பழக்கத்தின் காரணமாகவும், புலன் கவர்ச்சியாலும், சூழ்நிலையாலும், நாம் தவறுகள் செய்கிறோம். செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. விழிப்புணர்வுடன் இருந்து தவறுகளைக் கண்டறிய வேண்டும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை. மனதின் மாண்புதான் மனிதனின் மாண்பு. மனதின் உயர்வு தான் மனிதனுடைய உயர்வு.
மனதை எந்த அளவில்,
உயர்த்திக் கொள்கிறோமோ,
தூய்மை செய்து கொள்கிறோமோ,
வலுப்படுத்திக் கொள்கிறோமோ,
நெறிப் படுத்திக்கொள்கிறோமோ,
அந்த அளவிலேதான் மனிதனுடைய வாழ்வு, மனிதனுடைய வெற்றி, மனிதனுடைய எல்லா வளங்களும் அமையும். விழிப்புத் தவறும் போது தோன்றும் தவறான எண்ணங்களைக் கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை நாமே விரும்பி எப்பொழுதும் மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நம்மையும் பிறரையும் இவ்வையகத்தையும் "வாழ்க வளமுடன்" "வாழ்க வையகம்" என வாழ்த்திக் கொண்டே இருக்கலாம். எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக