Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 30 நவம்பர், 2015

மனிதன் என்ற உயர் மதிப்போடு பொது நிலையில் ஆராய்ச்சி செய் :



நியாய அநியாயம் ஆராய்ந்து, நேர்மையுடன் வாழ்ந்து, அதிக காலத்தைக் கழித்த அன்பரே! வசதி, பிரதிவாதி, வழக்கறிஞன், நீதிபதி இந்நான்கு வகையினிலும் நீயாகவே இருக்கும் வழக்கு ஒன்று உண்டு. அது எது?...

எந்த விதமான எண்ணம், சொல், செயலானாலும் அதன் விளைவாகத் தனக்கோ, பிறர்க்கோ, அன்றோ, பின்னோ, அறிவுக்கோ, உடலுக்கோ, துன்பம் விளைந்தால், அது செய்யத் தகாத காரியம் அல்லவா?

சமூக வாழ்வில் பலவித இன்னல்களைத் தரும், சாதி, மதம், தேசம், மொழி, இனபேதங்கள், தனி உடமைப் பற்று என்றவைகளை மனிதன் கொள்வது குற்றமல்லவா? இவ்விதக் குற்றங்களிலிருந்து நீ விடுபட்டவனா?

இவைகளால் மனிதருக்கு விளையும் துன்பங்களை நீயும் ஏற்க வேண்டி, இவைகளை எல்லாம் ஏற்று அனுபவித்து, வருவதால் நீ வாதியாகவும்,

இத்தகைய குற்றங்களில்ஒன்றையோ, பலவற்றையோ, நீயும் செய்து வருவதால் பிரதிவாதியாகவும்,

இந்தக் குற்றங்களுக்கு யார் யார், எந்தெந்த அளவில் பொறுப்பாளிகள் என்று ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில், நீ வழக்கறிஞனாகவும்,

இந்தக் குற்றங்களின் விளைவறிந்து இந்தக் குற்றங்களைப் போக்கவும் எழாமல் செய்யவும் வழி வகுத்து செயலாற்ற வேண்டிய பொறுப்பில், நீ நீதிபதியாகவும் இருக்கிறாய்.

அறிவின் அடிப்படையில் - ஆரம்பத்தில் - நீ ஆதியாகவும், அறிவின் உயர்வில் முடிவாகவும், ஆகவே ஆதி - அந்தம் என்ற இரு நிலைகளிலும் உள்ள நீ, உன் உச்சஸ்தானமாகிய எங்கும் நிறைந்துள்ள அகண்டாகார நிலையில் அமர்ந்து தீர்மானம் செய்ய வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

அருள் தொண்டு :
"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்,
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல், கையந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்."
.
(நீதி மன்றம் வந்தும் பொய்த்ததுண்டு ...)
குற்றம் பலவிதம் :
"திருடுதற்குச் சந்தர்ப்பம் கிட்டிடாமல்
திருடனவன் நல்லவனாய் இருப்பதுண்டு.
திருடியே பிழைப்போனின் செயலை மற்றோர்
தெரிந்து கொள்ளும் வரையில், அவனும் யோக்யன் ;
திருடாத உத்தமனும், சந்தேகத்தால்
திருட்டுக் குற்றம் சாட்டப்படுவதுண்டு!
திருடியவன், பிடித்துவிட்டோன், சொத்து, சாட்சி,
சேர்ந்து நீதி மன்றம் வந்தும் பொய்த்ததுண்டு."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி :



அகத்தவம் எனும் மனவளப் பயிற்சியால் அறிவில் நுண்மையும் உறுதியும் பெற்று ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றிணைப்பான அறநெறியை வாழ்வின் செயலாக - கர்மயோகமாகப் பின்பற்றி ஆன்மாவை முக்களங்கங்களிலிருந்து விடுவித்து, மெய்ப்பொருள் உணர்வில் சிவமே ஜீவனாக இயங்கும் உண்மை உணர்ந்த பேரின்ப அனுபவமே ஜீவன் முக்தி எனப்படும்....



தவம், அறம் இரண்டும் பயின்று ஆன்ம விடுதலை பெற உரிய காலம், வாழ்நாள் நீளம் வேண்டும். இடையிலே உயிர் உடலை விட்டுப் பிரியாது காக்க வேண்டியது ஜீவன் முக்தி பெற விரும்பினோர்க்கு இன்றியமையாததாயிற்று. எனவே ஜீவன் முக்தர்களது வாழ்க்கையில் மூன்று நோக்கங்கள் இணைந்துள்ளன.

1] அறிவில் முழுமை பெற்று இறைநிலையுணர்ந்து அந்நிலை அகலாத அறிவின் விழிப்பில் நிலைத்திருக்கப் பழக வேண்டும்.

2] தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் எழாத முறையோடு, அளவோடு உலகை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியாகிய அறவழி நின்று வாழ வேண்டும்.

3] தன் விருப்பமின்றி உயிர் உடலை விட்டுப் பிரியாமலிருக்கும் காயகல்பமுறையில் சித்தி பெற வேண்டும். அகத்தவம், அறநெறி, காயகல்பம் என்ற மூன்றும் ஒன்றிணைந்த யோக வாழ்வே ஜீவன் முக்தர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறியாகும்.

தமிழ்நாட்டில் இந்த முறையில் வாழ்ந்து அறிவிலே முழுமை பெற்றவர்கள் சித்தர்கள் என மதிக்கப் பெற்றனர். உடலிலிருந்து உயிர் பிரியாமல் மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொண்டு நிறைவு பெற்றவர்கள் பலர். அவர்களில் பதினெட்டு சித்தர்கள் புகழ் பெற்றவர்கள். உயிர் பிரியாத உடல் பெற்று ஜீவ சமாதியடைந்தவர்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. உடலை எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் அது கெடாது. அத்தகையவர்கள் உடலை அவர் சமாதி எய்திய பிறகு மண்ணில் புதைத்து அதன் மேல் ஏதேனும் சிலை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாயிற்று.

**************************************
.
அகத்தவப் பயன் :
"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்
மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை;
பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
நேர்மையுடன் வாழ உன்னில் அவன் - அவனில் நீயே."
.
"இறையுணர்வார்சிலர் முயன்று வேதநூல்கள் மூலம்
இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல்
இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி
எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;
இறைநிலையே அறிவாக இயங்கும் உண்மை காண
ஏற்றதொரு சாதனைதான் அகநோக்குப் பயிற்சி
இறையறிவாய் உலகாக உயிர்களாகத் திகழும்
இந்த உண்மை உயிர்மீது மனம் ஒடுங்க ஒளிரும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 28 நவம்பர், 2015

.மௌனம்:

.
.
நாம் கருத்தொடராய்ப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களை கணக்கெடுப்பது போல எல்லாருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.
.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும் கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டங்கள், ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்ம தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
***********************************
.
"மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்,
மிகவிரிவு. எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 27 நவம்பர், 2015

சோஷலிசம்

ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், முடிந்து விடுகிறான். மனித சமுதாயமோ தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கி, வளர்த்து, அறிவு ஊட்டி, தொழில் திறம் காட்டி, வாழ்விற்கு வேண்டிய பொருட்கள், வசதிகள் அனைத்தையும் அளித்துக் காத்து வாழவைக்கிறது சமுதாயம். எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு வாழ்வளிக்கும் சமுதாய நலனுக்கே தன் அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தி வாழ வேண்டும். இவ்வாறு தனி மனிதன் தன் கடமையுணர்ந்து வாழவேண்டுமென்ற தெளிவும், பொறுப்புணர்வும் கொண்டு வாழ ஏற்றது சமுதாயம் என்பதை சொசைட்டி' (Society) என்று வழங்குகிறோம். சொசைட்டியின் நலனை முன் வைத்து ஒவ்வொரு மனிதனும் வாழும் நெறி (Ism) தான் சோஷலிசம்.

பொருட்களும், பாலுறவும் தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றைப் பிறர்க்கோ, தனக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடல் உணர்ச்சிக்கோ, துன்பம் எழாத அளவோடு, முறையோடு துய்க்கும் ஒழுக்கமும், பிறர்க்கு ஒத்தும் உதவியும் வாழும் ஈகையும் கடமையும் இணைந்த தொகுப்புக் கருத்து "அறம்" ஆகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கு நிலைகளை உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப்பேறு தான் வீடு பேறு அல்லது மெய் விளக்கமாகும். இறைநிலை விளக்கமும் இதுவே.

மனிதன் இறைநிலையுணர்ந்து, அறவழி கண்டு, பொருட்களையும், பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால் தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும் அமைதி நிலவும். இதனால் மெய்விளக்கம் பெறும் வழியை இறைவழிபாடாகவும், அறநெறியினை உயிர்வழிபாடாகவும் வைத்து வாழ்க்கை நெறியினை முன்னோர்களான பேரறிஞர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர்.இத்தகைய மனித வாழ்வின் நன்னெறியே "மதம்" என்ற பேரால் வழங்கப் பெறுகின்றது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் தேவைகளாக மனிதனுக்கு மலர்ந்தன.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
**********************************


சிந்தனை ஆற்றல் உடைய ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம்,
அறிவு முழுமை பெறவேண்டும் என்பதே."

.
"சமுதாய அமைப்பினிலே உள்ள குறைபாடே
தனிமனிதன் குற்றங்கள் அனைத்திற்கும் மூலம்.
சமுதாயம் தனியாரைத் தண்டித்து, மேலும்
தவறிழைக்கும் செய்கையினை நீதிஎனில் நன்றோ?
சமுதாய அமைப்பு முறை சீர்திருந்திப் பொருட்கள்
சமத்துவமாய் அனைவருக்கும் கிட்டுமெனில், உலக
சமுதாயத்தில் குற்றம் நிகழ இடமேது?
தண்டனைக்கு எனவகுத்த சட்டங்கள் ஏனோ?."
.
"இயற்கையின் பேரியக்கத் தொடர்களத்தில்
என்னுடலோர் சிற்றியக்க உறுப்பு ஆகும்.
முயற்சியால் உடல்தேவை முடித்துக் கொண்டேன்.
முறையான எனது உடல் உழைப்பைக்கொண்டு
பயிற்சியால் ஒழுக்கம் அறம்காத்து வாழ்ந்தேன்
பரநிலையும் அகத்தவத்தால் உணர்ந்துவிட்டேன்.
எழுச்சிபெற்ற உயிர்நிலையும் இன்பதுன்ப
இயல்பறிந்தேன் இனி எனதுசெயல் தொண்டேயாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 26 நவம்பர், 2015

நலமே காணும் பாங்கு

நாமெல்லாம் அது கெட்டது, இது கெட்டது என்று நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம். சமுதாய மக்கள் உறவிலே, கணவன், மனைவி உறவிலே, நண்பர்கள் உறவிலே எந்தத் தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்து தடவை கெட்டது, கெட்டது என்று நினைத்தால், உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.... அதை விட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு அவர் எனக்கு எத்தனை நன்மைகளைச் செய்தார் என்று எண்ணி எண்ணி அதையே பல தடவை நினைந்து நினைந்து உள்ளத்தில் நிரப்பிக் கொண்டு வந்தால், ஒரு சிறு தவறு அல்லது எங்கேயோ ஒரு ஏமாற்றம் இருந்தால் கூட தெரியாது.

கணவன் மனைவி உறவிலே கூட திருமணத்தில் இருந்து இன்றுவரை அந்த அம்மா செய்த நன்மைகள் என்ன? என்று கணவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அதைப் போல அவர் கணவன் அவளுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி எண்ணிப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் நன்மையைத் தான் செய்திருப்போம். நம்மைகளின் எண்ணமே அழுத்தமான நினைவுகளாகும். அப்படி நன்மையையே இனிமையான அனுபவங்களையே, பெருக்கிக் கொண்டால், வெறுப்பு எனும் தீமை நுழைய இடமே இல்லை.

ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால், பழிச் செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்துவிடும். அதனைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம். மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 25 நவம்பர், 2015

விலங்கினப் பதிவு

ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-

1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன் இன்பத்துக்காகவோ பறித்தல்.

என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, "ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமம் அடைந்துள்ளது. இதனால் மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயரினங்களின் தேவையுணர்வு, செயல் முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபு வழி பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல் பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :
.
1) பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்
.
2) மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.
.
3) மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன்முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன் இன்பத்துக்காகவோ பறித்தல் என்பதாகும்.
.
இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகாது. அவற்றிற்கு ஒத்தவை, ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால் உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கி சிக்கலின்றி வாழ்வோம்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
*************************************
பிறவிக் கடல் :
"தன்முனைப்பு, பழிச்செயல்கள் பதிவு, மாயை
தளை மூன்றும் மனித உயிர் களங்கமாகும்,
வன்முறையில் இவை அறிவைப் புலன்கள் மூலம்
வழுக்கிப் பிறவிக் கடலை நீள வைக்கும்;
உன்வயமாம் அகத்தவத்தால் அகத்தாராய்வால்
உண்மையுணர்ந்து அறுகுணத்தைச் சீரமைத்து
இன்முரையில் உயிர்கட்குத் தொண்டு ஆற்றி
இறைநிறையில் உனை இணைக்கத்தூய்மை உண்டாம்."
.
இயற்கை முறை தவம் - குண்டலினியோகம் :
"ஒன்றிஒன்றி நின்றறிவைப் பழக்கும் போது,
உறுதிநுட்பம் சக்திஇவை அதிக மாகும்
அன்றுஅன்று அடையும்அனு பவங்கள் எல்லாம்
அறிவினிலே நிலைத்துவிடும். ஆழ்ந்து ஆய்ந்து
நன்றுஎன்று கண்டபடிச் செயல்க ளாற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்.
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கைமுறை சிறப்புடைத்து. இஃதே தவமாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 24 நவம்பர், 2015

கருமையச் சிறப்பு

வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.

எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.

****************************************
.
கருதவம் :
"கருவறிந்து கருத்தொடுங்கித் தவமிருக்க
கற்பதற்கு வயது பதினாறு வேண்டும்;
கருமுதிர்ச்சியடையா முன் இதைப் பழக்கக்
கனல் மீறும் வேகத்தை உடல் தாங்காது;
கருதவத்திற்கரு கதையாம் அந்நாள் மட்டும்
கருத்தை விரித்தொன்றல் ஜெபம் உருவத் தியானம்
கருமுதிர்ந்தும் கருத்தை விரித்தே வணங்கல்
கனியிருக்கக் காய் உண்ணும் வகை போல் ஆகும்."
.
உண்மை நிகழ்ச்சிகள் :-
"பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம்
பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து
இறக்கின்றோம். இதுவேதான் என்றும் என்றும்
எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை
மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு,
மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வைச்
சிறப்பாக அனுபவித்து, இயற்கைக் கொப்ப,
சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 நவம்பர், 2015

நால்வகைப் பேறுகள் :



.
"மனிதன் பிறந்தது முதல் முடிவு வரையில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நால்வகைப் பேறுகளும் அடையவேண்டும். புலனின்பம் கெடாமல் காக்க மக்களோடு கொள்ளும் உறவில் அளவுமுறை கண்டு விழிப்புடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அறநெறி வழுவாத முறையில் பொருளும் இன்பமும் பெற்று வாழ்ந்தால் அறிவு நாளுக்கு நாள் சிறப்புற்று மேலோங்கி இறையுணர்வு பெற்று நிறைவான வாழ்க்கை எய்த முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் 4 வகைப் பேறுகளும் மனிதன் வாழ்வின் நிறைவுக்காகப் பெற வேண்டும். ஆயினும் இந்த நான்கில் ஒன்றால் மற்றொன்று கெடாமல் பார்த்து பெற்று துய்க்க வேண்டும்.
.
வீடு பேறு எனும் சொல்லின் பொருள், வீடு எனில் இடம் என்று பொருள். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் உலகத்தின் மீது உலகம் உயிர்கட்கு இடமாக இருக்கிறது. உலகம், எங்கு எந்த இடத்தில் இருக்கிறது. அது சூரிய குடும்பத்தில் உருண்டு, மிதந்து உலவிக் கொண்டிருக்கிறது. சூரிய குடும்பம் எங்கே இருக்கிறது. எந்த இடத்தில் இருக்கிறது. சுத்தவெளியான இருப்பு நிலையே சூரிய குடும்பத்துக்கு இடம். வீடில்லா வீடு சுத்தவெளி. இவ்வெளியே எல்லாப் பொருட்களிலும் நிறைவாகவும் இயக்க ஒழுங்கான அறிவாகவும் இருக்கிறது.
.
மனிதனின் அறிவு உயர்ந்து தன்னை அறிந்து கொள்ளும் நிலையில் அறிவே மெய்ப்பொருளாக இருப்பு நிலையாகக் காட்சியாகும். வீடில்லா வீட்டின் வெட்ட வெளியே அறிவாக அறிவே தானாக உணரும் போது தான் வீடுபேறு. வீடுபேறு பெற்ற நிலையில் அறம் இயல்பாகும். அறவழியில் பொருளும் இன்பமும் பெற்று துய்க்கும் போது தான் அறிவிற்கு வீடுபேறு கிட்டும். இவ்வாறு அறமும் வீடுபேறும் மனித அறிவில் ஒன்றோடு ஒன்றாக ஒன்றில் ஒன்றாகத் தொக்கி நிற்கின்றன. பிறவியின் பெருநோக்கத்தை எய்த அறத்தின் மூலமே பொருள், இன்பம், வீடுபேறு இவைகளைப் பெறுவோம். வளமுடனும் நலமுடனும் நிறைவுடனும் வாழ்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம வாழ்க வளமுடன்.
***************************************
அறிவின் அக நோக்குப் பயணம் :
"ஆன்மிகத் துறையென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப் போகுங்கால்
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும், இனிமையாம்
ஆன்மஒளி சுடர்விட்டு உள்ளுணர்வுப் பேறாகும்."
.
"திறந்துகொள் தான் தனது என்று சொல்லும்
சிற்றறையை, வெளியேவா, அகன்று நோக்கி
பறந்துலவு உலக சமுதாயத்தின் பரப்பகத்தில்
பற்று அறும் கடமையினால் பழுக்கும் ஞானம்."
.
"தெய்வ அறிவே திருந்திய அறிவாம்;
உய்யும் நல்வழி உள்ளுணர் தவமே;
செய்யும் வினைகளைச் சீரமைத்திட
ஐயமில்லை அறும் பிறவித்தொடர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பூரணசக்தி - குறுகிய ஆற்றல் :



ஆதியென்றும் பிரம்மம் என்றும் சொல்லப்படும் சர்வ வியாபக பூரணசக்தியே "நாம்" அல்லது "நான்" என்பதாகும் என்று ஒரு நண்பருக்கு விளக்கம் சொன்னேன். அவருக்கு அந்த அத்வைதத் தத்துவம் புரியவில்லை. நாம் பிரம்மமா? பிரம்மம் சர்வ வல்லமையும் உடையது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையால் அத்தகைய பிரம்மம் நாம் எனில் ஜீவன்களின் இன்ப துன்பச் சுழ...
லுக்கே காரணமாக இருக்கும் இந்த உலகை ஊதி அழித்துவிட முடியுமா? ஏதோ அதைச் செய்து காட்டுங்கள் என கேலியாக கேட்டார்.

அதற்கு, ஆம்! பிரம்மம் என்ற நிலையில் நமக்கு சர்வ வல்லமையும் இருக்கிறது. ஆனால் எண்ணம் மட்டும் இல்லை. அப்படி ஏற்பட்டவுடன் அந்த நிலைக்கு அறிவு என பெயரிட்டு அழைக்கிறோம். இந்த அறிவு என்ற நிலையில் எந்த சோதனையோ நடத்தவெனில், அந்தச் சக்தி சொரூப அளவில் மட்டும் சுருங்கி அதற்கேற்ற ஆற்றலுடன் மட்டிலும் செயலாற்றுகின்றது.

ஆகவே எண்ணும் நிலையில் எண்ணம் தோன்றும். உருவ அளவிலே ஒடுங்கிய - குறைவுபட்ட - பின்ன சக்தியாகவும், எண்ணமற்ற நிலையில் நிறைந்த நிற்விகற்ப பூரணமாகவும், இருக்கிற நம் நிலையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என விளக்கினேன்.
- **************************************
அறிஞர் :
"அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்."
.
ஈர்ப்புச் சக்தியும் - இயங்கும் பிரபஞ்சமும் :
"ஈர்ப்பு எனும் ஓர் சக்தி சூனியமாக
எங்கும் நிறைவாயிருக்கும் நிலையில் ஆதி.
ஈர்ப்பு என்ற அரூபத்தின் எழுச்சியேதான்
எவ்வுருவுக்கும் மூல அணு என்கின்றோம்.
ஈர்ப்பு ஒலி,ஒளியாக அணுவில் மாற
இந் நிலையைக் காந்தம், உயிர்,சக்தி என்போம்.
ஈர்ப்பு அணுவாகிப்பின் இணைந்திணைந்து
இயங்குவதே அண்டபிண்ட சராசரங்கள்."
.
சூனியமே உறுதிப் பொருள் :
"சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்
சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று;
சூனியமே கோடானு கோடியண்ட
சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்;
சூனியமே வலிமிக்க உறுதியாய் நின்று
சொரூப கோடிகளை ஈர்த்தியக்கு தன்றோ?
சூனியத்தை அணு நிலையைக் கொண்டா ராய்ந்தே
சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்."
.
வாழ்க வையகம் அல்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 21 நவம்பர், 2015

முன் பின் பிறவிகள்


ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின்னோக்கிக் செல்ல வேண்டும். அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்க்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.
.
பின்னோக்கிக்ச் செல்லும் உருவ பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாக பரமாணுவிலேயே முடிவுபெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப் பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்.
.
ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவைகள் அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாகும்.
.
ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறியவேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
***********************************************
பிள்ளைகளும் பெற்றோரும்:
"பிள்ளைகளைப் பெற்றோர்கள் உடலைவிட்டால்
பெரும்பாலும் அவருயிர்கள் கருத்தொடராம்
பிள்ளைகளோடிணைந்துவிடும் இயற்கைநீதி ;
பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்
பிள்ளைகளை வழிவழியாய் இப்பேராக்கம்
பின் தொடர்ந்து குலக்கொடியைத் தூய்மையாக்கும்.
பிள்ளைகளும் பெற்றோரும் வினைத்தொடர் ஆம்
பேரினைப்பில் எப்போதும் ஒன்றேயாவார்."
.
மறு பிறவி :
"மரம் வளர்ந்தால் வித்து இடும்
மரத்தினது தன்மையெல்லாம் வித்தில் உண்டு.
மரம் வித்து வித்து மரம்
மாறி மாறித்தோன்றும் எல்லை இல்லை;
மரம் செத்தால் அது பிறவா,
மற்றுமதன் வித்துக்கள் மரங்களாகும்.
மரம் வித்து நிலைபோல்தான்
மனிதருக்கும் மற்றுயிர்க்கும் மறு பிறப்பு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 20 நவம்பர், 2015

பயிற்சியும் தேர்ச்சியும்

அறுகுணங்கள் பழிச் செயல்களாக மலர்ந்து உயிருக்கும், மனதிற்கும் களங்கம் ஏற்படுத்துவதோடு விடுவதில்லை. அவை உடலுக்கும் கூடக் களங் கத்தை உண்டு பண்ணி விடுகின்றன.

ஆறு துர்க்குணங்களையும் ஆறு நற்குணங்களாகச் சீரமைத்துக் கொள்ள...
ுதலானது, மனவளக்கலையின் இரண்டாவது அங்கமான தற்சோத னையின் முக்கியமான பகுதியாகும். அறுகுண வயத்தில் நீங்கள் எந்த அளவில் முன்பு இருந்தீர்கள் என்று சோதித்துப் பாருங்கள். மனவளக்கலைப் பயிற்சிக் குப் பிறகு, இன்று எந்த அளவுக்கு அதில் நீங்கள் முன்னேறி இருக்கிறீர்கள் என்றும் சோதித்துப் பாருங்கள். மேலும் முயலுங்கள். வெற்றி பெறுங்கள்.

தற்சோதனையை அவ்வப்போது நடத்துங்கள். வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் நடத்தலாம். மாதம் ஒரு முறை பௌர்ணமியில் நடத் தலாம்.அல்லது உங்களுக்குச் சௌகர்யமான போதெல்லாம் நடத்தலாம். அப்போதெல்லாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். 1/2 மணி நேரம் தவமியற்றுங்கள். நல்ல துரியத்தில் இருந்து கொண்டு ஆராயுங்கள். எண்ணத்தை எடுத்து ஆராயுங்கள். ஆறு குணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆராயுங்கள். உங்களிடம் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவற்றைப் போக்கும் வழிமுறைகளை ஆராயுங்கள்.

குறைகள் நீங்குவதற்குரிய தெளிவான, உறுதியான சங்கற்பங்களை இயற்றுங்கள். தவத்தினால் பெற்ற மன உறுதியும், தற்சோதனையால் பெற்ற மனத்தெளிவும் எதிர்காலத்தில் உங்களை விழிப்புநிலையிலேயே வைத்திருந்து அறுகுண வயத்திலிருந்தும் பழிச்செயல்களிலிருந்தும் மீட்டுக் காக்கும்.

கடந்த காலத்தில் நடந்தேறிவிட்ட பழிச்செயல்களைக் கூட ஒவ் வொன்றாகத் தற்சோதனையில் எடுத்து ஆராயுங்கள். அவற்றுக்கு இப்போது பரிகாரம் செய்துவிட முடியுமானால், உடனே செய்வதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். பரிகாரம் செய்து இன்று சரி செய்ய முடியாத பழிச் செயல்களானால்,

பாதிக்கப்பட்டவர்களிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்படுத்திவிட்ட பாதிப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு நல்வாழ்வு பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துங்கள்.

குற்ற உணர்வை (Guilty Consciousness) மனதில் வைத்திருக்க வேண் டாம்.குற்ற உணர்வு நம் வாழ்வைக் கெடுத்துவிடும். திருத்தம் செய்யக் கூடிய தவற்றைத் திருத்தலாம். இல்லையேல் ""குற்றம் செய்துவிட்டேனே! ஐயோ, செய்து விட்டேனே!'' என்று உருகிக் கொண்டிருப்பதில் யாருக்கும் ஒரு பயனும் இல்லை.

தற்சோதனை செய்யுங்கள். அறுகுணச் சீரமைப்பில் தேர்ச்சி பெறுங்கள்.
**********************************
.
அறிவே ஆறுகுணங்களாக மாறுகிறது :
"அறிவுக்கு ஐம்புலன்கள் ஆயுதங்கள்,
அதை இயக்கும்போது தன்னிலையில் நிற்க,
அறிவுக்கு அனுபவங்கள் கூடும். அன்றி,
அது சலனமுற்றுப் பல பொருளில் பற்ற,
அறிவடையும் பலநிலைகள், காமமாதி
ஆறுகுணங்களாம். அதனை அறியும் போது,
அறிவு நிலை நிர்க்குணமாம். ஆய்ந்து பாரீர்,
அறிவினிலே அறிவு நிற்கும் அமைதி காண்பீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 19 நவம்பர், 2015

எதையும் சாதிக்கலாம் :

ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம்.... நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணருவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது. ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.

*********************************
அறிவின் தற்காலப் போக்கு :
"அறிவதனின் வேகம் இன்று மனிதருக்கு
அதிகரித்தும், பெரும் பகுதியான மக்கள்
அறிவதனை அன்றாட தேவை தீர்க்கும்
அவசியத்தில் செலுத்துகின்றார்; மற்றும் பல்லோர்
அறிவதனைச் செல்வத்தை அதிகரிக்கும்
ஆசையாக மாற்றிவிடுகின்றார்; ஆனால்
அறிவறிந்தோர் எண்ணம் மட்டும் உலகோர் வாழ்வில்
அன்பு இன்பம் அமைதி தர இயங்கி நிற்கும்."
.
"ஒழுக்கமெனில் உயிர்க்கு இன்னா செய்யா நோன்பாம்
ஒருவர் பிறர்க்கோ, தனக்கோ, உடனோ, பின்னோ
வழுக்கியும் தீமை செய்யா உணர்வு அஃது;
வாழ்வோர்க்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?
அழுக்காறு, பேராசை, சினம், கடுஞ்சொல்
ஐந்து பெரும்பழிச் செயல்கள் தவிர்த்த வாழ்வால்
பழுத்துவரும் அறிவு; பரஉணர்வு ஊறும்
பன்னலமும் அறநெறியும் இயல்பாய்ப் போகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 18 நவம்பர், 2015

மனதின் மூன்று நிலைகள்

மனதின் மூன்று நிலைகள் :
.
உயிரின் படர்க்கை நிலையில் மனம் இயங்கும் நிலைகளை மூன்றாகப் பிரித்துக் காணலாம்., அதாவது மேல்மனம் அல்லது புறமனம், நடுமனம், அடிமனம் என்று மூன்று நிலைகளாகும். இதில் அடிமனத்திற்கும் புறமனத்திற்கும் தொடர்புபடுத்தி இருப்பது நடுமனமாகும். இதில் நடுமனம் தான் மிகவும் முக்கியமானது.
.
உணர்தல், துய்த்தல், கணித்தல், சிந்தித்தல், பதிவுகொள்ளல் என்ற ஐவகைச் செயல்களைக் கொண்ட மனமானது தேவை, பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பம் இவற்றால் புலன்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு செயல் புரியும் போது அச்செயல் பதிவுகள் அதனதன் அழுத்தத்திற்கேற்ப மேல்மனம் அல்லது புறமனம் (conscious mind) நடுமனம் (Sub-conscious mind) அடிமனம் (Super-conscious mind) என்ற மூன்றிலும் பதிவுகள் ஏற்படுகின்றன.
.
தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே இந்திரியப் பதிவு [ஞானகர்மேந்திரியப் பதிவுகள்]. இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல்மனம் அல்லது "புற மனமாகும்".
.
தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாகிறது. இது தான் "நடுமனம்".
.
இவைகள் அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத் திரளில் பதிவாகி விடுகின்றன. இதுவே "அடிமனம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
*****************************
மனமே எல்லாம்:
"மனம், அறிவு, ஆதியெனும் மூன்றும் ஒன்றே
மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே
மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைகட்டும்
மதிஉயர்ந்த சிறப்பில் இந்த விலங்கை நீக்கி
மனத்தினது ஆதிநிலை யறிய நாடும்
மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்
மனம்விரிந்தோ ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்
மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 17 நவம்பர், 2015

பேரறிவில் தோய்வோம்

உலக வாழ்வில் பொருள், மக்கள், பால் (Sex), புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமை உணர்வோடும், அளவு, முறை அறிந்தும் விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானது. நீரில் குளிப்பது தேவைதான்; ஆனால், நீரில் மூழ்கி விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்வுக்குப் பலவகையிலும் தேவை தான்; ஆனால், நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் மனிதன் மேலே சொல்லப்பட்ட ஐவகைப் பற்றுதல்களால் அறிவு குறுகி மயங்கித் தன் பிறவி நோக்கத்தையும், வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ, அதே நேரத்தில், மனிதனிடத்தில் அமைந்துள்ள அடித்தள ஆற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புகிறது.

அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காகப் பெற்றுப் புற மனம் குழப்பமடைகிறது. இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்க, பேரறிவு, விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும், மனிதர்கள் மூலமாகவும் உதவிக் கொண்டே தான் இருக்கும்.

இந்த நிலையிலேனும், புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்கக்களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்றவைத்துவிடும். இவ்வகையில் பேரறிவில் புறமனம் தோய்வு பெறும்.








*****************************
விழிப்பு நிலை சீவன்முக்தி:
"செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர் ! இதனைவிட வேறு நீயார்?
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



திங்கள், 16 நவம்பர், 2015

இறைவனின் கருவி


இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம் - இறைவனுடைய கருவியாகவே இருக்கக்கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது. சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும்.

அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம். ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி, அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்த தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி, அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இது வரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
**************************************

இறைநிலையை விளக்கும் கடமை:
"தெய்வம் உயிர் சீவகாந்தம் திருநடனம் மறைபொருள்
தெரியாமலே உலகம் திகைத்துச் சிக்கல் ஏற்றது.
ஐயமின்றி அனைவரும் இவ்வரும் பொருள் விளங்கியே
அனைத்து விஞ்ஞானம் மெய்யறிவு நோக்கி முழுமையாய்
உய்ய ஓர் சிறந்த வழி உயர்ந்த காந்தத் தத்துவம்
உண்மை தெய்வம் உயிர் அறிவு உணர்த்தி விட்டதிந்த நாள்
செய்யவுள்ள கடமையோ இச்சீரறிவு உலகெலாம்
சிறப்புடனே பரவ ஏற்ற சீரிய தொண்டாற்றுவோம்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மௌன காலம்



மௌனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மௌனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்....


இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்து தான் வரும். அவை நமது மூளையோடு சார்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மௌனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆரய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் 'மௌன காலம்'.

எவ்வளவு காலம் மவுனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மௌனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மவுன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப் போக ஒரு மணி நேரம் மவுனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும் அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா ? அதேபோல மௌன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மவுனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



*********************************************
மோனம் :
"பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னைப்
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் களைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்;
பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல,
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே."
.
"மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்,
மிகவிரிவு. எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 14 நவம்பர், 2015

கர்ப்பகாலப் பொறுப்புகள்

 

குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.

மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.



*************************************
குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :
"வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ
வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;
பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து
பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்
ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை
உயர்வு எனும் சொற்களுக்கு அர்த்தம் காணும்
இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண
ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்".
.
பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :
"பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து
பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;
பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஆன்மாவின் மூன்று நிலைகள்

காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.



கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.



சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
*************************************
அறிவின் நான்கு நிலைகள் :
"அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து
அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று
அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம
அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்;
அறிவங்கே உயிராகும் துரியமாகும்
அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்
அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ
அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 12 நவம்பர், 2015

தாத்தாவும் பேரனும்

 

தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல்-விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.

பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும், பேரனும் அதாவது இறைவெளியும், நிழல் விண்ணும் ஆடும் கூத்துத் தான் பிரபஞ்சம்.

இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும், நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்துத் தானே இவையனைத்தும்!

இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிறபோது அது அலை. அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.

இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில் தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.

**********************************************
பேரறிவுக்குப் பத்துப் படிகள் :
"பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள் பத்தாக விளங்கிக் கொள்வோம்
பெரிய சுமை மனதிலிருந்திறங்கிவிடும் மனம் அறிவாம் சிவமுமாகும்.
ஒரியக்கமற்ற நிலை வெட்டவெளி இருப்பதுவே ஆதியாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும் விண்ணாகும் அதிலெழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில் கலப்புற வான்காந்த மாச்சு;
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி ஒளி சுவையாம் மணம், மனம் ஆம் -
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை உள்ளுணர்ந்தால் அது மெய்ஞானம்
சிந்திப்போம் உணர்ந்திடுவோம் சேர்ந்திருப்போம் இறைநிலையோடென்றும் எங்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 11 நவம்பர், 2015

மக்களின் அறிவு வளர்ச்சி

 

அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.

யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.

இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.

****************************************
உள்ளத்தின் நிலை :
"ஒரு மனிதன் அறிவு எவ்வெவ்விதத்து
உருவாகி வலுப்பெற்று உளதோ அந்தத்
திருநிலைக்கு ஏற்றபடி சிந்தை செல்லும்
செயல்களும் விளைவுகளும் பயனாய்க்காணும்;
வருபயனை உணர்ந்தறிவை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்களால் மட்டும் மாறும்,
பெரு வளமும் நலமும் சாதனையால் மட்டும்
பெற காக்க முடியும், பிறர் அளிக்க நில்லா".
.
அறிவின் வளர்ச்சி :
"அறிந்த அனைத்தையும் அறிவித்தோர் இல்லை
அறிவித்த அனைத்தையும் அறிந்தோரும் இல்லை
அறிந்த பலரிடம் அறிந்ததும் அனுபவ
அறிவும் இணைந்ததே அறிவின் வளர்ச்சியாம். "
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 10 நவம்பர், 2015

அலையின் தன்மை



நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும...் இருக்கலாம். பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல், நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாத போது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக்கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக்கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.

அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பௌதீக பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும் நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும் போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

***************************************


"பலப்பலவாம் அண்டத்துள் ஒன்றாய் உள்ள
பாரண்டத்தின் சிறப்பு எளிதோ சொல்ல !
நிலப்பரப்பை, நீர்ப்பரப்பை யூகித் தாலும்
நெடுங்ககடலுள் நிலம்நடுவில் அடங்கியுள்ள
சிலபொருளைக் கண்டாலும், சிந்தனைக்குச்
சிறிதும் எட்டா இரகசியங்கள் கோடா கோடி;
விலகிச் சுழன்றே மிதந்து இந்தப் பூமி
வெய்யோனைச் சுற்றி வரும் விதந்தான் என்னே!"
.
"வெட்டவெளியை இடமாய்க் கொண்டு சுற்றும்
விதவிதமாம் அண்டங்கள் சஞ்சாரத்தை
பட்டப்பகலும் இரவும் கண்காணித்து
பருவங்களுக்கேற்ப உலகோர் வாழ்வில்
திட்டமாய் வெப்பதட்பம் தரும் நலன்கள்
தீங்குகளை வானநூல் அறிஞர் சொல்வார்
இட்ட கோட்டில் எழுத்தைச் சேர்த்துப் பார்த்து
இராசிபலன் சொல்லக் கேட்கயார் அங்குண்டு?"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
 

திங்கள், 9 நவம்பர், 2015

உயிரும் மனமும்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**********************************************
குருவின் தொடர்பு :
"உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்
உயர் ஞான தீட்சையினால் உள்ளொடுங்கி
மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்
மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க
ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்
ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு
செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்
சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்".
.
குருவின் உதவி :
"தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,
தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;
அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ
அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.
இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,
வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை,
வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 
 

ஞாயிறு, 8 நவம்பர், 2015

முயற்சியளவே ஞான விளைவு

 

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.
*************************************************
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் :
"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒலியென்றால்
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்."
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை."
.
"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்
அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி
மெஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 7 நவம்பர், 2015

திறமை உயர்வு


 


ஏதோ ஒரு வகையிலோ, சில வகைகளிலோ, திறமைசாலியாக நீ இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். உன் திறமைக்குக் கடந்த கால மனித இனத் தொடரும் இக்காலச் சமுதாயத் தொடரும் ஆதாரம் என்பதை மறந்துவிடாதே. இந்த உணர்வு உன் திறமைக்கு வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பளிக்கும். கடமையிலே உன்னை உயர்த்தும், உனது திறமையை மேலும் மேலும் அதிகரிக்கும்.

ஒவ்வொரு துறையிலும் நீ அடைந்துள்ள உயர்வைவிட அதிகமான உயர்வை அடைந்துள்ளோர் பலர் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடாதே.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது உன்னைவிடத் திறமைசாலிகளைப் பாராட்டுவதும் உன்போன்ற திறமையில் முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதும் உன் திறமைக்கோர் சிறப்பளிக்கும் சாதனமாகும்.

சுயநல நோக்கத்தோடு பிறரைப் புகழ்வது கயமைச் செயல் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

.
நாட்டம் :
.
"எந்தஎந்தக் காலத்தோ வாழ்ந்திருந்த இறையறிஞர் சிந்தித்தார்கள்
இயற்கையாய் அன்றுவரை வளர்ந்த பண்பாடொப்ப மக்களுக்கு
அந்தஅந்தக் காலத்துத் தேவை சூழ்நிலையறிவுக் கிசைந்தவாறு
ஏற்றபடி வாழ்க்கைமுறை வகுத்தார்கள் சொன்னார்கள் கருணைகொண்டு;
இந்த விந்தை மிகுகாலம் விஞ்ஞான அறிவுக்கு எல்லாம் ஒவ்வா
என்பதனால் இக்காலநிலைக் கேற்ப வாழ்க்கைமுறை விளக்குகின்றேன்;
சொந்த சிந்தனையொட்டி வாழ்வாராய்ந் தவ்வப்போ அன்பர்கட்குச்
சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய தூய்மைபெற நலம் காண்பீரே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 6 நவம்பர், 2015

கூர்மையும், நேர்மையும் :

இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் மனித இனத்தினுடைய பரிணாமம், தோற்றம், வளர்ச்சி, இயக்கம் எல்லாமே இயற்கையின் உச்சக்கட்ட சிறப்பு ஆகும். மனித இனமானது இயற்கையின் உச்சக்கட்டச் சிறப்பு ஆகும். மனிதனின் மனமானது இயற்கையின் சிறப்புமிக்க பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருக்கிற களஞ்சியம் ஆகும். பன்னெடுங்காலமாக இயற்கையின் ஒவ்வொரு அதிசயமும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கி இருப்பாக வைக்கப்படிருக்கிறது. வான் காந்தத்தையும் சீவகாந்தத்தையும் விளங்கிக் கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும், பிரபஞ்சத்தின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆறாவது அறிவில் கூர்மை, நேர்மை என்னும் இருவகை உயர் திறன்கள் அடங்கியுள்ளன. கூர்மை விஞ்ஞானமாகவும், நேர்மை தத்துவ ஞானமாகவும் திகழும். காந்த ஞானம் அறிவின் இரு திறன்களையும் வளர்க்கும். மனிதனுடைய மனதின் அடித்தளமாக உள்ள ஆன்மீக அறிவு வளத்தை நிறைவாகப் பெற முடியும். இந்த வகையில் ஒருவர், தான் உள்ளுணர்வாகப் பெறவேண்டிய பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி, காந்தம் இவற்றை உணர்ந்தால் அவரிடம் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு ஓங்குவதோடு தெய்வீக குணங்களாகிய அன்பும், கருணையும் மலர்ந்து அவருடைய வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.
 


************************************************
அனைத்து இயக்கங்களும் காந்த ஆற்றலே :
.
"வான் காந்தம் சீவகாந்தம் வளம் ஆற்றல் மறந்திடில்
வழிவேறு இல்லை தெய்வம் அறிவு இவை உணர்ந்திட;
ஏன் என்றால் மெய்ப் பொருளோ எங்கும் நிறைபெருவெளி
இதனோடு விண் சுழலின் அலையிணைந்து உறைந்திட
ஆன்மாவாய் ஆளும் சீவ காந்தமாகும் உடலினில்.
ஐயமில்லை விண் உயிராம் இயல்பு சுழலலையதாம்,
மேன்மையோடு உயிர் மையத் தமைந்தவெளி அறிவது
மிக வியக்கத் தக்க அதன் படர்க்கை நிலை மனமதே".
.
இறைநிலை :
"தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்.
தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்;
தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை அதைக் காணேன் என்றால் மயக்கே;
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 5 நவம்பர், 2015

இறைநிலையுணர்ந்த அறிவு


பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனிதப் பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப் போற்றப்படுகிறது. அதுவேதான் இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கு உட்படாதது. இம் மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான் பிரம்மம் எனும் தெய்வீகப் பேராற்றலின் சரித்திரம்.
.
மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளது. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக் கூடிய பேரறிவுதான் பிரம்ம ஞானம் ஆகும். இத்தகைய அறிவு தான் இறை நிலையுணர்ந்த அறிவு. அதுவே தன் முடிவு நிலையான மனதின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்ம ஞானம் ஆகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
*********************************************
பிரம்ம வித்தை:
"வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்".
.
அறிவின் நான்கு நிலைகள் :-
"அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து
அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று
அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம
அணுவான உயிர்நிலையை உணர வேண்டும்;
அறிவங்கே உயிராகும் துரியமாகும்.
அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்,
அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ
அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 4 நவம்பர், 2015

ஐந்திணைப்புப் பண்பாடு

தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றிச் சிந்தித்தல், தன் குறையுணர்தல், தான் திருத்தம் பெறத் திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனைப் பயிற்சியில் அடங்கும்.

தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கி ஒவ்வொன்றாகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. முதற் பயிற்சி 'நான் யார்?' என்ற வினாவினை எழுப்பி விடைபெறுதலாகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது. இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.

இரண்டாவது பயிற்சி எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குபடுத்துவதாகும். தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.

மூன்றாவது பயிற்சி அறுகுணச் சீரமைப்பு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும் நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு நற்குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுணச் சீரமைப்பாகும். மனிதன் உணர்ச்சி வயப்படும்போது தான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலை பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுணச் சீரமைப்பு இன்றியமையாததாகும்.

நான்காவது பயிற்சி கவலை ஒழித்தல். அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும் கணிப்புத் தவறுகளும் ஏற்படுகின்றன. இவைகளையெல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லாக் கவலைகளையும் ஒழித்து நலம் பெறக் கவலையொழித்தல் என்ற பயிற்சி நன்கு உதவுகின்றது. குண்டலினி யோகத்தால் விாழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்துவிடும். எனவே, இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.





ஆறுகுண சீரமைப்பின் நல்விளைவு :
"பேராசை கவலை சினம் அழுக்காறு விட்டால்
பேரறிவாய் விரிவடையும் மனது தரம்மாறி
ஓராசை உளத்திலெழ ஒத்த நுட்பத்தோடு
உடலறிவு சமுதாயம் இயற்கை நான்கின் இனிமை
சீராக காத்து ஆற்றும் சிறப்பு இயல்பாகும்,
சிந்தனையின் உயர்வினிலே விழிப்புடனே வாழ
யாராசையும் இதனால் அறிவறிய ஓங்கும்
எப்போதும் அமைதி இன்பம் நிறைவு பெற்று வாழ்வோம்".
.
அகத்தவ மன்றம் :
"தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை சினம் பொறாமை
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல் பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார்
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

மனம் என்னும் புதினம் :


மனம் எனும் ஒரு புதினப் பொருளில் பேரியக்க மண்டலத்தின் சிறப்புகள் அனைத்தும் அதன் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் சுருங்கியுள்ளன. எனவே மனித மனம் தன்னைச் சிறுமைப் பொருளாக நினைத்தால் அது சிறியது. தனது மூல நிலையான பிரம்மத்திலிருந்து அதன் பரிணாமச் சிறப்புகள் அனைத்தையும் நினைந்து, தனது மதிப்பை உணரும் போது, அது மிகப் பெரிய தத்துவமா...க இருக்கிறது.

பிரம்ம நிலையில் இருப்பாக இருந்த பூரணம், விரைவு, அறிவு என்ற மூன்று தன்மைகளும், அதன் இயக்கச் சிறப்புகளான - பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் ஆகிய திறன்களும் இப்போது மனித உடலுக்குள் அமைந்து, விரிந்து, நிறைந்து ஆற்றும் சிறப்புகளையும் உணரும் போது, மனித மனத்தின் பூரண தத்துவம் விளங்குகின்றது. மனம் தன்னைப் பற்றி உணரும் அளவே அதன் மதிப்பு ஆகும். மனம் கொடுக்கும் மதிப்பேதான் - மதிப்பின் அளவே தான் - பேரியக்க மண்டலம். இவ்வாறு மனம் விரிந்து முழுமை பெறும் போது தான், அது தன் இருப்பு நிலையான பிரம்மத்தையும், இயக்க அலையான மனதையும் ஒன்றாகக் காணுகின்றது. இந்தப் பெரும்பேறான அகக் காட்சியே "பிரம்ம ஞானம்" ஆகும். உயிரினத் தோற்றங்களின் இறுதிப் பயனே, மனித மனத்தின் மூலம் தனது முழுமையை அறிவதே ஆகும்.



********************************
.
தவமும் - ஞானமும்: -
"ஐம்புலன்கள் வழியாக அறிவு பலநாள் இயங்கி அலைந்தலுத்து ,
நிம்மதியைத் தேட, அந்த நிலையறிந்த குரு அருளால் நினைவு தன்னை,
இம்மென்றிருத்தி, யங்கே எழும் சோதி சுடருணர்ந்து, இன்பங் கண்டு ,
சும்மா விருக்கின்ற, முறை பழகல் தவமாகும், பயனே ஞானம்".
.
_________________________________
.
( பக்தி என்ற பெயரில் நடந்த அநீதிகள் பல.. சித்தாந்திகளே, பகுத்தறிவால் சிந்தித்து உண்மை உணர்வீர்... )
.
பக்தியில் மயக்கம் :
--- --- --- --- --- --- --- --- ---
.
"பக்தியெனும் முத்திரையின் திரைக்குப் பின்னால்
பலர் புரிந்த அநீதிகளை விளக்கப் போமோ -
புத்தி மிக்கச் சமணர்களைக் கழுவில் கொன்றோர்
புண்ணியர்கள் எனப்பட்டார் அறியாதோரால் ;
யுக்தியினால் இராமலிங்கம் உடல் மறைத்து
யோகத்தால் சோதியாகி விட்டார் என்றார்;
சக்திமிகு தில்லையந்தணர் நந்தன்போய்
தானாகத் தீயில் விழுந்தி றக்கச் செய்தார்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 நவம்பர், 2015

சமபங்கு



எப்பொழுது யாராவது ஒருவர் ஏதாவது ஓரிடத்தில் உண்மைப் பொருளைப் பற்றியும், இயற்கை இரகசியங்களைப் பற்றியும் கண்டுபிடித்துச் சொல்வாரானால் அப்போது அது மனித இனத்தினுடைய முழு உரிமை ஆகிவிடுகிறது. அன்றி அது கண்டுபிடித்தவருடைய தனிப்பட உரிமையாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சி நியதிப்படி பிறந்து, பொருள் வளத்திலே உயர்ந்து, சமூகத்தால் கல்வி அறிவு ஊட்டப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருவதால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் பணத்திற்காக, அல்லது அரசியல் செல்வாக்கிற்காக வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. இந்த இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கையைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நான் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவாறு விளக்கியிருக்கிறேன். மனித வள மேம்பாட்டுக்காக, காலத்திற்கேற்ற தேவையை உணர்ந்து, பேரறிவாகிய அந்த இயற்கை என்னும் பேராற்றலே யார் ஒருவர், தனது மன அலையை மிக நுண்ணிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கொள்கிறாரோ, அவர் மூலமாக உண்மைப் பொருளைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது. ஆகவே தத
்துவ உண்மைகள், மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இவை எதுவானாலும் அவை இயற்கையெனும் பேராற்றலால் தகுதியான ஒரு நபர் மூலம் வெளிப்படுத்தியதேயாகும். தெரிந்து முயன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒன்றுமே இல்லை. எனவே அவை அனைத்திலும் உலகில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் சமபங்கு உண்டு என்பது விளங்கும்.
-                                                                                                                                                         *************************************************
.
உள்ளத்தின் நிலை: -
"ஒருமனிதன் அறிவு எவ்வெவ்விதத்து
உருவாகி வலுப்பெற்று உளதோ அந்தத்
திருநிலைக்கு ஏற்றபடி சிந்தை செல்லும்,
செயல்களும் விளைவுகளும் பயனாய்க்கானும்'
வருபயனை உணர்ந்தறிவை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்களால் மட்டும் மாறும்
பெரு வளமும் நலமும் சாதனையால் மட்டும்
பெற காக்க முடியும் பிறர் அளிக்க நில்லா".
.
நற்செயல் :
"இதை இவ்வறாற்றினால் எவர்
என்ன சொல்வாரோ வென்று
அது அஞ்சி அஞ்சி
ஆற்றுவதில் குழம்பாதீர்
எதை எவ்வாராற்றினால் ஏற்குமோ
அறிஞர் உளம்
அதைத் தேர்ந்து ஆற்றி நலம்
அடைந்திடுவீர் அடைந்திடுவீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

திருவிளையாடல்

இயக்க மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கும் தூய இறைவெளிதான் இருப்பு மண்டலம். தூய வெளியெனும் பிரம்ம நிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால், எந்த ஒன்றையும், மற்ற ஒன்றிலிருந்து பிரிந்து போகாமல், சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஒவ்வொரு வேதான் நுண்ணணுவும் தனது தற்சுழற்சி விரைவாலும், யோகான் எனும் நுண்ணணுவின் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் காந்த தன்மாற்ற அலைகளாலும், நுண் விண்களிடையே குறிப்பிட்ட அளவில் தொலைவு அமைந்திருக்கின்றது. அது காக்கவும் படுகின்றது.

எனவே, நுண்ணணுவானாலும் சரி, அண்டங்கள் ஆயினும் சரி, அவற்றில் எழுந்து இயங்கும் அலையின் அழுத்தத்திற்கு மேலாக எதுவும் விலகிப் போகாமல் காப்பது சூழ்ந்தழுத்தம் அனைத்தியக்க அருட் பேராற்றலே. அதே போன்று எந்த நுண்ணணுவோ, அண்டங்களோ - அவற்றிலிருந்து வெளியாகும் அலைகளின் தள்ளும் ஆற்றலுக்கு மேல் விலகவும் முடியாது. இந்த நியதி தான் வான்காந்த ஆற்றலின் விளைவு.

மேலும், நுண்ணணுக்களாகிய வேதான்கள் இடையிலும், கோள்களின் இடையிலும், கோள்களின் உட்புறம் உள்ள இறைவெளியிலும் கணக்கிட முடியாத அளவில் யோகான் நுண்ணணுக்கள் தோன்றிக் கொண்டேயும், அவை தன்மாற்றங்களை அடைந்து கொண்டேயும் இருக்கும் விந்தைகளே வான்காந்தம் எனும் மறைபொருள் பேரியக்க மண்டலத்தில் ஆற்றும் திருவிளையாடல்கள். இயற்கையின் இயல்பாக நடைபெறும் தெய்வீக நிகழ்ச்சிகளைத் திருவிளையாடல் என்று வழங்குகிறோம்.



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
**************************************
சூனியமே உறுதிப் பொருள் :-
"சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்
சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று;
சூனியமே கோடானு கோடியண்ட
சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்;
சூனியமே வலிமைமிக்க உறுதியாய் நின்று
சொரூப கோடிகளை ஈர்த்தியக்கு தன்றோ?
சூனியத்தை அணு நிலையைக் கொண்டா ராய்ந்தே
சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்".
.
ஈர்ப்புச் சக்தியும் - இயங்கும் பிரபஞ்சமும் :-
.
"ஈர்ப்பு எனும் ஓர் சக்தி சூனியமாக
எங்கும் நிறைவாயிருக்கும் நிலையில் ஆதி.
ஈர்ப்பு என்ற அரூபத்தின் எழுச்சியேதான்
எவ்வுருவுக்கும் மூல அணு என்கின்றோம்.
ஈர்ப்பு ஒலி,ஒளியாக அணுவில் மாற
இந் நிலையைக் காந்தம், உயிர்,சக்தி என்போம்.
ஈர்ப்பு அணுவாகிப்பின் இணைந்திணைந்து
இயங்குவதே அண்டபிண்ட சராசரங்கள்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.