பிறப்பும் இறப்பும் உருவ தோற்றமான உடலுக்கே அன்றி, அரூபமாக இருக்கும் இயங்கும் உயிருக்கு அல்ல.
அணுக்களின் எழுச்சி, கவர்ச்சி என்ற இயக்கத்தால் ஏற்படும் அவைகளின் கூடுதல், பிரிதல் என்ற நிகழ்ச்சிகளே எல்லா உருவங்களின் தோற்ற, மறைவு சம்பவங்களாகும். தொடர்ந்து நடைபெற்று வரும் அணுக்களின் கூட்டு இயக்கத் தன்மாற்றச் சிறப்புகளின் அவ்வப்போதைய நிலைகளைக் காட்டுவதே பொருட்கள், ஜீவராசிகள் இவைகளின் உருவ அமைப்புகளும் அவைகளின் பல்வேறு இயக்கங்களும் என்பது தெளிவான விளக்கம்.
உயிர் என்பது அரூபமனாது. அது அணுவுக்கு அப்பால் மெளனமாக உள்ளது. அதுவே அணுவில் இயக்கம், ஒலி, ஒளி இவைகளாக இருக்கிறது. ஜீவ ராசிகளின் புலன்கள் கூடுதலுக்கேற்பவும், தேவையுணர்வு, அனுபோகம், இன்ப துன்பம் என்பனவான அனுபவங்களுக்கு ஏற்பவும் அதே சக்தி அறிவாக இருக்கிறது. இந்தச் சக்தி எங்கும் நிறைந்து என்றும் உள்ளது. இந்தப் பேராதார நிலையாகிய உயிருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக