ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக்
கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம்.
நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம்
கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள்
சொன்னார்கள்.
அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

***************************************************
உண்மை நிலையறிய ஒத்தவழி :-
.
"கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்,
வம்புகளை வளர்க்கின்றீர் வாழ்வைப் பாழாக்குகின்றீர்
வாரீர் அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்".

"இன்பம் துன்பங்கடந்த ஈசனுக்கு எது தேவை?
பன்முறையும் சிந்தித்துப்பார் அவனைநாடி நினைந்து
அன்பும் அறமும் ஓங்கி அகத்துணர்வு அடைந்துயிர்கள்
துன்பங்கள் தீர்க்கும் வினைத் தூய்மைபெறப் பயின்றிடுவீர்".

"உருவங்கள் கோடான கோடியாய் அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒரு சக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்".
"உருவங்கள் கோடான கோடியாய் அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒரு சக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக