Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 24 செப்டம்பர், 2011

குண்டலினி - அறிமுகம்

 

 குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? இந்த குண்டலினியை எழுப்புவது, அதன்  செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி  இருக்கிறது.

நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக இந்த நாடிகளைப்  பற்றிய சிறிய அறிமுகம் இப்போது அவசியமாகிறது.

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி  அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என  பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்
சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில்,

தலையில் 7000ம் நாடிகளும்,
வலது கண்ணில் 2000ம் நாடிகளும்,
இடது கண்ணில் 2000ம் நாடிகளும்,
மூக்கில் 3330 நாடிகளும்,
வலது காதில் 1500 நாடிகளும்,
இடது காதில் 1500 நாடிகளும்,
பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,
பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,
முதுகில் 3680 நாடிகளும்,
கண்டத்தில் 1000ம் நாடிகளும்,
நாபியில் 8990 நாடிகளும்,
வலது கையில் 1500 நாடிகளும்,
இடது கையில் 1500 நாடிகளும்,
விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும்,
கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும்,
பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,
பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும்,
கோசத்தில் 13000ம் நாடிகளும்,
பாதத்தில் 1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி
என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது சனவாயிலிலும் ஓடுகிறதாம்.

இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக
அமைந்திருக்கின்றன.

இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய …………

நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.

- காகபுசுண்டர் -

1.மூலாதாரம்
2.சுவாதிஷ்டானம்
3.மணிபூரகம்
4.அநாகதம்
5.விசுத்தம்
6.ஆக்ஞேயம்
7.துரியம்
என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே
1.மூலம்
2.தொப்பூழ்
3.மேல்வயிறு
4.நெஞ்சம்
5.மிடறு
6. புருவநடு
7. உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் நமது குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால் நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி குண்டலினி என்பது மாயமோ,
மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே
கூறியிருக்கின்றனர்.

குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான
மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே
அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை
எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப்
போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது
சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம
உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை
ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.

குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.

- காகபுசுண்டர் -
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில்
அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
சிறப்பான சிவயோக மென்றுபேரு
சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு

• பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
• உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
• உயிரின் படர் நிலைதான் மனம்.
• மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
• உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
• நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
• குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
 
இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்
குருவே துணை