எண்ணமானது உயிர்சக்தியிலிருந்து பிறக்கிறது. அதற்கு இடத்தாலோ , காலத்தாலோ முடிவே கிடையாது . எண்ணம் என்பது சீவகாந்த அலை . சீவகாந்தமும் வான்காந்தமும் எப்போதும் ஒற்று கலந்தே இருக்கின்றன . ஆகையால் ஒருவர் எண்ணிய எண்ணம் உடனே பிரபஞ்சம் முழுவதும் பரவி நிறைந்து விடுகிறது. எந்த எண்ணமானாலும் அது அலை வடிவில் வான்காந்தத்தில் கலந்து விடுகிறது. வான்காந்தம் ஒவ்வொரு மனிதனுடைய சீவகாந்தத்ததோடு எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறது.... ஆகையால் ஒருவர் எண்ணிய உணர்ச்சிவயப்பட்ட எண்ணம் உடனே உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்து விடுகிறது. இறைநிலையின் இருக்க ஆற்றல் அந்த எண்ணத்தை இறுக்கிச் சுருக்கிக் கருமையத்தில் சேர்த்து விடுகிறது. எந்த அலைநீளத்தில் அந்த எண்ணம் எண்ணப்பட்டதோ அதே அலை நீளத்திற்கு மற்றவர் வரும் போது , அதே எண்ணம் சீவகாந்த அலையால் விரிக்கப்படுகிறது. மூளை அதை காட்சியாக விரித்துக் காட்டுகிறது. அந்த எண்ணம் இப்போது மற்றொருவருக்கு வெளிப்படுகிறது. அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் அவரிடம் எழுந்து அவரைச் செயலில் ஆழ்த்தி விடுகிறது. இவ்வாறாக ஒருவர் எண்ணிய எண்ணத்தை மற்றவர் செயல்படுத்தும் நிலை உருவாகிறது.
--அருள் தந்தை
--அருள் தந்தை
வாழ்க வளமுடன். கருமையம், மனம் அதன் சிறப்பு பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக மகரிஷி எளிமையாக கொடுத்திருக்கிறார். குரு வாழ்க. பரவட்டும் வேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு