Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 29 டிசம்பர், 2014

சுத்தவெளி ஒரு பேராற்றல்


நாம் எங்கே வாழ்கிறோம்? பூமி, உருண்டை என்ற உலகின் மீது. இந்த பூவுலகின் எடை என்ன இரு...க்கும்? பல கோடி டன்கள் இருக்கலாம் அல்லவா? இதே உலகம் ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனின் எடை எவ்வளவு இருக்கும்? பூமியைவிட சூரியன் 3.33 லட்சம் தடவை எடை அதிகமாக உள்ளது. இப்பொழுது யூகிப்போம். சூரியனும், பூமியும் சேர்ந்தால் மொத்த எடை எவ்வளவு இருக்கும்? நம்மால் சாதாரணமாக கணக்கிடவே முடியாது. எனினும், நமது யூகத்தால் ஓரளவு அனுமானம் கொள்ளலாம். சூரியனும், பூமியும் சேர்ந்து கணக்கிலடங்காத கோடி கோடி டன்கள் எடை இருக்கும் என்று நம்பலாம்.
அடுத்தபடியாக, சூரியனும், பூமியும் எங்கே இருக்கின்றன? இரண்டு கோள்களுமே சுத்தவெளியில்தான் லேசாக மிதந்து, உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது சிந்திப்போம். ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் மிதக்கிறது என்று சொன்னால் எந்தப் பொருள் வலிதாக இருக்கும்? மிதக்கும் பொருளைவிட தாங்கும் பொருள்தான் வல்லமை உடையாதாக இருக்க வேண்டும்.
இந்த கருத்தை மனதால் கணித்துப் பார்த்தோமானால் சூரியன், பூமி இரண்டைவிட சுத்தவெளி அதிக வல்லமை உடையதுதான் என்று ஐயமின்றி விளங்கிக் கொள்வோம். இதனால், சுத்தவெளி எந்த ஆற்றலும் இல்லாத ஒரு வெற்றிடம். அல்லது சூன்யம் என்ற கருத்து மாறிவிடுகிறது. நமக்குத் தெரிந்த சூரியக் குடும்பத்தையும் மேலும் ஆகாய வெளியில் உலவும் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்களையும் லேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் சுத்தவெளியின் பேராற்றலும் அதன் வல்லமையும் இணையற்றது என்று விளங்கிக்கொள்கிறோம்.
---அருட் தந்தை

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

If imprints are the reason for one’s birth what was the cause for the birth of the first human being?



Vethathiri Maharishi Answer: An analysis about the origin of human beings will reveal that man could have evolved only from the animals with five senses.
They in turn must have come out of the animals with four, three and two senses starting from the plants with a single sense.
How do the animals with sensory perceptions ranging from two to five exist? They survive by feeding on the other animals.
This results in the creation of 3 types of imprints, viz. those relating to the killing of the other animals, robbing them and destroying their freedom.
These acts of robbery and destruction leave imprints in the body cells and the genetic centre that are passed on through the generations.
At the level of man they remain stored in the bio-magnetic field, from where they blossom into actions depending on the needs and circumstances.
Man’s outward extension is the mind and the mind is nothing but a phenomenon of the bio-magnetism.
Air can't enter the water filled vessel. Similarly material attachments can't enter the mind filled with consciousness.
This can only be achieved by Meditation and Introspection.
Why no-one in the world is able to do anything to change this degenerated situation?
whether he is a power-wielding politician or a military chief or a multi-national, multimillionaire industrialist, or a scientist.
In the primitive ages, before the development of sixth sense, man lived much as other animals do even now, enjoying the natural resources as they were.
After he learnt to cultivate food grains and give artificial shapes and artistic beauties to the natural resources for his enjoyment of pleasure and survival, his knowledge with the experiences of life developed by leaps and bounds.
He progressed tremendously in the life-style, discovering and mastering the arts of using fire, metals, electricity and atomic energy.
Also he had to face and overcome a variety of calamities flowing from natural disasters.
On the whole, mankind has passed through several ages on the Earth and derived innumerable experiences of life.
In the modern age, life is replete with properties. To enjoy the happiness of life and better comforts, the whole world is now linked in communication, transport, politics, economics, technology and spirituality.
Having acquired and accumulated all the Nature-given providences and man-made wonders mentioned above, how is it that man-kind is still suffering from and contending with multifarious problems?
Even in family-life there are innumerable problems for each individual, whether poor or affluent, educated or unlettered.
In the society as a whole, there are poverty, illiteracy, inhuman behavior, conflicts, in-fighting, litigation and crimes.
In the political administration there are bribery, party-squabbles, jealousy and vengeance.
In the economic realm there are disparity, greed, acquisitive aggression and unconscionable waste.
In industry and business we see insatiable desire to accumulate more and more wealth even though it is overflowing already, the deliberate manufacture of substandard commodities, adulteration and cupidity for exorbitant profits.
Some industrialists are enthusiastically manufacturing horrendous weapons to torture, wound and kill the human race.
In the ethics of society we see violent activities, neglect of others feelings, comforts, welfare, prestige and freedom, defiance of governmental authority and selling justice.
In the spiritual field too conspiracy, deceit and imposing on the faithful are evident.
All these inhuman behaviors are common today in the world society.
This painful state of affairs is only increasing day by day.
Fear of one’s life, a constant feeling of insecurity and bewilderment are significant everywhere.
Of course, there are good people in all places and spheres but they are also much affected mentally and physically and they are suffering from the misdeeds of others brazen in their wrong-doing.
Even though one may be pure-minded, honest and trying to lead a conscientious life, knowingly or unknowingly he is forced to get entangled in the dreadful gamble of life in the world.
Why, why all these painful situations in the world? There must be some cause for such a deterioration of human behavior.
By the pressure of ever-increasing pains and miseries, almost everyone, whether a partner in atrocity or a victim, has started thinking that this situation should change.
All should be free to enjoy a peaceful and secure life.
However no-one in the world is able to do anything to change this degenerated situation, whether he is a power-wielding politician having stupendous resources of men and material at his disposal, a military chief having serried ranks at his beck and call, an exalted religious supremo ruling a world-wide fraternity or a multi-national, multimillionaire industrialist, or a scientist capable of manufacturing sophisticated robots to help the human race and also equally capable of manufacturing nuclear bombs to destroy the entire world many times over in a matter of minutes.
Even though one wishes sincerely to do good for the world he is helpless because nothing can be done by him to change the situation. Why?
What is the difficulty?
The plain truth of the matter is that no-one is prepared to change his own concepts or behavior.
+ Vethathiri Maharishi

சனி, 27 டிசம்பர், 2014

When you say "significance of sin is disease in the body or disturbance in the mind", does this mean all diseases must be wiped out in order to attain Jeeva-samadhi?


Vethathiri Maharishi answer: Even if there is disease or permanent damage to some part which gives pain, it will not affect the mind.
By understanding or fixing the mind with the supreme force, the mental state completely changes.
Thoughts abate a does action. In such a way, all the sinful imprints, unwanted imprints, will be neutralised.

புதன், 24 டிசம்பர், 2014

What can we offer to God?


Vethathiri Maharishi Answer: Our very life goes on through the benevolence of an omnipresent and omniscient God.
His quality is love and this quality of His fills everything, everywhere, including our selves.
Hence every thought, word and deed of ours should be tempered with love and compassion. This is all that we can offer to God.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

What is SIN?


Every action results in pain, pleasure, peace or ecstasy according to the time, place and object of contact and aim and efficiency of the deed.
If any action results in pain, to self or others, to the body or mind, now or in the future, that is sin.
Pain is the negative force to the living being in its effort to enjoy life. So, any pain-resulting deed and it's imprint is called Sin.
Question: Vethathiri Maharishi, How is it possible to know the existence of sin imprints?
Vethathiri Maharishi Answer: Diseases in the body and blemishes in the soul are indications of sin imprints. 

திங்கள், 22 டிசம்பர், 2014

Family Peace

  A model family is one in which the husband and wife observe perfect understanding, learn to tolerate each others weak points and appreciate the plus points besides showing mutual respect to one another. If the family, in real life, is molded in such a fashion, the husband and wife can be considered as “made for each other” couple and such family will be the abode of God. - Vethathiri Maharishi

சனி, 20 டிசம்பர், 2014

வேதம்


ஓதிக்கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப்படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக் கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.
இதனால் வேதம் ஓதாதவர் எல்லாருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை. ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு. ஓதியும்...
உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டுமென்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வருங்காலம் உணர்தல்


மனித மனம் சீவகாந்த அலை இயக்கம். அதற்கு உட்பொருள் இறைநிலை. உலகத் தொடர்பு புறத்தே இருந்து வருகின்ற உந்து ஆற்றலால் அமைகிறது. சில சமயம் முறையாக உளப்பயிற்சி செய்து இறைநிலைக்கு நெருக்கமாக மன இயக்கத்தை கொண்டு வரும் பொழுது இறையாற்றலின் நுண்மான் நுழைபுலன் இயக்கத்தினால், அது ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் அறிவுக்குப் புலனாகும்.
...
உறவினர்களோ, மற்றவர்களோ ஒரு மனிதனை நினைத்து, ஏதோ அவனுக்கு நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமென்று திட்டமிட்டால், அவர்களுடைய எண்ணங்கள் செயலுக்கு வருமுன்பே இவனிடத்தில் பிரதிபலித்து அகக்காட்சியாகும். பின்னர், அந்த எண்ணங்கள் செயலாக மாறி நிகழ்ச்சியாக நடைபெறும்போது, 'இது முன்னமே எனக்கு எப்படித் தெரிந்துள்ளது?' என்று அவனுக்கு வியப்பாகத் தோன்றும்.
மனத்திற்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்தால் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாத, உணர்ச்சி வயப்படாத விழிப்பு நிலையில் நின்று இறை உணர்வு பெரும் வகையில் உயரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 18 டிசம்பர், 2014

முழுமை வாழ்வு :


நான் யார்? என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடம் ஏது?
உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புமை இல்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை... உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.
நானே பிரம்மாக இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீது ஆசை கொள்வது? பற்று வைப்பது? அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்றுகள் நம்மை விட்டு விலகுகின்றன.
தன்னை அறிந்த நிலையில் உள்ளுணர்வில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது.
அப்போது அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகும். மனம் அத்தூய்மையான நிலையில் இவ்வுலகம் முழுமைக்கும் வாழ்வு தரும் நிறைநிலையைப் பெறுகிறது.
--அருள்தந்தை 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

Q : Swamiji, you say that the consequence of every action has to be endured by the individual. Is it not possible to eradicate sin imprints through meditation?


    Swamiji's Answer : Yes, it is possible to eradicate sin imprints through meditation. For doing this one has to attain spiritual elevation through the practice of merging the mind with the life energy and then with the Divine State. This makes God realisation possible. All actions performed by a person, who has transcended the levels of mere physical pleasure and pain, to realise the Truth in an impersonal manner, and with a sense of duty to the others, will be of immense use to all humanity. His Consciousness remains united with the Absolute, all existing imprints are eradicated and fresh ones avoided

சனி, 13 டிசம்பர், 2014

ஏழ்மை எழக் காரணம்

மனிதனுக்கு ஏழ்மை என்பது மூன்று வழிகளில் உண்டாகலாம். 

1) அவன் வாழ்வில் உள்ள வசதிகளை வீணான வழிகளில் செலவு செய்து அழித்து விடுவது

2) அன்றுள்ள சமுதாய அமைப்புக்கும், தனிமனிதன் தேவைகளுக்கும் ஒத்தவாறு பொருள் உற்பத்தித் திறனைக் கற்றுக் கொண்டு, அதை முறையாகச் செய்யாத சோம்பேறித்தனம்

3) உழைப்பினாலும், அறிவின் திறமையாலும் ஒருவர் உற்பத்தி செய்யும் பொருட்களை உழைக்காமலே அநீதியான வழிகளில் பிறர் பறித்துண்ணல்

இம்மூன்று வழிகளையும் ஆராய்ந்து தெளிந்து கொண்டால் தனிமனிதன் முயற்சியையும், சமுதாயக் கூட்டு அமைப்பின் கருத்துக்களையும், இணைத்துச் சிந்தித்துத் திட்டமுட்டு, எந்தக் குறையுமின்றி, எல்லோரும் பொருள்வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வெள்ளி, 12 டிசம்பர், 2014

கோபம், கவலை, வஞ்சம்

துன்பத்தைப் போக்கவோ, இன்பத்தை அடையவோ முயலும்போது அதற்கு ஏதேனும் தடை ஏற்பட்டாலும், அத்தடையை நீக்க முயலும்போது, அது அதிக வலுப்பெற்றிருக்கக் கண்டாலும், அவ்விடத்தில் முயற்சியே கோபமாக மாறுகிறது.
கோபம் செயல்பட முடியாத இடத்தில் அதுவே கவலையாக மாறுகிறது. கோபம் எழுந்த கையோடு வெளிப்படுத்தவில்லையானால், அது இருப்புக் கட்டப்பட்டு வாய்ப்புக் கிடைக்கும்போது வஞ்சமாக மாறுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வியாழன், 11 டிசம்பர், 2014

நிலவுலகுக்கோர் ஆட்சி

உலகில் பிறந்து வாழும் எல்லா மக்களுக்கும் சம உரிமையும் சம பிரதிநிதித்துவமும் அளிக்கத்தக்க முறையில் எல்லா நாடுகளையும் இணைத்த, எல்லா நாட்டு ஆட்சிக்கும் மேலாதிக்கம் உடைய, ஓர் உலகப் பேரரசு ஜனநாயக முறையில் அமைக்கப்பட வேண்டும். செயல்புரியவும் வேண்டும். மக்களனைவருக்கும் பொறுப்படையதாக, உலக மக்கள் அனைவரும் ஆட்சியில் பங்குகொள்ளத்தக்க வகையில் உலகப் பொது ஆட்சி வேண்டும். 

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 

இருட்டடிப்பு

தற்போதுள்ள கல்வி முறையில் இரண்டு வகைகளிலே இருட்டடிப்பு வந்திருக்கிறது. ஒன்று பால் உறவில். அடுத்தது ஆன்மீகத்தில். ஆன்மீக அறிவு மனிதனுக்குத் தேவையே இல்லை என ஒரு சாரார் ஒதுக்கிவிட்டனர். பால் உறவைப் பொறுத்தமட்டிலே அது அவசியம் என்றாலும், அது பாவம் கேவலம் என்ற ஒரு கருத்தும் அதைத்தவிர வேறு இன்பமே இல்லை என்ற நினைப்பும் நிலவியுள்ளன. இந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முறையிலே அறிவு வர பாலுறவு பற்றிய கல்வி இன்றைய உலகிற்கு மிகமிக அவசியமான ஒன்று.

 அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

செவ்வாய், 9 டிசம்பர், 2014

பிரம்மச்சரியமும் ஞானமும்


 எப்போதும், ஆண் -  பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரம்மச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்யம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங் களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தி யானா...ர்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் பெண் நட்புடன் ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன்.
வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத் துடன் திருமணம் செய்து கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.
                                                                                                                    --அருள் தந்தை

திங்கள், 8 டிசம்பர், 2014

ஆன்மீகப் பயிற்சியின் பயன்

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறர் வினாவுக்குத் தெளிவான பதிலளித்து மனநிறைவு பெறலாம். திருப்தியான பதிலை அனுபவபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லையெனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும். இத்தகைய சோர்வினால் முயற்சியைக் கைவிட்டு விடுபவர்கள் பலர். இந்தக் குழப்பமும் நட்டமும் ஏற்படாதிருக்கவும் கேள்வி கேட்போருக்கு மனத்தெளிவோடும் உறுதியோடும் பதில் சொல்லவும் இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன்.

1. முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்த பட்சம் நோயின் கொடுமை குறைகிறது.

2. மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம். தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர அறிவு நுண்மையும், கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால், அறிவு பெறும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடைச் செய்கிறது.

3. அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன் முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும், இன்பமும் காத்து வாழ முடிகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

What is the difference between bio-magnetism and universal magnetism?

 Universal magnetism includes five conversions: pressure, sound, light, taste and smell. In addition to these, bio-magnetism converts as mind which feels pain, pleasure, peace and ecstasy.

- Vethathiri Maharishi

சனி, 6 டிசம்பர், 2014

மலம் பேசும் வார்த்தைகள்........


(கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்திற்கு அதிகாலை ஐந்து மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் யாரோ மனிதர் கழித்து விட்ட மல...த்தை மகரிஷியின் கால்கள் மிதித்து விட ஏற்பட்ட அனுபவத்தின் உரையாடல்)
மகரிஷி : ஓ! என்ன இது? காலில் ஏதோ ஊர்வது போல் இருக்குதே! நாற்றம் வேறு அடிக்குது! ம்ம், யாரோ மனிதர் கழித்து விட்ட மலத்தை நான் மிதித்து விட்டேன் என்று நினைக்கிறேன்! சரி அந்த புல்லில் மேலாவது இந்த காலை நன்றாக தேய்ப்போம்!
மலம் பேசும் வார்த்தைகள்: ஹா! ஹா! ஹா! என்ன நண்பா! உமது கால் அசிங்கம் ஆயுட்டுதேன்னு வருந்துகிறீர்களா? அல்லது நடைபாதையில் மலம் கழித்த நல்ல மனிதரை வாழ்த்தி கொண்டிருக்கிறீர்களா? சரி பரவாயில்லை, என் கதையையும் கொஞ்சம் கேளு நண்பா!
நானும் நேற்று வரைக்கும் அரிசியாகவும், பருப்பாகவும், சுவையுள்ள பொருளாகவும் கடை வீதியில் இருந்தேன். யாரோ ஒரு பெண்ணின் கைபக்குவத்தில் உணவு என்ற நிலையெடுத்து மனிதனின் பசியை போக்குவதற்க்காக நேற்று இரவு அவனது வயிற்றுக்குள் சென்றேன், இன்று காலை இந்த நிலையில் இருக்கிறேன்.
ஒருநாள், ஒருவேலை உணவாக இந்த மனிதனிடம் பழகியதற்க்கே என் நிலைமை இப்படி ஆகி விட்டது என்றால் வாழ்நாள் முழுவதும் பல மனிதர்களோடு பழகி வரும் உங்களுக்கு ஏற்படும் மனக்கழிவுகளை பற்றி கேட்கவே வேண்டாம்! அது எப்படியும் என்னை விட மோசமாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் ஆறுதல்.
எப்படியோ இன்னும் இரண்டொரு நாளில் எனது நிலைமை மாறி மண்ணுக்குள் புதைந்து குணம் மாறி தூய்மையாவேன். ஆனால் நண்பா! எப்போது நீ உன் மனக்கழிவுகளை கழுவி தூய்மையாக போகிறாய்? எதைக்கொண்டு கழுவ வேண்டும் என்றாவது உனக்குத் தெரியுமா?
உனக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை நண்பா! நான் மனிதர்களின் எருவாய் வழியாக பின்புறமாக இப்பூமிக்கு வந்தேன், நீ கருவாய் வழியாக முன்புறமாக வந்திருக்கிறாய்! இருவருமே நிர்மலமாய் ஆவதற்க்குத்தானே நிலை மாறி வந்திருக்கிறோம். அப்புறம் ஏன் என் தோற்றத்தை கண்டு என்னை வெறுக்கிறாய் நண்பா!
மனிதா,
நீயே உன் உடல் கழிவை
நிந்தித்துப் பழிக்கின்றாய்...
நினைத்துப்பார் அவை உனையே
கழித்து வெளியேறி உள்ளன.
நீ பழிக்கும் அவ்வசிங்கம்
உன் உடலால் தோன்றியதே!
நிர்மலமாய் ஆவதற்கே
நிலைமாறிச் சென்றதவை
(மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து நூலில் உடல்கழிவு எனும் தலைப்பில் 25-12-1958ம் ஆண்டு மகரிஷி அவர்கள் எழுதிய பாடல் மேற்கண்ட உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.)

வியாழன், 4 டிசம்பர், 2014

இறைநிலையின் ஆற்றல்

நாம் உணவு உட்கொள்கிறோம். இது வாழ்விற்கு அவசிய தேவையாகிறது. எவ்வாறெனில், நாம் உலகம் என்ற கோளின் மீது வாழ்கிறோம். உலகுக்கு இது புறப்பகுதி.
உலகம் விரைவாகத் தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு சுற்று என்று சுற்றிக்கொண்டே இருக்கிறது.,
உலக சுழற்சி விரைவால் கனத்த பொருட்கள் மையம் நோக்கி நகர்வது(centripetal force) , இலேசான பொருட்கள் புறப்பகுதி நோக்கி நகர்வதும்(centrifugal force) இயல்பான நிகழ்ச்சிகள்.
...
இதனால் உடலிலுள்ள கனத்த அணுத்திரல்கள் புவி ஈர்ப்பு ஆற்றலால் நாள்தோறும் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
அவ்வாறு உதிர்ந்துபோகும் இடங்களில் புதிய அணுத்திரல்கள் தேவைப்படுகிறன. உணவு, நீர், காற்று இவை மூன்றும் இணைந்துதான் அணுத்திரல்களின் தேவை நிறைவுசெய்யப்படவேண்டியுள்ளது.
எனவே உணவு வாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
நாம் உண்ணும் உணவானது இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என ஏழு தாதுக்களாக ஒன்றிலிருந்து மற்றதாக தரம் மாறி உடலில் அந்தந்த தாதுக்களோடு இணைந்து உடல் இயக்கம் நீடிக்கின்றது.
உண்ட உணவை ஏழு தாதுக்களாக தரம் மாற்றுவது யார்..?
உண்டவனுக்கோ, அவனுடைய நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, உணவை தாதுக்களாக மாறும் கலைகளில் ஒன்றுகூடத்தெரியாது.
பின்னர் யார் அந்த செயலை செய்து கொண்டிருப்பது??
புலன்களுக்கெட்டாத- பூரணம், பேராற்றல், பேரறிவு இம்மூன்றையும் உடைய- ஓர் எல்லாம் வல்ல பேராற்றல் தான் தன்னிறுக்கச்சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் எல்லா உயிர் உடல்களிலும் ஊடுருவி இத்தகைய அறிய செயல்களை செய்துகொண்டிருக்கிறது
இதனை இயற்கை நியதியென்றும், இறைநிலையின் ஆற்றல் என்றும் வழங்கி வருகிறோம்
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

புதன், 3 டிசம்பர், 2014

பிறரை துன்புறுத்தக்கூடாது என்கிறீர்கள்... பிறர் நம் மனதை துன்புறுத்தும்போது, பொறுத்துக்கொண்டிருத்தல் என்பது நம்மை நாமே துன்புறுத்துவது ஆகாதா??

நீங்கள் ஒரு தெருவில் குடியிருக்கிறீர்கள்... அந்த தெருவின் முனைக்குப்போய்தான் வண்டி பிடித்து செல்ல வேண்டும். அப்படிப்போகும்போது நான்காவது வீட்டில் ஒரு நாய் குரைக்கிறது. நீங்கள் போனால் மாத்திரம் இல்லை... யாரைப்பார்த்தாலும் குரைக்கும்... அல்லவா???
அது பாட்டுக்கு குரைத்துக்கொண்டுத்தான் இருக்கும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பேசாமல் போகிற...ீர்கள்.
நாய்க்கு அவ்வளவுதான் தெரியும். அது வாழ்த்துகிறதா? திட்டுகிறதா என்பதும் நமக்கு தெரியாது
நம்மை வாழ்த்துவதென்றாலும் அது குரைக்கத்தான் வேண்டும். நாய்க்கு தீட்சை கொடுத்தாலும் அது குரைக்கத்தான் செய்யும்
அதை பொருட்படுத்தாதீர்கள். நாயின் குணம் குரைப்பது; நம்முடைய குணம் பொறுத்துக்கொள்வது..!!
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 2 டிசம்பர், 2014

உலகில் உள்ளவர்களெல்லாம் ஜீவசமாதி அடைந்தால் நல்லதா...??

வாழ்கிறபோது நல்ல நிலையில் வாழ வேண்டியதுதானே..?? சாவதைப்பற்றி ஏன் நினைக்கிறீர்கள் ?
திட்டமிட்டுச்சாக முடியாது.எப்படி நல்லபடியாக வாழ்வது என்பதை சொல்லிக்கொடுக்கத்தான் நான் இருக்கிறேன்....
சாவதைப்பற்றி சொல்லிக்கொடுக்க இவர்(அருகில் ஒரு டாக்டர் அமர்ந்திருக்கிறார்) இவர் இருக்கிறார்.இவரைக்கேளுங்கள். எந்த விஷம் எப்படி என்பதெல்லாம் இவருக்குத்தான் தெரியும்”
-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 1 டிசம்பர், 2014

ஓர் அன்பரின் கேள்வி ; மகாத்மா காந்தி தீயவைகளை பார்க்காதீர்கள் ;தீயவைகளை கேட்காதீர்கள்; தீயவைகளை பேசாதீர்கள் என்றார். ஆனால் தீயவைகளை பார்த்தால்தானே தீயவைகளை கடைபிடிக்காமல் விட முடியும்..?

ஒரு கதை சொல்வார்கள்...
ஓர் அரசன் காக்கா சண்டைப் போடுவதை பார்க்க வேண்டும், அதுவும் காலையில் எழுந்திருக்கும்போதே காக்க சண்டைப் போடுவதைப் பார்க்க வேண்டுமாம்.
அவனுக்கு எப்படித்தான் அப்படியொரு எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தன் விருப்பத்தை வேலையாளிடம் சொல்லிவைத்தான்,
ஒருநாள், இரண்டு காக்கா சண்டை போடுகின்றன. ஓடி வந்து மன்னனை எழுப்பினான். மன்னன் எழுந்து வந்தான். அவன் வருவதற்கும் சண்டை முடிந்து போயிருந்தது.
“என்னடா பொய் சொல்றே?? என் தூக்கத்தை வேற கலைச்சிருக்க.”
“ஐயோ சாமி, காக்கா சண்டை போட்டதை நான் கண்ணாலே பார்த்தேன்”
”பொய். இவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்”
மறுநாள்,
தண்டனை நிறைவேற்றும் முன் வழக்கப்படி அவனிடம், உன் கடைசி விருப்பம்..என்ன? என்று கேட்டார்கள்.
”மன்னனிடம் ஒரு செய்தியைச்சொல்ல வேண்டும்... அதுதான் என் கடைசி விருப்பம்.!”
மன்னன் வந்தான்.
இவன் சொன்னான் ; “மகாராஜா ! இனிமேல் நீங்கள் எப்பவும் இரண்டு காக்கா சண்டைப் போடுவதை பார்த்துவிடாதீர்கள்”
“ஏன் அப்படி சொல்கிறாய் ?”
“காக்கா சண்டை போடுவதை பார்த்த எனக்கு என்ன ஆச்சு பார்த்தீங்களா?? மரண தண்டனை !!”
அப்படி பார்த்து விளைவை கண்டவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் கேட்டால் கேளுங்கள் , கேட்கா விட்டால் விடுங்கள்.
ஏற்கனவே அந்த அனுபவம் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.
நீங்களும் பார்த்து அந்த அனுபவம் பெற வெண்டுமானால் பெறுங்கள்.
அப்படி இல்லையானால் அவர்கள் சொல்வதை கெட்டுக்கொண்டு பயன் பெறலாம்
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி