ஓதிக்கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப்படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக் கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.
இதனால் வேதம் ஓதாதவர் எல்லாருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை. ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு. ஓதியும்...
உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டுமென்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக