என்னிடம் இருக்கக்கூடிய மிகுதியான ஆற்றலைக் கொண்டு தனக்கும் பிறருக்கும் என்ன உதவி செய்ய முடியும் என்று கணித்து எம்போதும் தயாராக இருந்து கொண்டு உதவிக்கொண்டே இருப்போமேயானால் இங்கேதான் அளவற்ற செல்வம் உடையவனாக ஒரு மனிதன் இருக்கின்ற மனநிலை ஏற்படும்.
தன்னை ரசிக்கும் தகைமை இருப்போரிடம் தான் பிறரையும் இயற்கையையும் ரசிக்கும் குணமும் இருக்கும் முகத்தில் எப்போதும் புன்னகையோடு இருங்கள். எப்போதும் அன்பாகவும் இனிமையாகவும் பேசும் திறனை வளர்த்துக் கொள்வோம்.
என்னுள்ளே அகத்துவாய் இருக்கின்ற பேராற்றல் ஏற்றமிகும் பேரறிவு அவ்வப்போது மின்னலைப்போல் காட்டும் வழி மதித்து மிகச்சிறந்த தொண்டேற்று மகிழ்வாய் உள்ள மனதை உயர்த்துங்கள்! மட்டிலா இன்பம் கிடைக்கும்!
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக