“மனிதருள் வேறூபாடு ஏன்?”- இந்த சிந்தனை, இந்த கேள்வி, ...
அநேகமாக எல்லோருடைய உள்ளத்திலும் ஏதேனும் ஒரு காலத்தில் நிச்சயமாக எழுந்திருக்கும்; சிலருக்கு அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணத்தை சொல்லக் கேட்டிருப்பார்கள்.;
அவரவர்கள் ஒரு காரணத்தை அறிந்து இருக்கிறீர்கள். ஆனாலும் விரிந்த அறிவிலே இந்த கேள்விக்கு விடை கண்டுவிட்டோமேயானால் நாம் வாழ்நாள் முழுவதும், நமது வாழ்விலே ஒரு பெருஞ்சுடராக, எல்லாவித
வாழ்க்கை ரகசியங்களையும் நாம் புரிந்துகொள்வதற்கும் அதற்கு ஏற்றவாறு நமது கடமைகளை ஆற்றுவதற்கும் வேண்டிய ஆக்கமும், ஊக்கமும்
பெறமுடியும்.
.
.
ஏழு சம்பத்துக்கள்
.
.
வேறூபாடுகள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது இரண்டுபேர் ஒரேமாதிரியாக இருக்கின்றார்களா என்று பார்த்தோமேயானால் இல்லை, இருக்க முடியாது
என்றுதான் முடிவுக்கு வருவோம். அப்படியானால் என்னென்ன வகையில் அந்த வேறுபாடுகள் என்று நாம் பிரித்து நோக்கலாம், எத்தனை வேறுபாடுகள் ,
மனிதர்களுக்குள்ளாக இருக்கின்றன என்று பார்த்தோமேயானால்,
அவற்றை ஏழு மதிப்புகள், ஏழு சம்பத்துக்கள் (seven values) என்று சொல்லலாம். ஏழு மதிப்புகளில்தான் மனிதன் வேறுபடுகின்றான்.
.
அவை
1. உருவமைப்பு
.
2. குணம்
.
3. அறிவின் உயர்வு
.
4. கீர்த்தி
.
5. உடல் வலிவு
.
6. செல்வம்
.
7. சுகம்
.
.
இந்த ஏழு சம்பத்துகளில்தான் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருப்பதைக் காணலாம். இதற்கு மேலாக ஒரு வேறுபாடு இருக்க முடியாது; அப்படி ஏதேனும் இருப்பதாகத் தென்பட்டாலும் அது இந்த ஏழுக்குள் அடங்குவதாகவே இருப்பதைக் காணலாம். இந்த வேறுபாடுகல் எவ்வாறு உண்டாயின என்பதை நாம் தெரிந்துகொண்டோ-மேயானால், அந்தச் சிந்தனையிலே ஒரு அமைதி கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த வேறுபாடுகளின் காரணமும் கண்டுவிட்டால், எந்த வேறுபாட்டை போக்க வேண்டும், எதை போக்க இயலாது, எப்படி நாம் மேன்மை அடையலாம் என்பதை தெரிந்துகொண்டு நம் வாழ்க்கையை
செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக