"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi
திங்கள், 30 ஜூன், 2014
ஞாயிறு, 29 ஜூன், 2014
சனி, 28 ஜூன், 2014
புத்தர் கேள்விகள்:
ஏழ்மைக்கு மூலம் யார்? உயிர் தான் என்ன?
எந்த விதம் மரணம் நோய் முதுமை மூன்றும் வாழ்விலே தோன்றி பெருந்துன்பமாகும் வகையென்ன? என்றன்று புத்தர் கேட்டார்;
ஊழ்வினையால் தெய்வத்தால் இவைகள் எல்லாம் உண்டாகும் என்றமைச்சர் அவர்க்குச் சொன்னார்,
ஆழ்ந்த பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தார் அறிவிற்குப் பொருந்தவில்லை துறவு பூண்டார்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வெள்ளி, 27 ஜூன், 2014
இயற்கையை உணர வேண்டும்:
"நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை"
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள். அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை. ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால், கொண்டு வந்தவும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள். இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் 'நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன' என்பது புரியும். நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும். ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று. இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை. இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்".
வியாழன், 26 ஜூன், 2014
விண் துகளின் 'ஈர்ப்பு சக்தியும்' (Attractive force) - 'தள்ளும் சக்தியும்' (Repulsive force)"
"நில உலகையும், சூரியனையும் நினைத்துக் கொள்வோம். ஒவ்வொன்றும் விண்துகளால் ஆக்கப் பெற்றவைதான். அதனால் அவை சுழன்று கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லா இயக்கச் சக்திகளுக்கும் மூலமாக இருக்கிற ஒரு காரண சக்திதான் ( The Source of all the Forces - called as The Divine Power) "இறைவெளி". அது பிரபஞ்சத்தின்... எல்லா இயக்கங்களுக்கும், ஆற்றலைத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கிறது. இதுவே ஈர்ப்பு ஆற்றலாகவும், எல்லாப் பொருள்களிலும் அமைந்திருக்கிறது. அதுவே உயிரினங்களின் கருமையத்திலும் அமைந்திருக்கிறது. இத்தகைய ஈர்ப்புச் சக்திக்கு ஈடுகொடுக்கவும், பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களையும் முடுக்கி விடவும் ஏற்ற எழுச்சியும், அதாவது தள்ளல் சக்தியும் விண் துகள்களிலே இருக்கிறது. விண் துகளின் ஈர்ப்பு மையமாக உள்ள அறிவானது, மிகச் சிறிய விண்துகள் முதல் மிகப் பெரிய சூரியன் வரை, ஒவ்வொரு இயக்கத்தின் ஊடேயும் இயக்க ஒழுங்காக (Pattern, Precision, Regularity) அமைந்து, ஒவ்வொரு இயக்கத்தையும் முறையாக நடத்துகிறது. அதுவே அறிவு (Consciousness) எனவும் மதிக்கப்படுகிறது".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
புதன், 25 ஜூன், 2014
தற்சோதனைக்கான ஐந்து பயிற்சிகள்
1) எண்ணம் ஆராய்தல்
2) ஆசைச் சீரமைத்தல்
3) சினம் தவிர்த்தல்
4) கவலை ஒழித்தல்
5) நான் யார்?
ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து, இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிற...வியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே, பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது. அதற்குத்தான் பழக்கத்திலிருந்து மனதை மாற்றியமைக்க - தற்சோதனை (அகத்தாய்வு) குண்டலினியோகம் (தியானம்) என்கிற முறையான பயிற்சி வேண்டும்; விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்டபிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகவேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதை கணித்து, படிப்படியாக தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அப்படி உணர்ந்த வழியே திரும்பி உயர்ந்து அதுவாகவே மாறுவதும் தான் ஆன்மீக வாழ்வு.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
செவ்வாய், 24 ஜூன், 2014
Question : At the time of death, what is the best thought to keep in mind, so as not to disturb any individual or society after our own death, by attachment to people or individuals? Should we be praying for the welfare of all living beings, or try to go to "Thuriyatheeth (Samadhi)" state of meditation?
Swamiji : One should try to go to 'Thuriyatheeth', become one with the Universal Being. To achieve this, one must practice detachment from all materials during the life-time; otherwise such thought will not come at the time of death. Such detachment will help the mind to expand easily. Unless there is detachment, the mind cannot expand and remain absorbed with the Universal Being.
திங்கள், 23 ஜூன், 2014
ஐயா, தங்களுடைய மனவளக்கலை புத்தகங்களைப் படித்தே தவம் செய்யலாமா
வேதாத்திரி மகரிஷி விடை:
செய்யக் கூடாது! தெளிந்த ஆசிரியரின் மூலமாக்த் தான் தவம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நான் புத்தகங்களில் தவம் செய்யும் முறை பற்றி விலக்கவில்லையே! மனவளக்கலை மன்றங்களோடு தொடர்பு கொள்ளுங்கள், எளிதில் அகத்தவம் கற்றுக் கொடுப்பார்கள்.
செய்யக் கூடாது! தெளிந்த ஆசிரியரின் மூலமாக்த் தான் தவம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நான் புத்தகங்களில் தவம் செய்யும் முறை பற்றி விலக்கவில்லையே! மனவளக்கலை மன்றங்களோடு தொடர்பு கொள்ளுங்கள், எளிதில் அகத்தவம் கற்றுக் கொடுப்பார்கள்.
ஞாயிறு, 22 ஜூன், 2014
மனையடி சாஸ்திரம் அவசியம்தானா?இதனுடைய தத்துவம் என்ன?"
மகரிஷியின் பதில்: " நான்கு சுவர்களை அமைக்கும்பொழுது அதற்குள் உண்டாகும் காந்தக்களம் மனிதனுக்கு நன்மை செய்வதாக அமைவதோ அல்லது தீமை விளைவிப்பதாக அமைவதோ உண்டு. என்ன நீள, அகல, உயரத்தில் அறை அமைந்தால் அதில் எவ்வாறு காந்தக்களம் அமையும், அந்தக் காந்தக் களத்தில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன நன்மை, தீமைகள் எல்லாம் உண்டாகும் என்று கணக்கிட்டு அறிந்து கூறும் கலைதான் மனையடி சாஸ்திரம். அவ்வாறு நன்மை செய்யக்கூடிய ஒரு காந்தக் களத்தை அமைத்து அதில் வாழ்வது சிறப்பானதே".
சனி, 21 ஜூன், 2014
பஞ்சபூத நவகிரக தவம் பயன்கள்
1. எந்த பொருளுடனும், சக்தியோடும் இணைந்து பயன் பெறமுடிகிறது.
2. அந்த பொருள் சக்தியால் விளையக்கூடிய தீமைகளிலிருந்து காப்புப்பெற முடிகிறது.
3. அந்த பொருள், சக்தியை பற்றிய முழு விளக்கமும், தெளிவும் பெறமுடிகிறது.
4. உடலுக்கும், உயிருக்கும், ஊக்கமும் ஆக்கமும் நிறைவும் கிடைக்கிறது.
5. நவகிரகங்களிலிருந்து வீசும் கதிர்வீச்சுக்களினால் உண்டாகும் தீமையை பெரும்பாலும் குறைத்துக்கொள்ளலாம், தடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
6. தவத்தின் மூலம் இவற்றுடன் உயிர் கலப்பு பெறுவதால் மேன்மையே உண்டாகி வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும், பயன்களும் பெற்று இனிமையுடன், வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அமைதியுடனும் வாழ முடிகிறது.
- வேதாத்திரி மகரிஷி
5. நவகிரகங்களிலிருந்து வீசும் கதிர்வீச்சுக்களினால் உண்டாகும் தீமையை பெரும்பாலும் குறைத்துக்கொள்ளலாம், தடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
6. தவத்தின் மூலம் இவற்றுடன் உயிர் கலப்பு பெறுவதால் மேன்மையே உண்டாகி வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும், பயன்களும் பெற்று இனிமையுடன், வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அமைதியுடனும் வாழ முடிகிறது.
- வேதாத்திரி மகரிஷி
வெள்ளி, 20 ஜூன், 2014
இயற்கையான காதல் என்பது எது?
அன்பர்களே ! நாம் சிந்தித்து பயன் பெற மகரிஷியின் விளக்கம்:
"காதல் காட்சிகளாகிய சினிமாப் படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும். காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ, காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும். பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்; நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள். காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக, உயர்வாக, ஒழுங்காக, அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது. ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ? படக்காட்சிக் கவர்ச்சியிலும், மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் "இயற்கையான காதல்" நிறைவான இன்பத்தை அளிக்க முடியும் ?.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
"காதல் காட்சிகளாகிய சினிமாப் படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும். காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ, காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும். பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்; நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள். காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக, உயர்வாக, ஒழுங்காக, அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது. ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ? படக்காட்சிக் கவர்ச்சியிலும், மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் "இயற்கையான காதல்" நிறைவான இன்பத்தை அளிக்க முடியும் ?.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
வியாழன், 19 ஜூன், 2014
சைவ உணவு மனிதனுக்கு ஏற்றது என்கிறீர்கள். ஆனால் அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள் தானே நம்மை விட மிகச் சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செய்கிறார்கள்?
மகரிஷியின் விடை:
ஆராய்ச்சி செய்து என்ன பயன் ? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால் அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன் ...? அது மனித வாழ்விற்கான விஞ்ஞானம் இல்லையே. தானும் வாழவேண்டும் ; பிறரையும் வாழவிட வேண்டும் என்பது தான் மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந்தது என்று பாருங்கள். அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப் போது படை எடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்ட நாடுகள் தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அதுவா மிகச் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி ?
ஆராய்ச்சி செய்து என்ன பயன் ? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால் அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன் ...? அது மனித வாழ்விற்கான விஞ்ஞானம் இல்லையே. தானும் வாழவேண்டும் ; பிறரையும் வாழவிட வேண்டும் என்பது தான் மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந்தது என்று பாருங்கள். அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப் போது படை எடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்ட நாடுகள் தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அதுவா மிகச் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி ?
புதன், 18 ஜூன், 2014
உயிர்ச் சக்தியின் பெருமை
உயிர்ச்சக்தியின் குறைவினாலேயே வலி, நோய், மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகவே, நாம் நலமாக இருக்க வேண்டுமானால் உயிர்ச்சக்தியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர்ச்சக்தி உடலிலே சரியாக இருக்க வேண்டுமானால், அதைத் தாங்கக் கூடிய சக்தி அதாவது வித்து சக்தியானது போதிய அளவிலேயும் போதிய அழுத்தத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த வித்து சக்தி. அதையே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சீவவித்துக்குழம்பு (sexual vital fluid) என்கிறோம். அதை நாம் எந்த அளவு பாதுகாத்து, எந்த அளவு சரியான முறையிலே நாம் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிலே உயிர்ச் சக்தியும் இருக்கும். (the quantity and quality of the life force is what the quantity and quality of sexual vital fluid).
உயிர்ச்சக்தியும், வித்துச் சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ, அது போலவே வாழ்க்கையின் உடல்நலம், மனநலம் அமையும்.
செவ்வாய், 17 ஜூன், 2014
மெய்யுணர்வு
Intuition என்பது நீ பேசாதபோது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பார்கள். நீங்கள் வளவள என்று பேசிக் கொண்டே இருந்தால் அங்கே உள்ளேயிருந்து வரக் கூடிய நுண்மையான விளக்கமோ அல்லது அறிவிரையோ எப்படித் தெரியும்? டமாரம் அடிக்கிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால் ஒருவர் பேசுவது நமக்கு காது கேட்பதில்லையல்லவா? அது போல, ஐயுணர்வைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்தி திட்டமிட்டு ஒரு அளவில் வைத்துக் கொள்வோமேயானால் அங்கு தான் மெய்யுணர்வு ஏற்படும்.
திங்கள், 16 ஜூன், 2014
தாலியின் தத்துவம்
தொடக்கத்தில் மனிதன் மலையிலேதான் வாழ்ந்து வந்தான். மலை கரைந்து காடாகி, காடு சமவெளியாகி, பயிரிடக் கூடிய நிலமாகியது. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்று முன்று நிலமாகியது. மலையில் வாழும் ஆண்மகன் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கக்கூடிய உடல் வலிவு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒருமுறை வைத்தார்கள். கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய 'பல்' ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும். அவ்வாறு கொண்டு வந்து காண்பித்த பல்லிலே ஒரு கயிற்றைக் கட்டி, பெண்ணின் கழுத்தில் தாலியாகக் கட்டுவது என்றாகியது. இப்போது புலிப் பல் தேடும் காலம் போய் புலிப்பல்லைப் போலவே இரண்டு நாக்கு வைத்து தங்கத்தால் செய்த ஒரு சின்னத்தைக் கட்டலாயினர். இதைத் தான் இப்பொழுது தாலி என வழங்குகிறோம்.
வடநாட்டுத் தாலி எப்படி என்றால் யுத்தங்கள் அதிகமாக இருந்ததால் கலவரத்தில் பெண்களைச் சூறையாடும் வெறி இருந்தது. பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே 'விஷம்' வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்க விட்டார்கள். பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிணக்கு சச்சரவு வரும் போது சாப்பிட ஆரம்பித்ததால், விஷம் நிறுத்தப் பட்டு, அரக்கு வைக்கப்படுகிறது.
இப்படி சடங்குகளை அலசிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு கால கட்டத்தில் அவசியமானதென்று தெரிய வருகிறது. தற்காலத்திற்கு தேவையில்லையெனில் அவற்றை தள்ளிவிட்டு மனித சமுதாயம் முன்னேற வேண்டும். அதற்கு விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.
ஞாயிறு, 15 ஜூன், 2014
கேள்வி: சுவாமிஜி! பதினெட்டு மாதக் குழந்தையின் வயிற்றுக்குள் 9 மாதக் கரு இருந்ததாக செய்தி வந்தது. இது சாத்தியமாகுமா?
வேதாத்திரி மகரிஷி பதில்:
கருவுற்ற ஐந்து மாதத்திற்குப் பிறகு ஆண், பெண் உறவு கூடாது. இதைப் பற்றிய கல்வி பலருக்குத் தெரிவதில்லை. அதற்காக முற்காலத்தில் பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வைத்திருந்தார்கள். மனைவிக்கு ஐந்து மாத கர்ப்பம் என்றால் கணவன் தாடி வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணைத் தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதாவது கணவனுக்கு அக்காலம் சன்னியாசம் ஆகும். இப்பொழுது தாடி வைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல முடியாது. எனவே அந்தப் பழக்கம் போய்விட்டது.
சமுதாயத்தில் பண்பாட்டு வழிவந்த உண்மை என்ன வென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உடலுறவு கொண்டால் கருவிலுள்ள குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படும். இதன் விளைவாக ஊனமுற்ற குழந்தை பிறக்கலாம். கர்ப்பப்பைக்குப் பலவீனம் ஏற்படும். விந்து சக்தி ஜீரணமாக முடியாது. அத்தகைய ஆற்றல் பெற்றது விந்தணுக்கள். அவை தாய் வயிற்றில் தேங்கியிருந்து கருவாகி, அக்கரு நகர்ந்து சென்று கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் கருப்பைக்குள் தங்கிவிட்டால், அங்கு அது முளைத்துவிடும். அரிதாக இவ்வாறு நடந்து இருக்கும். எனவே பண்பாட்டு வழிவந்த ஆண், பெண் உறவுக்கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது விளங்குகிறது.
கேள்வி : மகரிஷி அவர்களே! முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?
பதில் : பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்து விட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.
அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுகள் வரை திரும்பத் திரும்பப் பிரதிலிக்கும் வேகம் உண்டு. ...அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும்.
இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைகளுக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே, ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத் தார்கள்.
தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலைமுறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.
அருள் தந்தை
சனி, 14 ஜூன், 2014
மனம் வெளுக்கும் மருந்து
நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது, தேவையில்லாதது எல்லாம் மௌனத்தில் ...உட்காரும் போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள்.
'இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது, அது தேவைதானா? தேவையில்லை' எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது.
அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ, அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும். அப்போது மனம் தூய்மையாக இருக்கும். மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.
மனம் வெளுக்க மருந்து உண்டு :
வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மௌனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.
எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம். அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள். பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும்.
மௌன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மௌனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து பயன்
பெறுவதற்கும் மனிதனிடம் போதியஅறிவு அமைந்துள்ளது".
.
"இயற்கையையும் கற்பனையையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்".
.
"வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே
உள்மன அமைதிக்கு உரம்".
.
மோனம்
விளக்கமும் - பழக்கமும் :
"பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னைப்
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் களைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்;
பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ, அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும். அப்போது மனம் தூய்மையாக இருக்கும். மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.
மனம் வெளுக்க மருந்து உண்டு :
வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மௌனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.
எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம். அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள். பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும்.
மௌன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மௌனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து பயன்
பெறுவதற்கும் மனிதனிடம் போதியஅறிவு அமைந்துள்ளது".
.
"இயற்கையையும் கற்பனையையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்".
.
"வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே
உள்மன அமைதிக்கு உரம்".
.
மோனம்
விளக்கமும் - பழக்கமும் :
"பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னைப்
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் களைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்;
பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வெள்ளி, 13 ஜூன், 2014
வினா: சுவாமிஜி, தாங்கள் சித்தி பெற்று இருப்பது தங்களின் தவ வலிமை அல்லது ஊழ் அல்லாமல் வேறொன்றுமில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும் என்பது எனது தாழ்மையான எண்ணம்?
வேதாத்திரி மகரிஷியின் விடை:
அன்பரே, ஊழ் என்பது முன்பிறவியில் செய்த வினை அல்லது பழவினை என்பதாகும்.
அன்பரே, ஊழ் என்பது முன்பிறவியில் செய்த வினை அல்லது பழவினை என்பதாகும்.
தவவலிமை என்பது இப்பிறவியில் முயற்சி செய்து பெற்ற உயிர்த்தூய்மை என்பதாகும்.
தவ வலிமையால் நான் உயர்ந்துள்ளதாக நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்பிறவியில் நீங்கள் செய்யும் தவப்பயிற்சி வரும் பிறவியில் உங்கள் குழந்தைகளுக்கு ஊழ் வினையாக நலம் தராதா?
உங்கள் வினாவிலேயே விடையும் உள்ளதே!
தவ வலிமையால் நான் உயர்ந்துள்ளதாக நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்பிறவியில் நீங்கள் செய்யும் தவப்பயிற்சி வரும் பிறவியில் உங்கள் குழந்தைகளுக்கு ஊழ் வினையாக நலம் தராதா?
உங்கள் வினாவிலேயே விடையும் உள்ளதே!
புதன், 11 ஜூன், 2014
பழக்கத்தால் எண்ணம்
ஒரு செயலில் மனமானது பழகி விட்டால் மீண்டும் தேவை இல்லாதபோது கூட அதையே நாடுகிறது. இது பழக்கத்தால் தோன்றும் எண்ணம்.
தினசரி செய்தித்தாள் படிப்பது ஒரு பழக்கம். ஒரு நாள் செய்தித்தாள் வரத் தாமதமாகி விட்டால் மற்றப் பணிகளை மறந்து அதே நினைவாகச் செய்திதாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பது பழக்கத்தால் தோன்றும் எண்ணமாகும்.
தேர்வுக்காகப் படிக்கும் காலங்களிலும் தொலைக்காட்சித் தொடரை விடாமல் பார்க்க வேண்டும் என்பதும் பழக்கத்தின் காரணமாகும்.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்டு பழகியவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியைப் பார்த்தவுடனே பசி இல்லாவிட்டாலும் கூட சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுவது பழக்கத்தின் காரணமாகும்.
இவற்றை அனுமதிக்கலாமா? நிறைவு செய்யலாமா? விளைவு என்னவாகும்? என்று ஆராய்ந்து பார்த்துச் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
-வேதாத்திரி மகரிஷி,
செவ்வாய், 10 ஜூன், 2014
கோள்களும் நமது உடலும்
சூரியனிலிருந்து வருகின்ற அலை எலும்புகளோடும், புதன் தோல் மீதும், வெள்ளி சீவ வித்து சக்தியோடும், சந்திரன் ரத்த ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும், சனி மூளை செல்களோடும், சனி நரம்புகளோடும், இராகு-கேது மனத்தோடும் தொடர்பு கொள்கின்றன என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள இரசாயனமும் வேறுபடும். அந்த மாறுதல் ஏற்படும் போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்விக நினைப்பு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வதே நல்லது. அப்படி இல்லாமல் விருப்பம் போல் நடக்கின்ற போது உடலுறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை கேடுற்ற உடலுல், மனமும் உடையனவாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே இத்தகு விபத்துக்களைத் தடுப்பதற்காகவே அந்த நாட்களையும் நேரத்தையும் விரத நாட்களாக முன்னோர்கள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.
கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தி (immunity) அப்படியே காப்பற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்து விட்டுச் செய்வது ஒரு சடங்கு தான். -வேதாத்திரி மகரிஷி,
திங்கள், 9 ஜூன், 2014
கடமை உணர்வு
நாம் பிறந்தோம். 15 ஆண்டுகள் வரையில் எப்படி வாழ்ந்தோம். சமுதாயத்திலிருந்து ஒரு பெருமளவு பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு தான் வளர்ந்து வந்துள்ளோம். அவ்வாறு பெற்றுக் கொண்டதால் கடன்பட்டவர்கள் தானே நாம். இத்தனையும் அனுபவித்து அனுபோகித்த பிறகு ஏதேனும் திருப்பித் தந்தோமா? பிறந்த போது ஏதேனும் கொண்டு வந்தோமா கொடுப்பதற்கு? இல்லையே. ஆகவே சமுதாயம் தந்தது தான் எல்லாம். இந்த உடலும் உட்பட.
எனவே சமுதாயத்திற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். இந்தக் கடனைத் தீர்ப்பது எப்படி?
உடல் வளர்ச்சி பெற்ற பின்னர், அறிவு வளர்ச்சி பெற்றபின் அதே அறிவைக் கொண்டு, வலுவைக் கொண்டு இந்த சமுதாய்த்திற்கு எந்தெந்த அளவிலே நன்மை செய்ய முடியமோ அதை உணர்ந்து நலம் தரத்தக்க வழியிலே செயல் படுத்த வேண்டுமென்று கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற நீதி உணர்வு, அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலிலே வரக் கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள், இதைத்தான் 'கடமை உணர்வு' என்கிறோம்.
-வேதாத்திரி மகரிஷி,
ஞாயிறு, 8 ஜூன், 2014
குணங்கள்
தேவையும் பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. அனுபவ நினைவுகளும் சிந்தனையும் தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்கின்ற திறனே 'அறிவு' எனப்படும்.
உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை 'மயக்கம்' அல்லது 'மாயை' என்கிறோம். இந்த நிலையில் தான் பொய், களவு, கொலை, சூது, கற்பழிப்பு என்ற ஐம்பெரும் பழிச்செயல்களும் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி, வஞ்சம் ஆகிய ஆறுகுணங்களும் விளைகின்றன.
எனவே எண்ணத்தை அடிக்கடி ஆய்ந்து ஒழுங்குபடுத்துவது அவசியமானதாகும்.
-வேதாத்திரி மகரிஷி.
சனி, 7 ஜூன், 2014
அறநெறி
மிருகங்களைப் போலல்லாது ஒவ்வொரு பொருளுக்கும் சில பல மாற்றங்களைச் செயற்கையாகக் கொடுத்தும், ஏன் கலையழகு கொடுத்தும்கூட, மனிதன் உபயோகிக்க கற்றுக் கொண்டான், பழகிக் கொண்டான். இந்நிலையில் குழப்பம் விளையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கவும், மிருகங்களுக்குத் தேவைப்படாத ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அது தான் அறநெறி. அந்த அறநெறி தான் மனித குலத்தையே காத்து வருகிறது. இந்த அறநெறி அழியாமல் பாதுகாக்க எழுந்தவையே இன்று உலகிலுள்ள மதங்கள் எல்லாம். அவை (1) ஒழுக்கம் (2) கடமை (3) ஈகை என்பனவாகும்.
-வேதாத்திரி மகரிஷி
வெள்ளி, 6 ஜூன், 2014
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல், பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே, வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கிரகணம் என்ற பஞ்ச(ஐந்து) அங்கங்களையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்தார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது. கப்பலும், விமானமும், புகை வண்டியும் நாள், நேரம் பார்த்துப் புறப்பட முடியுமா? காலத்தால் இத்தகைய நம்பிக்கைகள் கரைந்து போகும்.
-வேதாத்திரி மகரிஷி,
வியாழன், 5 ஜூன், 2014
மனமும் எண்ணமும்
மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.
-வேதாத்திரி மகரிஷி,
புதன், 4 ஜூன், 2014
மாசு நீங்கல்
மனம் மெய்ப்பொருள் தான். ஆதியும் மெய்ப்பொருள் தான். ஆனால் மெய்ப்பொருள் குளத்து நீர் என்றால், மனம் அதில் முகந்த ஒரு குவளை நீர். குவளை நீரில் மாசு படிந்து விடுகிறது. அதைக் குளத்தில் கொட்டி விடுகிறோம். அக்குளத்து நீருக்கு அதனால் மாசு வந்து விடுவதில்லை. அதே குளத்தில் இன்னொரு குவளை நீர் முகந்து கொள்கிறோம். அது போலவே யோகத்திலும் மனமாகிய மாசடைந்த மெய்ப்பொருளை அகண்டாகார மெய்ப்பொருளில் சேர்த்து விடுகிறோம். மனத்தின் மாசு சூனியத்தில் கலந்து சூன்யமாகி விடும். எவ்வளவு பூரணமாகச் சேர்க்கிறோம் என்பதில் தான் துரியாதீதத்தின் வெற்றியும் மன மாசு நீங்கலின் முழுமையும் இருக்கிறது.
-வேதாத்திரி மகரிஷி.
செவ்வாய், 3 ஜூன், 2014
மறைபொருள் நம் உள்ளே :
ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர் (திருட வந்தவர்), அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர், பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது, எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்...டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்து பணத்தை எண்ணிய பணக்காரர் பாத்ரூம் போனார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து பணக்காரர் பாத்ரூமிலிருந்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். உடனே, மற்றவர் (திருட வந்தவர்) மீண்டும் உள்ளே போய் விட்டு பிறகு வந்தார். அதன் பின் மீண்டும் பணக்காரர் பாத்ரூம் போனார். உடனே, அந்த சமயம் பார்த்து வெளியில் இருந்தவர் (திருட வந்தவர்) பணக்காரருடைய பணத்தை, அவரது பெட்டி, அவரது தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். எங்குமே கிடைக்கவேயில்லை. அப்போது பாத்ரூம் உள்ளே போயிருந்த பணக்காரர் மீண்டும் வெளியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். பொழுது விடிகின்ற நேரம், இருவரும் புறப்படும் சமயம், மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தார்.
அதற்கு மற்றவர் (திருட வந்தவர்), "நீங்கள் பணத்தை எங்கு வைத்து இருந்தீர்கள்?" என்றார். ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார் பணக்காரர். நீங்கள் பலமுறை பணத்தை எண்ணியதை பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் பாத்ரூம் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவே இல்லை" என்றார்.
அதற்கு அந்த பணக்காரர், உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் "என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே தான் வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர். அதே போல எல்லாமவல்ல "இறைநிலை" இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே தான் வைத்திருக்கிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
அதற்கு அந்த பணக்காரர், உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் "என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே தான் வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர். அதே போல எல்லாமவல்ல "இறைநிலை" இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே தான் வைத்திருக்கிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
திங்கள், 2 ஜூன், 2014
அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்ட
சீவகாந்தம் என்பதையும், கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கிக் கொண்டால், அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்குக் கிட்டிவிடுமானால், வாழ்க்கைக்கு அடிப்படை நிதிகளாக உள்ள, உள்ளுணர்வு அனுபவங்களாகிய, பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி மற்றும் காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக அவரால் விளங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து இடைவிடாத அகநோக்குப்... பயிற்சியாகிய மனப்பயிற்சி (kundalini yoga Meditation) மூலம் இவற்றைப் பற்றி ஒருவர் தனக்குள்ளேயே தெளிவாக் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உணர்வு ஒருவருக்கு ஏற்படுமானால் புலன்கள் மூலமாக ஏற்படும் மயக்க நிலையை அவர் கடந்து விட முடியும். அப்போது உண்மையானதும், உயர்ந்ததும், தெய்வீகமானதுமான அன்பும், கருணையும் அவருடைய இயல்பான தன்மைகளாக மலரும். அதன் விளைவாக அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்டும்.
- தத்துவஞானி வேதத்திரி மகரிஷி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)