"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi
ஞாயிறு, 15 மார்ச், 2020
திங்கள், 27 ஜனவரி, 2020
"சுவாமிஜி, இப்பொழுது உலகமெங்கும் பரவிவரும் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க நாம் நமது தவத்தில் அமைதி அலைகளைப் பரப்பி வரலாமா?"
.
மகரிஷியின் பதில் :-
"நாம் அவ்வாறு தானே செய்து வருகிறோம், தற்பொழுது வல்லரசு நாடுகளுக்கெல்லாம் நல்லெண்ணம் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பழைய மரபு வழிவந்த விலங்கினப் பதிவுகளின் காரணமாக உள்ள முனைப்பும், 'தான்' என்ற அதிகாரமும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன.
.
.
எல்லா மக்களும் பிறந்து வாழ்ந்து மடியும் இடமான உலகம் ஒன்றுதான். நீர்வளம் அளிக்கும் கலக்கும் கடல் ஒன்றுதான். மூச்சுவிடும் காற்று ஒன்றுதான். வெளிச்சம் மற்றும் ஆற்றல்களை அளிக்கும் சூரியனும் ஒன்றுதான். இந்த உண்மையை அனைவரும் கல்வி கற்கும் காலத்திலேயே அறிந்து கொள்ள வேண்டும். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் சண்டை என்பது நாடுகளுக்கோ, மனிதனுக்கோ தேவையில்லை. அண்டை நாட்டான் ஆயுதம் இராணுவமெல்லாம் வைத்துள்ளானே, அவன் நம்மைத் தாக்கினால் என்ன செய்வது என்பதற்காக நாமும் வைத்துக் கொண்டோம். இதற்குப்பின் ஒரு கால கட்டம் வரும்போது அனைத்து நாடுகளும் ஒன்று கூடி மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களும் அதற்கு ஆகும் செலவும் இனி தேவையில்லை, ஐ.நா.சபையின் மூலமாக அனைத்து நாடுகளின் பாதுகாப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வோம் என்ற முடிவை 5 நிமிடத்தில் எடுத்து விடலாம். இம்முடிவு காலத்தால் வரும்.
.
.
உலகத்தில் ராணுவத்திற்கு ஒரு ஆண்டு செலவாகும் தொகையில் உலகத்தை செழிக்கச் செய்யலாம். மனிதன் வாழ்வின் வளங்களைக் கூட்டாகப் பெருக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் பறித்துண்ணாது உதவி வாழவும் செய்யலாம். சமுதாயத்தில் சட்டங்களால் போட்ட எல்லைகள்தான் நாட்டு எல்லைகள். ஒருவரை ஒருவர் அழிப்பதற்காகவோ, ஒரு குழுவை பிற குழு அழிப்பதற்காகவோ எல்லைக் கோடுகள் இருக்கக்கூடாது.
.
.
ஆனால் ஆயுதம் வாங்கும் விற்கும் இடத்தில் கிடைக்கும் வருமானத்தை எந்த அரசியல்வாதியும் விட்டுக் கொடுக்கமாட்டார். இது மனித குல வாழ்வில் மரபு வழியே வந்து நீடிக்கும் ஒரு வலுப்பெற்ற மனோவியாதியாகி விட்டது.
.
.
நாம் தொடர்ந்து தவத்திலும் (Simplified Kundalini Yoga - SKY), மவுனத்திலும் (silence) இருந்து அமைதியலைகளைப் பரப்பி வருவோம். காலத்தால் மனித உள்ளங்கள் கனிந்து திருந்தும் என்பது உறுதி."
.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)