ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம்....
நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணருவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது. ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.
*********************************
அறிவின் தற்காலப் போக்கு :
"அறிவதனின் வேகம் இன்று மனிதருக்கு
அதிகரித்தும், பெரும் பகுதியான மக்கள்
அறிவதனை அன்றாட தேவை தீர்க்கும்
அவசியத்தில் செலுத்துகின்றார்; மற்றும் பல்லோர்
அறிவதனைச் செல்வத்தை அதிகரிக்கும்
ஆசையாக மாற்றிவிடுகின்றார்; ஆனால்
அறிவறிந்தோர் எண்ணம் மட்டும் உலகோர் வாழ்வில்
அன்பு இன்பம் அமைதி தர இயங்கி நிற்கும்."
.
"ஒழுக்கமெனில் உயிர்க்கு இன்னா செய்யா நோன்பாம்
ஒருவர் பிறர்க்கோ, தனக்கோ, உடனோ, பின்னோ
வழுக்கியும் தீமை செய்யா உணர்வு அஃது;
வாழ்வோர்க்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?
அழுக்காறு, பேராசை, சினம், கடுஞ்சொல்
ஐந்து பெரும்பழிச் செயல்கள் தவிர்த்த வாழ்வால்
பழுத்துவரும் அறிவு; பரஉணர்வு ஊறும்
பன்னலமும் அறநெறியும் இயல்பாய்ப் போகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
*********************************
அறிவின் தற்காலப் போக்கு :
"அறிவதனின் வேகம் இன்று மனிதருக்கு
அதிகரித்தும், பெரும் பகுதியான மக்கள்
அறிவதனை அன்றாட தேவை தீர்க்கும்
அவசியத்தில் செலுத்துகின்றார்; மற்றும் பல்லோர்
அறிவதனைச் செல்வத்தை அதிகரிக்கும்
ஆசையாக மாற்றிவிடுகின்றார்; ஆனால்
அறிவறிந்தோர் எண்ணம் மட்டும் உலகோர் வாழ்வில்
அன்பு இன்பம் அமைதி தர இயங்கி நிற்கும்."
.
"ஒழுக்கமெனில் உயிர்க்கு இன்னா செய்யா நோன்பாம்
ஒருவர் பிறர்க்கோ, தனக்கோ, உடனோ, பின்னோ
வழுக்கியும் தீமை செய்யா உணர்வு அஃது;
வாழ்வோர்க்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?
அழுக்காறு, பேராசை, சினம், கடுஞ்சொல்
ஐந்து பெரும்பழிச் செயல்கள் தவிர்த்த வாழ்வால்
பழுத்துவரும் அறிவு; பரஉணர்வு ஊறும்
பன்னலமும் அறநெறியும் இயல்பாய்ப் போகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக