முழுமுதற் பொருளை (மெய்ப்பொருளை) அறிய வேண்டும்; அதோடு கலப்புற வேண்டும் என்ற பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய ஒரு தத்துவத்தை, பெரிய ஆற்றலை உள்ளடக்கி இருப்பவன் தான் மனிதன். பிறந்தது முதற்கொண்டு அந்த வேகம் அப்படியே இருந்து கொண்டு இர...ுக்கிறது. வேறு சில சிறு சிறு காரணங்களால், புலன் அறிவின் மயக்கத்தினால் எழுந்து இயங்க முடியாமல் அறிவு தேக்கமுற்று இருக்கிறது. அந்த வேகத்தை ஒரு சிறு பொருள் மேல் பாய்ச்சுகிறோம். ஒரு செயலின் மேல் பாய்ச்சுகிறோம். ஒரு நாளைக்கு திருப்தியாக இருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து திருப்தி இல்லை. இப்படி எந்தப் பொருள்களின் மீதும் ஆசை வைக்கிறோம். அனுபவிக்கிறோம். மீண்டும் வெறுக்கிறோம்.
காரணம் என்னவென்றால் - உண்மையாக எழுச்சிப் பெற்று உள்ளுணர்வாக இருக்கக்கூடிய ஆசை என்ற அறிவின் எழுச்சி, அது இதை நாடவில்லை என்பதே இதற்கு காரணம். அது நாட வேண்டியது பரிபூரணமான எல்லையை அடைவதே. அந்த அறிவின் எழுச்சியை சிறு சிறு எல்லையில் புகுத்தும் போது அது குறுகிய காலத்தில் நிறைந்து விடுகிறது. பிறகு வழிந்து ஓடுகிறது.
காரணம் என்னவென்றால் - உண்மையாக எழுச்சிப் பெற்று உள்ளுணர்வாக இருக்கக்கூடிய ஆசை என்ற அறிவின் எழுச்சி, அது இதை நாடவில்லை என்பதே இதற்கு காரணம். அது நாட வேண்டியது பரிபூரணமான எல்லையை அடைவதே. அந்த அறிவின் எழுச்சியை சிறு சிறு எல்லையில் புகுத்தும் போது அது குறுகிய காலத்தில் நிறைந்து விடுகிறது. பிறகு வழிந்து ஓடுகிறது.
பெரிய வெள்ளம் வருகிறது. ஒரு குட்டையில் ஒரு நிமிடத்தில் நிரம்பிவிடுகிறது. நிரம்பிய அந்த வெள்ளம் மறுபடியும் வேறு பக்கம் ஒரு ஏரியில் போகிறது, ஏரி நிரம்பிவிட்டால் அதன் பிறகும் போகிறது. பெரிய அணையில் நிரம்பிய பிறகு மீண்டும் ஆறாகப் போகிறது. சமுத்திரத்திற்குப் போன பிறகுதான் அதற்கு அமைதி வரும். எங்கே இருந்து புறப்பட்டதோ, அங்கே போனால்தான் அமைதி இருக்கும். பேராற்றலுள்ள அறிவு நிலைக்கும், எந்த இடத்திலிருந்து பிறவி தோன்றியதோ, அந்த இடத்தை அறிந்து கொண்டால் தான் திருப்தியாக இருக்கும். அங்கேதான் நிறைவு கிட்டிடும்.
இதற்கு மத்தியில் எந்தப் பொருளாலும் நிறைவு கிட்டாது. அறிவு உயர்வதற்காக மற்ற பொருட்கள், ஆராய்ச்சி எல்லாம் தேவை. கடமையினால்தான் அவை தேவையாக இருக்கின்றனவே தவிர, அவையே நம்மை இறைநிலைக்குக் கொண்டு போய் விட்டு விட முடியாது. ஆழ் மனம் தேடும் பொருளின் (ஆதிநிலை / மெய்ப்பொருள்) மேல் தான் மனதிற்கு ஓயாத நினைவு (தேடுதல்) இருக்கும். அதன் மேல்தான் மதிப்பு இருக்கும். தேடுகிற பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆராயும்போது அதுதான் தத்துவஞானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக