Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 28 பிப்ரவரி, 2015

மௌன நோன்பு:

பொதுவாக மௌன நோன்பில் இருவகை உண்டு. 1]. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றளையும் சிதறாமல் காத்து, தான் விரும்பும் செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும். 2]. ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவைகளிலிருந்து விலகிக் கொண்டு மௌனமாக இருந்து அகத்தாய்வு செய்து கொள்ளுதல். இந்த இருவகை மௌன நோன்பு தான் நல்ல நோக்கத்தோடு பயன் விளைக்கத் தக்க வகையில் திட்டமிட்டு ஆற்றுவதாகும்.
.

குண்டலினி யோகத்தில், துரியாதீத தவம் ஆற்றும் போது புலன்கள், அறிவு, இச்சைகள் அனைத்தையும் அடக்கி, அறிவை இருப்பு நிலையான சிவமாக்கிக் கொண்டு பேச்சற்று இருக்கின்றோம். இது மௌன நோன்பில் சேராது. இது அறிவின் இயக்கத்தைச் சீரமைக்க நாள்தோறும் சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு குறுகிய கால அளவில் செய்யும் உளப்பயிற்சி ஆகும்.
.

நான் பேசாத போது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அறிவறிந்தோர் காட்டும் குறிப்பு. நாம் பேசாமல் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து கொண்டால் எத்தனை, எத்தனை எண்ணங்கள் எழுச்சி பெற்று உணர்த்துகின்றன. இந்த எண்ணங்கள் நீங்கள் உண்டு பண்ணுகிறீர்களா? நாம் உண்டு பண்ணுவதும் இல்லை. அது நம் விருப்பத்துக்கு அடங்குவதும் இல்லை.
.

பின்னர் நமது எண்ணங்களை நமது உள்ளங்களிலிருந்து அலையலையாக எழுப்பிக் கொண்டிருப்பது யார் வேலை? யாருமில்லை. இறைவனே தான். எவ்வாறு? உடல் உறுப்புகளின் மூலம் உணரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் உயிர் மையத்திலுள்ள இருப்பு நிலையாகிய அறிவு சீவ காந்த ஆற்றலால், படர்க்கை நிலையெய்தி மனமாக இயங்கி உணர்கின்றது.
.

மனத்தால் உணரும் அனைத்தும், அலைவடிவில் உயிர் மையத்திலிருக்கும் இருப்பு நிலையால் ஈர்க்கப்படுகின்றன. அவை உயிர்த் துகள்களில் பதிவாகின்றன. உயிர்த் துகள்கள் சுழற்சியால், உயிரில் பதிந்த பதிவுகளின் தன்மைகள் யாவும் அதன் விரிவு அலை மூலம் எப்போதும் வெறியேறிக் கொண்டே இருக்கின்றன.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,
எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்".
.

"கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை
உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை"
.

"மாசற்ற ஒளிஊடே, மறைந்திருக்கும் இருள்போல,
ஈசன் அறிவில் இருக்கும் நிலை".
.

விளக்கமும் - பழக்கமும் :

பேசா நோன் பாற்றுங்கள் அறிவு தன்னைப்
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் கலைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்
பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே.
.

மோனத்தின் பெருமை:

மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்.
மிகவிரிவு, எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம்,நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சமுதாயத்தினிடையே நட்பு கெடக் காரணம்?

மக்களிடம் சிந்தனையாற்றல் வளர்ந்துள்ள இக்காலத்தில் போர் தேவையே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவினிடம் உலக நாடுகளின் எல்லைக்கோடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்புவித்துவிட்டு, எந்த நாடும் பிற நாட்டுக்கு அஞ்சாமலும், பிற நாட்டைப் பகைக்காமலும் வாழலாம்.
.
மனித சமுதாயத்தில் வாழ்வின் வளங்கள் அனைத்தையும் போர் அழிக்கவல்லது. ஆதிகால மக்களிடம் சிந்தனை வளராத காலத்தில், அவர்கள் விலங்கினத்தைப் போன்று பிற உயிரைத் துன்புறுத்தியே வாழ்ந்த காலத்தில், தோன்றிய முரட்டுச் செயல் தான் போர். அக்காலத்தோடு இக்காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதனின் சிந்தனை எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது. நிலவுக்குப் பயணம் செய்யவும், கம்ப்யூட்டர் சாதனங்களைத் தினசரி வாழ்வில் பயன்படுத்தவும் மனிதனின் அறிவு உயர்ந்து உள்ளது. இந்தக் காலத்திலும் போர் மனித சமுதாயத்தில் உருவாகின்றது, மக்களைச் சீர் குலையச் செய்கிறது என்றால், இது பெரும் தவறு ஆகும். 'போரினால் எத்தனை மனித உயிர்கள் துன்பமடைகின்றன! நாசமடைகின்றன!' என்று எளிதாக அனைவரும் உணரலாம். மனிதகுல வாழ்வைச் சீரமைத்துக் கொள்ளப் பொருள் உரிமைச் சட்டங்கள், எளியவரை வலியவர்கள் தாக்கித் துன்புறுத்தாமல் காக்கும் சமுதாய நலச் சட்டங்கள் இவற்றை இயற்றவும், நிர்வாகம் செய்யவும் அரசியல் முறையில் சிறந்து உயர்ந்துள்ள காலம் இது.
.
இறைநிலையை உணர்த்தி, அறநெறியைப் போதித்து, வாழ்க்கை ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக இக்காலத்தில் எத்தனை மதங்கள் தோன்றிச் செயலாற்றி வருகின்றன! இன்னமும் பல உயிர்களை வருத்தியும், கொன்றும், அவர்கள் உடமைகளை அழித்தும் நீடித்து வரும் போர் உலகில் இருக்கின்றதென்றால், தவறு எங்கே இருக்கின்றது? ஆட்சி முறையில் பொறுப்பின்மையும் மதத் தலைவர்களிடையே உண்மையான கடவுள் உணர்வின்மையும் அன்றோ காரணம்?.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 .
"சமுதாயமே மனிதனுக்கு நீதி
வழங்கும் ஆட்சி மன்றம்".
.
"உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்திய கடன்".
.
உயர் வாழ்க்கைக்கு வழி:

"எண்ணிறந்த மதங்கள் உண்டு மனிதருக்கு
எனினும் தெய்வம் என்ப தொன்றேயாகும்
நுண்ணி ஆராய்ந்தறிந்த அறிஞர் செய்த
நூல்களெல்லாம் மனிதர் தங்கள் முயற்சியாலே
எண்ணத்தை அகத்தவத்தால் பண்படுத்தி
எங்கும் நிறை பூரணத்தின் தன்மை கண்டு
மண்ணுலகில் ஏழ்மை, பழிச்செயல்கள் ஐந்தை
மாற்றி உயர்வாய் வாழும் வழியைக் காட்டும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

நன்மக்கட்பேறு

பால் உறவு, அதை ஒட்டிய அறிவு எவ்வளவுக்கெவ்வளவு ஒரு சமுதாயத்தில் தெளிவாக இருக்கிறதோ அந்த அளவுக்குதான் சமுதாயம் நல்லமுறையிலே மகிழ்ச்சியாக உடல் நலத்தோடும், மனவளத்தோடும் இருக்கமுடியும்....
.
.
பால் உறவு பற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு தெரிந்துகொள்ளவேண்டுமோ அவ்வளவையும் தெளிவாக தெரிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கையில் ஒரு பெரும் பொறுப்புணர்ச்சி ஏற்படும்
.
.
செயலுக்கு விளைவு நிச்சயம்(Cause and effect) செயலிலே விளைவு இருக்கின்றது என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்துகொள்ளப்பெற்றால்,
.
.
ஓர் ஆசை எழும்போது அதை நிறைவேற்றிக்கொள்ள செயலில் இறங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்யவும், தீமை வரும் என்று நினைத்தால் அஞ்சித்தடுத்துக் கொள்ளவும் முடியும்.
.
.
உள்ளமும் உடலும் சரியாக செயல்பட வேண்டுமென்றால் போதிய அளவும் உயிர்ச்சக்தி வேண்டும். உயிர்ச்சக்தியை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். உயிர்ச்சகிதி உடலிலே சரியாக இருக்கவேண்டுமானால், அதை தாங்கக்கூடிய சக்தி, அதாவது விந்து சக்தியானது போதிய அளவிலேயும், போதிய அழுத்தத்துடனும் இருக்கவேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (Battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த விந்துசக்தி
.
.
நாம் உண்ணும் உணவினை ரசமாக்கி, ரசத்திலிருந்து ஒரு பகுதியினைக் கொழுப்பாக்கி, அந்த ஒரு பகுதி கொழுப்பிலிருந்து கால்சியம் எடுத்து எலும்பாக்கி, எலும்பிற்கு ஊடே மஜ்ஜையாக்கி, அந்த மஜ்ஜையிலிருந்து ஒரு பகுதியை சுக்கிலமாக்குகிறது. அந்த சுக்கிலத்திற்கு பெயர்தான் விந்து.
.
.
இந்த ஏழாவதாக வந்திருக்கக்கூடிய விந்து நாதத்திலிருந்து உருவாகக்கூடிய ஒரு சுத்த சக்தியைத்தான் Zetoplasm என்று சொல்லுகிறார்கள். அதுதான் ஒவ்வொரு சிற்றறைக்கும் காந்தச் சக்தி மின்சார சக்தியாக மாறுகின்றபோது அது தாக்காத அளவிற்கு தன்னைக் காத்துக்கொள்வதற்கும்(Providing Insulation).
.
.
அதே நேரத்தில் உயிர்ச்சக்திக்கு பூச்சு வேறு கொடுத்து பதிவுகள் Imprints (நம் செயல்கள்) எல்லாம் உடலின் சிற்றறைகளிலே விரிவு சுருக்கப்பதிவுகளாகவும் மூளையின் சிற்றறைகளிலே நினைவுப்பதிவுகளாகவும் ஏற்பட வகை செய்கின்றது.
.
.
இந்த Sexual Vital Fluid -ஐ இருபாலரும் எந்த அளவு பாதுகாத்து எந்த அளவு சரியானமுறையிலே வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவு உயிர்ச்சக்த்தியும் இருக்கும்.
.
.
உயிர்ச்சக்தியும், விந்துச்சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ அவ்வளவில்தான் வாழ்க்கையிலே உடல்நலம், மனநலம் எல்லாம் இருக்கும்
.
.
இந்த நிலையைத்தான் பழைய பாடல் ஒன்றிலே தெளிவாக சொல்லியுள்ளார்;
.
.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மான மிழந்து மதிகெட்டு - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”
.
.
.
கருவமையும் காலத்திலே விந்து நாதத்தின் பெருமை, மதிப்பு இவற்றை பொறுத்தே குழந்தை உண்டாகின்றது. விந்து நாதமோ உடல்நலம், மனநலம் மற்றும் அவரவர் வினைப்பதிவு (Imprints) முதலியவைகளைப் பொறுத்தே அமைகின்றது.
.
.
விந்து நாத வளர்ச்சி, கரு அமையும் காலம், இடம், கரு அமையும் காலம் முதல் கரு கழியும் காலம் வரையில் பெற்றோரின் நடவடிக்கைகள் யாவும் ஆராய்ந்து செயல்-விளைவுத் தத்துவத்தினை உணர்ந்து உடல், மனம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, முறையாக நெறியோடு வாழக்கூடிய ஓர் அற உணர்வினை வளர்த்துக்கொண்டால் மக்கட்பேற்றை- உயர் நன்மக்கட்பேறாக அடையமுடியும்
.
.
நன்மக்கட்செல்வம் வையகத்தை வாழ்விக்கும் வளமுடனே
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

புதன், 25 பிப்ரவரி, 2015

ஞானம் - பக்தி - மாயை - முக்தி :

ஒரு குழந்தைக்குத் தகப்பன் யார்? என்ற உண்மையை பொதுவாகத் தாயார் அறிந்துள்ள நிலையைப் போன்று, மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது.
.
இது போன்று ஒரு தத்துவத்தைச் சந்தேகமற, மாறமுடியாத, மாற்ற முடியாத வகையில் அறிந்து கொண்ட திட நிலை "ஞானம்" எனப்படும்.
.
வளர்ப்போர் சொல்லிக் கொடுத்ததைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளியை போன்று, தன் தாயார் சுட்டிக் காட்டிய ஒருவன் தான் தனது தகப்பன் என்று உறுதியாகச் சொல்லும் மகனின் மனோ நிலையோர்களால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களே சரியென நம்பி உறுதி கொண்டிருக்கும் நிலையும் இம்மாதிரியே.
.
கற்பனை வேகத்தால் இயற்கையை மறந்து, சமூகத்தின் அமைப்பையும், மக்களின் எண்ணம் செயல்களால் விளைந்து வரும் விளையப் போகும் நிகழ்ச்சிகளையும் மறந்து, உடலளவின் தேவையையும் அறிவுக்கு அந்தச் சமயப் பொருத்தத்தையும் ஞாபகத்தில் கொண்டு, புலனறிவின் எல்லையிலேயே மட்டும் விரிந்து, மயக்க நிலையில் எண்ணிச் செயலாற்றுவது "மாயை" எனப்படுகிறது.
.
எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே, "முக்தி" எனப்படும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

**************************************************************

.
"மெய்ப்பொருளாக இருப்பது இறைஆற்றல்;
அதனுடைய அசைவாக இருப்பது பரமாணு.
அதனுடைய கூட்டமாக இருப்பது தோற்றம்".
.
"எந்தப் பொருளைப் பார்த்தாலும் 'தோற்றம்,
அணுக்கூட்டு, பரமாணு, அதனுள் மெய்ப்பொருள்,'
என்று பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்".
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி.
அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்.
அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.
அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.
.
ஞானம் தேடும் பக்தர்கள்:

"தேடுகின்ற பொருள் என்ன, ஏன் நமக்கு,
தெரிந்தவர் யார், கிடைக்குமிடம்எது, ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார்; உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்து போவதைப்போல முரண்பாடன்றோ".
.
"வணங்கி வந்தேன் கற்பனையால் தெய்வத்திற்கு
வழக்கமாய் தொடர்ந்து வந்த பழக்கத்தாலே,
வணங்குபவன் உரியபொருள் வரும்பயன்கள்
வணங்கும் போதாராய்ந்தேன், வணக்கம்விட்டேன்
வணங்குகிறோம் ஒன்றை நமக்கு உயர்ந்ததாயும்
வாழ்வளிக்கும் ஒன்றாயும் நினைத்துக்கொண்டு.
வணங்குபவன் வலிமைபெற்று உயர்வடைந்தால்
வாழ்வினிலே கடமைசெயல் உயர்வாய்க் காணும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

'உயிர் உணர்வு' பெற எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga) :

...
"எல்லோருக்கும் 'உயிர்' இருக்கின்றது. ஆனால் அதைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? வளர்ந்து வரும் விஞ்ஞானத்திலே எல்லாப் பொருட்களைப் பற்றியும், ஆராய்ந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளாலும் உயிரை அறிய முடியவில்லை. வேதாந்திகள் கூட கடவுள் பற்றிய விளக்கம் எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் உயிரைப் பற்றிய விளக்கம் மாத்திரம் கொடுக்கவில்லை. அது மறைபொருளாகவே இருக்கிறது.
.
எனக்குச் சில டாக்டர் நண்பர்கள் தெரியும். அவர்களிடம் பேசும்பொழுது அவர்கள்., 'நீங்கள் உயிரைப் பற்றி விளக்கும் பொழுதும், உயிரிலிருந்து வருகின்ற அலையைப் (Wave Theory) பற்றிப் பேசும்பொழுதும், ரொம்பப் பொருத்தமாகவே உள்ளது. ஆனால், அதை எங்களால் நம்பமுடியவில்லையே.. ?, என்றார்கள்.
.
'நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன், 'நாங்கள், மனிதன் உயிருடன் இருக்கும் பொழுதும் சரி, இறந்த பிறகும் சரி, உடலை முழுவதும் அறுத்துப் பார்த்து விட்டோம்; எங்கும் உயிரைப் பார்க்க முடியவில்லையே ?, என்றார்கள்.
.
அதற்கு நான், உயிரை மனதைக் (Mind) கொண்டுதான் அறிய வேண்டும். அதற்கு முறையாக அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) செய்தால்தான் விளங்கும் என்று கூறினேன்". அதற்குப் பிறகு பயிற்சி எடுத்த சில டாக்டர்கள், உயிரின் இயக்கம், அதிலிருந்து வரக்கூடிய அலையாகிய காந்த சக்தியின் இயக்கம் (Bio Magnetism), அதை மனம் (Mind) கண்காணிப்பது, இவ்வளவையும் உள்ளே அறிவு (Consciousness) பதிவு செய்து கொள்வது, திருப்பிப் பிரதிபலிப்பது, எல்லாமே உணர்ந்து கொள்ள முடிகிறது என்றார்கள்.
.
ஆராய்ச்சித் திறனும், மிக நுண்ணிய அறிவும், கூர்ந்து நோக்கும் பண்பும், உள்ள அனைவரும் இதை உணர்ந்து கொள்ளலாம். இந்த விஞ்ஞானக் கல்வியை மெய்விளக்கத் தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் தெரிந்து கொள்ளும்போது மிக சுலபமாகவும், எளிதாகவும் விளங்கிக் கொள்ள முடியும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
************************************************************************************
.
(பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்....
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம் .! )
-------------------------------------------------------------------
.
அன்பின் அழைப்பு :-
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பால் உறவைப் பற்றி

பல இடங்களில் பால் உறவைப் பற்றி என்னிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு பெண் என்னிடம் கேட்ட கெள்வி...
.
“அய்யா ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இதுபற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்” என்று கேட்டாள்
.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு என்ன அவசியம் என்றும் கேட்டாள்....
.
.
நான் சொன்னேன் “ அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அதுமட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை.
உடல் நலத்தை எடுத்துக்கொண்டோமானால் ஒரு ஆணுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன்வயப்படுத்திக்கொள்வதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக்கொள்வதற்கு முன்னதாக வேறு ஒருவகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால்..

.
இரத்தத்திலே Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்றபோது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்றபோது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டுபண்ணி அந்த பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.
.
.
அந்த பெண்ணுடன் பிறகு யார் யார் உறவு வைத்துக்கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அதுமட்டுமல்ல அத்தகைய virus ஏற்பட்டு பற்றிக்கொண்டால் ‘எக்ஸிமா’ என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒருவித நமச்சலை உண்டுபண்ணும்..
..
அதுபோன்ற நமைச்சல் கருப்பையிலே ஏற்பட்டுவிடுமேயானால் ஒருநாள்கூட உடலுறவின்றி அந்த பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தைவிட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்துவிடும்.
.
.
அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்திலே வந்து முடியும். ஆகையினாலேதான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள்.
மேலும் எங்கள் நாடு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது.அதுமட்டுமல்லாது பொருளாதார ரீதியிலே பின்தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டுபேருமே கூடி வளர்க்கக்கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தினாலேயும் ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் என்று வைத்திருக்கின்றார்கள்.
.
.
அந்த பெண்மனி தொடர்ந்து கேட்டார்,
அதுசரி ஆனால் திருமணத்திற்கு முன்னர் பழகுவது (Premarital Sex) ஏன் தடுக்கப்படுகிறது??
.
நான் விளக்கினேன்,
அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் கூட பாதிக்கப்படுமல்லவா? எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்தப்படுகிறது.
.
.
பாலுறவின் பின்விளைவுகளை பெண்கள் தான் அதிகமாக சமாளிக்கவேண்டியுள்ளது. எனவே பெண்களுக்கே அதிகமாக பொறுப்புணர்ச்சி உண்டாகின்றது. அதனால் பெண்கள்தான் இதை அதிகமாக எடுத்துக்கொள்கின்றார்கள் என விளக்கின போது... அந்த பெண்மணி சிறிதுநேரம் அமைதியோடு சிந்தனை செய்தாள்.
.
.
என்ன என்று விசாரித்தபோது என் பாதங்களை பிடித்துக்கொண்டே ”எனக்கு ஒரு வரம் தாருங்கள்(Please give a boon) என்று கேட்டாள்.
.
அடுத்த பிறவி என எனக்கு என்று ஒன்று இருக்குமானால் இந்தியக் குடும்பம் ஒன்றில்.. நான் மகளாக பிறக்க அருளுங்கள் (If all there is another birth for me, let me be a daughter in an Indian family)” என்று உள்ளம் உருகி வேண்டினாள்.
.
.
-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள்

இன்றைய தினத்திலிருந்து ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். “எதையுமே யாரிடமிருந்தும் எதிர்பார்க்கமாட்டேன்” என்று ;
.
அது எப்படி முடியும் ?
குழந்தைகள் படிப்பதை எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
.
மனைவியிடம் கணவன் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?

என்று எண்ணுவீர்கள்.
எதிர்பார்ப்பதினால் மட்டும் அவர்கள் செயலில் தடை இருக்காது.. செய்து வருவதும் நிற்காது. அதற்கு முன்னே நீங்கள் செய்த செயலுக்கு தக்க விளைவாக உங்களுக்கு வரவேண்டியது வந்துகொண்டே தான் இருக்கும்.
.
.
எதிர்பார்ப்பில் நான்கு தன்மைகள் உண்டு
.
.அதாவது உங்களிடமிருந்து நான் எதயாவது எதிர்பார்த்தேனேயானால் அந்த தேவையில் ஒரு நீதியுணர்வு(Need),அதன் அளவு(Quantity), தன்மை (Quality), காலம் (Time) இந்த நான்கும் இருக்கின்றன.
.
.
யார் எதை எதிர்பார்த்தாலும், அல்லது பிறரிடமிருந்து கேட்டாலும் இந்த நான்கும் இருக்கும்.
.
.
எனவே எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள். எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால் ஏமாற்றமே இருக்காது..
.
மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணமென்றால்... எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றமே. அது எப்படி வருகிறது எனில், கற்பனையாக ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனக்கு இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும். இப்படி இருக்க வேண்டுமென்று.
.
.
எப்பொழுதுமே நமக்கு கிடைப்பது எல்லாம் நாம் செய்ததினுடைய விளைவாகத்தான். ஆகையால், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று யோசித்து செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக்கொள்ளலாம்.
.
.
உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம்.பிறருக்கு மனப்பூர்வமாக எவ்வளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும், மன அமைதியும், ஆற்றலும் உண்டாகும்.
.
.
ஆகவே, முதலில் எதிர்பார்ப்பதைத் தவிருங்கள். இரண்டாவதாக நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்ய தயாராக இருங்கள்.
.
.
பொருளைக்கொடுத்துத்தான் உதவி செய்யவேண்டுமென்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ, அந்த ஆற்றலைக்கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலோ , பொருளாலோ பிறருக்கு என்ன செய்யமுடியுமென்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.
.
.
காலையிலும், மாலையிலும் இந்த உலகம் சாமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்தமுடியாதா உங்களால்? அதை செய்யலாமே.! அம்மாதிரி எதை செய்யமுடியுமே அதை செய்துகொண்டே இருப்போமேயானால் மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
எப்போதும் பிறரிடம் எதிர்பார்ப்பதினாலேயே நாம் பிச்சைக்காரர்களாக மாறுகிறோம். முக்கியமாக நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களானால் எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் ஏழ்மை நிலையில் தான் இருப்பார்கள்.
.
.
ஆகவே, எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு நாம் என்ன செய்யவேண்டும், நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக்கொண்டு என்னென்ன வகையில் பிறருக்கு சேவை, உதவி செய்யமுடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
இதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால், மேலும் மேலும் ஆற்றல் வளரும், செல்வமும் வளரும், மகிழ்ச்சியும், நிறைவும் வளர்ந்துகொண்டே போகும். அப்போது மனதில் ஏழ்மை என்ற எண்ணம் இருக்கவே இருக்காது. இன்பமாக வாழலாம்
.
வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

சனி, 21 பிப்ரவரி, 2015

கடவுளைக் காணலாம் :


 ....

கடவுளை காணமுடியுமா என்றால் காணமுடியும். எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ, எந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டுமோ, அப்படிப் பார்த்தால் காணலாம். ஒரு செயல் செய்கிறோம்; எந்தச் செயல் செய்தாலும் ஒரு விளைவு இருக்கிறதல்லவா? கையைத் தட்டினேன், சப்தம் வந்தது. கையைத் தட்டினவரைக்கும் தான் என்னுடைய முயற்சி. சப்தம் நான் செய்தேனா?, ஒலியை நான் செய்தேனா, நான் கொண்டு வந்தேனா? - இல்லவே இல்லை; இருப்பில் இருந்து, என்னுடைய செயலினால் குவிந்தது, காது கேட்கின்ற அளவுக்குக் குவிந்தது, அவ்வளவு தான் சொல்லலாம். ஆகவே இறைவன் இல்லாத இடமே இல்லை.
.

அதற்கு அடையாளம் என்ன? நீ எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு விளைவாக வருபவனும் இறைவன் தான். அது தான் இறைவனுடைய செயலே. அந்தச் செயல் அதனுடைய அனுபவத்தை வைத்துக் கொண்டு நல்ல செயலாக இருக்க வேண்டும் என்று சிந்தனையோடு திட்டமிட்டுச் செய்வோமானால் நலமே விளையும். இல்லை புலனளவில் கவர்ச்சியாகி மயக்கத்திலே ஏதோ வேகத்திலே செய்கின்றபோது இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். இன்பம் வேண்டும், அமைதி வேண்டும் என்றால் அதற்கு இறையுணர்வு, அறநெறி இரண்டும் வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"செயலிலே விளைவாக
தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப்
பரமனைப் பின் வேண்டுவதால்?".
.

வேதம் :-

"இயற்கையே ஈஸ்வரனாய்,
எல்லாமாய், தானுமாய்
இருக்கும் நிலை - இயங்குநிலை
இவற்றைத் தன் அகநோக்குப்
பயிற்சியினால் உள்ளுணர்ந்தோர்
பரந்த நிலைப் பேரறிவில்-
பாடும், பேசும், எழுதும்,
பலகருத்தும் வேதமாம்".
.

"அருவமே உருவமாய் ஆதியே அறிவாய்,
அறிவே குணங்களாய், அனுபவமே ஒழுக்கமாய்,
இருளே வெளிச்சமாய், இன்பமே துன்பமாய்,
மௌனமே சப்தமாய், மாறியது அறிவீர்".
.

"இயற்கை விதியறிந்து
ஏற்றி மதித்து ஆற்றும்
முயற்சிக்கு வெற்றி பெற, முழு
அமைதி என்றும் இன்பம்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தன்னிறைவுக்கான வழி

மேல் நாட்டிலே கூட இந்தியாவை ஏழை நாடு, ஏழை நாடு என்று கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்த நாடு ஏழைநாடு அல்ல. இந்த நாட்டிலே என்ன குறைவு? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கின்றேன். இயற்கை வளத்திலே குறைவா, மக்களுடைய அறிவிலே குறைவா, அல்லது ஞானத்திலே தான் இந்நாடு குறைந்து விட்டதா? எவ்விதக் குறைபாடும் இல்லை. இன்று இந்திய நாட்டிலே படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றார்கள். பல நாடுகளை இவர்கள் வளப்படுத்துகின்றார்கள். இத்தகைய முறையிலே இன்று இந்திய நாடு எல்லா நாடுகளுக்கும் விஞ்ஞானிகளை ஏற்றமதி செய்து கொண்டு இருக்கின்றது என்றால் இது தவறல்ல. நான் நேரடியாகச் சென்றுப் பார்த்ததைதான் கூறுகின்றேன்.
.

இந்த முறையிலே இந்நாட்டிலே விஞ்ஞான அறிவானது அந்த அளவிற்குத் ததும்பி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு இருந்தும் என்ன குறைபாடு என்று கூறினால், அரசியல் முறையிலே இருக்கக்கூடிய ஊழல்கள் தான் இதற்குக் காரணம். ஒழுங்கான அரசியலை நம்மால் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் அந்நிய நாட்டு ஆட்சியிலே பட்ட பண்பாடானது அப்படியே தொக்கி நிற்கின்றது. இன்னும் நமக்கேற்ற முறையிலே நாம் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவில்லை.
.

வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும். அவை [1] அறிவு, [2] சுகாதாரம் [3] பொருளாதாரம், [4] அரசியல், [5] விஞ்ஞானம் ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள். வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்திலேயும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

ஆட்சி நிலை :

"வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்;
கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்
ஏழை, நோயுற்றோர் எங்குமே சாட்சியாம்".
.

"அறம், தத்துவஞானம் இவை எந்த அளவு சமுதாயத்தில்
ஓங்குகின்றனவோ - அந்த அளவே சமுதாயம் பண்பாட்டில்
உயரும்; மக்கட்குலம் சீரும் சிறப்பும் பெற்று இனிது வாழும்".
.

ஞானமும் அரசியலும்:-

"அரசியல் கொந்தளிப்பால் மக்கள் வாழ்வு
ஆன்மீக நெறியை விட்டகன்று போச்சு,
அரசேற்ற சிலருக்குப் பயந்தொடுங்கி
அறிவுடையோரும் அடிமை வாழ்வை ஏற்றார்;
அரசு முறைத் தூய்மை பெற சிற்றூர் மக்கள்
அறிவு பொருள் நிலை கடமை உயர்த்த வேண்டும்,
அரசாட்சி மூலம் பின் ஆன்ம வாழ்வை
அடையலாம் அறிஞர்களே வாரீர் சேர்வீர்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

ஆன்மநேய ஒருமைப்பாடு


என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்த போது, என்னை எது எதனோடோ, யார் யாருடனோ ஒப்பிட்டுக் கொண்டேன், அப்போது நான் பெரியவன். நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்பு உவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்டபோது, எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லையே!
.
நானே பிரம்மமாக இருக்கிறேன், பிரம்மமே எல்லாமாக இருக்கிறது. என்னும் போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் நான் உணர்ந்த போது, எதனோடு என்னை ஒப்பிட்டு என்னை எடைபோட்டுக் கொள்வது? நான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் 'நான் யார்?' என்ற, நான் பிரம்மம் என்ற தெளிவு தான்.
.
இந்த இடத்தில் தான் Intutive Love பிறக்கிறது. இந்த இடத்தில் தான் பெரியவர்கள் சொல்லிப்போன ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. இந்த இடத்தில் தான் வந்தவேளை முடிகிறது. இந்த இடத்தில் தான் அறிவுக்கு பூரணத்துவமும் அடக்கமும் அமைதியும் கிடைக்கின்றன. இந்த இடத்தில் தான் மனதிற்கு முழுமையான தூய்மையும், முழுமையான விசாலமும் கிடைக்கின்றன. இந்த இடத்தில் தான் அன்பும், கருணையும், அருளும் இயல்பாகின்றன. இந்த இடத்தில் தான் அற உணர்வு பிறழாது காக்கும் வல்லமை கிடைக்கிறது. இந்த இடத்திற்கு எல்லோரும் வருவது எளிதே.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்து இருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறது".
.
"மனம் தன் திறமையையும் வல்லமையையும்
பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே 'தவம்' ".
.
எல்லையில்லா மன நிறைவு :
"இறைநிலையில் தனைஇணைத்துக் கரைந்து நிற்க
எல்லையிலா மனநிறைவு பழகிக் கொண்டால்
குறையுணர்வு எத்துணையும் எழுவதில்லை
குவிந்து மனம்தான் என்ற முனைப்பற்றாலும்
நிறைந்து நின்று கோடான கோடி யண்டம்
நினைவுக்குள்ளே யடக்கி விரிந்து நின்று
மறைந்துதானற்றாலும் முனைப்பங்கு ஏது?
மறையும் அளவில் முழுமைப் பொருளாய் மாறும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 18 பிப்ரவரி, 2015

உலகையே வசமாக்கலாம்

தேவையும் விருப்பமும் உடையதே சீவ இனம் அனைத்தும். உன் தேவையை முடிக்க முயலும் போது பிறர் தேவையும் விருப்பமும் தாக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உனது உடல் மிக நுட்பமாக உனக்கு உயர் வாழ்வு அளிக்கவே இயற்கையால் நீண்ட காலமாகப் பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டது. உன் எந்த எண்ணம் அல்லது செயலாலும் உனது உடலில் உள்ள எந்த உறுப்பும் நலியாமளிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது. எந்த உயிருக்கும் அதன் துன்பத்திலிருந்து விடுபட இயன்ற வழியில் அளவில் உதவி செய்து கொண்டேயிருக்க வேண்டும். இவ்வாறான மனிதன் கடமையில் தவறும் போது மூளை செல்களின் அமைப்பும் உடல் உறுப்புகள் செல்கள் இவற்றின் அடுக்குகளும் சீர்குலைகின்றன. இதனால் தான் மனதில் உடலில் துன்பங்கள். இவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பே குண்டலினியோகம்.
.
உடலிலே, மூளையிலே எற்பட்டுவிட்ட சீர்குலைவு வாழ்வில் பல்வேறுபட்ட குறைகளாக மலருகின்றன. இக்குறைகள் கருமூலம் உங்கள் குழந்தைகளுக்கும் தொடர்கின்றன. தவமும், அறமும் ஆற்றித்தான் இந்த உடல் அணு அடுக்குகளை சீர் செய்ய முடியும்.
.
எந்தக் குறையும் உங்கள் செயலின் பதிவே என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டு சிந்தனையாலும் அறவழியாலும் சீர் செய்ய முயலுங்கள். உங்கள் குறை தீர்க்க நீங்கள் முயலாவிடில் வேறு யாராலும் முடியாது. பிறர் மூலம் உங்கள் குறை முடிய எதிர்பார்க்கவே வேண்டாம்.
.
ஒரு விருப்பத்தில் 1] தேவையின் நீதி, 2] அளவு, 3] தன்மை, 4] காலம் என்ற நான்கு உறுப்புகள் உள்ளன. எல்லாருடைய விருப்பமும் என் விருப்பத்தையொட்டியே இருக்க வேண்டுமென்று நினைப்பது மனித மனத்தின் தவறுகளில் தலையாயது.
.
பொறுமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் இடம் காலம் தொடர்பு கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம். பிறரிடம் உள்ள திறமையை எண்ணிப் பார்ப்பது அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும். வெறுப்பு கொள்வதற்கு அல்ல. பிறரிடம் உள்ள நல்லவைகளை நினைந்து நினைந்து பாராட்டு. நன்றி செலுத்து. இங்குதான் உனக்கு அமைதியும் நிறைவும் உண்டாம். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் போதாது. பழக்கத்தில் கொண்டுவந்து வெற்றி பெறு.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கர்மம் = செயல் அல்லது வினை".
"யோகம் = ஒன்றுபடுதல்".
.
சீராக வாழ்வோம்:
"தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத்தூண்டல் மற்றும்
தேவையால் எழுந்ததொரு கருவமைப்பு, தெய்வீகம் என்ற ஆறும்
தேவைகளாம் எண்ணமாய் மலர்தல் கண்டு சிந்தித்துத்
தேவைகளை அளவுமுறை அறிந்து கொள்வோம்; சீராக வாழ்வோம்."
.
சேர வாரீர்:
"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

வாழ்வில் நிறைவு பெற வழி

நாம் பொறுப்புணர்ச்சியில் அழுத்தமாக நின்று கொண்டு மற்றவர்கள் இவ்வாறு தான் நடக்க வேண்டுமென்று நம்மை நாம் எல்லை கட்டிக் கொண்டால் நமது விருப்பத்துக்கும் முடிவுக்கும் ஒத்துவராத எவர் மீதும் வெறுப்பு உண்டாகும். நமக்கு வாழ்வில் என்றுமே நிறைவு ஏற்படாது.
.
நமது பொறுப்புணர்ச்சி, கடமை, இவற்றின் கூறாக உலகையும், மக்களையும் நம்மோடு வாழ்வில் தொடர்பு கொள்வோர்களையும் அவர்கள் தன்மை, செயல் இவைகளையும் அவை அமைந்துள்ளவாறு ஒப்புக் கொள்ள வேண்டும்.
.
இந்த மனவிரிவில், இளகலில் நின்று கொண்டு மீண்டும் நம்மையும் உலகையும் நோக்குவோம்.
.
நாம் எங்கு, எவ்வாறு, என்ன நிலையில் இருக்கிறோம். இவற்றை கொண்டு பிறர்க்கு என்ன செய்ய முடியும் என்று அன்போடு அகம் நோக்கி நின்று முடிவு கண்டு நமது கடமையை இயன்றவாறு செய்வோம்.
.
உலகம் வேண்டுவதையெல்லாம், சமுதாயம் தேவைப்படுவதையெல்லாம் நாம் அளித்துவிட முடியாது. நம் வரையில் இயன்றதைச் செய்து நிறைவு பெறுவோம் என்ற முடிவில், நடப்பில் தான் நாம் நிறைவு காண முடியும்.
.
அன்பு தான் நமது வாழ்வின் ஊற்று. சிறிது வெறுப்புணர்ச்சி யானாலும் நமது உள்ளத்தை இனிமை கெடச் செய்யும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"மனிதன் அனுபவிக்கும் பொருட்கள்
சமுதாய கூட்டுறவில் பெற்றதன்றி
தனி ஒருவன் காரணமாக முடியாது".
.
"சமுதாயமே தனி மனிதனை உருவாக்கும்
தொழிற்சாலை".
.
"சமுதாயமே மனிதனை
உயர்விக்கும் கலாசாலை".
.
இனிமை காக்க :-
"வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 16 பிப்ரவரி, 2015

உயர் புகழ் :


எப்படியும் புகழ் பெறலாம், இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்பது அல்ல. நல்ல உயர் புகழ் உலகத்துக்கு நன்மையான காரியங்களையே செய்து அதனால் மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரக் காணும் பொழுது அந்த மக்களால் அளிக்கக்கூடிய ஒரு வாழ்த்து, ஒரு மனநிறைவு தான் புகழ். அகவே புகழ் என்பது, தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வர வேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன் செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலை தான் புகழாக இருக்கும். அதுவே உயர் புகழாகவும் இருக்கும்.
.
நல்ல முறையில் ஆற்றும் கடமையின் மூலமாக எத்தனையோ பேருடைய வாழ்க்கை செழிப்புறும். அவர்களுடைய உள்ளங்கள் மலரும். நிறைவு பெறும். அதுவே அந்த வாழ்த்தே, அந்த நினைவே தான் ஒரு மனிதனுக்குப் புகழ் என்று கூறப்படுகிறது. அத்தகைய புகழ் தான் உயர்புகழ் ஆகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"புகழுக்கு விரும்புவாயேல் அந்த வேட்பே
புகழ் அணுகாமல் துறத்தும் சக்தியாகும் ;
புகழ் ஒருவர் கடமை எனும் மலர் மணம் ஆம்
புகழ் மனித சமுதாய நற்சான்றாகும்".
.
"உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த
நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல்
சமுதாய நலத்திற்காக செலவிடல் தான் கடமை".
.
"புகழ்ந்துரைகள் பேசி பிறர் பொருள் கவரும் வஞ்சகர்க்கு
மகிழ்ந்து பொருள் உதவாதீர் மனம் திறந்த நட்பாகா
நிகழ்ந்த சில உண்மைகளை நேர் மாறாய்த் திரித்து உமை
இகழ்ந்து பேசித் திரிந்து இன்புறுவர் அவர் இயல்பு."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

"இறையுணர்வில் ஒளியுண்டாக்கி அறிவில் முழுமை எய்த, வாழ்வில் வெற்றி பெற - நாம் பின்பற்ற வேண்டிய சுலபமான சாம்யம்" (Formula) :-

"மனிதன் சமுதாயமாகச் சேர்ந்து வாழப் பழகி விட்டான். இனி இந்த நிலையை மாற்றிக் கொண்டு மிருகங்களைப் போன்று தனித்தனியாக வாழ முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் பலபேருடைய உழைப்புத் தேவைப்படுகிறது. அதேபோல் ஒரு தனிமனிதனுடைய உழைப்பின் பயனும் சேர்ந்து சமுதாயம் வளம்பெறுகிறது. எல்லோரும் கூடிச் சமுதாய வளத்தைத் துய்க்கிறோம். குழப்பம் விளையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கவும், மிருகங்களுக்குத் தேவைப்படாத ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அதுதான் "அறநெறி" (ஒழுக்கம், கடமை, ஈகை). அந்த அறநெறிதான் மனிதகுலத்தையே காத்து வருகின்றது. 'அறநெறி வாழ்வு' (ஒழுக்கம், கடமை, ஈகை) ஓரளவிற்காவது இன்று நிலவி வருவதால்தான் மனிதகுலம் இந்த அளவிலாவது இருக்கிறது. அறநெறிகள் அறவே ஒழிந்தால் மனிதகுலம் பூண்டற்று போய்விடும். அறநெறிகள் அழியாமல் பாதுகாக்க எழுந்தவையே இன்று உலகிலுள்ள மதங்கள் எல்லாம்.
.
ஒரு மனிதனின் செயல் அவனையும் பாதிக்கலாம். பிறரையும் பாதிக்கலாம். எனவே துன்பம் தனக்கோ, பிறர்க்கோ தோன்றாமல் ஒவ்வொருவரும் தத்தம் செயலை வகுத்துக் கொள்ள வேண்டும். அத்துன்பம் உடலுக்கும் கூடாது. அறிவிற்கும் கூடாது. அது உடனேயும் தோன்றக் கூடாது. எதிர்காலத்திலும் தோன்றக்கூடாது. அளவாலும் கூடாது, முறையாலும் கூடாது எண்ணத்தாலோ, சொல்லாலோ செயலாலோவும் கூடாது. அத்தகு செயல்களை மட்டும் புரிதலையே 'ஒழுக்கம்' என்கிறோம்.
.
இதற்கு ஒரு சாம்யம் (Formula) என்னவெனில், "தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ துன்பம் தராத செயல்கள் எல்லாம் புண்ணியம். துன்பம் தந்தால் அவை பாவம். இந்தச் சட்டத்தை உணர்ந்து, மதித்து ஏற்றவாறு செயலாற்றி வாழ்தலே ஒழுக்கம். ஒழுக்கத்தை ஒருவர் உயிரைப் போல் ஓம்பி வாழ்ந்தால் பிறர் கருத்துக்கும் தேவைக்கும் மதிப்புக் கொடுத்துத் தன்தேவையையும் கருத்தையும் நிறைவு செய்து கொள்ளுகின்ற பெருந்தகைமை இயல்பாகிவிடும்."
.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்." - திருக்குறள்.
.
******************************************************************
.
ஒழுக்கத்தில் உயர்ந்தார் :-
"ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ளுணர்வு பெற்றோர்கள்
உடல்நலமும் மனவளமும் உயர்அறிவும் பெறுவார்கள்
அழுக்காறு அவா வெகுளி அனைத்துக் களங்கம் மறையும்.
ஆன்மிக உணர்வு மிகும் அறிவறியும் பேறுகிட்டும்;
வழுக்காமல் நன்நெறியில் வாழ்வார்கள் அவர் தொண்டு
வாழ்மக்கள் அனைவர்க்கும் வழி காட்டியாய் அமையும்
பழக்கத்தால் நல்வினையே ஆற்றுவதால் உலகுக்கு
பயனுடைய செயல் பலவும் எளிதாகும் அவர் வாழ்வில்."
.
அறிவில் முழுமை எய்த:-
"ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்;
ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்
உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;
ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்,
உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

சனி, 14 பிப்ரவரி, 2015

கணவன் - மனைவி உறவு

மனித மனம் ஒரு வியப்பானது. ஒரு பொருளை விரும்பினால், அதனை அடையாத முன்னம் அதனிடம் பல நன்மைகளையும், மேன்மைகளையும் கற்பித்துக் கொண்டு இன்புறுவது, அதை அடைந்த பின்னர் அதில் குறைகளை கற்பித்துக் கொண்டு சோர்வடைவது. இது விரிந்த நோக்கம் இல்லாதவர்களிடம் இயல்பாக இருக்கும். இந்த குறைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். நல்லதையும் உயர்வையும் பாராட்டுங்கள். குறைகளை நுட்பமான முறையில் எடுத்து விளக்கவும், நிறைவு செய்யவும் முயலுங்கள். வாழ்வு வளம் பெரும்.
.
கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் சிறப்புக் காணுமிடத்தும், உயர்வைக் கண்டும் பாராட்ட வேண்டியது அவசியம். இது அன்பையும், நட்பையும் பெருக்கும், உறுதிப்படுத்தும். இதனால் எப்போதுமே பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்பதல்ல. அப்படிச் செய்தால் அது முகத்துதியாக மதிப்புக் குறையும்.
.
ஒரு சில குடும்பத்தில் கணவனோ, மனைவியோ பலரால் பாராட்டப் படுபவராயும், புகழப் படுபவராயும் இருக்கலாம். ஊர் பாராட்டுவதைப் போல், தன் வாழ்க்கைத் துணைவரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்பார்கள்.. இங்கு மிக நுணுக்கமான உண்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கைத் துணைவரை ஊர் புகழும் போது அந்தப் புகழ்ச்சியில் தான் மகிழ்வுற்றுத் திளைத்திருப்பார்கள். அது அவருக்கு உரிய சொத்தாகி விடுகிறது. ஆதலால் தானும் புகழ வேண்டுமென்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த உண்மையை உணராதவர்கள், தன் வாழ்க்கைத் துணைவர் புகழவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் அடைவார்கள். இது தேவையற்ற எண்ணம். ஊர் புகழும் போது மனைவியோ, கணவனோ புகழவில்லையே என்ற குறை எவரும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அலட்சியம் செய்ததாக எடுத்துக் கொள்வதும் நல்லதல்ல.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".
.
"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது
பிறர் உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".
.
"பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும்
பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்".
.
"நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நிலஉலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும் பால்உறவும் மதிப்போடு
உழைத்துப்பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்துத் தவம் அறம் கற்று வாழ வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

புரட்சியும், திரட்சியும்

"மனித வாழ்வு நலம் பெற இந்நாள் வரையில் உருவான சிறந்த திட்டங்கள் மக்களிடையே குழு உணர்ச்சியை ஏற்படுத்தி, உரிமை கோருகின்ற புரட்சியாக வெடித்தன. புரட்சியில் மக்களைப் பிரித்து வைத்தல், பிணக்கு ஏற்படுத்துதல், பகை, போர் இவற்றை மூட்டுதல் எல்லாம் உருவாயின. வாழ்வில் முன்னேற்றத்தை விடச் சிக்கல்களும், துன்பமும் பெருகின.
....

"மனவளக்கலை" மூலம் நாம் உலகுக்குக் காட்டுவது "கர்மயோகம்" என்கிற உலகப் பொது சமயம் ஆகும். இது புரட்சிக்கு பதிலாகத் திரட்சி முறையாகும். அதற்கு மக்களனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு வருவோம். நலம் பெறுவோம். ஒருவருக்கொருவர் துன்பம் தவிர்க்கின்ற ஈகையை ஆற்றி, துன்பமே எழாத வகையில் எண்ணம், சொல், செயல் இவற்றைக் காக்கின்ற ஒழுக்க நெறியில் வாழ்வோம்.
.

இது உள்ளத்தை உயர்த்துகின்ற வாழ்க்கை நெறியாகும். எளிய முயை உடற்பயிற்சி, உடலுக்கும், உயிருக்கும் இடையே நட்பினைக் காத்து நலமளிக்கின்றது. அகத்தவம் (Simplified Kundalini Yoga) எனும் உயிர்மேல் மனம் வைத்துச் செய்கின்ற ஓர்மைப் பயிற்சியாகிய உளப் பயிற்சி (Systematic Psychic Practice) - மனத் தூய்மையை, வலுவை, தெளிவை அளிக்கவல்லது."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நல்வரம்:


 ....
நாம் வெற்றியாக, அமைதியாக வாழ வேண்டும். அதற்கு என்னென்ன வேண்டும் என்கின்ற போது "உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்." இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்? ஒரு அன்பர் ஒருமுறை ஒரு கேள்வி எழுப்பினார். நாம் தெய்வத்தன்மையில் இருந்து தவம் செய்த பிறகு நமக்காக இவையெல்லாம் கேட்க வேண்டுமா என்று, நான் விளக்கினேன். பொதுவாக எல்லோருக்கும் அது தேவை என்று சொல்கிறேன். நீங்களே எண்ணிப் பாருங்கள். உடல் நலம் வேண்டுமா, வேண்டாமா? பிறகு நீளாயுள். நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்; அறிவை அறிவதற்காகப் பிறந்து இருக்கின்றோம்.
.
அதற்காக அந்த வழியில் [Process] இருக்கின்றோம். அது நிறைவேற வேண்டும். அதற்கு இடையில் துண்டு போட்ட மாதிரி இந்த உயிரை விட்டு விட்டால் வேலை முடியாது. ஆகவே நீளாயுள் வேண்டும். அடுத்தது நிறை செல்வம். இந்த உலகத்தில் வாழும் வரை வசதிகள் வேண்டுமல்லவா? எல்லாம் நல்லபடியாக எண்ணுவது தான் நிறைசெல்வம். உயர்புகழ் என்றால் என்ன? நம்முடைய செயல் எல்லோருக்கும் நல்லபடியாக அமைவது, அமையும்போது அதனால் பயன்பெற்ற மக்களுடைய பாராட்டுத்தான் புகழ். ஆகவே புகழ் என்பது ஏதோ நமக்குத் தனிப்பட்ட சொத்து அல்ல. நான் செய்யக் கூடிய காரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் நன்மை அளிக்கட்டும் என்பது தான் புகழில் இருக்கக் கூடியது. கடைசியாக மெய்ஞ்ஞானம். நாம் எந்த நோக்கத்தோடு பிறந்தோமோ, அந்த நோக்கத்தை அடைவதற்கு மெய்ப்பொருள் விளக்கம் வேண்டும். இந்த ஐந்தையும் தான் "உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க" என்று சொல்கிறேன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வாழ்க்கை நல சங்கல்பம் :
"உடல்நலம், அறிவு, உயர்புகழ், செல்வம்
கடமை இவற்றில் யான் கருத்தொடு உயர்வேன்;
வாழ்வேன் வளமுடன் வாழ்நாள் வரைக்கும்
வாழப் பிறரையும் வாழ்த்தி வாழ்ந்திடுவேன்".
.
"அறிவில் உயர்வு பெற உடல், உயிர், மனம், மெய்ப்பொருள்
இந்த நான்கைப் பற்றியும்; அவற்றிற்கிடையே உள்ள
தொடர்பைப் பற்றியும், சரியாகவும் தெளிவாகவும்
அறிந்து கொள்ள வேண்டும்".
.
அகத்தவத்தின் பயன் :
"அறிவு உயிரை நோக்கும் அகத்தவத்தால்
புலன் வென்று ஆட்சியேறும்
அறிவின் ஆற்றல் பெருகும்
அகன்று விரிந்தாராயும் நுட்பம் ஓங்கும்
அறிவு தன்னிலை யுணரும் அந்நிலையில்
அதுவே மெய்ப் பொருளாய் நிற்கும்
அறிவு உயர்வுக் கேற்ப அன்பு கருணை ஈகை
தொண்டிவை தன்னியல்பாய் ஓங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

புதன், 11 பிப்ரவரி, 2015

எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினியோகம் - Simplified Kundalini Yoga

"தவறிழைப்பது மனம். இனித்தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு; அதுதான் அதன் தன்மை; மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும்? மனதின் குறைகளைப் போக்கியாக வேண்டும். நல்வழியில் தீர்மானமாக நிற்கும் சுய பலத்தை மனதிற்கு ஊட்டியாக வேண்டும். அதை யார் செய்வது? மனம் தான் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
.
இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும். மனதைத் தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதினிடம் தான் இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொண்டால் இடையறா இன்ப நிலையை அடையலாம். மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும். அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
***********************************************************************
.
உயிர் அறி கல்வி:-
"கற்ற கல்வியால் மனிதன் முழு அளவில் பயனைக்
காணவெனில் தன்உயிரை உணரத்தக்க
நெற்றிக்கண்-ஆசானால் திறக்கப் பெற்று
நிலையாது சுழலுமனம் உள்ளொடுங்கி;
பற்றற்ற நிலைவரையில் பழகவேண்டும்.
பதிபசு பாசம் நிலைகள் விளக்கமாகும்,
நற்றவத்தால் வாழ்வு வளம் பெருகத் துய்த்து
நாட்டுக்கும் தொண்டாற்றி நலம் விளைவிப்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பிறவித் தொடர்பு:


 ....

எரியும் விளக்கிலிருந்து தோன்றும் வெப்பமும் வெளிச்சமும், விளக்கை நிறுத்திய உடனே எங்கே போகின்றன? சுற்றிலும் தொடர்பாக உள்ள அணுக்களில் அவ்வெளிச்சம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அணுவில் காந்தமாகிறது. அந்த அணுக்கள் தாங்கும் அளவு போக மீதம் சூனியம் என்ற ஈர்ப்புச் சக்தியில் சேர்ந்துவிடுகிறது. சூன்யமாகி விடுகிறது, வெளிச்சம் தோன்றிக் கொண்டே பிரதிபலித்துக்கொண்டே, சூனியமாகிக் கொண்டே இருக்கிறது.
.

ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது; போய்க் கொண்டேயும் இருக்கிறது. அனால் பார்வைக்கு ஆறு நிலையான வடிவமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. வரவு நின்றுவிட்டால் பார்க்கும் நீரானது ஓடி மறைந்துவிடும், ஆறு காலியாகத் தெரியும். இது போன்றே தான் விளக்கின் ஒளியும் நிலையானது அல்ல. விளக்கை நிறுத்திய உடனே ஒளி மறைந்துவிடுகிறது. இது போன்றே, உடலில் சுவாச ஓட்டம், இரத்த ஓட்டம் நின்றவுடன், அதனால் உற்பத்தியாகி இயங்கிக்கொண்டேயிருந்த காந்த அலைகளின் உணர்ச்சிச் செயல்பகுதி செயலற்றதாகி விடுகிறது. அலை அடங்கின நீராகும் தன்மை போலவும், நீராவி குளிர்ந்து விட்டால் தண்ணீராகிவிடும் தன்மை போலவும் அறிவு [Consciousness] என்ற உணரும் சக்தியும் ஆதி என்ற மௌன சக்தியாகிவிடுகிறது.
.

எழுச்சி, இயக்கம் என்னும் நிலையில் எல்லையுடையதாக இருந்த சக்தி இயக்கம் நிற்க எல்லையற்று நிரவி நிர்விகற்ப நிலையாகிவிடுகிறது. உயிரைப் பற்றி கற்பனைகளாக எழுதப்பட்டவற்றை, சொல்லப்பட்டவற்றை மறந்து, அறிவை நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்.
.

நாத விந்துவின் சேர்க்கையே எல்லாப் பிறவிகளுக்கும் முன் தொடர்பும் பின் தொடர்பும் ஆகும். அதாவது தாய் தகப்பன் முன்பிறவி, மக்கள் பின் பிறவியாகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"சிறுகச் சிறுகப் பயின்றால்
சித்திக்கும் உண்மை நெறி".
.

"வித்துவின் மூலம் தான் பிறவித் தொடர் இந்தத்
தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்".
.

பிறவித் தொடர்:-

"மனிதருக்குப் பிறப்புத் தொடர் தன்னைத் தேரா
மாயையால் வினைப்பதிவால் கடல்போல் நீளும்
கனிவுடைய கர்மத்தால் வித்தின்மூலம்
கருவுருவாய்க் குழந்தைகளாய்த் தொடர்வதொன்று
இனி உடலைவிட்ட பின்னர் உயிர் உள்ளுள்ளே
எஞ்சியுள்ள வினைப்பதிவுக் கொப்பவாழும்
தனிமனிதனுடனிணைந்து அனுபவித்துத்
தான் தூய்மை பெறுகின்ற தொடர் மற்றாகும்."
.

பிள்ளைகளும் பெற்றோரும்:-

"பிள்ளைகளைப் பெற்றோர்கள் உடலைவிட்டால்
பெரும்பாலும் அவருயிர்கள் கருத்தொடர் ஆம்
பிள்ளைகளோடிணைந்துவிடும் இயற்கைநீதி
பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்
பிள்ளைகளை வழிவழியாய் இப்பேராக்கம்
பின் தொடர்ந்து குலக்கொடியைத் தூய்மையாக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும் வினைத்தொடர் ஆம்
பேரிணைப்பில் எப்போதும் ஒன்றேயாவார்."
.

பிறவிக் கடல் :-

"தன்முனைப்பு, பழிச்செயல்கள் பதிவு, மாயை
தளைமூன்றும் மனித உயிர் களங்கமாகும்.
வன்முறையில் இவை அறிவைப் புலன்கள் மூலம்
வழுக்கிப் பிறவிக் கடலை நீள வைக்கும்;
உன்வயமாம் அகத்தவத்தால் அகத்தாராய்வால்
உண்மையுணர்ந்து ஆறுகுணத்தைச் சீரமைத்து
இன்முறையில் உயிர்கட்குத் தொன்று ஆற்றி
இறைநிறையில் உனை இணைக்கத்தூய்மை உண்டாம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
See More

திங்கள், 9 பிப்ரவரி, 2015

இறைவழிபாடு

இயற்கையின் இருப்பை உணர்தல், முயற்சியை நல்ல முறையிலே, வெற்றியான வழியிலே செலுத்துதல், உயிர்களுக்குத் தீமை இல்லாத முறையில் ஆக்கத் துறையில் வாழ்வை செலுத்திக் கொள்வது என்பது 'அறம்'. மற்றொன்றான அகம் நோக்கிச் செய்யும் இறை வழிபாட்டைத்தான் 'தவம்' (Simplified Kundalini Yoga) என்று சொல்கின்...றோம். எந்த மெய்ப்பொருளை, எந்த உண்மையை உணர்ந்து எந்த இயற்கை வழிபாட்டை உணர்ந்து அதை மதித்து நடக்கின்றோமோ, அதை நினைவில் வைத்துக் கொள்கின்றோமோ, அதை எப்பொழுதும் விழிப்போடு பார்த்துக் கொள்கின்றோமோ, அது தான் 'இறைவழிபாடு'.

இயற்கை என்பது மனிதன் அறிவுக்கும் வாழ்வுக்கும் ஏற்றமளிக்கும் ஒரு மாபெரும் ஆற்றலுடைய தத்துவம் இது:
.

1) இருப்பு நிலையான ஆதியில் இறைவெளியாக,

2) இயக்க மூலமான ஆற்றலில் விண்துகளாக,

3) விண்துகள்கள் கூடிய கூட்டு இயக்கத்தில் பஞ்சபூதங்களும் அவை கூடிய அண்டங்கள் பலவாக,

4) இயற்கையின் விளைவுகளை உணரும் ரசிக்கும் நிலையில் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையிலும் நான்கு நிலைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
.

இயற்கையின் பெருமையை, சிறப்புகளை, விளைவுகளை உணர்ந்து கொள்ள மனிதன் எடுக்கும் முயற்சியில் மன அலைச்சுழல் (Mental Frequency) விரைவைக் குறைத்து, அலைகள் - நிலையாக, அதுவே - அறிவாக, அதையே - தானாக, அவ்வறிவாக இருக்கும் பேராற்றலே எல்லாம்வல்ல இறைவெளியாக, உணர்ந்து முழுமை பெறும் முயற்சிதான் 'தவம்' (குண்டலினி யோகம் - Simplified Kundalini Yoga) ஆகும்.
.

தவத்தால் கண்ட உண்மைகளை மறவாமல் வாழ்வில் ஒழுகி தனக்கும் பிறர்க்கும் ஆக்கமே தரும் வழியில் ஒத்தும் உதவியும் வாழும் நெறியே 'அறம்' ஆகும். 'தவமும் அறமும்' இறைநிலையுணர்ந்து அவ்வழியே வாழத் திறமையளிப்பதால் இவையே "இறைவழிபாடு" எனப்படுகின்றது.
.

மனிதனை இன்ப துன்பச் சுழலால் பாதிக்கப்படாத அமைதி நிலைக்குக் "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) உயர்த்துகிறது.
.
உணர்வோம் வளமோடு வாழ்வோம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

********************************************************************
.

முழுமையும் அமைதியும்:-

"அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்
அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவுக்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் ஆறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும்

ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராய்ந்தால் - இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் (பாவப்பதிவுகள்) நீங்கினால்தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும்?
ஓர் உடலை எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பாவப்பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும். அல்லது யோக சாதனைகள் மூலம் களங்கங்களை நீக்கிக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது.
...
உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்ச்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. அகவே உடலை உயர்வாகக் கருதி , சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
.
உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம்.
இந்த வாகனத்தை பேணிப் பாதுகாத்தால் தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 7 பிப்ரவரி, 2015

வள்ளலார் கேள்வி - மகரிஷி பதில்


வித்தில்லாமலே விளைந்த வெண்ணிலாவே நீ
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே
ஆதியந்தம் என்றுரைத்தார் வெண்ணிலாவே அந்த...
ஆதி அந்தம் ஆவதென்ன வெண்ணிலாவே….

இது வள்ளலார் கேள்வி
.எங்கெங்கும் என்னுள்ளும் எல்லாத் தோற்றங்களிலும்
இடையற்ற மறை பொருளாய் இருந்து பேரண்டமெங்கும்
தங்கித் தழைத்தே இயங்கும் தற்பரத்தை யானுணர்ந்தேன்
தனித்து மனத்துள் நிலைத்து தவமாற்றும் சாதனையால்….
.இது மகரிஷி பதில்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

முயற்சி - பயிற்சி :


தன் தகமை, திறமை, தவறு, தேவை இவற்றைச் சரியானபடி கணித்துக் கொண்டு சிந்தனையோடு திட்டமிட்டு விடாமுயற்சியோடு வினையாற்றினால் வெற்றி நிச்சயம். அமைதியும், நிறைவும், மகிழ்ச்சியும் உண்டாம். இக்குண்டலினி யோக முறை இந்தத் துறையில் மனிதனை உயர்த்தி சிறப்படையச் செய்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன முயற்சி எடுத்தீர்கள்? எங்கே எவ்வாறு ஏமாற்ற மடைந்தீர்கள்? உங்களுக்குள்ளாகவே சிந்தனையைத் தூண்டி ஆராயுங்கள். உங்கள் மனம் ஒரு பெரிய இயற்கைச் சுரங்கம். அதில் எல்லாச் செல்வங்களும் உள்ளன. முறையாக முயன்றுப் பெற வேண்டும், அவ்வளவே.
.
இன்ப துன்பச் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதே வாழ்க்கை. வாழ்வில் துன்பங்களும் சிக்கல்களும் பெருகும்போது அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மனிதன் விரும்புகிறான், முயலுகிறான் என்றாலும், முன்செய்த தவறுகளின் விளைவுகள், செயல்களின் பழக்கப்பதிவுகள் இரண்டும் அறிவில் கொண்ட முடிவுகள் இவையெல்லாம் அவன் விடுதலைக்குத் தடைகளாக இருக்கின்றது. விடா முயற்சியும் விழிப்பு நிலையும் பழக்கத்தை மாற்றி விளக்கம் பெற்று வாழும் துணிவும் பயிற்சியினாலன்றி கிட்டாது.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"காலம் தாழ்த்தாமல் கடையைச் செய்
இல்லையேல் காலம் உன்னைத் தாழ்த்தி விடும்".
.
அருள் தொண்டு:
"நிறை நிலையை மறந்து ஐந்து புலன்கள் மூலம்
நினைவலையாய் இயங்கி மனம் எல்லை கட்டி
சிறைப்பட்ட நிலைமையதே மாயையாச்சு;
சிந்தனையில் உயர்ந்து பெற்ற அகத்தவத்தால்
இறைவனோடு நிறை நிலையில் நிற்கக் கற்றோம்
எல்லையற்ற வீடுற்றோம், அறிஞர் போற்றும்
மறைபொருளே அகத்ததுவாய் விளங்கும் உண்மை
மற்றவர்க்கும் உணர்த்தி உளம் மகிழ்வோம் வாரீர்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

முதுமை வரும் காரணம்

★மனிதன் நிலவுலகத்தின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். 25,000 மைல் சுற்றளவு கொண்டு, மண், உலோகங்கள், ரசாயனங்கள் இவை அடங்கிய
ஒரு பெரிய கோளம் நிலவுலகம். அது, ஒரு மணிக்குச் சுமார் 1,000 மைல்
வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டிருக்கிறது.

★சூரியனை மணிக்குச் சுமார் 66,000 மைல் வேகத்தில் வலம்  வந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சுற்றும் வேகத்தால், எந்தக்  கெட்டிப் பொருளையும் மையத்தை நோக்கி இழுக்கும்  இயற்கை நியதி அதற்கு அமைந்
திருக்கிறது. அதனால் மனிதனின் பரு உடலிலுள்ள சிற்றறைகள் [size=12]
(Cells) [/size]எல்லாம் பூமியின் மையம்  நோக்கி இழுக்கப்படவும், அதே உடலில்
உள்ள உயிர் அணுக்கள் உடலைவிட்டு மேலே தள்ளப்பட்டுக்  கொண்டே இருக்கவும், பூமியின் தற்சுழற்சி காரணமாக இருக்கிறது.

★பூமியின் கவர்ச்சிச் சக்தியால் உடலை விட்டு உயிர் பிரியாதிருக்க,
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு காலம் அமைந்து உள்ளது. அந்தக் காலம்
வரையில், ஒவ்வொரு நாளும் உயிர்ச் சக்தியின் விலகல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில்  பிரிந்துவிடும்.

★இந்த நியதியின் விளை வாகவே, மனிதனுக்கு 40 வயது வரையிலே வளர்ச்சியும், 80வயதிற்கு மேலாகத் தளர்ச்சியும் உடலில் ஏற்படுகின்றன.
ஆறாவது அறிவிற்கு இயற்கையின் நியதிகளை உணர்ந்து, அதை ஓரளவு வெல்லும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர்
உடலில் இருந்து பிரியும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால்
மரணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்  போடலாம்.

★உயிர் தாங்கியான வித்தைப் போதிய அளவு கெட்டிப் படச் செய்துவிட்டால்,
உயிர் பிரியாமலே அதனை உடலிலேயே நிலைக்க வைத்து விடவும்
செய்யலாம். வாழ்ந்தது போதுமென்ற நிறைவு ஏற்படும் போது மன
இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம்.

★மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டும் நின்று விட்ட பின், உடலிலேயே உயிர் அடக்கம் பெற்று இருக்குமானால், அதனை ஜீவசமாதி என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையை அடைய வேண்டுமானால் வித்தின் நீர்ப்புத்
தன்மையைக் குறைத்து, உடலை விட்டு பல வகையிலே வெளியேறும்
தன்மையையும் குறைத்து விட்டால், மூலாதாரத்திலேயே தேக்கமுறும்.
வித்திலிருந்து சுத்த சக்தியான,ஓஜஸை பதங்கமாகப் பிரித்து முதுகுத்
தண்டு வழியாக மேலேற்றி, மூளையில் உற்பத்தியாகும் வித்துச்
சக்தியோடு இணையச் செய்ய முடியும். இதனை ஆங்கிலத்தில்
[size=12]Recycling of Sexual Vital Fluid [/size] என்று கூறலாம்.

★இதற்கு முறையான பயிற்சியினைப்  பின்பற்ற வேண்டும். முதுமையைத்
தடுக்க, ஒவ்வொரு நாளும், தளர்ச்சியுறும் நரம்புகளைப்  பயிற்சியினால் முறுக்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும். மரணத்தைத் தடுக்க, வித்துச் சக்தியைப் பதங்கமாக்கி, அதன் உற்பத்தி நிலையத்தோடு இணைக்க
வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளும் ஒன்றிணைந்ததே காயகல்பப்
பயிற்சியாகும்.

★அரியதோர் சித்தர் கலையாகிய இந்தக் காயகல்பப் பயிற்சி காலை,
மாலை மற்றும் உணவுக்கு பிறகும், இரவு படுக்கும் முன்பும் அததற்கேற்ற
இருப்பு நிலையில் செய்து வாருங்கள்.முதல் வாரம், நரம்பூக்கம் என்ற  பயிற்சியினை ஒவ்வொரு நிலையிலும் பத்துத் தடவைகள் செய்து,
ஓஜஸ்மூச்சு ஒன்று வீதம்  போட்டு வாருங்கள்.

★உங்கள் உடலுக்கு பொருந்திவிட்ட பிறகு, நரம்பூக்கப் பயிற்சி இருபதும், ஓஜஸ் மூச்சுப் பயிற்சி இரண்டும் ஒவ்வொரு நிலையிலும் போடலாம்.
முதலிலேயே அதிகமாக ஓஜஸ் மூச்சுப் போட்டால் உடலில்
சூடு அதிகமா கலாம். உள் சதைகளில் சிறிது பொருந்தா உணர்வு ஏற்படலாம்.
★உடல் சூடானாலும், உள்சதைகளில் சிறிது வலி தெரிந்தாலும்
ஓரிரு நாளைக்கு அல்லது சில வேளைகளுக்கு ஓஜஸ் மூச்சுப்
பயிற்சியை நிறுத்தி வைக்கவும்.

▶வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

நமது கடமை:


பழக்கத்தின் காரணமாக எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. அதை எல்லாம் படிப்படியாகப் போக்கிக் கொள்ளலாம். எந்தச் சீர்திருத்தமும் இடித்துக் கூறியோ, குற்றம் கூறியோ வரமுடியாது. ஆகவே நலம் கூறி, நலம் செய்து அதன் மூலமாகத்தான் தீமை ஒழிவதற்கு, வேண்டாமை ஒழிவதற்கு நாம் பார்க்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் "மனவளக்கலையைக்" கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மனம் ஒடுங்குகின்றது. அடங்குகின்றது. அறிவு நுட்பம் பெறுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல், அறிவு, நுட்பம் இவை கிடைத்துவிட்டால், அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும்; எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும் கிட்டும்.
.
தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்கப் போகிறேன் என்ற ஒருவரிடம் "நீ என்ன கேட்டாலும் அது பற்றாக்குரையாகத் தான் இருக்கும்" என்று கூறிவிட்டு, மற்றவர் நான் தவம் செய்யும் போது கடவுளே என்னிடம் வந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்? ராஜ்ஜியம் வேண்டுமா" என்று கேட்டாலும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வருவேன். எனக்கு நல்ல "அறிவு" வேண்டும் என்று தான் கேட்பேன் என்றார். "அது தான் சரி" என்று ஒத்துக்கொண்டார். அது போல நல்ல அறிவு இருக்குமேயானால் அதன் கீழ் எல்லாம் பெறலாம்.
.
ஆகவே அறிவை மேம்படுத்த வல்ல, அறிவைத் திடப்படுத்தவல்ல, அறிவைக் கூர்மைபடுத்த வல்ல இந்த "மனவளக்கலையைப்" பயின்று இது வரையிலே இந்த அறிவைப் பற்றி அறியாமல், வாழ்வைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், செய்த தவறுகளினால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் போக்கிக் கொண்டு மேன்மேலும், அத்தவறுகள் எழாமல் காத்துச் சிறப்பாக வாழ வேண்டுமானால் இந்த "மனவளக் கலையை" ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணும், பெண்ணும் சமமாகக் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
" இறைவனை வணங்குவதை விட
சிந்திப்பது மேல்".
.
"இறைவனே நான் ஆக இருக்கிறான் என்ற
உண்மையைத் தெளிவாக உணர்ந்த
நிலையிலே தன்முனைப்பு எழவே எழாது".
.
அறிவின் அமைதி :
"இறைவனது திருநிலையோடு இணைந்தபோது
இன்பதுன்ப உணர்வுகளைக் கடந்துயர்ந்து
மறைபொருளாம் அறிவு அதன் முழுமை பெற்று
மா அமைதிபெறும்; அது பேரின்பமாகும்;
நிறையறிவுநிலை ஈதே இந்தப் பேற்றை
நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்
துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்துகின்றான்-
துணைகுருவே வழி அறமும் தவமும் ஆகும்".
.
மனித மாண்பு :
"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.