Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 27 ஜூலை, 2021

*வேதாத்திரிய மெய்விளக்கம் 27-07-2021 உலக சமாதான ஆண்டு நாள் 27-07-0036*



*"மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் "மவுனம்" (Silence)"*


*"ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும்."*  


*அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.*  


*மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.*  


*இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது.  அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.*  


*எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.*  


*யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.*  


*ஒரு நாளைக்கு மௌனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.*  


*ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள்.*  


*சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.*  


*நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.*


*ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.*  


*அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மௌனம் இருக்க வேண்டும். மௌனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மௌனமாக இருப்பது நல்லது.*  


*எல்லோரும் தூங்கும்போது மௌனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மௌனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.*


*எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.* 


*மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள்.  வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும்.* 


*அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால்,  'நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்"...  "ஆமா, அறிவுத் திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"..  "ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை,..  இது என்ன மவுனம்?* 


*அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?,*  


*மௌனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மௌனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும். மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.*


*மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் "மவுனம்"*.


*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!*


*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

திங்கள், 29 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நாம் வாழும் பூமிக்கருகில் உள்ள சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் சூரியன் மையமாக உள்ளது. மற்ற கோள்களெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கோள்களின் பருமனா? கோள்களின் சுழல் வேகமா?*

பதில்:* சூரியனுடைய தற்சுழல் வேகம் அதில் அடங்கிய அணுக்களின் கூட்டுத் தொகையைப் பொறுத்தது. அது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வருவது, சூரியனுடைய சுழல் வேகத்தில் தோன்றும் அலை எவ்வளவு தூரம் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த அலையில் மிதக்கிற கோள்கள் எல்லாம் அதே வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் கோள்களின் பருமனுக்குத் தக்கவாறு களத்தில் பின் தங்கிச் செல்லும்.


சூரியன் 25 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அந்த சுழல் வேகத்தில் வரக்கூடிய அலையானது ஆயிரம் கோடி மைலில் வரை விரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலையில் எந்தெந்தக் கோள்கள் இருந்தாலும் அது அப்படியே ரெங்கராட்டினத்தில் ஆள் வைத்து சுற்றிக் கொண்டு போவது போல சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் அந்தந்த கிரகத்தின் எடைக்கும், தூரத்திற்கும் தகுந்தவாறுதான் சுற்றுவேகம் வித்தியாசம் ஏற்படும்.

வாழ்க வளமுடன்!!


*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 28 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, பிரபஞ்சம் என்பது ஒன்றுதான் இருக்க முடியுமா?*

 


பதில்:* ஆம். ஒன்றுதான் இருக்க முடியும். இரண்டு இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிருந்தால், இரண்டையும் சேர்த்து அழுத்திக் கொண்டிருக்கிற சுத்தவெளி எனும் பேராற்றல் சூழ்ந்தழுத்தி இறுக்கி ஒன்றாக்கி விடும். பின் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

சனி, 27 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? அதற்கு ஏன் சுழற்சி ஏற்படுவதில்லை?

 


பதில்:* இறைவெளியில் தோன்றும் விண்ணின் சுழற்சியில் பஞ்ச பூதக் கூட்டில் அண்டங்கள் உருவாகிறது. மேலும் காலம் செல்லச் செல்ல தற்சுழற்சியால் அண்டத்தின் மையப் பகுதியில் திணிவு அதிகமாகி, அணுச் சிதைவு ஏற்பட்டு வெப்பக் குழம்பாகி, நீர் சுண்டி, பலகோடி ஆண்டுகளுக்குப் பின் நெருப்புக் கோளமாகி விடும். இத்தகைய அண்டங்கள் தான் சூரியன்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தொலைவிலுள்ள சூரியன்களை நட்சத்திரங்கள் என்கிறோம்.

நட்சத்திரங்களும் சுழன்று கொண்டுதானிருக்கின்றன. வெகு தொலைவுக்கப்பால் இருப்பதால் நமக்கு சுழற்சி தெரிவதில்லை. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அணுக்களின் கூட்டுத்தான். ஒவ்வொரு அணுவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் அதனால் ஆன ஒட்டு மொத்தத்திலும் அந்த சுழற்சி இருக்கும். நாமும் பூமியோடு சேர்ந்து சுழன்று கொண்டு தான் இருக்கிறோம்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 26 மார்ச், 2021

கேள்வி: ஐயா, தனிமங்கள் இணையும் பொழுது ஒன்றின் இடைவெளியை மற்றது நிறப்புகிறது என்கிறீர்கள்? புரிந்து கொள்ள இயலவில்லை?



பதில்:* 100 ml. தண்ணீரில் 100 கிராம் தூய்மையான உப்பைக் கரைத்தால்  200 ml. ஆகாது. அதே 100 ml. அளவு தான் இருக்கும். அணுச் சேர்க்கையில் ஒன்றின் இடைவெளியை மற்றொன்று நிரப்புவதால், நீர், உப்பு எல்லாம் வேதான்களின் கூட்டுதானே.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 21 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, ராமா என்ற பெயரை வாயால் சொன்னால் மன அமைதி கிடைக்கும், நமக்கும் நமது குடும்பத்திற்கும் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்களே? உண்மையா?*

பதில்:* இதே போன்ற கேள்வியை அமெரிக்காவில் மன இயல் தத்துவ பேராசிரியர்களிடம் கேட்டார்கள். இந்தியாவில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லியே பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிக ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்களே, எவ்வாறு என்று.

அவர்கள் பரிசோதனைக்காக நான்கு அன்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் Heart Beat, Pulse, B.P. அனைத்தையும் குறித்துக் கொண்டார்கள். மேலும், “கொக்கோ கோலா” என்ற வார்த்தையைக் கொடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து உச்சரிக்க வைத்தார்கள். அதன் பிறகு அவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்களுடைய Heart Beat, Pulse, B.P. அனைத்தும் குறைந்து இருந்தது. அவ்வாறு வார்த்தையை உச்சரித்து வரும்பொழுது பல நல்ல விளைவுகள் தோன்றியதாகக் கூறினார்கள்.


உச்சரிக்கும் வார்த்தையில் மக்களுக்கு இறை நம்பிக்கையும் சேர்ந்துள்ள போது பயன் அதிகமாகவே இருக்கும்.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 16 மார்ச், 2021

சுவாமிஜி, ஒரு தனிமம் மற்றொரு தனிமமாக எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை விளக்க வேண்டுகிறேன்


பதில்:* ஒரு தனிமத்தில் நுண்விண் துகள்கள் சேர்ந்து இயங்குகிறது என்றால் அவை ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு விலகாமல் ஒரே தனிமமாக பரிமளிக்க (Maintain) அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட சுழல் விரைவு இருக்க வேண்டும். அந்த தனிமமானது தன்னியக்கத்தால் தன் நிலையிலிருந்து அதிக விரைவு பெற்றாலும் அல்லது சூழ்நிலையின் ஆதிக்கத்தால் (Activation) விரைவு பெற்றாலும் அந்த சுழற்சிக்கு தக்கவாறு தன்னுடைய நுண்துகளை இழந்து மாற்றம் பெற நேரிடும். ஒரு தனிமம் காலத்தால் அதே தனிமமாக நிலைத்து நிற்க முடியாது.

இரண்டு விண் துகள்களின் சேர்க்கையை ஹைட்ரஜன் என்று வைத்திருக்கிறோம். இதே போன்ற ஹைட்ரஜன் கூட்டு மேலும் சேரச்சேர ஒரே குழுவாக மாறுகிறது. அது குழுவாக இருந்தாலும் இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் அது சுழன்று கொண்டே தான் இருக்கும், அச்சுழற்சி இயக்கத்தால் கனமான துகள்கள் மையத்திலும் லேசான துகள்கள் அதன் ஓரப்பகுதியிலும் (Periphery) இடம் எடுத்துக் கொள்ளும். இவ்வாறு இயங்கி, ஒத்து இணையும் பொழுது இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் பொருத்திக் கொள்கிறது. அவ்வாறு 16 துகள்கள் சேர்ந்தியங்கும் பொழுது அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுழன்று கொண்டே வரும் பொழுது இடத்திற்கு தகுந்தவாறு ஒன்று மற்றொன்றோடு பொருந்தி வேறு தனிமமாக மாறிக் கொண்டே வருகிறது.

இப்பொழுது இரு விண்துகள்களைக் கொண்ட ஹைட்ரஜன் 16 விண் துகள்களைக் கொண்ட ஆக்ஸிஜனோடு சேர்ந்து சுழலும் பொழுது சுழற்சி வேகம் குறைந்த கனமான ஆக்ஸிஜன் மையத்திற்கு வரும். இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் (Ratio) வரும் பொழுது  ஒன்றில் உள்ள காலியிடத்தை மற்றொன்று அடைத்துக் கொள்கிறது. இல்லையெனில் அது சேர முடியாது. உதாரணமாக 5 யூனிட் பருமணுள்ள ஹைட்ரஜனும் 5 யூனிட் பருமணுள்ள ஆக்ஸிஜனும் இணையும் பொழுது இரண்டும் சேர்ந்த கூட்டு 5 யூனிட் பருமன்தான் வரும். இதனை விளங்கிக் கொள்ள, சுத்தமான உப்பு ஒரு லிட்டர், தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். உப்பு முழுவதும் தண்ணீரில் கரைந்த பிறகு பார்த்தால் கலவை இரண்டு லிட்டர் ஆகாது. ஒரு லிட்டர் தான் இருக்கும். இங்கு என்னவாயிற்று என்றால் (There is space between the Two) உப்பில் அமைந்த விண்களுக்கிடையேயுள்ள வெளியை (Space) தண்ணீரில் உள்ள வெளியை உப்புத் துகள்களும் ஒரு கோர்வையாக இணைந்து அடைத்து ஒன்றில் ஒன்றாகி விடுகிறது.

இதே போன்ற ஒரு கோர்வை, ஒரு தொடர்ச்சி ஹைட்ரஜனிலும் (H2) ஆக்ஸிஜனிலும் (O) ஏற்படும்பொழுது தான் அது தண்ணீர் (H2O) ஆகிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 15 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே ஏன்?*



பதில்:* இறைநிலை பற்றிய விளக்கம் மிகவும் எளிதானதே. எல்லோராலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு எளிதாக உள்ளதை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினார்கள் என்று எண்ணிய போது என் உள்ளத்தில் எழுந்த ஒரு காட்சி இது. ஒரு நூல்கண்டை குழந்தையிடம் கொடுத்து விட்டு தாய் சென்று விடுகிறார். குழந்தை அதை எடுத்து கலைத்துப் போட்டு சிக்கலாக்கி விடுகிறது. பிறகு தாய்க்கு எது ஆரம்பம் என்று தெரியாமல் வெட்டி வெட்டி போட்டு விடுகிறாள். அதே போன்று தான் இறைநிலை விளக்கம் எல்லாம் துண்டு துண்டாகப் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் அதை ஒன்றுபடுத்திப் பார்க்க இயலாமையே இறைநிலை பற்றிய விளக்கம் சிக்கலாகக் காரணமாகிறது.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 14 மார்ச், 2021

கேள்வி: ஐயா, மகான் என்று யாரை அழைக்கின்றோம்?*

பதில்:* “மகா” என்றால் “பெரிய” என்று பொருள். “ஆன்” என்றால் “ஆள், அதாவது எல்லாவற்றையும் உணர்ந்தவர் அறிவில் உயர்ந்தவர் என்று பொருள். மகானுக்கு நேரிடையான தமிழ்ச்சொல் பெரும் + ஆள். அதாவது “பெருமாள்”.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 5 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, இன்பத்தை உணர்வது எது, உடலா, உயிரா, மனமா?


*

பதில்:* உயிர் தான் மனம் என்ற மலர்ச்சியில் இன்பத்தை உணர்கிறது. அதற்குப் புலன்கள் உதவியாக இருக்கின்றன. புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் காந்த தன்மாற்றமே இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன. எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம், இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்ச் சக்தி இயங்குகிறது.

உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாகச் செலவாகும். அந்தச் செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது. உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது. உடலைக் கருவியாகக் கொண்டு புலன்வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி