Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 9 மே, 2014

இறைவன் கொடுத்த இடம் :


அந்தக் காலத்தில் நமது உலக சமுதாய சேவா சங்கத்தில் உறுப்பினர் சந்தாவை அன்பர்கள் புதுப்பித்துக் கொள்வது சரியாக இல்லை. எனவே வருட முடிவில் நானே அவர்களுக்கான சந்தா தொகையை செலுத்தி ரசீது கொடுத்து வந்தேன். சந்தா தொகை ரூபாய் 2. அம்மாதிரி வளர்ந்தது கூடுவாஞ்சேரி உலக சமுதாய சேவா சங்கம். அப்போது கூரைக் கொட்டகை. அந்தக் கொட்டகையும் என் செலவில் தான் கட்டப்பட்டது. அந்தக் கிராமம் மிகவும் பின்தங்கி இருந்தது என்று அதை முனேற்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பள...்ளிக்கூடமாவது வைக்க வேண்டும் என்று நினைத்தேன். மாதிரி கிராமம் போட்டு ஒரு அமைச்சரைக் கூப்பிட்டு திறப்பு விழா செய்தோம்.
பிறகு கலெக்டரிடம் போய் இடத்திற்குக் கேட்டோம். அவர் முனிசிப்பைக் கேட்டார். எவ்வளவு நிலம் இருக்கிறது என்று. 1.36செண்ட் இருக்கு என்றார். சரி என்று கலெக்டர் அது வரைக்கும் உரிமைப் பட்டா கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அதன்படி பட்டா கிடைத்தது. அவ்வளவுக்கும் வேலி போட்டேன். இந்த இடத்தை பிளாட் போட்டு விற்றால் ஒரு பிளாட்டுக்கு ரூ.25,000 கிடைக்குமே என்று அந்த ஊர் ஆட்கள் எல்லாம் காலை வேலையில் தவம் செய்து கொண்டிருந்த நேரம் வந்து அங்கிருந்த கல்லை உடைத்து கம்பி வேலியை அறுத்துப் போட்டு விட்டார்கள். அப்போது ஒரு ஆள், "உள்ளே தான் இருக்கிறார்" என்றான். அதற்கு இன்னொரு ஆள், "வெளியே வரட்டும் அவன் காலை உடைத்து விடுகிறேன்" என்றான். அந்த ஊர் ஆட்கள் எல்லாம் நம் வீட்டில் தறி வேலை செய்தவர்கள்தான். அதற்குள் அம்மா வந்து பார்த்துவிட்டு, என்ன இப்படி செய்கிறார்களே?" என்றாள். நான் சொன்னேன் : " நீ கொஞ்சம் கூட வருத்தப்படக்கூடாது. இறைவன் ஒரு ஆர்டர் கொடுக்கிறான், இந்த ஊர் தகுதியில்லை, உன்னுடைய எதிர்காலத்திற்கு. உனக்கு வேண்டிய இடம் நான் தயாராக வைத்திருக்கிறேன்" என்று சொல்கிறான்" என்று கூறினேன்.

சிந்தனையாற்றல் மிக்க
பகுத்தறிவாளர்களே சேர வாரீர்.."
========================
.
..மரணத்திற்கு அஞ்சாத கடமை ...
-------------------------------------------------------------------
..சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்..
------------------------------------------------------------------
..அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்..
----------------------------------------------------------------------------------------------
.
ஆதி நிலை - அறிவு நிலை :-
"வானவெளி வீடென்ற பேராதார
வலிமைமிக்க வாழ்வடைந்தேன்; அது வரைக்கும்
மோனவெளியை மறந்தே மூச்சு ஓடும்,
மனிதஉடல் வரை அறிவை எல்லை கட்டி
யானடைந்த துன்பத்திற்கு அளவு இல்லை,
இனி என்ன? இரண்டிடமும் ஒன்றே. அங்கே
போனபின்னர் நிலைத்தபின்னர் உணர்ந்து கொண்டேன்
பூர்வீக நிலையன்றிப் புதிது அல்ல."
.
வள்ளலார் அருள் :
"என்று எனை இராமலிங்க வள்ளல் பெருமானார்
எதிர் நின்று காட்சி தந்து அருளைப் பொழிந்தாரோ
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத் தூய்மையாச்சு
இன்று எந்தன் மனநிலையோ வள்ளற் பெருமானார்
எந்தச் செயல் செய்யென்று உணர்த்து வாரோ அதுவே
நன்று எனக் கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்."
.
மரணத்திற்கு அஞ்சாத கடமை :-
"மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்."
.
"உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்."
.
"பங்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்லத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக