Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 31 மார்ச், 2015

விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :


 ....
உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும் சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம். இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம். உடலை வளர்ப்பதும் அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம். வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம். இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம். வாழ்வின் முன்னேற்றம் "விஞ்ஞானம்" வாழ்வின் சீர்திருத்தம் "மெய்ஞ்ஞானம்".
.
வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் புரியவள்ளது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம்காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும். மறைபொருள் விளக்கம்தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம். அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப்பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம். அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்
அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி
மெய்ஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 30 மார்ச், 2015

நற்பண்புகாக்க:


 ....
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதளால் தன்னை மறந்து, புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு அறிவின் தெளிவோடு, வாழ்வின் பயனுணர்ந்து, புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலையில் வாழும் பேறு பெற்றிருக்கிறோம். மெய்யுணர்தவத்தால் ஆன்மலயம், அறிவின் விழிப்பு, விளைவைக் கணித்துத் திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு இவை நமக்கு நாளுக்கு நாள் இயல்பாக ஓங்கி வருகின்றன. இவ்வுயர் அன்பு பேற்றினைக்கொண்டு நாம் சிறப்பாகவும் வளமுடனும் வாழ வேண்டும். வாழும் மக்களுக்கும் வருங்கால உலகுக்கும் நாம், வாழ்க்கை வழி காட்டிகளாக விளங்க வேண்டும். இத்தகைய பொறுப்புக்கள் நமக்கு இருக்கின்றன. இப்பொறுப்புகளை நமது கடமையாகக் கொண்டு நாம் செயலாற்றி வாழ வேண்டும்.
.
பொருள் வளம், ஒழுக்கம், இறையுணர்வு மறவாத மனநிலை, தொண்டு என்ற நான்கு பண்புகளும் மனிதன் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாத தேவைகள். மயக்கமுற்ற உலகின் பலதரப்பட்ட மக்களுடன் ஒட்டி, உறவு பூண்டு நாம் கடமையாற்றி வாழ்கிறோம். இதனால் இந்த நான்கு பண்புகளையும் காப்பது மிகவும் கடினம்தான் என்றாலும் நாம் மதிப்பு மிக்க நற்பண்புகளைக் காத்தே ஆக வேண்டும். அது தான் நமது தலையாய கடமை. வரவுக்குட்பட்டுச் செலவை வரையறுத்து வாழ்வதிலும், தேவையின் அவசியமுணர்ந்து பொருள் பெற்றுத் துய்ப்பதிலும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான்
வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாமோ
அதைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள்."
.
அமைதியின்மை எதனால்?
"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்
அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் அறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
அமைதி பெறுவீர்:
"அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது ;
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதிபெறுவீரே!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 29 மார்ச், 2015

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :


நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள்,
நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது.
...
ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.
ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம்.
இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும்.

ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.

இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.
இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும்.

இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம்.
பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.
--- அருள்தந்தை

சனி, 28 மார்ச், 2015

மெய்விளக்கம் :

விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று விட்டால் மாத்திரம் மனித வாழ்வு நிறைவு பெற்று விடாது. மெய்யறிவு இல்லாத விண்ணறிவும், புலனறிவும், தன்முனைப்பிலிருந்து மனிதனை விடுவித்து அறிவின் முழுமையையும் அமைதியையும் அளிக்க முடியாது. புலனறிவால் விரிந்து காணும் உலகம், சிந்தனையால் சுருங்கிக் காணுகிறது என்பது தெளிவு. இயற்கையின் முழுமுதல் நிலையான பேராதார நிலையையும், அதையும் ஐயமின்றி உணரக் கூடிய அறிவையும், உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப் பேறுதான் மெய்யறிவாகும். புலன் அறிவால் பல கோடி தோற்றங்களாகக் காணும் உலகம் சிந்தனை அறிவு எனும் விஞ்ஞானத்தால் வெளி-விண்-அறிவு என்ற மூன்று பொருட்களுக்குள் சுருங்கி விடுகிறது.
.
இவற்றில் வெளி, விண் எனும் இரண்டு பொருட்களுக்கிடையே உள்ள உறவும், இவ்விரண்டில் எது முந்தியது எது பிந்தியது என்ற விளக்கம் காணும் போது, விண் என்பது இருப்பு நிலையாகிய வெளியின் நுண்ணியக்கச் சுழலலையே என்று உணரும் போது வெளிவிண் இரண்டும் ஒன்றாகி விடுகிறது. அகத்தவத்தின் மூலம் அறிவு ஒடுங்கி அந்த முழுமுதற் பொருளான இருப்பு நிலையறியும் பேறுகிட்டும் போது அகக்காட்சியில் அப்பேராதாரப் பரம் பொருளில் அறிவு அடங்கி உறைந்து ஒன்றுபட்டு அதன் தனித்தியங்கும் செயலொழிந்து இருப்பு நிலையாகி விடுகிறது. இந்த அனுபவமே மெய் விளக்கமாகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது -
என்று விளக்கிக் காட்டுவது தான்
அகத்தவப்பயிற்சி (Simplified Kundalini Yoga)."
.
"அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது."
.
"அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்."
.
"ஆறாவது அறிவைக் கொண்ட
இந்த மனிதனின் வாழ்வின் நோக்கம்,
அறிவு முழுமை பெறவேண்டும் என்பதே."
.
"அறிவு என்பது - உண்மை மெய்ப்பொருள் நிலை".
.
"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப் படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்! "
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 27 மார்ச், 2015

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:
முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை.பின் எப்படி விளைவு வந்தது ? என்பதே .
முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,
எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள்,
பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.
ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை.
பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன் வந்தான்.
இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.
மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.
அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு.
ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.
இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன.
அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.
இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.
இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் வினைப்பதிவை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.
---வாழ்க வளமுடன்

வியாழன், 26 மார்ச், 2015

தத்துவம்

இது(assumption) யூகம் என்றாலும் எந்த ஒரு  உண்மையையும் கண்ணால் பாராமலே யூகித்தாலும் அதை மற்ற இயக்கங்களுடன்   பொருத்திப் பார்க்கும்பொழுது முரண்படாது  இருக்குமானால் அந்த அனுமானம் தான் தத்துவம்.
.
..
ஏன் எனில் கண்ணால் காண்பது, புலன்களால் உணர்வது, கருவிகளால்
உணர்வது, காலம் , தூரம், பருமன், வேகம் என்ற அளவைகளால் அறிவது
எல்லாம் சிற்றெல்லைகளைக் கொண்டது. இதுதான் விஞ்ஞானம்
.
.
விண் என்ற அறிவை வைத்துக்கொண்டு  அதிலிருந்து வளர்ப்பது விஞ்ஞானம்.
விண் என்பது சுழல் இயக்கம் உடையது. அதுவே வேகம் என்பதாகும். அந்த சுழற்சிக்கு  ஒரு மையம் இருக்கிறது. அதன் இயக்கத்திற்கும்  மற்றொரு இயக்கத்திற்கும் இடையே  ஒரு தூரம் இருக்கிறது. அதன் இயக்க
தொடர் நீளமே காலம் ஆகும்.
.
.
ஆகவே இந்த காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கையும் வைத்துக்கொண்டு  பொருட்களை கணிப்பது விஞ்ஞானம். ஆனால்,
.
.
இந்த நான்கும் தோன்றுவதற்கு முன்னதாக  எது இருந்ததோ, எந்த மூலத்திலிருந்து இந்த  நான்கும் பிறந்தனவோ அதை அறிந்துகொள்வதுதான்
தத்துவ ஞானம். அந்த அறிவை அறிந்தால்தான்  மனிதன் மனிதனாக வாழமுடியும்.
.
.
சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை எடுத்துக்கொண்டால் சுமார் 9 கோடிமைல். பூமி, சூரியனைச் சுற்றி வரும் பாதையில்   ஒருநாளைக்கு ஓடும் தூரம் பதினைந்து   லட்சத்து ஐம்பதாயிரம் மைல்.

நாம் 10 நிமிடத்தில் ஐந்து மைல் ஓடிவிட்டால்  தன்முனைப்பு வந்துவிடுகிறது. இந்தச் சூரிய  மண்டலம் அதன் உடம்பை தூக்கிக்கொண்டு  அந்த மாதிரி ஓடுவதற்கு சக்தியையும்  கொடுத்துக்கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ளாது
இருக்கின்றதே அதுதான் இறைநிலை.
.
.
இத்தகைய கணிப்புக்கெட்டாத  ஆற்றலுடைய இறைநிலையைத்தான்
நான் “இறைவெளியென்றும், சுத்தவெளியென்றும்” கூறிவருகிறேன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

புதன், 25 மார்ச், 2015

மனவளக்கலை:


 ....

"உலக சமுதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள், இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பெற்ற நிறுவனமே "உலக சமுதாய சேவா சங்கமும்" அதன் செயல்வழியாகிய "மனவளக்கலையுமாகும்". "கர்மயோகம்" என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும். சிந்தனையை வளர்க்கவும், அறிவுக்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்கவல்ல "அகத்தவமுறை" இதில் இருக்கிறது.
.

நான் என்ன செய்கிறேன், இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நலனை தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க "அகத்தாய்வுப் பயிற்சி" இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடற்பயிற்சியும் உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன. விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையில், ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்றும் "அறவழி வாழவும்" ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறை இருக்கிறது. பிறவிப் பயனாகிய அறிவை அறிய, இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும் வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளங்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்கமுறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன் மனிதனாக வாழ ஏற்ற ஒரு சாதனை வழியே "மனவளக்கலையாகும்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

ஒடுங்கி-உணர்ந்திடு:

"நினைவை யடக்க நினைத்தால், நிலையா.
நினைவை யறிய நினைத்தால், நிலைக்கும்."
.

பற்றற்ற வாழ்வு :

"நெற்றியில் உச்சியில் ஞாபகமாயிரு,
உற்றுற்றுப் பார்த்திடு உன்னை உலகை பின்,
கற்றபடி நட கருத்து விழிப்புடன்,
பற்றற்று வாழும் பழக்கம் உண்டாகிவிடும்."
.

குழந்தைகட்கே பக்தி நெறி :

"உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்
உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக
பருவமடைந்தோர்கட்குப் பதினெட்டாண்டின் மேல்
பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்
அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்
அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய
கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான
கரை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்."
.

மனித மாண்பு (Simplified Kundalini Yoga) :-

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 24 மார்ச், 2015

கற்பனைகள் மலரும் விதம் :



ஒரு செயலை அல்லது அனுபோகத்தை அது நடவாத முன் ஞாபகத்தினால் உருவாக்கினால் அது கற்பனையே ஆகும்.
.

புலனுணர்ச்சிகளிலே குறுகி நிற்கும் அறிவின் நிலையில் எழும் கற்பனைகளுக்கு, அந்த உடல் பலம், அந்த நிகழ்ச்சிக்குரிய சமய சந்தர்ப்பப் பலம் இவைகள் மாத்திரம் உதவியாக இருக்கும்.
.

விரிந்த அகண்டகார ஆராய்ச்சி எல்லையிலே எழும் கற்பனைகளுக்கு, இயற்கையில் அமைந்துள்ள எல்லாவகையான பலமும் நீண்டகாலமாக சமுதாயத்தைத் தொடர்ந்து வரும் உலக அனுபவங்களும், அக்கால மக்களின் அறிவின் பலமும் ஒன்று சேர்ந்து, அக்கால கற்பனைகளைச் செயல்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கிப் பின்னர் அவை செயலாக மலரும் படி செய்யும்.
.

புலனடக்கம்:
முதன் முதலாக சித்திரம் எழுதப் பழகுபவனுக்கு எண்ணத்தில் உள்ளபடி உருவம் அமைவதில்லை. பழகப் பழக எந்தவிதமாக எண்ணுகிறானோ அவ்விதமே அவன் எழுதும் உருவமும் அமைந்து விடுகிறது.
.

ஆராய்ச்சி முடிவுகளில் அறிவின் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு, இது போன்றே ஐம்புலன்களும் உடனே கட்டுப்பட்டு விடாது. பழகப் பழக எதை எண்ணுகிறானோ அதன்படி செயலாற்றும் திறமையும் வல்லமையும் ஏற்பட்டுவிடும்.
.

ஆகவே பொறுமையுடன் திட மனத்துடன் நீடித்துப் பழகி இலட்சிய எல்லையை அடைய வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப
விரிவு அடைகிறது. இது போல அறிவு வளர வளர
அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும்
பெருகிக் கொண்டே இருக்கும்".
.

"அறிவும் புலன்களும் :

"அறிவைப் புலங்களில் அதிக நாள் பழக்கினேன்
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன,
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்
அந்தநிலையிலும் புலன்களை இயக்கினேன்;
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது,
அறிவு புலன்களை அறிந்தது, வென்றது
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 மார்ச், 2015

இறையுணர்வு பெறும் ஆற்றல் எல்லாருக்கும் உண்டு :

.
"அறிவு ஒரு மறை பொருள். அதைக் கொண்டு தான் பேரியக்க மண்டலப் பொதுவான மறைபொருள் தெய்வ நிலையை உணர முடியும். எந்த இயக்கமானாலும் இருப்பு நிலையில்தான் மோதவேண்டும். அதில்தான் முடியவும் வேண்டும். இங்கே உணர்ந்து கொள்வது எது? அலையாக இயங்கி மோதுவதா? அல்லது இருப்பாக இருந்து தாங்குவதா? இருப்புதான் உணர்கிறது. எல்லாத் தோற்றங்களிலுள்ள இயக்க அலையை எங்கும் நி...றைவாயுள்ள நிலைபொருள் இருப்பு நிலை - இறைவெளிதான் உணர்வாகப் பெறுகிறது. ஆகவே இறைவெளியான இருப்பு நிலை பேரறிவு - (Super Consciousness) எனவும் அகண்டாகாரமாக அது நிறைந்திருப்பதால் (Cosmic - consciousness) வாணறிவு எனவும் போற்றப்படுகிறது.
.

அறிவுதான் நான் என்னும் பொருளாக உள்ளது என்றும் அதுதான் இருப்பு நிலையாக தெய்வமாகவும் உள்ளது என்றும் உணரும் பெரும் பேறு மனிதனுக்குக் கிட்டிவிட்டால் அவன் தெய்வமாகவே திகழும் பெருமையுடையவனாகிறான். ஆதி முதல் அணுவரையில் அவனேயாகி அனைத்திலும் அவனே நிறைந்த பொருளாக இருப்பதால் அறிவே தான் நான் என்று உணர்ந்து அதுவே தெய்வமாகவும் இருக்கிறது என்ற பேரறிவில் அவன் எல்லாம் உணரும் ஆற்றல் பெற்றவனாகிறான். இதனை அறிவறிந்த பெரியார் 'வள்ளுவப்' பெருந்தகை
.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்".
என்ற கவி மூலம் விளக்கியிருக்கிறார்.
.
இந்தப் பேரறிவில் விழிப்போடு இருப்பவர்களுக்கு எதைப் பற்றி நினைத்தாலும் அதிலிருந்து வரும் விளக்கம் இறைவனே பேசுவது போல இருக்கும். இந்த மனநிலையில்தான் முழுமையான அமைதி மனிதனுக்குக் கிட்டும். அறிவை அறியும் வரை அது குறையுடையதாகவே இருக்கும். அந்த நிலையில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்ற நான்கில் தன்னை இணைத்துக் கொண்டு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற குறையுடையதாகவே, வறுமை மிஞ்சியதாகவே இருக்கும். அறிவையறியும் ஆற்றல் அனைவரிடமும் உண்டு. அதற்கு பயிற்சி வழி அகத்தவமும் (Simplified Kundalini Yoga), அறநெறி பற்றி வாழும் முறையும் ஆகும்.
.
அகத்தவமும் அற வாழ்வும்".
--------------------------------------------
"மறைபொருளாம் அறிவு சிவம் இரண்டும் ஒன்றாய் நானாய்
மனிதன் தெய்வமாய்த் திகழும் மாபதம் பேறானால்
இறையுணர்வால் தன்முனைப்புப் பேரறிவாய் மாறும்
எப்போதும் ஈசன் குரல் உள்ளுணர்வாய்க் கேட்கும்;
குறையறிவில் பொருட்கள் புகழ் புலன் இன்பம் இவற்றில்
கொடிய வறுமை பெருகும். நிறைவு கிட்டா வாழ்வில்
நிறைநிலையை எவரெனினும் முயற்சித்தால் பெறலாம்
நேர்வழியோ அகத்தவமும் நிறையற வாழ்வாகும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 22 மார்ச், 2015

Thoughts and Bio-Magnetism


The thoughts of men occur according to the following: (1) Needs, (2) Satisfaction and experiences (3) Realization. These three are otherwise called ICHA SAKTHI, KIRIYA SAKTHI, and GNANA SAKTHI respectively. Each state is of several kinds. When the thought is no Needs, there if is in emotional state. The six temperaments such as greed, anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance will come out in this state only. Here the bio-mag...netism will be quickly converted and also consumed to a greater extent. As a consequence, the chemical qualities and activities will be affected in the body. Out of all the emotional activities of thought sexual passion anger and mental anxieties or worries will result in greater loss of energy of the soul. If these become habits, the adverse effects would naturally be more. The State of thought in satisfaction and experience is harmonious to the body and the mind. This state will keep the body and its chemical activities in a normal condition.
- Vethathiri Maharishi

சனி, 21 மார்ச், 2015

"கருமையம்"

"கருமையம்" இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள தெய்வீகப் பெட்டகம். காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி. 'கருமையம்' தான் சீவ இனங்களில் 'ஆன்மா' எனப்படுகிறது. கல்வியறிவு பெறாதவர்களும், சிந்திக்கும் திறம் குறைந்தவர்களும் கூடக் கருமையத் தூய்மை பெறுவதற்கு எளியவழி உண்டு. உலக நலம் நாடி, மக்கள் குலம் உய்ய வேண்டும் என்ற பெரு நோக்கத்தில், அத்தகைய வாழ்க்கை நெறி எளியமுறை என்னவெனில்,
.
1] "எவருக்கும் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ
மனதுக்கும...் உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது".
.

2] "தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தினால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவுஆற்றல், பொருட்கள் இவற்றைக் கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்."
.
என்ற இந்த இரண்டு செயல்களும் ஆழமான கருத்தில், விரிவான மனித சமுதாயத்திற்கு அளப்பரிய நலன்களை விளைவிக்கும்.
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 20 மார்ச், 2015

அறிவின் அகநோக்குப் பயணம்

ஆன்மீகத்துறை யென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப்போகுங்கால்...
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும் இனிமையம்
ஆன்ம ஒளி சுடர்விட்டு உள்ளுணர்வு பேறாகும்
.
.
ஊன்உருவமான உடல் ஊர்தி இதன் ஊடே
உயிர் என்ற சூக்குமமே “நான்” என்ற உணர்வு வரும்
ஒடுங்க ஒடுங்க காணும் உண்மையோ அறிவதுவே
உயிரிலிருந்தோங்கி யெழுந்து உலகம் விரியும்.
.
.
”நான்” அதுவே இருப்புநிலை மெய்ப்பொருள் தெய்வமெனும்
நன்முடிவு விளக்கமாம் அந்த முழுமுதற்பொருளே
நல்ல ஒழுக்காற்றலாய் நன்னுணர்வாய் அறிவறியும்
நல் ஊற்றாய் திருவருளாய் நல்லின்ப வெள்ளமாய்
.
.
தேன்பொழியும் பேரின்பம் திகட்டாது சலிக்காது
திருத்தங்கள் எண்ணம் சொல் செயல்களிலே மலர்ந்துவரும்
செருக்கொழிந்து தான் அடங்கி தெய்வநிலை எங்கெதிலும்
திருவருளின் காட்சியாம். திரும்புங்கள் உட்புறமாய்.
.
.
-வேதாத்திரி மகரிஷி

வியாழன், 19 மார்ச், 2015

அன்பு

"ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே, உயிர் நிலையை அறிந்த உயர்விலே, பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே, ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே, கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழி காண வேண்டும் என்ற கணிவிலே ஏற்படும் பற்றுதலை 'அன்பு' என்று சொல்லுகிறோம்.
.
சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்று என்னும் போது அது 'அன்பு' நிலையாகும். என் மனைவியை என் குழந்தைகளைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன் என்று என்னும் போது அது 'பாசம்' என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு... நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது 'அன்பின்' செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது 'பாசம்' என்று சொல்லப்படும். ஆகவே எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே 'பாசம்' எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும் அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே 'அன்பு' எனப்படும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அன்பின் பெரு மதிப்பு :
"இறைநிலை தெளிந்த இன்பத்தில் உயிர்கள் பால்
எழும் நட்பே அன்பாகும். ஈகை ஒழுக்கம் இயல்பாம்;
நிறைவோடு மக்கள் நேர்மையில் மகிழ்ச்சியில்
நிலைத்து இன்பம் துய்க்கும் நேர்வழி அன்புதான்."
.
நல்லோர் தந்த பரிசு :
"வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 18 மார்ச், 2015

அன்பும் கருணையும் :


 ....
இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.
.
ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அணைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட் கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட் கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.
.
ஒரு மாமரத்தில் பிஞ்சுவிடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்துவிடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அது தான் கருணை.
.
உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக்கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இதுதான் கருணை.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆறுகுணச்சீரமைப்பு பெற்று மனத்தூய்மை
பெறும் போது நம்மிடம் உள்ள அன்பும்
கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன."
.
"அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன்
அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும்
பின்பற்றி வாழ்வதே இறைவழிபாடாகும்."
.
"அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும்; மேலும் தெய்வத்
துணைகிட்டும்; வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்;
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 17 மார்ச், 2015

அறிவு தெளிவாக இருக்க வேண்டும்

" ஒரு பூட்டைத் திறக்க வேண்டும் என்று சொன்னால், அந்தப் பூட்டுக்குரிய சாவியைக் கொண்டு முறையாகத் திறந்தால் தான் திறக்க முடியும். ஆனால் வேறு சாவி போட்டுத் திறந்தால் என்னாகும்? அதே போல ஏதோ ஒன்றை நாம் நினைக்கிறோம். அதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நமக்குத் தெரிய வேண்டும். முதலாவது நாம் வேண்டுவது சரிதானா? தேவைதானா? என்றே தெரியவில்லை.
.

தேவை இல்லாததையெல்லாம் வேண்டி, தேவையுள்ளதை எல்லாம்... மறந்து போவதனால், தேவையுள்ளதைத் தேடுவதற்கே நமக்கு ஆற்றல் இல்லாது போகிறது. இது எதனால் வருகிறது? இந்நிலை அறிவின் வறுமையினால் தான் வருகிறது. அறிவு தெளிவாக இருக்க வேண்டும். உறுதியோடு இருக்க வேண்டும். திறமையாக இருக்க வேண்டும். அத்தகைய திறமை வந்துவிட்டால் வாழ்க்கையில் நிறைவு வரும்.
.

அனுபவம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே தவற்றைத்தான் செய்கிறோம். நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மனதில் கொண்டு, 'இனி இதைச் செய்யக் கூடாது. அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவில் தான் செய்ய வேண்டும்' என்று தேர்ந்து, தீர்வு கண்டு, அதன்படி செயல் ஆற்ற முடியாதா? முடியும். அந்த ஆற்றல் இருக்கிறது. அனால் செய்வதில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் நம் மனம் எடுக்கும் முடிவானது தீர்மானமான முடிவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கும்கூட மனதின் விழிப்பு நிலை வேண்டும். அதற்காக நம் மனதிற்கு நாம் கொடுக்கக் கூடிய முறையான ஓர் உளப்பயிற்சியின் மூலம் தான் இவையெல்லாம் சித்தியாகும்.
.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய அகத்தாய்வுப் (Introspection) பயிற்சிகளையும், மனம் செம்மையுற அகத்தவப் பயிற்சியாகிய (Meditation) எளிமைப்படுத்தப்பட்ட 'குண்டலினி யோகத்தையும்' (Simplified Kundalini Yoga) அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' மனவளக்கலை மன்றம். இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் 'மனம்' எவ்வளவு தெளிவாக இருக்கிறது? என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதையும் அனுபத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அன்பின் அழைப்பு :

"விருப்பம், சினம், வஞ்சம், மதம் பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்
உருக்குலைந்து நிறைந்த மனம் சகிப்புத் தன்மை
உளமார்ந்த மன்னிப்பு மெய்யுணர்வு
கருத்துடைய கற்புநெறி ஈகையென்ற
களங்கமிலா நற்குணங்களாக மாற்றும்
பொருத்தமுள உளப் பயிற்சி முறை பயின்று
புகழ் இன்பம் அமைதி பெற வாரீர் ! வாரீர் !."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 16 மார்ச், 2015

குடும்ப நலம் உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு

"உடல் நலம் இல்லையானால் எந்த நேரமும் துன்பமாகத்தான் இருக்கும். எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆக்கம் இழந்த மனிதனாகத்தான் இருப்போம். மனவளம் இல்லையானால் ஒருவருக்கொருவர் விரோதம், கோபம், திட்டுவது, இவையெல்லாம் உண்டாகும். ...
.

உடல் நலமும் வேண்டும்; மனநலமும் வேண்டும் என்றால் திடீரென்று வந்துவிடாது. விலைக்குப் போய் வாங்க முடியாது. உடல் நலம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரிடம் போய் மாத்திரை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாத்திரை மட்டும் சாப்பிட்டால் உடல் நலமாகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உடல் நலம் என்பது மாத்திரையால் மட்டும் வந்துவிடாது. ஏதோ அந்தச் சமயத்தில் வைத்திய முறையானது சில நோய்களைப் போக்கிவிடும் என்பது சரிதான். அவரவர்களே உடலில், உள்ளத்தில் இருக்கக்கூடிய சக்தியை நல்ல முறையில் வெளிப்படுத்தி அந்த ஆற்றலைக் கொண்டே உடலில் உள்ள பெரும்பான்மையான வியாதிகளைப் போக்கிக் கொள்ளலாம் அல்லது வராமல் தடுத்துக்கொள்ளலாம். இளமைப் பருவத்திலேயே அதற்கான உளப் பயிற்சியையும், உடற் பயிற்சியையும் முறையாக கற்றுகொள்வது என்பது உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தி தயார் படுத்திக்கொள்ள பெருந்துணையாக இருக்கும்.
.

உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளை அளவோடும், முறையோடும் வைத்துக் கொண்டால் நோயே வராது. நோய் வந்தாலும் தடுத்துக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் தெரிந்து பழகிக் கொள்வதற்கு 'உடற்பயிற்சியும்' (Simplified Physical Exercises) வேண்டும். 'உளப்பயிற்சியும்' (Simplified Kundalini Yoga) வேண்டும். சத்சங்கமும் வேண்டும். அதற்கேற்ற பயிற்சியை கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலையம் தான் "அறிவுத்திருக்கோயில்" (Temple of Consciousness). குடும்பத்தில் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 14, 15 வயது நிரம்பிய அனைவரும் இளமைப் பருவத்திலேயே மனதை வளப்படுத்திக் கொள்வதற்கு, உடல்நலத்தைப் பெறுவதற்கு, அதன்மூலமாக 'குடும்ப நலம்' உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' மனவளக்கலை பயிற்சி முறை ஆகிய 'குண்டலினியோக பயிற்சி (Simplified Kundalini Yoga)' ஆகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஞாயிறு, 15 மார்ச், 2015

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள். ...
.

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார்; வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவதே
கள்ளமனமுடை கல்வியில் லோரே" - திருமந்திரம்.
.

மனதின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை. மனதின் மாண்பு எதுவோ அதுதான் மனிதனுடைய மாண்பு. மனதின் உயர்வு எதுவோ அதுவேதான் மனிதனுடைய உயர்வு. ஆகவே, மனதை எந்த அளவில் உயர்த்திக் கொள்ளுகிறோமோ, தூய்மை செய்து கொள்ளுகின்றோமோ, வலுப்படுத்திக் கொள்ளுகிறோமோ, நெறிப்படுத்திக் கொள்ளுகிறோமோ, அந்த அளவிலேதான் மனிதனுடைய வாழ்வு மனிதனுடைய மதிப்பு, மனிதனுடைய வெற்றி, மனிதனுடைய அறிவாட்சித்தரம் (Personality), மனிதனுடைய எல்லா வளங்களும் அமையும். இந்த அற்புதத்தைத் தான் தொடர்ந்து நாம் நமது சிந்தனை ஆற்றல் துணை கொண்டு நுணுகி நின்று பயிலும் 'மனவளக்கலை' பயிற்சியாகிய "குண்டலினியோகத்தால்" (Simplified Kundalini Yoga) சாதிக்கின்றோம்."
.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 14 மார்ச், 2015

அடிப்படைத் தேவைகள்:

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க 'ஆகாரம்',
.

ரத்த ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க 'மிதமான உழைப்பு',
.

உள்ளம் அமைதியாகவும், உற்சாகமாகவும் இருக்க கடல் நதிகள், மலைகாடுகள் முதலான இயற்கைக்காட்சி, இவைகளைப் பார்க்க 'உலகத்தைச் சுற்றி வரும் வாய்ப்பு',
.

புலன்களையும் அறிவையும் ஒன்று படுத்தித் தனக்கும் பிறருக்கும் இன்பத்தை ஊட்டும் 'நடனம், பாட்டு, சிற்பம், ஓவியம்' முதலிய கலைகள்,
.

அறிவைப் பண்படுத்த வயதுக்கேற்ற 'தியான, தவ முறைகள்', இவையனைத்தும் மனிதனுக்கு - மனிதர் வாழ்வுக்கு அவசியமாகும்.
.

மற்றத் தேவையற்ற பொருட்களையும் செயல்களையும் விட்டு ஒழிக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து அவைகளின் உற்பத்தியையே நிறுத்தி விட வேண்டும். இவ்விதம் வாழ்ந்தால் உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.
.

மனித இனம் சுகமாக வாழ்வதற்குத் தேவையான அனுபோகங்களை மட்டும் அளவுடன் கொண்டு, தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

உலகமெனும் சத்திரம் :

"உலகம் ஒரு சத்திரமே. உயிர்கட் கெல்லாம்
ஒத்தபல வசதிகளையடைய ஒன்று.
தலைவரியோ கிடையாது, உள்நுழைவைத்
தடுப்பதற்கு யாருமில்லை; தேவையான
பலபொருளும் வசதிகளும் நிறைந்தகோட்டை.
பஞ்சமில்லை ஆற்றல் என்ற விலைகொடுத்தால்
நில உலகம் நேர்மதிப்பில் வாழ்வளிக்கும்
நிறை அறிவோர் அருள்வெள்ளம்-நேர்மை நல்கும்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 13 மார்ச், 2015

அறியாப்பருவத்திலே வளரும் குழந்தைகளிடம் சினம் வராமல் காப்பாற்றி வளர்ப்பது எப்படி ? முடியுமா? அவசியமா?

குழந்தைகளிடம் மிக்க எச்சரிக்கையாக விழிப்போடுதான் நடந்துகொள்ள வேண்டும். இந்த உலகின் மீது வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், செடி, கொடி உட்பட அனைத்துக்கும், இந்த உலகை விட்டு வெளியேறும் வேகம் உள்ளது.
....
.
அதை velocity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு 60அடி என்று வைத்துக்கொள்ளலாம். சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக்கொள்ளலாம்..

விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த அளவான ஆறு அடி வளர்ந்த பிறகு அது தணிந்து விடுகிறது.எனவே தான் அதன் பிற்கு மனிதனுக்கு வளர்ச்சியில்லை.
..
.
ஆனால் இந்த ஆறு அடி வேகம், ஒருமாத குழந்தையாக இருக்கும்போதே அந்தக்குழந்தையிடம் உள்ளது; ஊக்கிவிடுகிறது; எப்போதும் புடைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் எந்தக்காரியத்தை செய்தாலும் துடுக்காகத்தான் செய்யும்.. நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக்கொள்ளமுடியாது.
.
நாம் என்ன செய்யவேண்டும்?
அந்த வேகத்தை பயன்படுத்தும் முறையிலே அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.
.
ஏதோ ஒரு பொருளை குழந்தை எடுத்துவிட்டது. அதை கீழே போட்டு உடைத்துவிடுமென்று எண்ணுவீர்களானால், அதைவிட கவர்ச்சியான பொருளை உடனடியாக எடுத்து அதனிடம் நீட்டி, இதோ பார் , இது நல்ல பொருள், எவ்வளவு அழகாக இருக்கிறது என்று காட்டினீர்களேயானால், அதை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கும் அந்த அளவிலே குழந்தைகளிடம் அன்புகாட்டி விழிப்போடுதான் நடந்துகொள்ளவேண்டும்.
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

வியாழன், 12 மார்ச், 2015

சிந்தனையின் சிறப்பு :

நம் வாழ்க்கையில் அவ்வப்போது நாம் எதைச் செய்வது என்ற ஒரு சிக்கல் வரலாம்; அல்லது பெருமளவிலான ஒரு மகிழ்ச்சியேகூட வரலாம். அந்தச் சிக்கலிலே அழுந்திவிடக் கூடாது, அல்லது அந்த மகிழ்ச்சியிலே அழுந்திவிடக் கூடாது. இந்தச் சிக்களிலேயிருந்து விடுபட வேண்டிய வழி என்ன என்று நினைத்தாலே போதும். சிக்கலிலே தவித்துக் கொண்டிருக்கக் கூடிய மனம் முனையில் இருக்கிறது. அந்த மனத்தின் அடியிலே இறைவன் இருக்கின்றான். அவன் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருகின்றான். அவன் பக்கம் திரும்புவதற்கு வழி காண வேண்டும் என்று சொல்கின்றேன்.

சிந்திக்கின்றவர்கள் அதை காணுகின்றார்கள். சிந்தனைக்கு என்று திரும்பினாலே போதும், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். அதைத்தான் வள்ளுவர் கூட, தனது குறல் ஒன்றில் ஒரு மனிதன் முயற்சி எடுத்தால் இறைவன் அவனை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கின்றான் எனக் குறிப்புத் தந்துள்ளார். அது உண்மை தான். இந்த உண்மையை நேரடியாக, அனுபவபூர்வமாகப் பல இடங்களில் நான் உணர்ந்து இருக்கிறேன்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

பண்பு :

"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.

"பிறஉயிர் வருத்திப் பிழைப்பவன் அரக்கன்.
பெரியோர் சொற்படி நடப்பவன் பக்தன்.
அறவழி யொழுகி அகத்தே தெய்வம்
அறிந்தோன் தேவன். அர்த்தமே பெயர்கள்".
.

குரு வணக்கம் :

"அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 11 மார்ச், 2015

நிஷ்காமியம்:-


 --------------------...
.
"பொருட்களினோடு தேவைப்படுகின்ற தொடர்பினது தன்மையை அறிந்து அளவோடு விழிப்போடு வைத்துக் கொள்ளும் உறவுதான் துறவு. அது அனுபோகத்தில் விழிப்புடன் கூடிய உறவு. இன்ப நுகர்ச்சியில் மனம் சிக்கிக் கொள்ளாத மனநிலை. வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. அறிந்து, உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவைச் சரியாகக் கணக்கிட்டு அனுபோகம் கொள்ளும் மனநிலை தான் 'துறவு'. எண்ணமோ அனுபோகத்தோடு ஒட்டாத துறவு நிலையில் இருக்க வேண்டும். எண்ணத்தால் பூணும் துறவாகிய உறவின் தெளிவுதான் வாழ்வினை உய்விக்கும். ஆசைகளை சீரமைத்துக் கொள்ளவும் உதவும். இதைத் தான் "நிஷ்காமியம்" என்று சொன்னார்கள். இந்த மன நிலையை மனம் ஏற்று நடத்தும் கடமைகள் தான் "நிஷ்காமிய கர்மம்". இது தான் உறவில் - துறவு [Detached attachment]. உண்மையான துறவு இதுதான். துறவு ஆன்மீகத்தின் அதாவது அருள் துறையின் உள்நாடி. விழிப்பு நிலையில் பொருட்களோடு - அளவோடும், முறையோடும் வைத்துக் கொள்ளும் உறவே துறவாகும்."
.

"பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையான உளப் பயிற்சியாகிய 'குண்டலினி யோகத்தை' (Simplified Kundalini Yoga) கற்று இப் பயிற்சியின் மூலம் நம் பழவினையை மாற்றி மேற்கொண்டு விளக்கத்தை 'நல் விளக்கமாக' பெற்று அதன் வழியே வாழ்க்கையை உயர்த்தி அமைத்துக் கொள்ள உதவும் உன்னதக் கலை தான் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' 'மனவளக்கலை' பயிற்சி ஆகிய "குண்டலினி யோக" (Simplified Kundalini Yoga) பயிற்சி முறை ஆகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

***************************************************
.

"அறியாமை (Innocence),
அலட்சியம் (Ignorance),
உணர்ச்சிவயம் (Emotional Moods) -
என்ற மூன்று வகையில் தான்
அறிவின் குறைபாடுகள் ஏற்படுகின்றன."
.

அளவு முறை :

"உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் -
இந்த ஐந்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது;
அதுபோல மிகையாக அனுபவிக்கவும் கூடாது;
முரண்பாடாகவும் அனுபவிக்கக்கூடாது. இந்த
மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் நோய்த்
தடுப்பிற்கு அதைவிட ஒன்று வேண்டியதே இல்லை".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உண்மையான துறவு யாது?

ஒரு அன்பர் கேட்டார்; ''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம்
வரும் என்று சொல்கின்றார்களே'' என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே
போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான்
இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?
உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக
அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ
விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு
கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது
தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு
முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது.
ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான்
உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாக தெரிகிறது. அதைத்
தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கயே
அதோடு நிறுத்தக் கூடிய அறிவும், செயலும் வந்து விட்டன என்றால் அதாவது
அறிந்த அறிவுக்கு செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம்
வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு
ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று என்று கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''. வேக வைக்கின்றவரை உறவு; இறக்குவது துறவு. இதற்கு
மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை
செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு,
அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

நம்மைத் திருத்துவோம்:

"உறவிலே காணுகின்ற உண்மைநிலை தெளிவே
துறவாகும், துன்பமிலா இன்பம் நல்கும்
அறவோர்கள் கண்டநெறி அன்புநெறி அதைவளர்ப்போம்,
திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்".
.

"அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்.
அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்".
.

இல்லறமும் துறவறமும் :

"இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
இதுவரையில் கருதிவந்தார் உலகமக்கள்,
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தைப் பண்படுத்தி எனையறிந்தேன்;
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பதுன்பம், உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தைத் திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

                                                                        --தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 10 மார்ச், 2015

Swamiji, you say that there is nothing called death. Could you please explain?


      A : Death is only a change in the regular functioning of the body. When the sexual vital fluid, biomagnetism, life energy particles, physical body, senses and the mind function together it is a living being. Death occurs when they separate due to some reason and the harmony of their function is lost. It cannot however be said that there is no death.
The life energy keeps the physical... body and the associated functions working smoothly. When the life energy is lost, all the energy particles that constitute the body cease to function as a single unit, disperse, and begin to function as individual particles. This can be compared to a company undergoing liquidation as per the orders of a judicial authority. Once the liquidation process is complete, the company is no longer in existence, but all the partners, officials and the other staff, who made up the firm, continue to exist. They may have lost their designations and their positions in that particular company, but they exist and work as individuals.
In the same way with the loss of the life energy, the atoms and the molecules that make up the body disperse into individual particles. That is all. They don’t really die; they merely separate and become individual particles. Atoms coming together to become something, and then separating to become something else, is the law of Nature.

திங்கள், 9 மார்ச், 2015

உணர்வு, உறவு:

உணர்வு, உறவு, துறவு, இந்த மூன்று சொற்களையும் நாம் ஆன்மீகத் துறையில் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றோம். இப்பொழுது அந்த வார்த்தைகளிலே இன்னும் ஆழமாகச் செல்ல உள்ளோம். உணர்வுக்கும் உறவுக்கும் ஓரளவு வித்தியாசம் உண்டு. ஒரு எஜமான் இருக்கிறான்; அவர் கீழே ஒரு பணியாள் இருக்கிறான். எதற்காக அந்தப் பனியாள் அங்கே வேலைக்குச் சேர்ந்தான்? தனக்கு உணவு வேண்டும். அதற்கு ஊதியம் வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தொழில் செய்கிறான், வேலையாளாக இருக்கிறான். இங்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது ; இது "உணர்வு" திட்டமிட்ட முறையில் தான் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது; எனவே தான் "உணர்வு" என்ற எல்லைக்குள் அதனை வைக்கிறோம்.
.

'உறவு' என்பது அத்தகையதல்ல. இவன் எஜமானனுக்காக வேலை செய்கிறான். வேலையாளுடைய பணிகளையெல்லாம், அவற்றின் பயன்களையெல்லாம் அந்த எஜமானன் அனுபவிக்கிறான். காலம் செல்லச் செல்ல எஜமானன் பணியாளுடைய உயிரோடு ஒன்றி விடுகிறான். அன்பு கொள்கிறான், அவனுடைய சுக துக்கங்களில் கலந்து பார்க்கிறான். அதற்கு மேலாகவும் அந்தச் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறான். இந்த இடத்திலே தான் "உறவு" என்பதாக அமைகிறது. அப்படிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய உறவு எஜமானனிடம் ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் "உணர்வு" மட்டும் இருந்த அந்தப் பணியாளிடம் என்ன ஏற்படும் என்றால் அவனுக்கும் அதே 'உறவு' ஏற்படும்.
.

'உறவு' என்பது உறைந்து போவது; "தோய்வு" என்றும் சொல்லலாம் அதனை. அந்தத் தோய்வானது இரண்டற இருக்க வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அன்பின் செயல்:

"அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம்
அன்பின் செயலாகும்".
.

கடவுளும் கடமையும் :

" கடமையில் உயர்ந்தவர்
கடவுளை நாடுவார்.
கடவுளை அறிந்தவர்
கடமையில் வாழ்வார்".
.

உய்யும் வழி:

"தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றிப்போகும்
பலவினைகள் புதிது எழா; முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்
சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 8 மார்ச், 2015

எண்ணம், சொல், செயல் :


 ....

மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்தவகையாக இருப்பினும், அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் ஏற்பட்ட பதிவுகள் மூலம் செயல்படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல், அனைத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.
.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீயபதிவுகளையும் பெற்றிருக்கின்றான். ஆகவே மனதின் நிலைக்கேற்ப அவனிடமிருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடுடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடமிருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையைப் பொருத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீய பதிவுகளே கட்டுப்படுத்துகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீயபதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு
எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்".
.

"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்,
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்".
.

"மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை; தொடர்ந்து
வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஒரு இயக்கம்".
.

"இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும்,
சிந்தித்து அறிபவன், சிறப்பாக வாழ்வான்".
.

"வேதத்தை யான்படித்த தில்லை ஆனால்
வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்,
வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை
வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்;
பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்
பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்
சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்
சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 7 மார்ச், 2015

Q : Before regular meditation we do purification of the atmosphere around us. Is this required when we do meditation during work, walk etc.?


A : Not necessary. But it is better to keep the atmosphere Divine. For this purpose, it is not difficult to start your meditation saying "the atmosphere around me is purified by the Divine Power", whenever and wherever you meditate. Even a fraction of a second will do. That thought itself will bring harmony and peaceful energy around you. Even otherwise there will be no negative effect. Only there may be some loss of benefit to you.

வெள்ளி, 6 மார்ச், 2015

ஊனுடலே வாகனம்

நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.
.
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை.
உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.
.
உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.
.
இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்;
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".
.
"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்!"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 5 மார்ச், 2015

சீரமைப்பு (Streamline) :

"மனம் நிற்க வேண்டும் என்று அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான். அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம், அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.
.
எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும்.. என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள். ஒரு பொருள் தேவையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது. நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள் ?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள். தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.
.
நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது !. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும் ? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில் எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள் போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
***************************************************************
.
"எந்த இடத்தில் மனம் விரிகிறதோ அங்கு ஆராய்ச்சிவயமாகும்.
மனதை விரிவிலேயே வைத்துக் கொண்டு இருக்கும்போது
ஆசை பேராசையாக மாறாது. சினம் வராது. ஏனென்றால்,
மனவிரிவில்தான் எல்லாம் விளங்கிக் கொள்கிறது."
.
"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்தால்
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் தோன்றும்
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்."
.
"எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்
இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்."
.
"எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."
.
"அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைந்தால் அடங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 4 மார்ச், 2015

உலகுக்குத் தேவை இரண்டு ஒழுக்கப்பண்பாடு


"முன்பு தோன்றிய மகான்கள், 'மனிதர்களிடையே குழப்பங்கள் என்றுமே வரக்கூடாது, பிணக்குகள் இருக்கக் கூடாது, மனிதன் மனிதனை உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கைச் சட்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று ...
.

(1) இறைவழிபாடு,

(2) அறநெறி
.

என்ற இரண்டு செயல் திட்டங்களை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார்கள்.
.

'அறநெறி, இறைவழிபாடு' இரண்டும் வேண்டும் என்று எந்த நாட்டில், எந்தக் காலத்தில் ஒருவர் போதித்தாரோ, அங்கு அன்று உள்ள மக்கள் அதைப் போற்றி, அவரது பெயரிலேயே வாழ்க்கை முறையை வழங்கி வந்தார்கள். அதுதான் மதம் எனப்படுகிறது. மதத்திற்கு என்று தனியாகப் பெயர் இல்லை. மதச் சட்டத்தை உருவாக்கிய பெரியோர்கள் பெயரால் தான் இந்த உலகத்தில் உள்ள மதங்களெல்லாம் வழங்கப்படுகின்றன.
.

இங்கு முக்கியமான ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். எத்தனையோ மதங்கள் உலகத்தில் தோன்றியுள்ளன. மேலே விளக்கிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளைத் தான் எல்லா மதங்களும் போதித்திருக்கின்றன என்பதை முதிலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

இறைநிலை ஒவ்வொரு உயிரிலும் உள்ளும் புறமும் நிறைந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது உயிர் வழிபாடு. பிறருக்குத் துன்பம் செய்யாது வாழ வேண்டும். ஏற்கனவே துன்பப்படுபவர்களுக்கு இயன்ற வரையில் உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் தான் உலகுக்குத் தேவை.
.

(1) துன்பம் தரும் செயல்களைச் செய்யாது நான் வாழ வேண்டும்,

(2) துன்பப்படும் மக்களுக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.
.

இவ்விரண்டு கருத்துக்களை உலக மக்களனைவரும் எடுத்துக் கொண்டார்கள் என்று கற்பனையாக வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமில்லாது தானும் சிறப்பாக வாழ்ந்து, முடிந்த வரையில் பிறருடைய துன்பத்தைப் போக்குவது என்று வந்து விட்டோமேயானால், அது தான் வேதம், புராணம், அரசியல் எல்லாவற்றின் உட்கருத்துமாகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 3 மார்ச், 2015

சாதனை வழி


இன்றைய உலக சமுதாய சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனை புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றை குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல் வழியாகிய மனவளக் கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும்.
.
சிந்தனையை வளர்க்கவும், அறிவுக்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்க வல்ல அகத்தவ முறை இதில் இருக்கிறது. நான் என்ன செய்கிறேன். இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும் நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடல் பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன.
.
விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையின் ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்றும், அறவழி வாழவும் ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறை இருக்கிறது. பிறவிப் பயனாகிய அறிவை அறிய இறை நிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும் வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளங்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்க முறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும், சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன், மனிதனாக வாழ, ஏற்ற ஒரு சாதனை "மனவளக்கலை" ஆகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பிரபஞ்சத்திற்கு ஆதி பொருளாக உள்ள
(Universal Being) தெய்வ நிலை, மெய்ப்பொருள்
நிலைதான் மனிதனுடைய அறிவாக உள்ளது".
.
சேர வாரீர் :
"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர்,வாரீர்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 மார்ச், 2015

சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"


மகரிசியின் பதில்: -
" கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். கடைசி எண்ணம் என்பது ஏதோ கடைசி கடைசியாகத் திடுக்கென்று வந்துவிடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதற்கு நிகரான எண்ணமேதான...் கடைசியிலும் தோன்றும்.
.
இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால்தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை சித்திக்கும்.
.
அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி கடைசியாகவும் கீழான எண்ணமே தோன்றி, அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரைப் பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும் ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 1 மார்ச், 2015

உலக சமுதாய சேவா சங்கம் :


நல்வாழ்வுக்கு வழிகான வேண்டுமெனில் வாழ்வின் நலக்கேட்டுக்கு காரணங்களை முதலில் அறியவேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாகி வாழும் மக்களுக்கு விழிப்பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடிக்கக்கூடிய செயலன்று. ஒரு மனிதன், மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். அது சரியானது தானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும்.
.

பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும் வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது. அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன் மூலம் திட்டமிட்ட முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும். விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல்புரியவேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விளக்க நிலை வாழ்வுக்கு மாற்றுவது? மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல. சீரிய திட்டங்களும், அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக்காட்ட முடியவில்லையே ! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. "உலக சமுதாய சேவா சங்கம்" என்னும் நிறுவனமே தக்கபதிலாக இயங்குகின்றது.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
*******************************************************

.
"ஞானம் பெற தவம் வேண்டும்;
தவத்தைப் பெற குரு வேண்டும்".
.

"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".
.

குண்டலினி தீட்சை :

"இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்
எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான
தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு
தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்
கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு
கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்
புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்
பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி