைய அறிவு. அந்த அறிவை மனத்தால் அறிந்து கொள்ளும் ஆறாவது அறிவாக மனம் இருக்கிறது .மனம் அடங்கினால் தான் அறிவு மேலோங்கும். இறைநிலையின் பேரறிவே மனிதனிடத்தில் ஆறாவது அறிவாக உள்ளது.

--அருள் தந்தை

 

வியாழன், 18 செப்டம்பர், 2014

சீவகாந்தம்

காந்தநிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ ."

பிரபஞ்ச காந்தம் என்று சொல்லப்படுகிற வான்காந்தம் . இதே காந்தம் உயிரினங்கலாகிய சிறு எல்லைக்குள் இயங்கும் போது சீவகாந்தம் என்று சொல்லப்படுகிறது.
...
சீவகாந்தம் என்பதையும் , கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கி கொண்டால் அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்கு கிட்டிவிடுமானால் , வாழ்க்கைக்கு அடிப்படை நியதிகளாக உள்ள உள்ளுணர்வு பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்சக்தியின் ஆற்றல் , காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் .

சீவகாந்தத்தை நாம் அழுத்தம்,ஒலி , ஒளி, சுவை, மணமாக செலவு செய்து கொண்டு இருக்கின்றோம் . சீவகாந்ததின் பெருமையை உணர்ந்து அதனை அளவு முறையோடு செலவு செய்யும் போது மனம் நல்ல முறையில் இயங்கும் . சீவகாந்ததின் திணிவை பொறுத்தே மனத்தின் இயக்கம்.

மனம் நல்லமுறையில் இருந்தால் தான் அறிவு செயலுக்கு வரும் . சீவகாந்தம் திணிவு பெற்ற இடமே கருமையமாக விளங்குகிறது. கருமையமே பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய பொக்கிஷம். கருமையத்திற்குள்ளாக இறைநிலை அறிவாக உள்ளது.

அதனை அறிவதற்கு சீவகாந்தம் திணிவோடு இருக்கவேண்டும் .சீவகாந்தத்தை கூட்டிக்கொள்ள தவமும் , அறமும் அவசியம் .

--அருள் தந்தை

புதன், 17 செப்டம்பர், 2014

நற்றொண்டு

"தனி மனிதன் தான் தன்னுடன் வாழுகின்ற மக்களுக்கு தங்கள் பொருள், வருவாய் , அறிவு , உடல் ஆற்றல்கள் இவற்றில் நூறில் ஒரு பங்கேனும் சமுதாய நலனுக்கென ஈகையாக்கி ஒதுக்கி அவர்கள் நலன் பெற பயன்படுத்துவது சமுதாயத்தைச் சிறப்பிக்கச் செய்கின்ற "நற்றொண்டு" ."

--அருள் தந்தை

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அவனே நான் , நானே அவன்

உன்னிலே நானடங்க என்னுளேநீ விளங்க
உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மந்தப் பிறப்பெய்தியதே முழுமை "
...
நான் யார் ? என்ற கேள்வியை எழுப்ப , தன்னை அறியும் முயற்சி தான் மனிதனை மகிழ்வாக வாழச் செய்ய இன்றியமையாததாகும் .இதுவே " தன்னை அறிதல்" , "தன்னுணர் நிலை" , "நான் யார்" என்பது.

நான் என்பது ரூபமா? அரூபமா? பொருளா? சக்தியா? உடலா? மனமா?அறிவா? நான் எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்? ஏன் வந்தேன் ?எங்கே வந்தேன்? ஏன் இருக்கிறேன்? எனக்குச் செல்வேன் ? எப்படி முடிவேன்? என்று மூலமும் , முடிவும் எதுவென அறிய ஆறாவது அறிவின் பண்பட்ட நிலையே தன்னுணர் நிலை .

இதனை உணர்ந்து கொள்ளும் போது இறைநிலையே நானாக என்னுளே அறிவாக விளங்குவது தெளிவாகும். மனஅலைகளின் சுழல் விரைவு குறைய குறைய மனத்தின் நிலைபொருளான அறிவாகி மனமே தரத்தில் உயருகிறது. பிறகு மனம் அசைவற்று அறிவே அகக்காட்சியாகும்.

இங்குதான் " அவனே நான் , நானே அவன் " என்ற அறிவின் முழுமைப்பேறு கிட்டுகிறது .

---அருள் தந்தை

திங்கள், 15 செப்டம்பர், 2014

அகம் பிரம்மாஷ்மி

கடலிலிருந்து நீர் ஆவியாக மாறி , மேகமாகி, மழையாகி, வெள்ளமாகி , பூமியில் ஓடும்நீர் முடிவில் கடலையே நாடி ஓடுகிறது . கடலை அடைந்த பின்னர் தான் அதன் வேகம் தணிந்து அமைதி நிலை பெறுகிறது . அதே போன்று இறைநிலையில் இருந்து தோன்றி பற்பல நிகழ்ச்சிகளாகி , அறிவாகி இயங்கும் ஆற்றலானது அதன் மூல நிலையை நாடுகிறது. அதையறிந்து அதனை அடைந்த பின்னரே அமைதி பெறுகிறது .


அறிவை அறிய அறிவு திருப்பம் பெரும் போது தான் , தனது இயக்கக் களமான உயிரை உணர்ந்து தனது மூலநிலையை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது தான் "நான் யார்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.இறைநிலையே நானாக என்னுள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும் . இதுவே "அகம் பிரம்மாஷ்மி " .


இறைநிலை என்னிடத்தில் அறிவாக இருப்பது போல எல்லா உயிர்களிடத்திலும் இறைநிலையே உள்ளது என்று உணரும் போது எந்த உயிருக்கு துன்பம் கொடுக்கமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்வோம் .

தனக்கும் , மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுப்பது அந்த இறைவனுக்கே கொடுக்கும் துன்பமாக நினைப்போம் . அவ்வாறு இறைநிலையே எல்லாமாக உள்ளது என்று உணர்ந்து கொள்ளும் போது "எல்லா உயிர்களிடத்தும் அன்பும் , கருணையும் தோன்றும்.

--அருள் தந்தை

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

துன்பத்தின் காரணம்

மனிதன் துன்புற காரணம் தன் உடல் வரையில் எல்லைகட்டி கொண்டு குறுகி நின்று உணர்ச்சிவயப்பட்டும், இயற்கையின் நியதியறியாமலும் , செயல் விளைவு தத்துவம் புரியாமலும் செயலாற்றுவதே காரணம். இதை உணர்ந்து விழிப்புடன் செயலாற்றி வந்தால் எல்லாக் குழப்பங்களும் நீங்கியவனாய் இன்பத்தில் திளைத்திருப்பான்.

இறைநிலையே உயிராகி ,உடலாகி, மனமாக மனிதனாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்து ,"எல்லாம் வல்ல பர...ம் பொருளே நானாக இருக்கிறேன்" என்ற உணர்வு பெற்றதும் எல்லாச் சிக்கல்களும் தாமே மறைந்தோடி விடும் .

---அருள் தந்தை

சனி, 13 செப்டம்பர், 2014

உலக அமைதி வேள்வி

உலக மனித சமுதாயம் தனி மனிதன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுமையுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் .

உலக மனித சமுதாயம் போர், பகை என்ற அச்சமின்றி உழைத்துண்டு வளம் காத்து வாழ்வதற்கு ஒவ்வொருவரும் அமைதியான நல்ல என்ன அலைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலக மக்கள் முழுவதையும் நினைத்து
"வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "
என வாழ்த்த அந்த வாழ்த்து அலை உலக மனித சமுதாயத்தில் , அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதிலும் அமைதியும் , மகிழ்ச்சியும் நிலவிடச் செய்யும் .

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மனிதன் மெய்யுணர்வு பெரும் போது

மனிதன் மெய்யுணர்வு உணர்ந்த நிலைக்குச் சென்று விடும் போது , அவர் தன்னுடைய புலன் வழிச் செயல்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு அதன் மூலமாக நல்ல பயன்களைப பெற முடியும் .

மெய்யுணர்வு பெற்ற நிலையில் செயல் விளைவுத் தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொண்டு , எப்பொழுதும் அளவு முறை மாறாத விழிப்பு நிலையோடு செயல்படுவர்....

அந்நிலையில் அவர்களுடைய வாழ்க்கையானது வெற்றிகரமாகவும் , இணக்கம் மிகுந்ததாகவும் , உடல் நலமும் , மனவளமும் , நட்பு நலமும் நிறைந்ததாகவும், ஓர் உயர்ந்த உன்னதமான இலட்சிய நோக்குடனும் , அமைதியாகவும் விளங்கும் என்பது உறுதி .

---அருள் தந்தை

வியாழன், 11 செப்டம்பர், 2014

விதியை மதியால் வெல்லலாம்

மேல்நோக்கி வீசப்பட்ட கல் கீழ் நோக்கி வருவதற்கு காரணம் இறைநிலையின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலே. கல்லுக்கு ஆற்றலைக் கொடுத்து மேலே வீசிய மனிதனுக்குக் கல் கீழே விழாமல் தடுக்க முடிவதில்லை.

இறைநிலையை எல்லா இடங்களிலும் , எல்லா நேரங்களிலும் வெற்றி கொள்வது என்பது இயலாத ஒன்று தான் ....

ஆனால் இறையாற்றலோடு ஒத்துப்போகும் போது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் விதியையும் வெற்றி பெறலாம்.
சிந்தனையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்போர் இறையாற்றலை உணர்ந்த மதியின் துணைகொண்டு தன்னையும் வெல்லலாம்.

--அருள் தந்தை

புதன், 10 செப்டம்பர், 2014

வினை விதைத்தவருக்கு வினையே பலன்

இறைநிலை அவரவைகளுடைய வினைக்கு தகுந்தவாறு விளைவை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அவரவர் செயலாலேயே அவரவர்க்கு இன்பமோ , துன்பமோ, இலாபமோ, வெற்றியோ விளைகின்றன. இன்ப துன்ப விளைவுகள் என்ற வினை விளைவு நீதியை இறைநிலை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதனையே "வினை விதைத்தவன் வினையை அறுப்பான் " என்று கூறுகின்றனர்.

இயேசுநாதரைக் கைது செய்த போது , அவரது சீடர் பேதுரு என்பவர...் தனது வாளை உருவிக் கொண்டு கைது செய்தவர்களைத் தாக்கப் புறப்பட்டார் . அப்போது இயேசு அவரைக் கையமர்த்தி " நீ உன் உறையுள் இடு . ஏனெனில் வாளை வீசுகிற எல்லோரும் வாளினாலேயே மடிவார்கள் " என்றார் .

இறைநிலையின் பேரறிவினுடைய திறனை விளக்குகின்ற செயல் விளைவு என்னும் ஓர் அற்புத நாடகத்தை உணராமல் செயலாற்றினால், அதன் காரணமாக உடல் நோயோ , மன நோயோ உண்டாகின்றன . மனித வாழ்வில் அவரவர் விருப்பம் போல் செயல் புரியலாம் என்ற கருத்துக்கு இடம் இல்லை .

சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு காக்கப்படும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும், விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்த வேண்டியது அவரவர் கடமை. அதற்காகத் தனது செயல்களைப் பிறருக்குத் தீமை தராத முறையில் செயலாற்ற வேண்டும் .

--அருள் தந்தை

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

அண்டத்த்திலும் பிண்டத்த்திலும் அவனே

அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான் .
கண்டத்தின் மேலே கருத்தை நிறுத்தினோன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கிறாய் ."
...
மனித மனத்தின் உட்பொருளாக , இருப்பு நிலையாக இருப்பதே இறைநிலையாகும். நிலைபொருள் நிலையில் அறிவாகவும், அலைபொருள் நிலையில் மனமாகவும் , இரண்டுமாகவும் இருப்பவன் மனிதன்.

அலையை நிறுத்தி அழைக்கு அடித்தளம் கண்டால் அதுவே நிலை. நிலை என்ற இருப்பு நிலைதான் தெய்வமாகவும், அறிவாகவும் இருக்கிறது . இதுவே அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் எங்கும் நீக்கமற நிலைத்து உள்ள சுத்தவெளியாக இருக்கிறது. அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் சுத்தவெளி அறிவும் மனமுமாக இயங்கும் சீவனில் உயிர்த்துகளாகிய விண்ணின் மையத்தில் இருப்பதுவும் அதே சுத்தவெளி தான் .

அதுவே பேரியக்க மண்டலம் அனைத்தையும் சூழ்ந்து அழுத்தி எல்லாவற்றையும் முறையாக இயங்கச் செய்கிறது . சீவனுக்குள்ளாக அமைந்த சுத்தவெளி அதன் படர்க்கை நிலையென்ற மனத்தால் தனது அலையாற்றலால் தோன்றி இயங்கும் அனைத்தையும் சீவன்களின் மூலமும் மனிதனின் சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்கிறது.

----அருள் தந்தை



 

திங்கள், 8 செப்டம்பர், 2014

திருமணம் பற்றி அருள் தந்தை

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத்துறைகளிலும் உயர்வடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்நாள் முழுவதும் உதவுவது கணவன் மனைவி நட்புத் தான் . திருமணத்திற்கு முந்தைய காலகட்டம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலந்தான். ஒருவக்கொருவர் எல்லா தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால் தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும். இருவர் உள்ளம் ஒன்றுபட்டு உலகில் வாழ எண்ணத்தால் ஒப்புக்கொண்டு செயலில் ஒருவர் மற்றவருக்கு உடல் பொருள் ஆற்றலை அர்ப்பணித்து நிற்கும் நிலையே திருமணம் .

---அருள் தந்தை .

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

1. ஆக்கினை :
மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

2. சாந்தி:
மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது....

3. துரியம்:
உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

4.துரியாதீதம் :
உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

5. பஞ்சேந்திரியம்:
மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

6.பஞ்சபூத நவகிரகம் :
நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

7.ஒன்பது மையம் :
மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

8. நித்தியானந்தம்:
உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

9.இறைநிலை தவம்:
இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ...

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அகத்தாய்வு பயிற்சிகள் :

1.எண்ணம் ஆராய்தல்:
------------------------------
எண்ணம் தோன்றும் விதம் , அதற்கான அடிப்படைக் காரணங்கள், எண்ணம் செயல் படும் விதம் இவற்றை தெரிந்து கொண்டு எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி "எண்ணம் ஆராய்தல்" .

2. ஆசை சீரமைத்தல் :...
-----------------------------
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள , எத்தகைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என எண்ணிப் பார்த்து, ஆசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குரிய முறையான பயிற்சியே "ஆசை சீரமைத்தல்".

3.சினம் தவிர்த்தல் :
---------------------------
சினத்தை ஒழிக்க முடியாது .சினத்தை தவிர்க்கத்தான் முடியும். சினத்தை எவ்வாறு தவிர்ப்பது? அதனால் வரும் கேடுகள் என்னென்னென்ன என்பதற்கான முறையான பயிற்சியே "சினம் தவிர்த்தல் ".

4.கவலை ஒழித்தல்:
---------------------------
கவலை என்பது என்ன ? எவ்வாறு அதை வகைப்படுத்திப் போக்கிக் கொள்வது ? இவற்றுக்கான வகுக்கப் பட்ட பயிற்சியே "கவலை ஒழித்தல்".

5. நான் யார்?:
-----------------
நான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் வேண்டும்? என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தன்னிலை விளக்கம் அல்லது தெய்வநிலை விளக்கம் என்ற பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே "நான் யார்?" என்ற பயிற்சி .

 

வியாழன், 4 செப்டம்பர், 2014

மன்னிப்பை அருளிய மகான் :

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை பேருந்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருக்கையில், அவர் மீது திடீரென்று ஒரு பெண்மணி வெற்றிலைச் சாறை உமிழ்ந்து விட்டார். அது மகரிஷி அவர்களின் வெள்ளைச் சட்டையில் ஆங்காங்கே பட்டு, சிகப்புக் கோலமாகியது . இதை மகரிஷி அறிந்து கொண்ட அதே வேளையில், அப்பெண்மணியும் அதைப் பார்த்துவிடுகிறார். உடனே பேருந்தை விட்டு இறங்கி வந்து தான் செய்த தவறால் கலங்கிய படியே மகரிஷி அவர்களை நெருங்குகிறார். மகரிஷி அவர்களின் கனிவான தோற்றத்தைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

தனது தவறுக்காக வருந்திய அப்பெண்மணி, மகரிஷி அவர்களைப் பார்த்து "தங்களைப் பார்த்தால் ஒரு மகான் போல் ததோன்றுகிறீர்கள் . உங்களுக்கு அபச்சாரம் செய்து விட்டேன் . எனது எச்சிலை உங்கள் மீது உமிழ்ந்து விட்டேன். அறியாமல் செய்த பிழையை மன்னித்து அருள வேண்டும் ". என்று உள்ளம் பதற வேண்டுகிறார்.

"அதற்கென்ன அம்மா!துடைத்து விட்டால் போகிறது. நீங்கள் வருந்த வேண்டாம்" என்று ஆறுதல் அளித்தார் மகரிஷி . ஆனால் அப்பெண்மணி ஆறுதல் கொள்ளவில்லை. தான் செய்த தவறால் வேதனைப்பட்டார் ." தயவு செய்து உங்கள் சட்டையைக் கழட்டிக் கொடுங்கள், நான் தூய்மை செய்து கொடுத்து விடுகிறேன்" என்றார் அப்பெண்மணி.

"சட்டையில் எச்சில் பட்டதற்காக ஏனம்மா வருந்துகிறாய்? இந்த உடலே எச்சத்தால் வளர்ந்து வந்தது தானே? அதை எதில் கழுவ முடியும்? " என்ற மகரிஷியின் தெளிவான சிந்தனையால் தான் அப்பெண்மணியை உடனடியாக மன்னிக்க முடிந்தது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டு என்றார் இயேசுபிரான். தான் அயர்ந்து உறங்கும் பொது காதில் இருந்த ஒரு கடுக்கனைக் கழட்டிய கள்வனுக்கு, மற்றதையும் கழட்டிக் கொள்ள வசதியாக புரண்டு படுத்து இராமலிங்க வள்ளலார். தன்னைக் காலால் உதைத்துத் தள்ளிய ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு, தன் கையால் முதன்முதலாகச் செய்த காலணியை அளித்தார் மகாத்மா காந்தியடிகள் இந்த மரபில் வந்தவர் வேதாத்திரி மகரிஷி .

ஒருவர் செய்த தீமைகளையும், கொடுமைகளையும் துளியும் மனதில் கொள்ளாமல் அவரை மன்னித்து அவருக்கு உதவுவதே உயர்ந்த பண்பு அத்தகைய உயர்ந்த மாமகானை நாம் குருவாக பெற்றிருக்கின்றோம்.

புதன், 3 செப்டம்பர், 2014

உடலுக்குள் இயங்கும் இறையாற்றல் :

உண்ட உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது. எவ்வளவு உணவு உண்டால் செரிமானமாகி ஏழு தாதுக்களாக மாறும்?. உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உண்டால் மட்டுமே செரிமானமாகும் .உணவை ஏழுத்துக்களாக மாற்றும் செயலை இறைநிலைதான் செய்கிறது. இதில் மனிதனின் செயல் ஒன்றுமில்லை.

உடல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மேலாக உணவு உண்டால் அந்த உணவு என்னவாகும்? உடலுக்குள்ளாகவே இருக்கும் இறைநிலை அந்தச் செ...யல் தவறு என்று அஜீரணத்தின் மூலம் எடுத்துக்காட்டுகிறது. இறைநிலையின் ஆற்றல் மனிதனுக்குள்ளாகச் செயல்பட்டப்போதிலும், அதற்கு முரணாக மனிதன் செயல் செய்வதால் துன்பம் வருகிறது.

எனவே இறைநிலைக்கு முரணில்லாது அதனோடு ஒத்துழைத்து அளவோடு , முறையோடு செயலாற்ற வேண்டியது அவசியம் .

--அருள் தந்தை

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பேரின்பநிலையை அடைய :

மனம், அறிவு,தெய்வம், சீவகாந்தம்,வான்காந்தம் எவை தெளிவாக உணரப் பெற்றால் பெரிய இயக்கமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் வான்காந்தத்தால் ஒழுங்காக இயக்கப்படும் காட்சியும் , சீவகாந்தம் உடலுக்குள் கருமையமாக அமைந்து உடலியக்கம்,மன இயக்கம் யாவும் சீராக நடைபெறும் அகக்காட்சியும்,சிந்தனையாற்றல் மிகுந்த அறிவுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கும் என்ற உண்மை உணரும் வரையில் பேராற்றல் பெற்ற அறிவு ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்கித் தோய்ந்து இதன் விளைவாக துன்பங்களையும் ,பொருள் வழி வாழ்வில் சிக்கல்களையும் ஏற்று விடுபட முடியாமல் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது. அதே அறிவு தன்னை அறிந்து கொண்டால் அதன் விரிவு நிலையறிந்த தெளிவில் ஐம்புலங்களாலான உணர்ச்சிவயப் பதிவுகளைத் தாண்டி விடுபட்டு இறைவனோடு இணைந்து பேரின்ப நிலையடையும் .

---அருள் தந்தை

திங்கள், 1 செப்டம்பர், 2014

மனவளக்கலையில் ஈடுபடுவோர் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கக்கூடாது அல்லவா?

மகரிஷியின் விடை :
வானக வேகம் மிகுதியாய் போகின்றது என்றால், மன அலைச் சுழலும் கூடவே சேர்ந்து மிகுதியாய் போகின்றது என்று தான் பொருள். மேலும் இத்தகைய மனஉந்தம் மிகுந்த நிலையில் [stressful, excitement, thrill] செய்யப் படும் செயல்கள் அட்ரீனலினின் சுரப்பு வேகத்தை மிகுதிப்படுத்தும். அந்தச் சுரப்பியை இயற்கை சில நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினையாகப் [immiedate reaction] பயன்படுத்தத்தான் தந்திருக்கின்றது [எ.கா: பாம்பைக் கண்டால் உடனடியாக ஓடி ஒளிந்து கொள்ள[fight or flight harmone]] . புருவ மத்தியில், உச்சந்தலையில் காந்தத்தைப் பிடிப்பதின் மூலம், பிட்டியூட்ரியின் [master gland] சுரப்பு விகிதத்தை மாற்றி அதன் மூலம் மற்ற எல்லா சுரப்பிகளின் சுரப்பு விகிதத்தையும் கட்டுக்குள் கொணர இயலும் என்பதால் தான் புலன்களை முறைப்படுத்த வல்லது நம் ஆக்கினை / துரிய தவப்பயிற்சிகள் எனும் கூற்றைத் தருகின்றோம். எனவே வாகனத்தை மிக அதிக வேகத்தில் செலுத்துதல் என்பது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல் எனும் உண்மையை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் விபத்து என்பது மற்றோருடையை சாப அலையாலும், நமது கர்மவினை அலைகளாலும், சந்தர்ப்பவசத்தாலும் நிகழ வல்லது எனும் உண்மையை வாகனத்தில் ஏறுமுன்னர் நினைவில் கொணர்ந்து துரியத்தில் நின்று அருட்காப்பிட்டு வண்டி ஓட்டுதலே நலம்.
இதே போன்று, சில குறிப்பிட்ட வகை நடனங்கள் [மேற்கத்திய, நாட்டுப்புற], சில வகை இசைகள் [மேற்கத்திய, நாட்டுப்புற], கேட்கும் போதோ ஆடும் போதோ நமது மன அலைச் சுழலை மிகுதிப் படுத்தி, அட்ரீனல் சுரப்பு விகிதத்தை மிகுதிப்படுத்தி, நமது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல்களை விளைவிக்க வல்லது. அத்தகைய நடனங்களை, இசைகளை மனவளக்கலைஞர்கள் பயிலாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே பயின்றிருந்தால் எப்போ விடமுடியும்ன்னு மனதுக்குப் படுதோ, அப்போ விட்டுடுங்க. அதுவரை நமது தவப்பயிற்சிகளில் சீராய் இயங்கி வாருங்கள்.