Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

மெய்ஞ்ஞான வாயில்

புருவமையத்தை "ஆக்கினைச் சக்கரம்" என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனத்தைக் குண்டலினியில் ஒடுக்கிப் பழக, உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும். உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்க்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்கு...ண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலை தான் 'மாயை' எனப்படும். மயக்க நிலையில் உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகளே, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் அறுகுணங்களாகும்.

அறுகுண வயப்பட்டு மக்கள் செலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம். ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகிறது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது, தனது ஆற்றலை- அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்றி, அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது. தனது இயக்க

விளைவுதான் இன்பமும் தும்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவுபெற்றுத் தன ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும், தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டுச் சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவிற்குத் திறமை பெருகும். மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிளுக்குள் புகும் வாயில், ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப்பெற்ற குண்டலினி சக்தியின் இயக்கவிறைவு நாளுக்குநாள் கூடிக்கொண்டேயிருக்கும்; உடல் நலம், மன நலம், ஓங்கும்; முகம் அழகு பெரும்.


                                                                                                             -வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக