வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034
அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு*
வழிகாட்ட முடியும்.
வழிகாட்ட முடியும்.
மனிதனாக வந்த பிறகும் பேரமைதிக்கு உரிய ஆறாவது அறிவு
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
புலன் உணர்ச்சிகளிலேயே இச் சிறந்த நிலையான ஆறாவது அறிவு
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
மனித உருவின் நோக்கம் அறிவிற்கு எட்டாததாலும், புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அனுபவித்தல் என்பதில் பெறும் உணர்ச்சி மயக்கத்தாலும், விளைவறியாது பல செயல்களைப் புரிந்து, அவை பழக்கப் பதிவுகளாகவும் எண்ணப் பதிவுகளாகவும் பரம்பரைக் குண அமைப்பாகவும், களங்கங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான்.
மேலும் எந்த உணர்ச்சியையும் துய்க்கும்போது விழிப்பு நிலையின்றி
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
இவ்வாறு, நிறைவுபெறாமை, பாவப் பதிவுகள், மனிதனாக வந்த நோக்கம் அறியாத மயக்கநிலை, இம்மூன்றும் மனித அறிவின் முதற்பகுதியில் உயிர்க் களங்கங்களாக அமைகின்றன.
துன்பங்களும் வாழ்க்கை சிக்கல்களும், சோர்வும் பெருகுகின்றன.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பு சிறிது சிறிதாக விளங்குகிறது. விழிப்புணர்வு பெற்று உடலுக்கும் உயிருக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்கிறான்.
உடலை நன்கு நோயுராது பாதுகாக்கவும் மனதின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மன அமைதியினை பாதுக்காக்கவும் அக்கறை உண்டாகிறது. ஆற்றலும் பெருகுகிறது.
விழிப்பு நிலையில் உலக இன்பங்களைத் துய்த்து அறிவைப் பெருக்கி நிறைவு பெறுகிறான். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான்.
இயற்கையோடு ஒத்து "தனக்கும் பிறர்க்கும் தற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும், உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளையாத
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
பொருள் மயக்கமும், பாவப் பதிவுகளும் போன பின் உயிரின் நிலையென்ன? தூய்மையடைந்து விட்டது என்பதுதான். பேரறிவு, ஒளிவிடத் தொடங்குகின்றது. இந்த அறிவின் ஒளியிலே தனது மூலமாகிய மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து கொள்கிறான்.
உணர உணர, உணர்ந்ததில் நிலைக்க நிலைக்க, அவனும் மெய்ப்பொருளாகவே விளங்குகிறான்.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பேரறிஞரின் விளக்கம் இத்தகைய பேரறிவின் அமைதி நிலையினைத்தான் விளக்குகிறது. அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி