ஒவ்வொரு செயலிலும் ஒரு விளைவு வருகிறது என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்தச் செயலின் விளைவாக என்ன, என்ன பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இயற்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இயற்கையின் முழுமையான நான்கு பகுதிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின்
1) ஆதிநிலை
2) அசைவுநிலை என்ற அணு அல்லது சக்தி,
3) அதனுடைய கூட்டு இயக்கங்களாலே தோன்றிய பிரபஞ்சம் - பேரியக்க மண்டலம்,
4) அதன் வழியே தோன்றி வந்த உயிர்கள்,
இவற்றினுடைய தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் இன்னது செய்தால் இன்னது விளையும், இவை எனக்கு வேண்டும்., அவற்றை இன்னது செய்து பெற முடியும் என்று தனக்குள்ளாகத் தேர்ந்து செயலாற்றலாம். இன்னது செய்தால் பிறருக்கு இந்த அளவுக்கு நன்மை உண்டாகும் என்ற தெளிவு பிறக்கும். சுகதுக்க இயல்பினை உள்ளத்தாலே கூர்ந்துணர்ந்து, அறிந்து அவ்வப்பொழுது தன் சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள, இயற்கையின் ரகசியங்களை, இயற்கையின் அமைப்புகளை, இயற்கையின் வளங்களை, இயற்கையின் நியதிகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக