Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 6 டிசம்பர், 2014

மலம் பேசும் வார்த்தைகள்........


(கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்திற்கு அதிகாலை ஐந்து மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் யாரோ மனிதர் கழித்து விட்ட மல...த்தை மகரிஷியின் கால்கள் மிதித்து விட ஏற்பட்ட அனுபவத்தின் உரையாடல்)
மகரிஷி : ஓ! என்ன இது? காலில் ஏதோ ஊர்வது போல் இருக்குதே! நாற்றம் வேறு அடிக்குது! ம்ம், யாரோ மனிதர் கழித்து விட்ட மலத்தை நான் மிதித்து விட்டேன் என்று நினைக்கிறேன்! சரி அந்த புல்லில் மேலாவது இந்த காலை நன்றாக தேய்ப்போம்!
மலம் பேசும் வார்த்தைகள்: ஹா! ஹா! ஹா! என்ன நண்பா! உமது கால் அசிங்கம் ஆயுட்டுதேன்னு வருந்துகிறீர்களா? அல்லது நடைபாதையில் மலம் கழித்த நல்ல மனிதரை வாழ்த்தி கொண்டிருக்கிறீர்களா? சரி பரவாயில்லை, என் கதையையும் கொஞ்சம் கேளு நண்பா!
நானும் நேற்று வரைக்கும் அரிசியாகவும், பருப்பாகவும், சுவையுள்ள பொருளாகவும் கடை வீதியில் இருந்தேன். யாரோ ஒரு பெண்ணின் கைபக்குவத்தில் உணவு என்ற நிலையெடுத்து மனிதனின் பசியை போக்குவதற்க்காக நேற்று இரவு அவனது வயிற்றுக்குள் சென்றேன், இன்று காலை இந்த நிலையில் இருக்கிறேன்.
ஒருநாள், ஒருவேலை உணவாக இந்த மனிதனிடம் பழகியதற்க்கே என் நிலைமை இப்படி ஆகி விட்டது என்றால் வாழ்நாள் முழுவதும் பல மனிதர்களோடு பழகி வரும் உங்களுக்கு ஏற்படும் மனக்கழிவுகளை பற்றி கேட்கவே வேண்டாம்! அது எப்படியும் என்னை விட மோசமாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் ஆறுதல்.
எப்படியோ இன்னும் இரண்டொரு நாளில் எனது நிலைமை மாறி மண்ணுக்குள் புதைந்து குணம் மாறி தூய்மையாவேன். ஆனால் நண்பா! எப்போது நீ உன் மனக்கழிவுகளை கழுவி தூய்மையாக போகிறாய்? எதைக்கொண்டு கழுவ வேண்டும் என்றாவது உனக்குத் தெரியுமா?
உனக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை நண்பா! நான் மனிதர்களின் எருவாய் வழியாக பின்புறமாக இப்பூமிக்கு வந்தேன், நீ கருவாய் வழியாக முன்புறமாக வந்திருக்கிறாய்! இருவருமே நிர்மலமாய் ஆவதற்க்குத்தானே நிலை மாறி வந்திருக்கிறோம். அப்புறம் ஏன் என் தோற்றத்தை கண்டு என்னை வெறுக்கிறாய் நண்பா!
மனிதா,
நீயே உன் உடல் கழிவை
நிந்தித்துப் பழிக்கின்றாய்...
நினைத்துப்பார் அவை உனையே
கழித்து வெளியேறி உள்ளன.
நீ பழிக்கும் அவ்வசிங்கம்
உன் உடலால் தோன்றியதே!
நிர்மலமாய் ஆவதற்கே
நிலைமாறிச் சென்றதவை
(மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து நூலில் உடல்கழிவு எனும் தலைப்பில் 25-12-1958ம் ஆண்டு மகரிஷி அவர்கள் எழுதிய பாடல் மேற்கண்ட உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக