Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 26 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் -நாள் 26-09-0034

Image may contain: one or more people, beard, outdoor and nature
மனிதன் எல்லாம் வல்லவன் எல்லாம் உள்ளவன் என்பதை உணர இயற்கையை உணர வேண்டும்!
நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள்.
அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை.
ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால் கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள்.
இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் "நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன" என்பது புரியும்.
நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும்.
ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று.
இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை.
இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது.
அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்.
உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.
துன்பங்கட்கு மூலம்
பிறந்து வாழ்ந்து பின் இறந்துபோகும் மனிதர்க்குப்
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொது உடைமை.
மறந்து மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1258)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 25 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-0034

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-2019 உலக அமைதி நாள் 25-09-0034
Image may contain: 1 person, sitting


வாழ்த்து - "வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்"

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது,
அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை, இவை எல்லாம் அதிகமாகும்.
அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.
இரண்டு தடவை, நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும்,
அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்த தொடர் அறுபடாது இருக்கும்.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும்.
அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். "வாழ்க வளமுடன்" என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம்.
உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்;
அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம்.
ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும்.
நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது.
வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது.
வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன்"-
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்.
வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்.
தவமுறை அகவல் - வாழ்த்து
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்!
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்!
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்!
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்!
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்!
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி!
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்!
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க!
வாழ்க அறநெறி! வாழ்க மெய்ஞானம்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1500 -(8) )
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

சனி, 21 செப்டம்பர், 2019

கரு தவம்!!

*நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசொன்றும் முழங்கவில்லை*

 *பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*

 *ஒளிதரும் ஞாயிறும், நிலவும்  எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*

 *ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*

 *ஒன்று முழக்கமிடுகிறான்*

 *அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*

 *தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே  செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*

 *சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*

 *அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*

 *அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*

 *இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*

 **என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*

 *கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*

 *தத்துவ ஞானி  வேதாத்திரி மகரிஷி*

வியாழன், 5 ஜூலை, 2018

❓ கேள்வி: சுவாமிஜி! ஆன்மீகத்தில் எவ்வுயிர்களுக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பகைவனையும் நேசிக்க வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நியதியாக இருக்கும் பொழுது, அர்ச்சுனனிடம் உன் பகைவர்களை கொல்வதில் தவறில்லை என்கிறாரே கீதையில் கிருஷ்ணர், இது நியாயமானதா?




 ✅ பதில்: பொதுவாக சண்டைக்குப் போகும் சிப்பாய்க்கு கூறும் அறிவுரை தான் இது. ஆரம்ப காலத்தில் மனிதன் ஒருவனை ஒருவன் கொன்று குவித்து வாழ்வது தான் நடந்தது. அந்தக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் மகாபாரதம்.

 சண்டையே இல்லாது வாழ்வது எப்படி என்று ஆராய்ந்து, மனித வாழ்வின் நோக்கத்தை விளக்க வந்த நூல்கள் மிக அரிது. திருக்குறள் போன்று மனித வாழ்வை முழுவதும் அறிந்து தெரிவிக்கும் மற்றொரு நூல் இன்னும் வரவில்லை.

 மனிதன் பரிணாம வளர்ச்சியில் பல சீவ இனங்களைக் கடந்து தான் வந்திருக்கிறான். இறுதியில் குரங்கு மனிதனாக இருந்து, அதன்பின் மலைவாழ் மனிதனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு உடுக்க உடை, வசிக்க வீடு மற்றும் அறநெறி என்ற ஒன்றும் இருக்கவில்லை. இன்று கூட ஆதிகாலத்து மனிதன் எப்படி வாழ்ந்தானோ அது போல் ஆப்பிரிக்காவிலும் மலேசியக் காடுகளிலும் வாழ்கின்றார்கள். அந்நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, அன்பு, கருணை ஏதாகிலும் இருக்குமா? உருவத்தில் மனிதனாக இருந்தாலும் விலங்கினம் போன்று தான் வாழ்ந்து வருகிறான். இன்னும் விலங்கினப் பதிவும் செயலும் அவனுக்கு அப்படியே உள்ளது. காலத்தால் படிப்படியாக அறிவு உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்த போதும் கருமையத்தில் உள்ள விலங்கினப்பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சீறிக் கொண்டு வந்து செயலாகிறது. இவை மனிதனுக்கு விலங்கின வித்துத் தொடராக வந்த பதிவுகளாகும்.

 மனித குலத்திற்கு விலங்கினத்திலிருந்து தவிர்க்க முடியாத மூன்று பதிவுகள் வந்திருக்கிறது. விலங்கினங்களுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. தன் வலுவால் கொல்லக் கூடியதும், தன் வாய்க்குள் தள்ளக் கூடியதுமான ஏதோ ஒரு சீவனைப் பிடித்து உண்கிறது. அங்கு மூன்று குற்றங்கள் நிகழ்கின்றன.

 ஒன்று கொலை; இரண்டு அதன் உடலைப் பறித்துண்ணல் என்ற திருட்டு; மூன்று அது வாழும் சுதந்திரத்தை, உரிமையைத் தடுத்தலாகும். விலங்கினத்தின் இந்த மூன்று குற்றங்கள் தான் வித்து பதிவாக வந்து ஆறறிவு பெற்ற மனிதனிடத்திலும் தொடர்கிறது.

 உலகெங்கும் உள்ள குற்ற விளக்கச் சட்டங்களை (Criminal Procedure Code) எடுத்து ஆராய்ந்தால் அனைத்தும் இந்த மூன்று குற்றங்களுக்குள் அடங்கி விடும். இதை மனிதன் தெரிந்து கொண்டால், “நான் விலங்கு இல்லை; ஆறறிவு பெற்ற மனிதனாக வந்திருக்கிறேன். வாழ்வின் நிறைவில் இறைநிலையை அடைவது எனது நோக்கமாகும். அது போன்று தான் எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளார்கள். அதனால் நான் எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டேன், என் பகைவர்களையும் நேசிப்பேன். இதுதான் மனிதப் பிறவி எடுத்த எனது பண்பு” என்று நினைத்தானானால் அந்த எண்ணமே அவனை உயர்த்தி விடும். மனிதனாக உள்ளவன் அப்போது தான் விலங்கினத்தை விட்டு மனிதனாகிறான். அதற்கு மேலான மனிதனாகி விட்ட பிறகு அவனுக்குள் உள்ள இறைநிலை பிரகாசிக்க ஆரம்பிக்கும் பொழுது தெய்வமாகிறான்.

 அங்கு பகைவர்களை மன்னிக்கவும், பிறகு நேசிக்கவும் தான் சொல்வான், கொல்லச் சொல்ல மாட்டான். பிறரைக் கொன்று வாழ்தல் நீதியெனில் பிறகு உலகில் மிஞ்சுபவர் யார்? இந்தக் கவியைக் கவனியுங்கள். 

“உலகம் என்ற மண் மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் உள்ளோர் இதில் ஒன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப்போவார்
உலகில் ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்”

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 ஜூலை, 2018

❓ கேள்வி: மகரிஷி அவர்களே! சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரங்கள் உள்ளன என்கிறார்களே, அதைத் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 ✅ பதில்: அட்சரம் என்றால் ஒலியைக் குறிக்கும் எழுத்து. அட்சரத்திற்கு அடிப்படை மௌனம். அதிலிருந்து “அ” என்று விரிந்தது முதல் அட்சரம் “அ” விலிருந்து இன்றைக்கு 31 அட்சரங்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் 47 அட்சரங்கள் இருக்கின்றன. அங்கும் மூன்று ஒலிகள் குறைவு. அதனால் அவர்கள் அராபியில் இருந்து அந்த ஒலியை எடுத்துக் கொண்டு அதுபோன்ற சில எழுத்துக்களைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அதையும் சேர்த்தால் 50 அட்சரங்கள் வந்துவிடும். இந்த 50 அட்சரங்களைக் கொண்டு எல்லா சப்தங்களையும் எழுதி விடலாம்.

 இந்த 50 ஒலிகளிலும்கூட சில ஜீவன்களின் சப்தத்தை எழுத முடியாது. (உ.ம்) பல்லி சப்தம் “த்ச”: பையன் மாடு ஓட்டுவது, குழந்தைகளை முத்தமிடும்போது வரும் சப்தம், இவையெல்லாம் காற்று வெளியிலிருந்து உள்ளே போகும் சப்தங்கள். அதனால் இவைகளை எழுத முடியாது. உள்ளேயிருந்து வெளிவரும் சப்தங்களைத்தான் எழுத முடியும். இந்த 50 அட்சரங்களுடன் “ஓம்” என்ற மௌன ஒலியும் சேர்த்து 51 அட்சரங்கள் ஆக்கியுள்ளார்கள்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 அக்டோபர், 2017

குழந்தைகளை வாழ்த்துங்கள்


கேள்வி: சுவாமிஜி! சித்தர்கள் துறவிகளா அல்லது இல்லறவாசிகளா?


✅ பதில்: இல்லற, துறவறம் என்பதன் பொருள் பற்றி முதலில் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லறம் கொண்டு பொருளீட்டி, காத்து, தானும் துய்த்து, பிறருக்கும் கொடுப்பது இல்லறம். இல்லறம் என்றால் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
பொருளீட்டிக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு இடம் வேண்டும். “திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்தால்தான் இல்லறம்” என்பார்கள். அது தவறான கருத்து. பொருளீட்டிக் காத்து அளவுமுறையோடு துய்த்து, அறம் செய்தல் இல்லறமாகும்.
பொருளீட்டும் தொழிலை விட்டு அகத்தவத்தின் சாதனையால் பிரபஞ்ச ரகசியம் அறிந்து, உடல், உயிர், மனம், அறிவு, சீவகாந்தம் உணர்ந்து, அறநிலை தெளிந்து, அறிவுத்துறையில் முழுமை பெற்று, நேர்மை தவறாது ஒழுக்கவழி வாழும் அறிவை மக்களுக்குப் புகட்டி, அதன்மூலமாகத் தொண்டு செய்து வாழக்கூடியவர்கள் “துறவறம்” என்ற நிலையை உடையவர்கள்.
துறவறத்தான் என்றால் பொருளீட்டிக் காப்பது தவிர்த்து, அறிவுத்துறையிலுயர்ந்து தொண்டாற்றிக் கொண்டு இருப்பவன்.
ஆனால் சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டிலுமே இருந்தார்கள். தங்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்களே ஈட்டி, பிறருக்கும் உதவினார்கள். அதே போன்று அறிவுத்துறையிலும் மேன்மையடைந்து எல்லோருக்கும் அறிவுத்தொண்டாற்றினார்கள்.
அன்றும், இன்றும், என்றும் அவர்கள் தொண்டு எங்கும் ஏற்புடையதாயிருக்கின்றது. எனவே சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டுமிணைந்த நல்லற ஞானிகள் ஆவர்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

கேள்வி: சுவாமிஜி! சீவத்தோற்றம், மனத்தோற்றம் என்பதை விளக்க வேண்டுகிறேன்.



 ✅ பதில்: கெட்டிப்பொருள், நீர், காற்று, அழுத்தக் காற்று அல்லது வெப்பம் என்ற பௌதீகப் பொருட்களின் வரிசையில் ஐந்தாவது பூதமான விண் என்ற உயிர் புகுந்து உராய்ந்து ஓடும் பொழுது, அங்கு பரு உடலில் உள்ள செல்களே தடையாக உணரப்பெற்று, உயிர் அழுத்தம் உண்டாகி உணர்ச்சி நிலை பெற்றால் அது சீவத்தோற்றம் எனப்படும்.

 சீவனானது புலன்கள் மூலம் பொருள் தொடர்பு கொண்டு இன்பம், துன்பம் துய்க்கும்போது அது மனத் தோற்றம்.

 புலன்களைக் கடந்து மனதை மன அலை மீதே செலுத்தி அமைதி நிலை பெற்று, “நான் யார்”? என்று வினவி, ஆராய்ச்சி செய்யும் போது அறிவிற்கு ஏற்படும் விளக்கமே ஆன்மத் தோற்றம் ஆகும்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 13 ஜூலை, 2016

சிற்றறிவு பேரறிவுடன் இணைந்து செயலாற்றப்படவேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.




மகரிஷி: புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு எனபது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பெருள்நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
அப்படி இல்லாமல் எனக்கு இன்பம் வேண்டும். யார் என்ன ஆனாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம்.
அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது.
புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது.
அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்

செவ்வாய், 12 ஜூலை, 2016

சுவாமிஜி, மைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன?...



பதில்: இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் எனும் இறுக்கும் ஆற்றலால் அணு முதற்கொண்டு அண்டம் ஈராக சுழற்சி வேகம் கொண்டு அவைகளின் மையப்பகுதி நெருக்கமுறுவதை ஈர்ப்பு ஆற்றல் (Gravitational Force) என்கிறோம். ஆனால் அது ஈர்க்கும் ஆற்றல் அல்ல. இறுக்கும் ஆற்றல் தான். சுழற்சியின் போது தோன்றும் தள்ளுவேகத்தை இறைவெளியின் சுற்றி அழுத்தக் கூடிய ஆற்றல் குறைக்கிறது. சுற்றியிருக்கக் கூடிய இறுக்க ஆற்றல் தள்ளும் ஆற்றலையும் மையத்தில் கொண்டு வந்து ஈர்ப்பு ஆற்றலாகச் சேர்த்து விடுகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, “வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?



பதில்: சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் தன்மையால் வேதான்கள் கணக்கிலடங்காத வேகத்தில் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. அதனால் அவை கோள வடிவமைப்பை பெறுகின்றன. வேதான் சுழற்சியால் ஏற்படும் விரிவலை விலக்கும் ஆற்றலாக எதனையும் வெளித்தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அது தன் மையப்பகுதியை நோக்கி நெருக்கமுறுகிறது. அங்கு தள்ளும், கொள்ளும் ஆற்றலாகிய காந்தம் மலர்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 11 ஜூலை, 2016

மூலாதாரச் சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது? உடலின் முன்புறமா? பின்புறமா?



பதில்:
மலத்துவாரத்திற்கு ஒரு அங்குலம் மேலே பால் சுரப்பியில் அமைந்துள்ளது. தவம் செய்யும்போது மூலாதாரம் அமைந்துள்ள உடலின் மையப்பகுதியில் மனம் செலுத்த வேண்டும். முன்புறமோ,பின்புறமோ அல்ல.
“அஸ்வினி முத்திரை” பயிற்சி செய்யும்போது மூலாதாரத்தின் மையம் இயல்பாக உணரப்படும். குதிரை சானமிடும்போது தன ஆசனவாயை அசைக்கும் விதமே அஸ்வினி முத்திரை.
இந்த முத்திரையை செய்வதன் மூலம் ஆற்றல் இயல்பாக மூலதார சக்கரத்திற்கு செல்லும்

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – ANBOLI JAN. 1987
கேள்வி:
“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...
பதில்:
இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.
குறிப்பு:
இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி! உலகில் நான்கில் மூன்று பகுதி கடலாக இருந்தும் மழை அடிக்கடி பொய்ப்பது ஏன்?


பதில்: உலகில் 72 சதவீதம் நீரால் சூழப்படுள்ளது. மீதம் 28 சதவீதம் தான் நிலம். உலகிற்கு மழை எவ்வளவு உண்டாகிறது என்றால் சூரிய வெளிச்சம் கடல் மீது எந்த அளவிற்குப்படுகிறதோ அந்த அளவிற்கே நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியான கடலைத்தான் வானத்தில் மேகம் என்கிறோம்.
ஆவியாகி மேலே சென்ற நீர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும்! மழையும் பெய்துதானே ஆக வேண்டும். பெய்கிறது; ஆனால் தேவையில்லாத இடத்தில் பெய்கிறது. அதாவது கடலிலேயே பெய்து விடுகிறது. அப்படியானால் இயற்கைகுப் பாரபட்சமா? இல்லை; மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று அது அவ்வாறு செய்வதில்லை.
இயற்கை பொய்ப்பதற்கு மனிதனுடைய எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. எண்ணமே இயற்கையின் சிகரமாகும். மனித மனம் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது கிடைக்க வேண்டிய தெல்லாம் கிடைக்கும். ஆனால் ஒருவர் மற்றவருக்கு அது கிடைத்துவிடக்கூடாது, அவன் நம்மை விட நன்றாக இருந்து விடக்கூடாது என்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கை என்ன செய்யும்?
சில நூறு பேர்களை ஒரு சேர நேசிக்கிறவர்கள், உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால், சிறிது லாபம் அடைகின்றவர்கள் தவிர வேறுயாருமில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்ளும் போது, அதற்கு இயற்கையில் ஒரு விளைவு வரவேண்டும் அல்லவா? இயற்கையின் கருணைச் செயல் அங்கு தடைப்படுகிறது. அதனால் மனிதன் வாழாத இடத்தில், மழை பெய்துவிட்டுச் செல்கிறது. மனிதமனம், தானே இறையாற்றலாக உள்ளதை உணர்ந்து, தன்னால் இயற்கைக்குக் களங்கம் வராது இருக்க நல்லதையே எண்ணிப் பழக வேண்டும்.
முழுமையின் பின்னமாக மனிதமனம் முழுமையாலே இணைக்கப் பட்டுள்ளது. அங்கு முனைப்புத் தோன்றி அன்பு வரண்டுவிடும் பொழுது, இயற்கையின் சீர்மையும், ஒழுங்கும் கெடுகிறது. அவ்வாறு கெடாமல் இருக்க மனிதன் உயிர்களிடம் வற்றாத அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி அவர்களே! “வடக்கில் தலை வைத்து வாழ்ந்தவர்கள் இல்லை” என்கிறார்களே, அது ஏன்?


பதில்: பூமியை சரிபாதியாகப் பிரித்தால் அதன் பூமத்திய ரேகையில் (Equator) இருந்து வடக்குப் பகுதியில் கெட்டிப் பொருள் அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியில் கெட்டிப் பொருளைவிட லேசான நீர் பகுதி அதிகம். அதனால் காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு (Intensity) வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
வடக்கில் தலை வைத்துப் படுப்பதால் ஈர்ப்பு சக்தி காரணமாக உடல் முழுவதும் உள்ள சீவகாந்த சக்தி தலைப் பக்கமாக ஈர்க்கப்படும். அது நுண்மையான மூளைப்பகுதிக்கு நலனளிக்காது என்பதால் வடக்கில் தலைவைத்துப் படுக்கலாகாது என்கிறார்கள்.
நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் நம் எடையை கால் பகுதி தாங்கிக் கொண்டுள்ளது. சீவகாந்த சக்தியின் ஈர்ப்பு உடலில் கால்பகுதி வழியாக பழகிவிட்ட ஒன்றானதால் அதனால் பாதிப்பு இல்லை. அதனால் கால் பகுதியை வடக்கிலும், மூளைப் பகுதியைத் தெற்கிலும் வைத்துப் படுப்பது நலமளிக்கும் என்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, ஒரு செயலின் பதிவு எவ்வளவு காலம் தொடரும் ஒரு செயலுக்கும், அதன் விளைவுக்கும் இடையே கால நீளம் உண்டா?


பதில்: காலம் என்பது தனியாக எங்கும் இல்லை. பூமியின் சுழற்சியை வைத்து காலம் எனச் சொல்கிறோம். செயல் என்பது இயக்கம், ஒரு இயக்கத்தின் தொடர் நீட்டத்தைக் கணிக்கும் அளவு காலமாகும். இயக்கமும் காலமும் தனித்து இல்லை, பரமாணுவின் இயக்கம் தொடரும் வரை அதன் காந்தப் புலத்தில் பதிவான பதிவுகளும் தொடரும்.
வினை விளைவாகும் காலத்தைக் கணிக்க இயலாது. அது வினை ஆற்றுபவர் நோக்கம், இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப இன்ப, துன்ப, அமைதி பேரின்ப உணர்வுகளாக வருகின்றன.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜீ, நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை தருகிறார். அத் தண்டனையைப் பெறும் கைதி நீதிபதிக்குச் சாபமிடுகிறான். அது நீதியைப் பாதிக்காதா?


பதில்: அங்கு பாதிப்பு இல்லை. நீதிபதி தண்டனை தருவது தவறு செய்தவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. கைதி சாபமிடுவது அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சினத்தால் வருவதுதானே தவிர, மனம் நுணுகி இறைநிலைத் தெளிவு பெற்ற குணத்தால் வருவதல்ல. அந்நிலையில் சாப அலை பாதிக்காது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, சுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா? அதில் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது. அது இயக்கமின்றி அமைதி நிலையிலேயே எப்பொழுதும் இருந்து இருக்கலாமே?


பதில்: சுத்தவெளி அமைதியாய் இருக்கிறது என்றால் அசைவற்றது (Static) என்று பொருளல்ல. அதில் ஆற்றல் நுண்ணியக்க நிலையில் (Kinematic Quivering State) இருக்கிறது. அது தன்னையே இறுக்கிக் கொள்ளக்கூடிய (Self Compressive Surrounding Force) ஆற்றலாகவும் உள்ளது. அந்த ஆற்றலானது எப்போதும் அதிகரித்துக் கொண்டே (Ever increasing) இருந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பண்பினால் சுத்தவெளி அமைதி நிலையில் இருக்க முடியாது.
அதனுடைய துண்டுபட்ட பகுதியாகிய நாம் அமைதியாக இருக்கிறோமா? ஒரு சில நேரங்களில் அமைதியாக இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அப்பொழுதும் உடலியக்கம் அல்லது மன இயக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. சுத்த வெளி அமைதி நிலையிலேயே இருந்திருக்குமானால் பரிணாமமும் இல்லை. இந்த பிரபஞ்சமும் தோன்றியிருக்காது. நாமும் இருந்திடுக்க மாட்டோம்.