இறை என்பது தெய்வநிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல்
தெய்வம் என்பது அரூபமான பேராதாலச் சக்தி. மாபெரும் பேரியக்க
மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலண்களைக்
கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும்
கணிக்க முடியாததும் அறிவு புலண்களின் மூலமாகத் தேடும்போது
இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும்போது
உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மைநிலை எதுவோ அதுவே
தெய்வம் என்று வழங்கப்படுகிறது.
வாழ்வு சிறப்படைய, வளம் பெற்று ஓங்க, உடலுக்கும் உள்ளத்திற்கும்
ஒரு நற்பயிற்சியே இறைவணக்கம். வயதிற்கும் அறிவு நிலைக்கும் ஒத்த
முறையில் இறைவணக்கம் தேர்ந்து நடத்தி வரவேண்டும். உடல்நலம்,
பொருள் வளமும் அறிவு இனிமையும் கெடாதவாறு சிக்கனமான முறையில்
இறைவனக்கம் அமையவேண்டும். உடல்நலமும் மனவளமும் பெறுவதற்கு
மனிதன் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கே, தன்னை மேலும் மேலும்
உயர்த்திக் கொள்வதற்கே, இறைவணக்கம் உதவுகிறது என்பதை நன்கறிந்து
நினைவில் கொள்ளவேண்டும்.
இன்ப துன்ப உணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருளை மகிழ்விக்க
வேண்டுமென்று நினைப்பது அறயாமை. இறைவணக்கம் முடிந்த உடன்
வாழ்விற்கு வளமளிக்கும் சங்கற்பங்களை ஓதுவது சிறந்த பயனளிக்கும் முறை. உடல்நலம், அறிவு, செல்வம், ஒழுக்கம், அறம், கடமை, கீர்த்தி இவற்றில் மேன்மேலும் சிறப்படைவேன் என்று பலமுறை தானே உறுதி
கூறிக்கொள்வது மனிதன் வாழ்வைச் சிறப்பிக்க ஏற்ற உயர்ந்த பயிற்சி.
இறைவணக்கத்தின் மூலம் முழுப்பயன் பெறவேண்டுமெனில் மனிதன்
தன் சினம், கவலை, என்ற இருவித மனோஎழுச்சிகளையும் படிப்படியாக
குறைத்துப் பின் அடியுடன் போக்கிக் கொள்ளவேண்டும். ஆகவே இறைவணக்கத்தில், இயற்கைத் தத்துவ விளக்கத்தில் வாழ்வின் அனுபவத்தில் சிறந்த அறிஞரைத் துணைகொண்டு, இறைவணக்கம் தேர்ந்து
பயின்று ஒழுகி மேன்மையடையுங்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக